நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் இனி யாருக்கு இங்கே கிடைக்கும்

பாஜகவோடு கூட்டணி வச்சா என்ன? அதிமுகவோடு கூட்டணி வச்சா என்ன எல்லாம் ஒன்னுதான்.

அதுசரி. பாஜக, பாமகவிற்கும் என்ன வித்தியாசம்? அது தீவிர மதவாதக் கட்சி. இது தீவிர ஜாதியவாத கட்சி.

மதவாதத்திற்குள் ஜாதி இருக்கு. ஜாதியத்திற்குள் மதவாதம் இருக்கு. அதாவது பாஜக உள்ள பாமக இருக்கு. பாமக உள்ள பாஜக இருக்கு.

வன்னியர் உட்படப் பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் கல்வி வேலை வாய்ப்பை 10 ஆண்டுகளாகப் பாழ் படுத்தியது பாஜக. அதோடு கூட்டணி வைக்கிறது பாமக.

‘பாஜக வன்னியர்களுக்கு என்ன செய்தது’ என்று அன்புமணியால் கேட்க இயலாது. மாறாக ‘திமுக வன்னியர்களுக்கு என்ன செய்தது’ என்ற பொய்யை உரத்துக் கேட்பார்.

உழைக்கும் மக்களான வன்னியர்களுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோர், கல்வி, வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் மட்டுமல்ல,

பாமகவிற்குத் தேர்தல் அங்கீகாரம் கிடைக்கும் அளவிற்கு சீட் கொடுத்ததும் திமுகதான். அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியதும் திமுகதான்.

பாஜக – பாமக கூட்டணிக்கு அமோக வாய்ப்பிருக்கிறது, முயற்சித்தால் ஒரே ஒரு தொகுதியிலாவது டெபாசிட் வாங்கலாம்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading