பாம்பு-பார்ப்பனர்-தந்தி

kveeramaniayya
‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால்
பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை முதலில் அடி’ என்று பெரியார் சொல்லியிருந்தால்..

‘ஒருவர்’ தொடர்ந்து பெரியாரை அவதூறாக பேசியபோதும் இப்படி பொறுமையாக பேட்டிக் கொடுத்துக் கொண்டா இருப்பார்கள், பெரியார் தொண்டர்கள்?

ஒரு பொய்யை உண்மையாக்க முயற்சி செய்தால் பிரச்சினை யாருக்கு? புரிஞ்சிக்கங்க…
அது பொய் தான் என்பதை நீங்கள் தான் அதிகமாக வலியுறுத்த வேண்டும்.
30 March at 12:04 ·

தந்தி டி.வியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் பேட்டியில் மிக முக்கியமானது, ‘பார்ப்பனர் – பார்ப்பான்’ என்கிற வார்த்தையை மிக அழுத்தம் கொடுத்துச் சொன்னது. அது பலருக்கும் பாடம்.

பெரியார் சிந்தனையில் ஊறியவர்களே பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே ‘பார்ப்பனர் – பார்ப்பான்’ என்கிற பெரியார் பயன்படுத்திய பயன்படுத்த சொன்ன வார்த்தைகளைத் திட்டமிட்டு தவிர்த்து வரும் சூழலில்… ஆசிரியரின் அழுத்தம் அவர்களுக்கும் உணர்த்துவதுபோல் இருந்தது.
இனியாவது.. தொலைக்காட்சி விவாதங்களில்… facebook ல் நமது தோழர்கள் துணிவோடு பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
30 March at 23:02 ·

ஆசிரியர் வீரமணியைப் பார்த்து, “நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறீர்கள்? கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களை விமர்சிப்பதில்லை..” என்று தந்தி ‘பாண்டே’ என்பவர் கேட்கிறார்.

அது இருக்கட்டும். இவுரு ஏன் எப்போதும் கிறித்துவ, இஸ்லாம் மதங்களையே விமர்சிக்கிறார்? இது ‘பாண்டே’ நிலையா? இல்லை தந்தி டி.வியின் நிலையே இஸ்லாம், கிறித்துவ எதிர்ப்பு தானா?
4 April at 17:13 ·

தந்தி ‘பாண்டே.. ஆண்டே’ களுக்கு..

3 thoughts on “பாம்பு-பார்ப்பனர்-தந்தி

  1. தந்தி டீ.வி. நேர்காணலை நானும் கொஞ்ச நேரம் பார்த்தேன். பாண்டேயின் பல கேள்விகளுக்கு வீரமணியால் சரியான விவாதபூர்வமான பதிலை சொல்ல முடியவில்லை. பாண்டே மாதிரியானவர்களை எதிர் கொள்வதற்கு வே.மதிமாறன் போன்றவர்கள் தான் சரி.

  2. நானும் சிறிது நேரம் அந்த விவாதத்தை பார்த்தேன். வீரமணி திணறியதாகத்தான் தெரிந்தது. தி.க.வினரிடம் இருக்கும் பலவீனமாகவே இதை பார்க்கிறேன். மூட நம்பிக்கையை எதிர்ப்பது என்று முடிவு செய்துவிட்டால் எல்லா மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளையும் ஒரேவிதமாக எதிர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு இந்து மதத்தில் மட்டும்தான் எதிர்ப்பிருக்காது என்று தெரிந்து அதை மட்டுமே தாக்குவதால் தான் நீங்கள் நியாயமாக சொல்லும் கருத்துக்கள் கூட மக்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

    மதத்தை மறந்து மூட நம்பிக்கையை மட்டும் எதிர்த்து பாருங்கள். நல்ல சமூகம் உருவாகும். உடனே இந்து மதத்தில் தான் ஜாதி இருக்கிறது என்று கூறுவீர்கள். உங்களுக்கே தெரியும் எல்லா மதத்திலும் எல்லாவித பலவீனமும் இருக்கிறது. என்று ஏதோ ஒரு பயத்தில் அதை ஏற்க மறுக்கிறீர்கள். மனதில் பட்டதை கூறினேன். அதற்காக என்னை மதவாதியாக நினைத்துவிடாதீர்கள்.

    நன்றி!

  3. முதலில் பார்ப்பானை விட திராவிடனை உதைக்க வேண்டும் , திராவிடன்னு சொல்லி எதனை தெலுங்கன் , மலையாளி கன்னடக்காரன் தமிழனை உதைக்கிறான், திராவிடம் அழிந்தால் தமிழன் நல்லா இருப்பான்

Leave a Reply

%d