பாரதியின் ஜாதிய ஒற்றுமையும் – பாரதிதாசனின் ஜாதி ஒழிப்பும்

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2007/09/book2.jpg?resize=342%2C529

தமிழ்நாட்டில் பெண்கல்வி,  பெண் விடுதலை, சாதீய ஒற்றுமை குறித்து பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையில் நீங்கள் காணும் வேற்றுமை என்ன?

பாரதி பெண் கல்வி, பெண்விடுதலை, ஜாதீய ஒற்றுமையை இந்து மத, பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையில் எழுதினார்.

பாரதிதாசன் பெரியார் சிந்தனையின் பின்னணியில் எழுதினார்.

பாரதி ஏற்றத்தாழ்வுகளோடே ஒற்றுமையாக இருக்கவேண்டும், என்று ஜாதீய ஒற்றுமையை வலியுறுத்தினார்.

பாரதிதாசன் பெரியாரின் சிந்தனையான ஜாதி ஒழிப்பு பற்றி எழுதினார்.

சுருங்கச் சொன்னால் பாரதி வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டினார்.

பாரதிதாசன் பெரியாரின் பேச்சை கவிதையாக மொழி பெயர்த்தார்.

பெரியாரை தவிர்த்து விட்டால், பாரதிதாசனிடம் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பாரதி ஆதரவையும் சேர்த்து.

***

’இந்த பதில் பாரதிதாசனை விமர்சிப்பதாக இருக்கிறது’ என்று சொல்லி, என்னுடைய முழு பேட்டியையும் பிரசுரிக்கவில்லை ‘தமிழர் தொலைநோக்கு’

***

தமிழர் தொலைநோக்கு இதழுக்காக எழுதிய பதில்களை 2008 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதத்தில் முழுவதுமாக பிரசுரித்து இருந்தேன். இதில் சொல்லப்பட்ட பதில்கள் கூடுதல் கவனம் பெறவேண்டும் என்ற காரணத்தால், இப்போது அதை ஒவ்வொரு கேள்வி-பதிலாக பிரசுரிக்கிறேன்.

தொடர்புடையவைகள்:

‘சமஸ்கிருத கலப்பே தமிழை மேம்படுத்தும்’

பாரதியின் நேர்மை!

`பாரதி சரஸ்வதியிடம் வரம் வாங்கியவர்’ – Via English

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

`பாரதி’ ய ஜனதா பார்ட்டி:  முன்னுரை

‘என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` -Intellectual approach

நாகார்ஜுனன் – பாரதி- ஏகலைவன்

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும்

‘டி.எம்.நாயர், வ.உ.சி’ – ‘பாரதி, திரு.வி.க’ – தேசப் பற்றாளர்களும், துரோகிகளும் அல்லது யார் தேச துரோகி?

4 thoughts on “பாரதியின் ஜாதிய ஒற்றுமையும் – பாரதிதாசனின் ஜாதி ஒழிப்பும்

 1. எனது இந்த சிறிய பயணத்திலேயே பார்த்துவிட்டேன். ஆராய்ந்து அனுப்பப்படும் சொந்த கருத்துகளை அப்படியே மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டுமெனில்கூட நிச்சயம் தன்னகத்தே ஒரு மீடியா தேவைப்படுகிறது. ஹா ஹா ஹா.. வாழ்க சுயநலவாதிகள் மனம்!

 2. Barathidasanaippatri ennakkum ethey karutthuthan,naan ninaitthai neengal ezhuthi erukkireergal.ottha karutthirkku mikka nantri.

 3. சரியான பதில். இதில் என்ன தவறு?
  ஏன் தமிழர்தொலைநோக்கு இதை வெளியிவில்லை?

 4. பாரதிதாசன் பெரியாரின் சிந்தனையான ஜாதி ஒழிப்பு பற்றி எழுதினார்.

  சுருங்கச் சொன்னால் பாரதி வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டினார்.

  “பாரதிதாசன் பெரியாரின் பேச்சை கவிதையாக மொழி பெயர்த்தார்.

  பெரியாரை தவிர்த்து விட்டால், பாரதிதாசனிடம் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பாரதி ஆதரவையும் சேர்த்து.”””

  ஏன் பெரியாரை தவிர்த்து பார்க்க வேண்டும் விளக்க முடியுமா தோழர்

Leave a Reply

%d