‘சமஸ்கிருத கலப்பே தமிழை மேம்படுத்தும்’


பாரதி பெண்கல்வி குறித்தும் பெண் விடுதலை குறித்தும் பரப்புரை செய்தது, மகளிருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோருவதை எதிர்ப்பவர்களைப்போல தன் குலத்துப் பெண்டிரை மனதில் வைத்துதான் என்று எண்ணுகுகிறீர்களா?

இது பாரதி குறித்தான என் எண்ணமில்லை. பாரதி அப்படித்தான் இருந்து இருக்கிறார், என்பதை அவர் எழுத்து உதாரணங்களோடு நீரூபித்து இருக்கிறேன.

பாரதியின் கட்டுரைகளை பார்த்தால் அது தமிழ் கட்டுரைதான எனும்  அளவிற்கு சமஸ்கிருதம் நிறைந்து இருக்கிறது. கவிதைகளிலும் சமஸ்கிருதம் காணப்படுகிறது. இது காலத்துக்கேற்ற எழுத்து என்று ஏற்பதா அல்லது தன் காலத்தை தாண்டி புரட்சி செய்த கவிஞனின் தவறுகள் என்று ஏற்பதா?

பாரதிக்கு தமிழ் மீது விரோதம் இல்லை. ஆனாலும் தமிழை விட சமஸ்கிருதமே சிறந்தமொழி என்று உறுதியாக நம்பினார். சமஸ்கிருத கலப்போடு எழுதுவது, தமிழை மேம்படுத்தும் என்றும் உறுதியாக நம்பினார்.

“இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாதவும் ஸம்ஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்” என்பதே பாரதியின் நிலை. இதுதான் காலத்தை தாண்டிய புரட்சியா?

பாரதி, பாரதிய ஜனதாவின் முன்னோடி என்று எழுதிய உங்கள் நூலுக்கு மறுப்பு புத்தகங்கள் வந்திருக்கிறதே. அவைகள் உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா?

இல்லை. அந்த புத்தகங்கள் நாம் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல், சொன்னவற்றையே திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்கள். அவை என் கவனத்தை கவரவில்லை.

என் புத்தகம் பாரதியை ஆதரிக்கிற முற்போக்காளர்களை நோக்கிதான். என் புத்தகத்தால் பாதிக்கப்பட்ட தன்னை முற்போக்காளர்களாக நினைத்துக் கொண்டிருக்கிற பாரதி ஆதரவாளர்களில் சிலர் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக எழுதப்பட்ட புத்தகங்கள் அவை.

***

தமிழர் தொலைநோக்கு இதழுக்காக எழுதிய பதில்களை 2008 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதத்தில் முழுவதுமாக பிரசுரித்து இருந்தேன். இதில் சொல்லப்பட்ட பதில்கள் கூடுதல் கவனம் பெறவேண்டும் என்ற காரணத்தால், இப்போது அதை ஒவ்வொரு கேள்வி-பதிலாக பிரசுரிக்க இருக்கிறேன்.

தொடர்புடையவைகள்:

பாரதியின் நேர்மை!

`பாரதி சரஸ்வதியிடம் வரம் வாங்கியவர்’ – Via English

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

`பாரதி’ ய ஜனதா பார்ட்டி:  முன்னுரை

‘என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` -Intellectual approach

நாகார்ஜுனன் – பாரதி- ஏகலைவன்

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும்

‘டி.எம்.நாயர், வ.உ.சி’ – ‘பாரதி, திரு.வி.க’ – தேசப் பற்றாளர்களும், துரோகிகளும் அல்லது யார் தேச துரோகி?

16 thoughts on “‘சமஸ்கிருத கலப்பே தமிழை மேம்படுத்தும்’

 1. //ஆனாலும் தமிழை விட சமஸ்கிருதமே சிறந்தமொழி என்று உறுதியாக நம்பினார்.//

  ’யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதானது எங்கும் காணேம்.

  இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை’

  என்றும்,

  ‘சொல்லின் உயர்வு தமிழ்ச்சொல்லே,
  அதை தொழுது படித்திட பாப்பா’

  என்றும்

  எழுதிய சுப்பிரமணிய பாரதி,

  எப்படி உங்கள் கண்ணுக்கு வேறு மாதிரி தெரிகிறார்?

  விளக்கினால் நல்லது.

  பி.கு: நான் பாரதி காதலன் அல்ல. எனக்கு எவரும் ஹீரோ அல்ல.

  www. thirumullaivaayil.blogspot.com

 2. //“இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாதவும் ஸம்ஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்” என்பதே பாரதியின் நிலை. இதுதான் காலத்தை தாண்டிய புரட்சியா?//

  கால்டுவெல் தவிர்த்து தமிழ் தனித்தன்மையானது என்று பேசாத ஒருகாலத்தில் பாரதி வாழ்ந்தார். கால்டுவெல்லின் தமிழ் குறித்தான பேச்சு மிசனெறியில் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதாக பரப்பட்டு கால்டுவெல்லின் கூற்றுகள் புறம் தள்ளப்பட்ட காலத்தில் பாரதி வாழ்ந்ததால் அவ்வாறு சொல்லி இருக்க வாய்ப்பு உண்டு, பாவாணரின் ஆய்வுகளுக்கு பிறகே தமிழுக்கும் வடமொழிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை, சமஸ்கிரதம் வந்து கலந்தது என்பதை பலரும் ஒப்புக் கொண்டனர். எனவே பாரதியார் வாழ்ந்த காலத்தின் பொது புத்தியின் படித்தான் பாரதியும் பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன். எனவே அதைக் குற்றமாக என்னால் பார்க்க இயலவில்லை.

  பாரதி ஏன் விதவை மறுமணம் குறித்து பேசவில்லை, குழந்தை திருமணம் பற்றிப் பேசவில்லை என்றெல்லாம் கூட உங்களால் குற்றம் சொல்ல முடியும் ஆனால் அவ்வாறு சொல்லுவதற்கு அவை எதிர்கப்பட்ட காலத்தில் ஒருவர் அதுபற்றி பேசாமல் இருந்தால் மட்டுமே குற்றம், விழிப்புணர்வு அற்ற காலத்தையும் இன்றைய காலத்தையும் அன்றைக்கு வாழ்ந்தவர்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்பது, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவனெல்லாம் அறிவாளி இல்லை ஏனெனில் அவர்களில் யாரும் சந்திரமண்டலத்திற்கு செல்லும் தொழில் நுட்ப அறிவு பெற்றவர்கள் இல்லை என்று வாதிடுவது போல் இருக்கிறது உங்கள் கூற்று.

 3. கோவியின் கூற்றை வழிமொழிகிறேன்!

  பாரதியின் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து வைக்கலாம்.

  அவர் ஏன் அதை சொல்லவில்லை, எழுதவில்லை, பாடவில்லை என்று கேட்பது தேவையில்லை.

  ஈழத்தில் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழித்து இனப்படுகொலையில் உக்கிரத்தை சிங்களன் காட்டியபோது, தமிழ் இலக்கிய உலகம் யாருக்கு பூப்பரித்து கொடுத்து புகழ்ந்துரைத்தது என்பதை நாம் நம் கண் கூடாகப் பார்த்தாயிற்று. அது சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதி வெளியிட்டு பாராட்டு விழா நடாத்திக் கொண்டிருந்தது. எனக்குத் தெரிந்து தமிழ் எழுத்தாளன், முதல் நிலை எழுத்தாளன் என்று இப்போது சொல்லிகொள்பவன் யாரும் இது பற்றி எழுதியதாக நினைவில்லை.

  ஆனால் அன்று பாரதி பிஜியிலும், தென்னாப்பிரிக்காவிலும் வெதும்பிய தமிழரை எண்ணி வேதனைப் பட்டிருக்கிறான். அவன் கிந்து மாதர் தம் அப்படின்னு சொல்லி இருக்கானேன்னு கேக்கலாம். அப்போதைய பொது புத்தி அதுவாக இருந்திருக்கும். மற்றபடி எனக்கும் பாரதியிடம் நிறைய விமர்சனங்கள் உண்டு.

  ஆனால் பாரதியை பற்றி விமர்சிக்க அவர்காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்களின் படைப்புகளையும், நாட வேண்டியுள்ளது.

  அதற்கு அப்போதைய பொது புத்தி, பகுத்தறிவு நிலை அனைத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

 4. paarathi suyasathi abimanam ulla pirpokkuvathi, paarpanarkalai ethikkavillai,communistkalai aatharikkavillai enpathey sirantha utharanam.

 5. பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்கம் –
  இதில் எந்த அளவிற்கு தமிழ் இருக்கிறது ?

  சுய –
  மரியாதை –
  பிரச்சார – இவை எல்லாமே வட மொழியை
  தழுவியவை !
  இதை மாற்ற ஏன் இன்னும் யாருக்கும்
  தோன்றவில்லை சொல்லுங்கள் பார்ப்போம்

  kavirimainthan
  http//www.vimarisanam.wordpress.com

 6. kavirimainthan
  http//www.vimarisanam.wordpress.com:
  //பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்கம் –
  இதில் எந்த அளவிற்கு தமிழ் இருக்கிறது ?

  சுய –
  மரியாதை –
  பிரச்சார – இவை எல்லாமே வட மொழியை
  தழுவியவை !
  இதை மாற்ற ஏன் இன்னும் யாருக்கும்
  தோன்றவில்லை சொல்லுங்கள் பார்ப்போம்//

  As it is, there is a conflict of interests – whether Periyaar’s movement is primarily focussed on welfare of Tamils or welfare of the dravidians, or atheism or anti-casteism.

  Nowhere, the ‘Periyarists”have claimed that it will fight for the language of Tamil or its ‘pure form’ (thani thamizh)’.

 7. எல்லாவற்றிக்கும்மேல் அவன் ஒரு கவிஞன்…. அதனாலேயே கொண்டாடப்படவேண்டியவன்…

  கவிஞர்களின் உள்ளிருக்கும் பொறி.. அவர்கள் பேசும் மொழிகளின் வழியே தெறித்து ஓடுகிறது மதிமாறன்.. அவ்வளவே 🙂

  அது எம்மொழியாக இருந்தால் என்ன?

 8. //ஆனாலும் தமிழை விட சமஸ்கிருதமே சிறந்தமொழி என்று உறுதியாக நம்பினார்.//
  மதிமாறன் பாரதி மட்டுமல்ல எல்லா பார்ப்பனர்களின் நிலையும் அதுதான்.இன்றைக்கும் அவர்கள் அப்படிதான் இருக்கிறார்கள்.

 9. இது குறித்து எனக்குத் தோன்றியவை –

  ஒவ்வொரு மொழிக்கும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பு
  இருக்கிறது . (சிறப்பே இல்லாத இந்திய மொழி –
  எனக்குத்தெரிந்து இந்தி மட்டும் தான்)

  இருந்தாலும் – .ஒரு மொழியை நமக்கு பிடிக்கும் என்பதால்
  மற்றதை மட்டம் தட்ட வேண்டாம் என்பது என் கருத்து.

  எனக்கு உருது மொழி ஓரளவு தெரியும், மிக கம்பீரமான
  மொழி அது, உருதுவில் செய்தி வாசிப்பதை கேட்டுப்பாருங்கள் –
  நீங்களும் உணர்வீர்கள்.

  அதே போல் தான் தெலுங்கு -.
  கேட்பதற்கு மிக இனிமையான மொழி,

  சமஸ்கிருதம் பேசவும், புரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும்,
  மிகவும் கடுமையான மொழி –

  ஆனால் கேட்பதற்கு மிகவும் , கம்பீரமான மொழி.
  கீதையில் உள்ள வாசகங்களையும்,
  சாம வேதத்தில் உள்ள சுலோகங்களையும் ராகம் கூட்டி
  பாடுவதை கேட்க, நமக்கு அர்த்தம் தெரியா விட்டாலும் கூட
  மனதுக்கு மிக இதமாக இருக்கிறதே !

  (எம்,எஸ்,சுப்புலக்ஷ்மியின் சுப்ரபாதத்தையும்,
  விஷ்ணு சஹுஸ்ரநாமத்தையும் யாரும்
  வெறுக்கவும் கூடுமோ? )

  சுதந்திர போராட்டத்தின் போது கூட –
  ஆங்கிலேயரை வெறுத்தாலும் நாம் ஆங்கிலத்தை
  வெறுத்ததில்லையே !

  இன்றைய தினத்தில் கலப்படம் இல்லாமல்
  தமிழில் பேசுபவர்களையோ, எழுதுபவர்களையோ
  காண்பது அரிதாக இருக்கிறது !

  கலைஞரின் எழுத்தில், ஏன் வைரமுத்துவின் எழுத்திலே
  கூட வடமொழிச்சொற்கள்
  கலந்து வருகின்றனவே !

  மற்ற மொழிகளை வெறுக்காமலும், ஒதுக்காமலும்,

  அதே சமயத்தில் –

  இயன்ற வரையில் தமிழைக் கலப்படம் இல்லாமல்
  பேசவும் எழுதவும் இந்தக் கால இளைஞர்களை
  பழக்குவதும், ஊக்குவிப்பதும் நல்லது என்பது என் கருத்து.

  அதே சமயம் தனித்தமிழ் என்று பேசப்போக அது கேலிக்கூத்தாக
  ஆகி விடக்கூடாது.

  எனக்கு தெரிந்து தனித்தமிழிலும் சுவையாகப் பேசக்கூடிய
  பலர் ( வைகோ, சுகி சிவம் போன்றவர்கள். ) இருக்கத்தான்
  செய்கிறார்கள்.

  -காவிரிமைந்தன்
  http://www.vimarisanam.wordpress.com

 10. பாரதி “உயர் ஆரியர்” எனக் கூறியது யாருக்கும் ஏன் தெரியவல்லை?

  தமிழ் ஒன்றும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல!, கலப்படம் பெற்று நடை போட்டிட,

  கிரேக்கம் , ரோமபுரி , பாபிலோனா போன்று நீண்ட தொடர்ச்சியான இனம் நம்முடையது. அதை ஆரிய கூட்டத்தோடு , அதன் மொழியோடு இணைத்து பேசுவது மாபெரும் குற்றம்.
  //

  ஆனால் கேட்பதற்கு மிகவும் , கம்பீரமான மொழி.
  கீதையில் உள்ள வாசகங்களையும்,
  சாம வேதத்தில் உள்ள சுலோகங்களையும் ராகம் கூட்டி
  பாடுவதை கேட்க, நமக்கு அர்த்தம் தெரியா விட்டாலும் கூட
  மனதுக்கு மிக இதமாக இருக்கிறதே !

  (எம்,எஸ்,சுப்புலக்ஷ்மியின் சுப்ரபாதத்தையும்,
  விஷ்ணு சஹுஸ்ரநாமத்தையும் யாரும்
  வெறுக்கவும் கூடுமோ? )//
  இதை தான் ஆங்கிலத்தில் “mind set” என கூறுவார்.

  அப்படிதான் நம்மை வளர்த்து விட்டார்கள், இனியாவது நம்மை மாற்றி கொள்வோம்

  நெடு மாறன்

 11. நான் உருது மொழியைக் கூட கம்பீரமான
  மொழி என்று சொல்லி இருந்தேனே
  நண்பரே – கவனிக்கவில்லையா ?

  காவிரிமைந்தன்
  http://www.vimarisanam.wordpress.com

 12. கேள்வி கேட்டு இருக்கிற தோழர்கள், இதில் உள்ள பிற இணைப்புகளையும் படிப்பது நல்லது.

Leave a Reply

%d bloggers like this: