“பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு

புலித்தோல் போர்த்திய பன்னிக்குட்டிகள். ஏமாந்த புலி.

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1

‘நம்பிக்கைத் துரோகிகள்’-2

1917 ஆண்டு அக்டோபர் 7 தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் எம்.சி. ராஜா நடத்திய பொதுக்கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆற்றிய சிறப்புரை.

பகுதி-3

நான் 30 ஆண்டுகளுக்கு மேல், இங்கிலாந்திலும், இங்கும் மருநத்துவப் பணி செய்து அனுபவம் பெற்றவன். ஆனால் இம்மாதிரியான உடலின் பல பகுதிகளில் பிள்ளைபேறு மருத்துவங்களை நான் என் வாழ்நாளில் கண்டதுமில்லை, கேட்டறிந்ததுமில்லை. (சிரிப்பு, கைதட்டல்)

ஆரியக் கடவுளின் உடல் அமைப்பே அலாதியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது! (சிரிப்பு! கைதட்டல்!)

இவ்வாறாகக் கடவுளின் மேற்பகுதி உறுப்புகளிலிருந்து, மகப்பேறு பெற்று வெளிவந்த ஆரியர்கள், தங்களுக்கே நாடு, வீடு, தோட்டம், துரவு, காடு, கழனி, பணம், காசு எல்லாம் சொந்தம் என்று ஆக்கிக் கொண்டு விட்டார்கள். நாலாம் சாதியினரான சூத்திரர்களும், அய்ந்தாம் சாதியினரான பஞ்சமர்களும் கல்வி, சொத்துரிமை போன்றவற்றில் எந்த ஒரு உரிமையும் கொண்டாட முடியாது, கொண்டாடக் கூடாது என்று ஆக்கிவிட்டனர்.

இவையெல்லாம் ஒவ்வொருவரின் முன் பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்பட்டவையாகும் எனறு ஆரிய தெய்வீகச் சட்ட திட்டங்கள் கூறுகின்றன. இதற்குத் தலைவிதி என்றும் அவர்கள் பெயர் வைத்துவிட்டார்கள்.

இதையெல்லாம் நம்பி நடப்பவனுக்குத்தான், இறப்பிற்குப் பின் மோட்சம் கிடைக்கும் எனறும், நம்பாதவன் இறப்பிற்குப் பின் நரகத்தில் சித்ரவதைச் செய்யப்படுவான் என்றும் சொல்லி வைத்தார்கள்.

இத்தகைய கடவுள் திடடத்திற்கு தருமம் என்று பெயர். இவ்வாறு அந்நிய ஆரிய வஞ்சகர்கள் கூறி, அப்பாவித் திராவிடர்களைப் பல்வேறு வகையிலும் அடிமைப்படுத்தி வந்தனர்.

ஆரிய சூழ்ச்சிகளை, விழிப்புணர்ச்சி கொண்ட திராவிடர்கள், அவ்வப்போது அய்யப்பாடு அடைந்து, ஆரியக் கூட்டத்தினரை எதிர்த்துப் போராடியதும் உண்டு.

ஆரியர்கள் சாம-பேத-தான-தண்டமெனும் ஆரிய சதுர்வித உபாயங்கள் மூலம் திராவிடரின் ஒற்றுமையைப் பலவகைகளிலும் குறைக்கச் செய்தனர்.

ஆரியர்கள், திராவிடர்களிலேயே சிலருக்கு மட்டும் சாதி உயர்வுப் பட்டம் அளித்து, மற்றவர்களை வேறுபடுத்தித் தாழ்த்தி வைக்க முற்பட்டனர். எடுத்துக்காட்டாக, நம் தலைவர் பி. தியாகச் செட்டியார் இனமான நெசவாளத் திராவிடர்களைத் தேவாங்கப் பிராமணர் எனறு சொல்லி, சாதி உயர்வுப் பட்டம் அளித்தனர்.

ஆரியர்கள், திராவிட வேளான்பெருங்குடி மக்களை, வன்னிய குல சத்திரியர் என்றும், நாயுடு செட்டியார்மார்களை, கவுரவ சத்திரியர் என்றும், திராவிடக் கோமுட்டிகளை, ஆரிய வைசிர் என்றும், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தன வைசியர் எனறும், பொற்கொல்லர்களை விசுவகர்ம பிராமணர் என்றும், வடநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத திராவிட இனத்தைச சார்ந்தவர்களான குற்றவேல் புரிபவர்களைப் பூமிஹார் பிராமணர் என்றும், விவசாயிகளை குர்மிசத்திரியர் எனறும் பல வாறாகப் பெயர்களைச் சூட்டித் திராவிடர்களின் கோட்டைக்குளேயே குத்து வெட்டு, போட்டா போட்டி, பொறமை, பொச்சரிப்பு போன்ற குழப்பங்களை ஏற்படுத்தினர்.

திராவிடரில் பலர்க்குப் பெயரளவில், ஆரிய வர்ணச்சிரம உயர்சாதிப் பட்டங்கள் கிடைக்கப் பெற்றனவேயன்றி, நடைமுறையில், சங்கராச்சாரியார் பீடத்தில் அமரவோ, கோவில் அர்ச்சகர்களாக ஆகவோ, ஆரியச் சடங்குகள் செய்யும் புரோகிதர்களாக மாறவோ, அவர்களுக்கு உரிமைகள் அறவே வழங்க்கப்படவில்லை.

தேவாங்கப் பிராமணராக நம் தலைவர் திரு. பிட்டி. தியாகராய வள்ளல் அவர்கள், அப்படிப்படட இடங்களில் அமர வேண்டும் என்று ஆசைப்படுவாரேயானால், ராமாயணத்தில் கண்டுள்ளபடி, தவம் செய்த பாவத்திற்கா ராமனால் தலையிழுந்த சூத்திரனான சம்பூகன் கதிதான் இவருக்கும் ஏற்படும் (சிரிப்பு!  கைதட்டல்! ஆரவாரம்!)

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு இணங்க, ஆரியர்களால் எவ்வளவு புரட்டுகளும், பித்தலாட்டங்களும் நடைபெற்றாலும், இங்குக் கூடியிருக்கும் நீங்கள் அனைவரும், உங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதில் பூரிப்பும், பெருமையும் கொண்டிருக்கிறீர்கள்.

வீரத் திராவிடர்களே! (பெருத்த ஆரவாரம்! கைதட்டல்! தியாகராயர் வாழ்க! டாக்டர் நாயர் வாழ்க! நீதிக்கட்சி நீடுழி வாழ்க! என்று முழக்கங்கள்)  என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன்! லண்டனிலும், சென்னையிலும் எல்லோரும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்லுகிறார்கள்.

நான் ஒரு எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது. எனக்காகும் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் திரு. பிட்டி தியாகராயர் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக்கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவிதில் பெருமைப் படுகிறேன். (டாக்டர் நாயர் வாழ்க! தியாகராயர் வாழ்க என்ற முழக்கம்)

இவ்வாறெல்லாம் இருந்தும், என் பிறந்த இடமான கேரளத்தில் நானோர் சூத்திரன்தானே (நகைப்பு! வெட்கம்! வெட்கம்! என்ற முழக்கம்) இத்தகைய இந்துமத சாதி அக்கிரமங்களை, எந்தப் பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? (வெட்கம்! வெட்கம்! என்ற முழக்கம்)

இந்த மூஞ்சிகளுக்குத்தான், தனி ஆடசி நடத்த, தன்னாட்சி அரசு வேண்டுமாம்! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)

-தொடரும்

தொடர்புடைய கட்டுரைகள்,  பதில்கள்:

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை

தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

3 thoughts on ““பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு

  1. nice humrs n thoughtfl words are usng here. n somthng is gud to learn frm it like hidden mattrs abt him.. in a single word… its useful..

  2. எங்கள் ஊர்காரர்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட ஓரிருவர் மட்டும், பார்ப்பனர்கள் போல நடந்து கொண்டதன் காரணம் இப்போதுதான் புரிகிறது. அவர்கள் மட்டும் சங்கத துதிகளை கொச்சையாக சொல்லக்கற்றுக் கொள்வார்கள். வீட்டில் புலால் உண்டாலும் அவர்களுக்கு சைவ சாப்பாடுதான்.

    நான் அவர்கள் புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

    நாயர் மீது மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. உங்கள் கட்டுரை முழுதும் பதிவாகும் வரைக் காத்திருக்க முடியாமல், உரையின் ஆங்கில வடிவைத் தேடி இப்போதே படித்து முடிக்கத் துடிக்கிறேன்.

    அரும்பெரும் மக்கள் தலைவர்களை அடையாளம் காட்டும் உங்கள் பணி வளர்க.

Leave a Reply

%d bloggers like this: