பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலைவர் டாக்டர் அம்பேத்கர்

ambedkar

ப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அப்போது, அதவாது 1936 ஆம் ஆண்டில் ஜாத்பட்தோடக் மண்டல் மாநாட்டுக்குடாக்டர் அம்பேத்கரை தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் தன் தலைமையுரையை முன்னரே தயாரித்து, அதை மாநாட்டில் அச்சிட்டு வழங்க அனுப்பி வைக்கிறார்.

டாக்டர் அம்பேத்கர் அந்த உரையை இப்படி துவங்கியிருக்கிறார்: இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு பேரன்புடன் என்னை வேண்டிக் கொண்ட ஜாத்பட்தோடக் மண்டல் உறுப்பினர்களின் நிலைக்காகப் பெரிதும் வருந்துகிறேன். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தமைக்காகப் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். ……………………………….. நான் இந்துக்களை விமர்ச்சித்து இருக்கிறேன். அவர்கள் போற்றிடும் மாகாத்மாவுக்கு இந்துக்கள் பேரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் தோட்டத்தில் என்னை ஒரு நச்சுபாம்பாகவே பார்க்கின்றனர். ………………………………………………………………………

…………. மதஈடுபாடுள்ள சாதாரண இந்துக்களுக்கும் கூட என்னைத் தேர்வு செய்தது பிடிக்காது. ஒரு தலைவைரை தேர்ந்தெடுப்பதற்குச் சாஸ்திரங்கள் விதித்துள்ள விதிமுறைகளை மீறியதேன் என இம்மண்டலைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்க நேரலாம். …………. அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.” என்று ஆரம்பித்து, சாதிகள் பற்றியும், இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் என்றும் வேதங்கள், உபநிஷதங்கள், ஸ்மிருதிகள், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இந்துக்களின் அறநூல்களை அம்பேத்கர் நொறுக்கியிருந்தார்.

அந்தத் தலைமை உரையை படித்துப் பார்த்த மாநாட்டின் வரவேற்புக் குழவினர், அதிர்ச்சி அடைகிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உரையை சுருக்கிக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் வேண்டுமென குழவினர் டாக்டர் அம்பேத்கரை கேட்டுக் கொள்கின்றனர். அதற்கு டாக்டர் அம்பேத்கர் தலைமை பதவியை அளித்த கவுரவத்திற்காக, மாநாட்டுத் தலைமையுரையைத் தயாரிப்பதற்குத் தலைவருக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகிறார்.

மாநாட்டுக் குழவினர், டாக்டர் அம்பேத்கரின் தலைமையை நீக்கிவிடுகிறார்கள்.

அதைக்குறித்து 15.5.36 அன்று ஹர்பகவன் என்பவருக்கு டாக்டர் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்: ஒருவரது தலைமையுரையை வரவேற்புக் குழவினர் ஒப்புக் கொள்ளாததால் தலைவரையே ரத்து செய்தது இதுவே முதல் தடவையாக இருக்குமெனக் கருதுகின்றேன். இது சரியோ, தவறோ சாதி இந்துக்களின் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க நான் அழைக்கப்பட்டது இதுவே முதல் தடவை. இது துக்கத்தில் முடிந்தது பற்றி வருந்துகின்றேன். தம் வைதீக சகாகக்களிடமிருந்து சீர்திருத்தப் பிரிவனருக்கும், சீர்திருத்தம் நடைபெற்றே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீண்டாதோரின் தன்மானமுள்ள பிரிவனருக்கும் இடையிலான இத்தகைய அவலமான உறவு எப்படி முடியும்?”

1936 ஆம் ஆண்டின் நிலை மட்டுமல்ல இது. இன்றைய நிலையும் இப்படித்தான் இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை எழுதியிருக்கிறார். அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் பல உரிமைகளைப் போராடி சட்டமாக்கியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிடை வலியுறுத்தி தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினமா செய்திருக்கிறார். உலகம் வியக்கும் அறிஞராக பல விஷயங்களில் ஆழ்ந்த கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனாலும் டாக்டர் அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக மட்டுமே பார்க்கிற தொனி இன்றும் நிலவுகிறது.

அப்படிப் பார்ப்பதுகூட பிரச்சினையில்லை, அவரை பிற்படுத்தப்பட்டவர்களின் எதிரியாக சித்தரிப்பது திட்டமிட்ட சதியாக, பேராபத்து நிறைந்ததாக இருக்கிறது. அதன் பொறுட்டே, அவரின் சிலை சேதப்படுத்தப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வியை, வேலைவாய்ப்பை எதிர்த்த, மறுத்த குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜி மீது வராத கோபம், காழ்ப்புணர்ச்சி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிட்டை சட்டமாக்கிய டாக்டர் அம்பேத்கர் மீது வருகிறது என்றால், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தார் என்பதினால்தான். “அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.” என்று அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி.

p09

ஒரு தாழ்த்தப்பட்டவர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் அந்த மாவட்டமே இருக்கிறது. காவல் துறை அதிகாரிகளில் இருந்து, தாசில்தார்கள் வரை அவர் உத்தரவுக்காக காத்திருக்கிறர்கள். ஆனால், அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்றால், சேரியில்தான் புழங்கவேண்டும். ஊரில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு முட்டாள் அல்லது கிரிமனல் ஜாதி இந்துகூட அவரை தன்னை விட தாழ்ந்தவராக, தான் அவரை விட உயர்ந்தவராக நினைப்பான். இதுதான் ஜாதிய மனோபாவம்.

இந்த மனோபாவம், முட்டாள் ஜாதி இந்துவிடம் மட்டுமல்ல, நன்கு படித்த ஜாதி இந்துவிடமும் இருக்கிறது. இந்த எண்ணமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையும் இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. இந்திய தேசியத்தின் ஒரே அடையாளமாக இந்த தலித் விரோதம், இந்துக்கள் இருக்கும் இடமெல்லாம் நீக்கமற, பரம்பொருளைபோல் பரவி இருக்கிறது.

தன் மீது ஆதிக்கம் செலுத்துகிற, தன்னை அவமானப்படுத்துகிற ஆதிக்க ஜாதிகளைப் பார்த்து வராத கோபம் தன்மீது எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்தாத, தன்னைவிட மட்டமானவர்களாக நினைக்காத, தாழ்த்தப்பட்டவர்கள் மீதே கோபம் கொள்கிற மனோபாவத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். இந்த மனோபாவம் மாறாத வரையில் சாதி ஒழியாது. சாதி மட்டுமல்ல, சாதிய ஏற்றத்தாழ்வுகள்கூட ஒழியாது.

ஏனென்றால் சாதிய அமைப்பு முறை உயர்ந்தவன்தாழ்ந்தவன்என்ற இரண்டே வேறுபாட்டில் இல்லை. அப்படி இருந்திருந்தால், அது எப்போதோ ஒழிந்திருக்கும், அல்லது அந்த நிலையில் மாற்றம் வந்திருக்கும். ஆனால் இந்து சாதிய அமைப்பின், ஏற்றத் தாழ்வுகள் படிநிலை நிறைந்தாக உள்ளது. அதனால் தான் வேறொருவனுக்கு அடிமையாக இருப்பதை பற்றிய கவலையில்லாமல், தனக்கு கீழ் ஒரு அடிமை இருப்பதில் மகிழ்ச்சியும், அந்த அடிமை தன்னை மீறி போகும்போது ஆத்திரம், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு வன்முறையில் இறங்க வைக்கிறது. 2000 ஆண்டுகளாகியும் சாதி அமைப்பு முறையை ஒழிக்க முடியாததற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் உயர்சாதிக்ககாரர்கள் எல்லா சாதிக்காரர்களையும் மட்டமானவர்களாக கருதினாலும் அல்லது எல்லோரையும் விட நாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு நடந்து கொண்டாலும், அவர்களிடம் எந்த சாதிக்காரர்களும் சண்டைக்குப் போவதில்லை. எந்த சாதிய தகறாறுகளிலும் பாதிக்கப்படாமல், சாதி ரீதியாக மரியாதையோடும் வாழ்கிறார்கள். இதுதான் சாதியின் இயக்கம். இதுதான் சாதிய உணர்வு.

இந்த உணர்வு கொண்ட சாதி இந்துக்கள் மனம் திருந்த வேண்டும். தீண்டாமையை பொறுத்தவரையில் அதில் திருந்த வேண்டியவர்களும், மாற வேண்டியவர்களும் சாதி இந்துக்கள்தான். தாழ்த்தப்பட்ட மக்களிடம் எந்த தவறும் இல்லை.’ என்று டாக்டர் அம்பேத்கர் சொல்வார். ஆகையால் தீண்டாமைக்கு எதிராக சாதி இந்துக்களிடம் தீவிரமாக பிரச்சாரம் செய்யவேண்டியது, சமூக அக்கறை உள்ளவர்களின் கடமை. அதனால்தான் தந்தை பெரியாரும் சாதிக்கு எதிராக, இந்து மதத்ததிற்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக சாதி இந்துக்களிடமே அதிகம் பேசினார். அதனால்தான் இந்திய அளவில் மிகச் சிறந்த தலைவராக டாக்டர் அம்பேத்கரை போல் , தந்தை பெரியாரும் விளங்குகிறார்.

சமூகத்தில் சாதிய வேறுபாட்டை எதிர்க்க, சாதிரீதியான காழ்ப்புணர்ச்சியை குறைக்க, முற்றிலும் விலக்க அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை பிற்படுத்தப்பட்டர்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டும். அப்படி சேர்ப்பதின் மூலம் சமூகம் சாதி வேறுபாடற்ற சமூகமாக மாறும். பிற்படுத்தப்பட்ட மக்கள், அம்பேத்கரை தலைவராக ஒத்துக் கொண்டால், அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சசோதரர்களாக பாவிக்கிறார்கள் என்று அர்த்தப்படும். தாழ்த்தப்பட்ட ஒருவர் பஞ்சாய்த்து தலைவராக வருவதை எதிர்த்து இயங்குகிற, மனநிலையை அது மாற்றும். முற்போக்காளர்கள் பிற்படுத்தப்பட்டவர்களிடம் டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளை, அவர் உருவத்தை கொண்டுபோய் சேர்ப்பது தங்களின் தலையாய கடமை என்று இயங்கவேண்டும்.

அதன் ஒரு நிலையாக யாருமே அணியாத டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட டிசர்ட் அணிந்து, அதை சேகுவேரா, பெரியார் டிசர்ட்டை போன்று பிரபலமாக்க வேண்டும். அம்பேத்கர் டி சர்ட் பிரபலமானால், டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கான பொதுத்தலைவர், என்கிற நிலை உருவாகும். அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த வேணடும் என்கிற உணர்வு மாறும். அவர் சிலையை கூண்டுக்குள் வைத்து அவமானப்படுத்துகிற நிலை மாறும். தாழ்த்தப்பட்டவர்களின் மீது நடக்கிற வன்கொடுமைகள் அகலும் அல்லது நிச்சயம் குறையும்.

ஆகவே, அண்ணலின் 114 ஆவது பிறந்தநாளான இன்று அவரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று உறுதி ஏற்பதோடு அவரின் படம் போட்ட டி சர்ட அணிவோம். மிகப் பரவலாக தலித் அல்லாதவர்களையும் அணிய வைப்போம்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் ஒற்றுமை, பல புதிய உரிமைகளை மீட்கட்டும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் பல உரிமைகளை பெற்றுத்தந்த அண்ணல் அம்பேத்கரின் புகழ் ஓங்கட்டும். சாதி வேறுபாடு அற்ற சமூகம் உருவாகட்டும்.

வே. மதிமாறன்

இன்று (14.4.2009) டாக்டர் அம்பேத்கரின் 114 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் ஓசை நாளிதழக்காக எழுதிய கட்டுரை. இன்று வெளியாகி இருக்கிறது. நன்றி தமிழ் ஓசை.

16 thoughts on “பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலைவர் டாக்டர் அம்பேத்கர்

 1. கட்டுரை அருமை. அண்ணல் அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்.

  நித்தில்

 2. ” இருப்பவரை இருப்பவராகவும் இல்லாதவரை இல்லாதவராகவும் நிலைநிறுத்துவதுதான் காந்தியத் தத்துவம் என்பது அம்பேத்கரின் கருத்து. இல்லாதவன் அவனுடைய உரிமையைக் கேட்டுப் பெறுவதைக் காந்தியம் தடைசெய்கிறது. ‘சொத்துக்கு ஆசைப்படாதே’ என்பதுதான் சூத்திரனுக்குக் காந்தி வழங்கும் உபதேசம். தோட்டிகள் தொடர்ந்து அதே தொழிலைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே காந்தி அந்தத் தொழிலுக்கு மகத்துவம் கற்பித்தார் என்று அம்பேத்கர் வாதாடுகிறார்.”

  ஆசியாவின் மிக பெரும் அறிவாளி . ஜாதி முத்திரையை ஒட்டி , காந்தியின் பெயரை சொல்லி அண்ணலை ஒடுக்க பார்க்கிறது இந்திய பார்ப்பனிய தேசம் . ஜாதியின் பெயரால் மக்களை ஒடுக்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மகாத்மாவாக இருந்தாலும் , கடவுளாகவே இருந்தாலும் தன் அறிவு என்னும் அரிவாளால் வெட்டி சாய்த்தவர் அண்ணல் . பிற்படுத்தப்பட்ட மக்கள் தாங்களும் அடிமைகள் என்று உணரமால் தாழ்த்தப்பட்டவர்கள் மீது காழபுனர்வோடு செயல்படும் வரை யாருக்குமே விடுதலை இல்லை என்பதை அண்ணலின் பிறந்த நாளன்று தெளிவுபட விளக்கியுளீர்கள் .

 3. அண்ணலின் பிறந்த இந்நன்னாளில் சாதியை ஒழித்து சமத்துவ தமிழ்ச் சமுதாயம் மலர ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் உறுதி கொள்வோம்.

 4. இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த ஒப்புயர்வற்ற அறிஞர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புகழ் ஒங்குக!

  அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக மட்டும் பிழையாகப்புரிந்து கொண்டு, இன்னும் தீண்டாமையைக் கடைபிடிப்போர் இப்போதாதவது திருந்தட்டும்.

  அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பணி முடிப்போம்!
  சாதி வெறி சாய்க்க, மதவெறி மாய்க்க தொடர்ந்து களப்பணி ஆற்றுவோம்!

  -மா.தமிழ்ப்பரிதி
  http://www.thamizhagam.net/

 5. This is not completely true. The Hindu shastras does not see the caste in bestowing knowledge. If it was true, how come Sage Vyasa became to known as Veda Vyasa, who classified the Vedas in to four? How come Sage Vishwamithra’s Gayatri Mantra is chanted everywhere, irrespective of caste? Ambedkar is no doubt a great son of India, but what is written above is not true as per Shastras. Indeed, that the caste system has done so many evil in the society, but it is the people whom is to be blamed, not the Shastras. We are all equal and we are all Indians. Do not compare Dr. Ambedkar with the EVR guy. It is like comparing the Niagra falls with a small pond over a village.

 6. வரலாறுகளில் வாழ்பவர்கள் சிலர், வரலாறாய் வாழ்பவர்கள் சிலர். தம் செயல்களும், அவற்றின் சமுதாய நோக்கும் பன்முகப் பார்வையும், ஆழமும், மனித நேயச் சிந்தனையும் ஒரு மனிதனின் வரலாற்று நிலைப்பாட்டை நிர்ணயிக்கின்றன. அந்த வெளிப்பாடுகளின் வெளிச்சத்தில் வரலாற்றுக் காலமாகவே விளங்குகிறார் அம்பேத்கர்.

  சாதி ஒழிப்போம் சமத்துவம் காண்போம்!

 7. Fredrick அவர்கள் காந்தியின் பெயரால் அண்ணல் அம்பேத்கர் இழிவுபடுத்தப் படுகின்றனர் என்கிறார். இங்கே ஒரு பாரப்ப்பனப் பிஞ்சு, அம்பேத்கர் பெயரால், பெரியாரை இழிவு படுத்துகிறதைப் பாருங்கள். பார்ப்பான், பார்ப்பான் தான். இவர் சாத்திரங்களில் தவரில்லை என்கிறார். தவறு ‘நம்மீதாம்’.

  ஆனால், வள்ளலார் பார்ப்னர்களைப் பற்றி, ‘வெற்று சாத்திரம் செய்யும் சழக்கர்காள்’ என்று கடுமையாக சாடுகிறார்.

  இன்று ஈழம் எரிகிறது. தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். இதை நடத்துவது, இந்தியப் ‘பார்ப்பனீயம்’ தான்.

  இவர்கள் என்று இந்தியாவில் ‘நுழைந்தார்களோ’ அன்று பிடித்தது தருத்திரம், இந்திய மக்களுக்கு.

 8. ///Fredrick அவர்கள் காந்தியின் பெயரால் அண்ணல் அம்பேத்கர் இழிவுபடுத்தப் படுகின்றனர் என்கிறார். இங்கே ஒரு பாரப்ப்பனப் பிஞ்சு, அம்பேத்கர் பெயரால், பெரியாரை இழிவு படுத்துகிறதைப் பாருங்கள். ///

  அம்பேத்கர் பெரியார் சந்திப்பு:

  இந்திய மத்தியஅரசாங்க நிர்வாக அங்கத்தினர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கிப் பெரியார் ஈ.வெ. ராமசாமி சென்னை சென்று தனது வரவைத் தெரிவித்துக் கொண்டார்.

  டாக்டர் அவர்கள் 12- மணிக்கு வந்து சந்திப்பதாகத் தெரிவித்து விட்டுச் சரியாக 12- மணிக்குப் பெரியார் ஜாகைக்கு வந்துச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுச் சென்றார்.

  பேச்சின் முக்கிய சாரம்:

  சேலம் மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்பதாகவும், அதற்கு ஆகவும்,
  அவையாவும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டதற்கு ஆகப் பெரியாரைப் பாராட்டுவதாகவும், பட்டம், பதவியாளர்களும், பணக்காரர்களும் பதவியைக் கருமமாய்க் கருதுபவர்களும் முன்னணியிலிருந்து நடத்தப்படும் கட்சி எதுவும் இக்காலத்தில் பலன் தராதென்றும், அவர்களைப் பின் அணிக்குத் தள்ளியது இக்கட்சிக்குப் புத்துயிரளித்தது போல் ஆயிற்றென்றும் , பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதன் திட்டங்களில் நம் வகுப்பில் பார்ப்பனருக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? எதை ஒழிப்பதற்கு அல்லது என்ன நடப்பை மாற்றுவதற்கு என்று குறிப்பிடும் திட்டங்கள் நடைமுறைகள் இல்லாததாலேயே பாமர மக்களிடத்திலும் அறிவாளிகளிடத்திலும் ஜஸ்டிஸ்கட்சிக்கு மதிப்பில்லாமல் போனதோடு பார்ப்பனர் அக் கட்சியாளரை உத்தியோக வேட்டைக்காரர் என்று சொல்லுவதைப் பாமர மக்களும் வெளியிலுள்ள அறிஞர்களும் நம்பும்படி ஏற்பட்டு விட்டதென்றும், இதனாலேயே கட்சி 1937 -இல் வீழ்ச்சியுற வேண்டியதாயிற்று என்றும் சேலம் தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியை இந்தியக் கட்சியாக ஆக்கக் கூடியதாகுமென்றும் எதிர்காலத்தில் இது தலைசிறந்து விளங்கக் கூடியதாக ஆகிவிட்டதென்றும் கூறினார்.

  சேலம் தீர்மானம் பிடிக்காததால் கட்சியை விட்டுப் போகின்றேன் என்பவர்களைப் பற்றியும், வீண் குறைகூறிக் கொண்டு தங்கள் காரியம் பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றியும், கவலைப் படாமல், பாமர மக்களுடையவும் வெளிநாட்டு மக்களுடையவும் ஆதரவு பெறவும் சர்க்கார் கவனிக்கவும் உருப்படியான காரியம் செய்யவும் நீங்கள் பார்க்க வேண்டும் என்றும் சந்தர்ப்பட்டால் மற்ற ஆம்களுக்கும் இதை வெளிப்படையாய்ச் சொல்லிவிட்டுப் போகிறேன் என்றும் சொன்னார்.

  ஜஸ்டிஸ் கட்சி எல்லா இந்தியக் கட்சியாக ஆக இப்போது நல்ல சமயமும் நல்ல வேலைத்திட்டத் தீர்மானங்களும் இருப்பதால், துணிந்து தைரியமாகவும் இந்தியா பூராவும் சுற்றி வேலை செய்யும் படியும், ஆங்காங்குள்ள தமது நண்பர்களுக்குஎழுதியும் தம்மால் ஆன அளவுக்கு ஒத்துழைத்தும் ஆதரிப்பதாகவும் சொன்னார்.கடைசியாகதிராவிடஸ்தானையும்
  பாகிஸ்தானையுனையும் ஒன்றாகக் கருதியது தப்பு என்றும், அதன் தத்துவம் வேறு; இதன் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லீம் மெஜாரிட்டி உள்ள இடத்திற்கு மாத்திரம் பொறுத்தமான தென்றும், பிராமணியம் இந்தியா முழுமையும் பொறுத்த விஷயமென்றும் திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாணக்காரர் களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னார் என்பதாகத் தெரிகிறது.

  “குடிஅரசு”- 30.09.1944-

  இந்த நிகழ்ச்சி 1944-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் சென்னையில் நடைபெற்றது. இதற்கு முதல் நாம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை பெரியாருக்கு எதிராகத் தங்களுக்குத் தாங்களே ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு சிலர் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு விருந்தொன்று கொடுத்தனர். விருந்துக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியாருக்கு விரோதமாக நடப்பதைக் கண்டித்தார். தலைவரை மதித்துக் கட்டுப்பாடாக நடக்க வேண்டும் என்ற அறிவுரை கூறினார்.

  தந்தை பெரியார் அவர்களை டாக்டர் அம்பேத்கர் எப்படி மதித்தார் என்பதற்கு இது ஓர் அரிய எடுத்துக்காட்டு அல்லவா?

  பம்பாய்ச் சந்திப்புகள்:

  தந்தை பெரியார் அவர்கள் எப்படியும் ஒரு முறை பம்பாய்க்கு வர
  வேண்டும் என்று பம்பாய் வாழ் தமிழர்கள் விரும்பினார்கள். தந்தை பெரியாரும் இசைந்து 5.1.40 – காலை சென்னை சென்ட்ரல் புகைவண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டார். அவரைக் குமாரராஜா முத்தையா
  செட்டியார் ஜெனரல் கலிபுல்லாசாகிப் உட்பட பல தலைவர்கள்
  வழியனுப்பி வைத்தனர்.

  தந்தை பெரியார் அவர்களுடன் சண்டே அப்சர்வர் பி. பாலசுப்பிரமணியும், ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி. நாதன், கே.எம். பாலசுப்பிரமணியம், அறிஞர் அண்ணா, டி.பி.எஸ். பொன்னப்பா, சி. பஞ்சாட்சரம் ஆகியோர் பயணம் செய்தனர்.

  6- ம் தேதி காலை 10- மணிக்குத் தந்தைபெரியார் அவர்கள் தோழர்களுடன் பம்பாய் தாதர் புகைவண்டி நிலையம் வந்தடைந்தார். அன்று இரவு 9- மணிக்கு டாக்டர் அம்பேத்கர், பெரியார் அவர்களைத் தமது மாளிகைக்கு அழைத்து விருந்தோம்பினார். இரவு 10.30- மணி வரை பல்வேறு அரசியல் சமுதாயப் பிரச்சினைகள் பற்றிப் பெரியாருடன் அம்பேத்கர் உரையாடினார்.

  மறுநாள் மாலை 4 – மணிக்குத் தந்தை பெரியாரின் வருகையைக் கொண்டாட வேண்டி, டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அவ்விருந்து கோகலே கல்வி நிலையக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்துக்கு வந்திருந்து பிரமுகர்களைப் பெரியார் அவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் அறிமுகப்படுத்தி வைத்தார். எஸ்.சி. ஜோஷி. எம்.எல்.சி., ஆர்.ஆர் போல் எம்.எல்.ஏ.,ஜாதவ் எம்.எல்.ஏ. போன்ற ஏராளமான பிரமுகர்கள் அதில் கலந்து கொண்டனர்.

  9.1.40- அன்று இரவு 9 மணிக்கு டாக்டர் அம்பேத்கர் தந்தை பெரியார் அவர்களுக்கு மீண்டும் ஓர் அரிய விருந்து அளித்தார். பம்பாய் “சென்டினல்” நிருபர் ஜெகெல், “டைம்ஸ் ஆப் இந்தியா” தலைமைச் செய்தியாளர் ராவ், பிரபல பத்திரிகை ஆசிரியர் பால்சாரர், பி.என்., ராஜ்போஜ். சென்னை மாநில முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் அவர்களது மகன் வழக்கறிஞர் சொக்கலிங்கம் போன்ற பிரமுகர்களும் பத்திரிகையாளர்களும் இவ்விருந்தில் கலந்து கொண்டு பெரியாரிடம் உரையாடினர். இரவு 11- மணிக்கு விருந்து நிகழ்ச்சி முடிவுற்றது.

  ஜின்னாவுடன் சேர்ந்து சந்திப்பு:

  08.01.1940- மாலை 5.30- மணி முதல் 8.30- மணி வரை ஜனாப் ஜின்னா – தந்தை பெரியார் ஆகியோரின் சந்திப்பு ஜின்னா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தோழர்கள் “சண்டே அப்சர்வர்” பாலசுப்பிர மணியம், ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.எ.வி. நாதன் வழக்கறிஞர் கே.எம் பாலசுப்பிரமணியம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

  காங்கிரசின் சுயநலப் போக்குகள், இந்தி எதிர்ப்பின் அவசியம், நாட்டுப் பிரிவினை ஆகியவை இச்சந்திப்பில் முக்கிய இடம் பெற்றன. இந்தித் திணிப்பு என்பது பார்ப்பன மதத்தையும், கலைகளையும் பயன்படுத்தி விரிவுபடுத்தும் குறுகிய நோக்குள்ள ஒரு திட்டம் என்பதைப் பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்ன போது ஜின்னா அவர்களும், அம்பேத்கர் அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

  மீண்டும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் துவக்க இருப்பதாகப் பெரியார் அவர்கள் அங்கு எடுத்துச்சொன்ன பொழுது; ஜனாப் ஜின்னா அவர்கள்
  “நீங்கள் என் பூரண ஆதரவைப் பெறுவீர்கள்” என்று கூறினார்.
  சென்னை மாகாண காங்கிரஸ் ஆட்சியின் தன்மைகளைத் தந்தை பெரியார் அங்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அப்பொழுது ஜனாப் ஜின்னா அவர்களும் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் கூறியதாவது:

  “காங்கிரஸ் ஆட்சியின் கீழ் சகிப்புத் தன்மையோடு நடந்து கொண்டதைப் பாராட்டுகிறோம். நீங்கள் இதர மாகாணங்களிலும் சுற்றுப்பிராயணம் செய்து அங்குள்ள பொதுமக்களுக்கு இவ்வுண் மையை உணர்த்தவேண்டும்” என்று பெரியாரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.

  ஜனாப் ஜின்னா அவர்களும் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று 15- நாள்கள் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்ய இசைவு அளித்தனர். அவர்களும் மீண்டும் ஒரு முறை பெரியார் அவர்கள் பம்பாய் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

  இரங்கூனில் சந்திப்பு:

  பர்மாவில், இரங்கூன் நகரத்தில் நடைபெற்ற உலகப் புத்த அறநெறி மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தந்தை பெரியார் அவர்களும் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் சந்தித்துப் பேசிக்கொண்டனர். மாநாட்டு அலுவலகத்திலே 05.12.1954 -காலை 10.30- மணிக்குச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகத் தனிமையில் பல செய்திகள் குறித்து அளவளாவினார்கள். தன்னைவிட நல்ல திடகாத்திர நிலையில் பெரியார் இருப்பதற்கு டாக்டர் அம்பேத்கர் மகிழ்ச்சி தெரிவித்தார். உலகப் புத்தமாநாடு குறித்தும், எதிர்காலத்தில் தாங்கள் இருவரும் எப்படி நாட்டிற்கு வழிகாட்ட வேண்டும் என்பவைப் பற்றியும் பேசினார்கள்.

  மேலும் தான் பவுத்த மதத்தில் சேர முடிவு செய்து விட்டதாகக் கூறிப் பெரியாரையும் பவுத்த மதத்தில் சேர அழைத்தார். இந்து மதத்தை விட்டு போய்விட்டால் இந்து மதத்தைப்பற்றிப் பேசவோ, அதன் பிடியில் அல்லல்படும் மக்களை விடுதலை செய்யவோ இயலாது போகுமென்றும் இந்துமதத்தில் இருந்து கொண்டே அதன் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவேன் என்றும் கூறித் தந்தை பெரியார் மறுதலித்துவிட்டார்.

  அம்பேத்கர் அவர்கள் புத்த மார்க்கத் திற்குச் செல்ல விரும்பினால் பெருங்கூட்டத்தோடு இந்து மதத்திலிருந்து வெளியேறி அதில் இணைய வேண்டும் என்ற தனது கருத்தையும் தந்தை பெரியார் தெரிவித்தார்.

  டாக்டர் அம்பேத்கர் பற்றி “குடிஅரசு”த் தலையங்கம்:

  டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசாங்க நிர்வாக சபை மெம்பர் என்கின்ற முறையில் சென்னைக்கு வந்து 4,5- நாள்கள் தங்கி இருந்து பல இடங்களில் பேசிவிட்டுப் போய் இருக்கிறார்.

  அப்படி அவர்கள் பேசிய பேச்சுக்களில் பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகங்களில் இருந்தால் எப்படிப் பார்ப்பனிய ஆதரவுக்கும் நலத்துக்கும் துணிகரமாய் – வெள்ளையாய்ப் பேசுவார்களோ அது போலவே பச்சையாய்ப் பேசுகிறார் என்பது மிகுதியும், அதிசயப் படவும், பாராட்டத்தக்கதுமான காரியாகும். நம் எதிரிகள் அவரை சர்க்கார் தாசர் என்று சொல்லக்கூடும். அதைப்பற்றி அவர் சிறிதும் பயப்படவில்லை.

  பதவிக்கு அவர் வந்தவுடன், “இந்தப் பதவிக்கு நான் வந்ததன் பயனாய் என் இனமக்களின் நலத்துக்கு இப்பதவியைப் பயன்படுத்த முடியுமானால் – என் இன மக்களுக்கு ஏதாவது நலம் செய்ய முடியுமானால் நான் இருப்பேன், இல்லாவிட்டால் நான் வெளி வந்து விடுவேன்’, என்று சொன்னார் . அதுபோலவே பதவிக்கு அவர் சென்றது முதல் ஒவ்வொரு மூச்சிலும் தன் இனத்தின் நலத்துக்கு ஏதாவது காரியங்கள் செய்து கொண்டு எதிரிகளை வெள்ளையாய்க் கண்டித்துப் பேசி நடுங்கச் செய்தும் வருகிறார்.

  அவருக்கு அவருடைய வகுப்பாருடைய ஆதரவு இருக்கிறதா என்றால்,
  அது பூஜ்ஜியம் என்பதோடு, இனத்தார் அத்தனை பேரும் அவருக்கு ஆதரவளிக்கும்படியான வலிமை பொருந்திய ஸ்தாபனமும் இல்லை. இனத்தில் தக்க செல்வமோ, செல்வாக்கோ துணிந்து வெளிவந்து ஆதரவளிக்கக்கூடிய ஆள்களும் மிகக் குறைவு 100-க்கு 99- பேர் ஏழைக்
  கூலி, தரித்திர மக்கள்.

  இப்படிப்பட்ட நிலையில் உள்ள அவர், உத்தியோகம் தனக்குக் கிடைக்கத் தக்கவிதமாகத் தனது வாழ்வில் பல “அவதாரம்” எடுக்காமலும் எதிரிகளிடம் நல்ல பேர் வாங்க – அவர்கள் மெச்சும்படி நடக்காமலும், இந்துக்களையும் இந்து மதத்தையும் இராமாயணம் , மனுஸ்மிருதி முதலியவைகளையும் பார்ப்பனர்களையும் பச்சையாய் வைது, கண்டித்துச் சிலவற்றைக் கொளுத்தவேண்டும் என்றும், சிலதைத் தீயில் கொளுத்தியும் “நான் இந்து மதத்தைவிட்டு வெளியே போய்விடுகிறேன்” , என்றும் தேசியம் என்பது புரட்டு தேசிய சர்க்கார் என்பது பார்ப்பன ஆட்சி, தேசிய சர்க்காரைவிட, இன்றுள்ள சர்க்காரே மேல் என்றும் பேசி வருகிறார்.

  மற்றும் தேசிய சர்க்கார் ஏன் கெடுதி என்றால் , “எந்த சுதந்திர தேசிய சர்க்கார் வந்தாலும் அது பார்ப்பன வர்ணாச்சிரம சர்க்காராகத்தான் இருக்கும்” என்றும் வெடி வெடிக்கும் மாதிரியில் பேசி, தன் இன மக்களின் நம்பிக்கையையும், பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டு சட்ட திட்டங்களை இலட்சியம் செய்யாமல் பேசி வருகிறார்.

  இவரைப் பார்ப்பனர் சபிக்கலாம்; காங்கிரசுக்காரர்கள் வையலாம்; தேசியப் பத்திரிகைகள் யோக்கியப் பொறுப்பில்லாமல் எழுதலாம்; மற்றும் வகுப்புப் பேரால் பதவிபெற்று, பதவிக்குப் போய் வகுப்பை மறந்துவிட்டு தங்கள் குடும்ப நலத்திற்கு ஆகப் பதவி அனுபவிப்பவர்கள் பொறாமைப்பட்டு, “இந்த சனியன் பிடித்த டாக்டர் அம்பேத்கர் நம்ம யோக்கியதை வெளியாகும்படி நடக்கிறாரே” என்று பொறாமையும் ஆத்திரமும் கொள்ளலாம்.

  ஆனால்,தோழர் அம்பேத்கர் சுயமரியாதை அற்ற பார்ப்பனரல்லாத சமுதாயத்தைத் தவிர, மற்ற சமுதாயக்காரர்களில் பதவி பெற்ற எவ்வளவு தாழ்ந்த மனிதனும் செய்கிற காரியமே தவிர, அம்பேத்காருக்குமாத்திரம் புதிதல்ல. ஆனால், மற்றவர்களை விட இவர் சற்று வெளிப்படையாய்ப் பேசுகிறார், எழுதுகிறார் என்று சொல்லிக் கொள்ளலாம். உதாரணமாக, டாக்டர் அம்பேத்கர் சென்னை நகரசபை வரவேற்புக்குப் பதில் சொல்லும் போது பேசியதைக் கவனிப்போம்.

  “ஒரு கூட்டத்தார் எனக்கு வரவேற்புக் கொடுக்கச் சம்மதிக்க வில்லை என்பது எனக்குத் தெரியும். அதற்கு ஆகவே இந்த வரவேற் பைப் பெற
  நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் எனில், இந்த வரவேற்று, சடங்குமுறை வரவேற்பல்ல என்பதும், எனக்கு வரவேற்புக் கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்பவர்கள் பிடிவாதமாய் இருந்து மெஜாரிட்டியாய் இருந்து வெற்றி பெற்று எனக்குக் காட்டிய அன்பென்றும் கருதுவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேசினார்.

  அடுத்தாற்போல் தேசியப் பித்தலாட்டத்தைப் பட்டவர்த்தன மாக்கினார். என்னவெனில்,

  ” தேசியசர்க்கார் என்றால், பார்ப்பனச் சர்க்கார் தானே! 1937- இல் தேசியம் வெற்றி பெற்ற 7- மாகாணங்களும் பார்ப்பன முதல்மந்திரிகள் ஆதிக்கத்தில் தானே இருந்து வந்திருக்கிறது. நாளைக்கு எல்லா மக்களுக்கும் ஓட்டுக் கொடுத்து அதன் மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும் அதிலும் பார்ப்பனர்கள் தானே ஆட்சி செலுத்து வார்கள்? இது மாத்திரமா? பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும் பாப்பாத்திகளே மெஜாரிட்டியாய் வருகிறார்கள்.

  தொழிலாளருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதற்கும் பார்ப்பனர்களே பிரதிநிதிகளாய் வருகிறார்கள். இது மாத்திரமா? தீண்டாத வகுப்பாருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனர்கள் பிடித்து வைக்கிற
  ஆள்கள் தான் வருகிறார்களே தவிர , வேறு யார் வருகிறார்கள்? ஆகவே, தேசிய சர்க்கார் என்னும் வைக்கிற ஆள்கள் தான் வருகிறார்களே தவிர, வேறு யார் வருகிறார்கள்? ஆகவே, தேசிய சர்க்கார் என்னும் பித்தலாட்டத்திற்கும் இந்த நாட்டின் மானக்கேடான அரசியல் நிலைக்கும் இந்த உதாரணம் போதாதா?” என்று பேசுகிறார்.

  இதற்குப் பார்ப்பனர்களாகட்டும், தேசியர்கள் தானாகட்டும் என்ன பதில் சொல்லக்கூடும்? “நான் சென்ஸ், ரப்பிஷ்” என்று குரைத்துத் தங்கள் அயோக்கியத்தனங்களை மறைக்க முயற்சிக்கக் கூடுமே ஒழிய, வேறு
  என்ன சமாதானம் சொல்ல முடியும்? சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால் “இதெல்லாம் (இப்படிப் பார்ப்பனர் வெற்றி பெற்றது) கடவும் செயல் , அந்தராத்மா கட்டளை” என்று சொல்ல முடியும். இப்போது தலையைக் கவிழ்ந்து கொள்ள வேண்டியதைத்தவிர, இதற்கு வேறு பதில் இல்லை.

  தேசியர்களின் தன்மை இப்படி என்றால் பார்ப்பனரல்லாத கட்சியார் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு ஒரு நல்ல கொம்கையையும்., பொறுப்பையும் பாழ் அடையும்படி தங்கள் சுயநலத்தையும். வயிறு வளர்ப்பையும் , பட்டம், பதவி, உத்தியோகம் முதலியவைகளை மாத்திரம் வேட்டை ஆடுவதில் மூழ்கிக் கொண்டு மற்றவர்கள் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையற்ற அதிதீவிர சுயநலக்காரர்களுக்கும் சரியான சவுக்கடி கொடுத்துச் சிறிதாவது உறைக்கும்படிச் செய்திருக்கிறார் . இதற்கு உதாரணமாகக் கன்னிமாரா ஓட்டலில் டாக்டர் அம்பேத்கரின் ஆசிபெற விருந்து கொடுத்து ஏமாற்ற நினைத்த சென்னைத் தோழர்களுக்கு டாக்டர் உறுத்திய அறிவுரையைக் கவனித்தால் விளங்கும்.

  அவர் பேசியதன் தத்துவமாவது:

  பார்ப்பனரல்லாத தோழர்களே! உங்களை நீங்கள் பார்ப்பன ரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களே அதில் உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள பேதத்தைக் காட்டுவதற்குள்ள காரியங்கள் என்ன? அதற்கு உங்கள் கொள்கை என்ன? திட்டங்கள் என்ன? எங்கள் கட்சி பார்ப்பனியத்திற்கு மாறான கட்சி என்று சொல்லிக் கொண்டு நெற்றியில் நாமம், வீட்டில் பார்ப்பனப் புரோகிதம், நடவடிக்கையில் பார்ப்பனியத்தைப் பின்பற்றுதல், அவன் பூசை பண்ணும் கோவிலில் சென்று வெளியில் இருந்து வணங்குதல் ஆகியவைகளைச் செய்து உங்களையும் 2 – ஆவது வகுப்புப் பார்ப்பனர் மாதிரி ஆக்கிக் கொண்டு, முதலாவது வகுப்புப் பார்ப்பானாக ஆவதற்கு ஏற்ற வண்ணம் நடந்து கொண்டு வருவீர்களானால் நீங்கள் எந்தத் தன்மையில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக்கொள்ள அருகர்கள் ஆவீர்கள்?

  பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு முதலாவதும் கடைசியானதுமான கொள்கை “உத்தியோகம்” தானா? இதைத் தவிர வேறு என்ன கொள்கையை இதுவரை பின்பற்றி வந்தீர்கள்? என்பது ஆகக் கேட்டிருக்கிறார்.

  மேலும் அப்படியாவது உத்தியோகம், பதவி , பட்டம் ஆகியவை அக்கட்சியின் மூலம் பெற்று வாழ்ந்தீர்களே, அதற்கு ஆக அக்கட்சிக்கு நீங்கள் காட்டிய நன்றி அறிதல் விசுவாசம் என்ன? என்பது ஆகவும் கேட்டிருக்கிறார். மேலும் மந்திரி வேலை பார்த்தவர்கள் எங்கே? சேலம் கூட்டத்திற்குப் போனீர்களா? மந்திரிகளின் காரியதரிசிகளாய் இருந்து ரூ 500,1000 மூட்டை கட்டியவர்கள் எங்கே? இவர்கள் தேர்தலுக்கு பேசுவது தவிர வேறு ஏதாவது பொதுக் கூட்டம் கூட்டி இருப்பார்களா? அல்லது பொதுக் கூட்டத்தில் பேசி இருப்பார்களா? இந்த மந்திரிகளும் சம்பளம் பெற்றது தவிர பார்ப் பனியத்தில் ஏதாவது ஒன்றை விட்டிருப்பார்களா? விட்டிருக்கா விட்டாலும் பார்ப்பனியத்தை வளர்க்காமலாவது இருந்திருப்பார்களா?

  இவைகள் எல்லாம் நாசமாகப் போகட்டும். கட்சியின் பெயரால் உத்தியோகம் பெற்ற பெரியவர்களின் யோக்கியதைத்தான் இப்படி என்றால் கட்சிப் பேரால் உத்தியோகம் பெற்ற வாலிபர் களிலாவது எவனாவது கட்சிக்கோ, கட்சியில் உள்ள மக்களுக்கோ, ஏதாவது நன்மை செய்தானா என்பதும் விளங்கும்படிப் பேசினார்.

  கட்சித் தலைவர்கள் பார்ப்பனரல்லாத கிராமத்தார்களைப் பற்றி நினைத்தார்களா? எந்தக் கிராமத்திற்காவது எந்தத் தாலுக்காவுக்காவது
  போய் அங்குள்ள மக்களிடம் கலந்தார்களா? கூட்டங்களுக்குப் போய்ப் பேச்சாளர்களாகப் பேசினார்களா? என்று முள் தைக்கும்படிப் பேசினார்.
  மற்றும் கட்சி வீழ்ச்சி அடைந்த பின் மந்திரிகளும் பட்டம் பெற்றவர்களும் பிள்ளை குட்டிகளுக்குப் பதவி., உத்தியோகம் பெற்றவர்களும், மந்திரிகளுக்குக் காரியதரிசியாய் இருந்து பயன் பெற்றவர்களுமான தமிழர் ஆந்திராவுக்குப் போனார்களா?

  இப்படிப் பட்ட ஆந்திரக்காரர் யாராவது தமிழ் நாட்டுக்கு வந்து பிரசாரம் செய்தார் களா? அல்லது ஆந்திரர்கள் யாராவது ஆந்திராவில் ஒரு கூட்டத்தில் பேசி இருப்பார்களா? தமிழர்கள் யாராவது தமிழ்நாட்டிலோ, மலையாளத்திலோ ஒரு பேச்சுப் பேசி இருப்பார்களா? என்றும் பொரும்பட அறைந்தார். பதவி அடைந்து பட்டம் பெற்று, பணம் சம்பாதித்துக்கொண்டு மேலும் மேலே போக ஆசைப்பட்டு வலை வீசிக்கொண்டு அலையும் நீங்கள் உங்கள் நன்றி மறந்த தன்மைக்கும்,

  கவலையற்ற தன்மைக்கும் வெட்கப்படாமல், வருத்தப்படாமல் ஓய்வொழிச்சல் இல்லாமல் ஏதோ ஒரு சிறிதாவது வேலைசெய்து கொண்டு இருக்கிறவர்களையும், அது போன்ற கட்சித் தலைவனையும் குற்றம் கூறி வீரம் பேசுவதைக் கட்சி வேலை என்று கருதுகிறீர்களே இது ஒழுங்கா?
  மற்ற கட்சிகளைப் பாருங்கள். அக்கட்சித் தலைவர்களின் தன்மையைப் பாருங்கள். கட்சியின் மக்களைப் பின்பற்றுவோரைப் பாருங்கள். உங்களைப்போன்று குறைகூறித் திரியும் ஆள்கள் அங்கு எதிலாவது யாராவது இருக்கிறார்களா? என்று விளாசி இருக்கிறார்.

  “உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பேதம் காட்டிப் பார்ப்பனியத்தில் இருந்து நீங்கள் விலகாததாலேயே தோற்றீர்கள். அதனாலேயே உங்களுக்குச் செல்வாக்கில்லை. இப்படியே இருந்தால் இனியும் நீங்கள்என்றென்றும் உருப்படமாட்டீர்கள்” என்றும் எச்சரிக்கை யான அறிவுரை பகர்ந்திருக்கிறார். விருந்து நடத்தியவர்கள் இவ்வளவு அடியையும், இடியையும் பெற்றுக் கொண்டு டாக்டர் அம்பேத்கருக்கு நன்றி செலுத்தி விட்டு நாங்கள் தலைவரிடம் முழு நம்பிக்கையுடனும் பக்தி விசுவாசத்துடனும் தலைவர் கட்டளைக்கு மறுமொழி வராமலும் தான் நடந்து கொள்ளுகிறோம். அதுதான் எங்கள் கட்சி சம்பிரதாயம்- ஆனால் ஜனநாயகம் வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம் என்று பதில் சொன்னார்களாம்.

  அதுவும் யார் சொன்னார்கள் என்றால் சேலம் மாநாட்டுக்கு வந்து பெரியாரைத் தவிர, உலகம் முழுவதும் தேடியும் வேறு தலைவர் கிடைக்கவில்லை. நான் ஒரு காலத்தில் தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்த சர். சண்முகம் செட்டியார் முதலியவர்கள் கட்சிக்குத் துரோகிகளாகவும், வஞ்சகர்களாகவும் ஆகிவிட்டார்கள். ஆதலால் பெரியாரே எங்கள் நிரந்தரத் தலைவர்; அவரை நாங்கள் என்றும் பின்பற்றுவோம்.

  அவரே லெனின்; அவரே மார்க்ஸ்; அவரே திராவிட நாட்டுக்கு பிரசிடென்ட் என்று கூறி மக்கள் கை தட்டுதலைப் பெற்றுக்கொண்டு “பிழைத்தேன்”
  என்று சொல்லிக்கொண்டு ஓடினவர் களும் ஊருக்கு இரண்டு மைல் தூரத்தில் போலீஸ் பந்தோபஸ்தை வைத்து தங்கள் ஆள்களைத் தவிர வேறு யாரையும் உள்ளே விடாமல் தடுத்து வேலைக்காரர்கள் உட்பட 20,30 பேர்கள் இருந்து கொண்டு ஏதோ பேசி எதையோ எழுதிக்கொண்டு நாங்கள் தலைவரை நீக்கி விட்டோம்; வேறு தலைவரை நியமித்துவிட்டோம்” என்று வெளிப் படுத்தின மூன்றே முக்கால் பேர்வழிகள் தான் இந்த ஜனநாயகம் பேசியிருக்கிறார்கள்.

  அது ஒருபுறமிருக்கட்டும். இவைகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்
  அவர்கள் ஒரு தைரியசாலி என்பதும் மனத்தில் உள்ளதை தைரியமாய்ப் பேசுகிறவர் என்பதும், அவரது பொதுவாழ்வு பட்டத் திற்கோ, பதவிக்கோ, பணச்சேகரிப்புக்கோ, விளம்பரத்திற்கோ அல்லாமல் ஒரு பொது இலட்சியத்திற்கு என்பதும் நன்றாய் விளங்கும் படி நடந்து வந்திருப்பதோடு சென்னைக்கு வந்ததிலும் அப்படியே நடந்து கொண்டிருக்கிறார் என்பதும் நன்றாய் விளங்கும்.

  இதே சந்தர்ப்பத்தில் நம் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத தலைவர்கள், பிரமுகர்கள், மந்திரிகள், மந்திரிகளின் காரியதரிசிகள், மந்திரிகளுடன் சுற்றித் திரிந்து கொண்டு பயன் பெற்றும், பதவி பெற்றும், வயிற்றுப் பிழைப்பும் வாழ்க்கை நடத்திக் கொண்டும் இருந்த மக்களின் யோக்கியதையையும் நினைத்துப் பாருங்கள்.

  -குடி அரசு 30.9.1944:

  வைக்கம் சத்தியாக்கிரகத்தின் தாக்கமும்- டாக்டர் அம்பேத்காரும்:

  “அந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்ச்சி என்னவெனில், ராமசாமி நாயக்கர் என்ற பார்ப்பனரல்லாத தலைவரால் திருவாங்கூர் ராஜ்ஜியம் வைக்கம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்ட “கீழ்சாதி” மக்கள் சில தெருக்களில் நடக்கவே கூடாது என்பதை எதிர்த்து நடத்திய “வைக்கம் சத்தியாக்கிரகம்” ஆகும்.

  இதன் விளைவாக ஏற்பட்ட அறவழித் தாக்கமும் சரியான உரிமைகளை நிலைநாட்டும் மனப்பான்மையும் வைதிக உணர்வு படைத்த இந்துக்களை வெகுவாகச் சிந்திக்க வைத்தது. சுகாதார அறிவும், தெளிவும் அவர்கட்கே ஏற்பட்டுத் தெருக்கள் தாழ்த்தப் பட்டோருக்குத் திறந்து விடப்பட்டன.
  அம்பேத்கர் இந்த நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே வந்தார்.

  மகத் என்ற இடத்தில் ( பொதுக் குளத்தில் தாழ்த்தப் பட்டோருக்கு தண்ணீர் எடுக்க உரிமை கேட்டு) போராட்டம் நடத்துவதற்கு முன்பு அவரது மனத்தில் இது மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. “ஊமையர்களின் குரல்” என்று டாக்டர் அம்பேத்கர் நடத்திய இதழில் வைக்கம் போராட்டத்தின் வெற்றி
  பற்றி உள்ளத்தைத் தொடக்கூடிய வகையில் மிக அருமையானதொரு தலையங்கத்தை எழுதினார்கள். பின்னால் வரும் நிகழ்ச்சிகளின் நிழலை முன் கூட்டியே காட்டும் அரிய நிகழ்வாக அது அமைந்தது.”

  – தனஞ்செய்கீர் எழுதிய டாக்டர் அம்பேத்கர் வாழ்வும், தொண்டும் என்ற ஆங்கில நூலின் 66 வது பக்கம்:

  பார்ப்பனர் ஆதிக்கம் பற்றி டாக்டர் அம்பேத்கர்:

  ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய சமுதாயச் சிந்தனை என்ன?

  பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின்(சூத்திரர்கள், தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80- சதவிகிதத்தில் உள்ளனர். இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த
  சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

  பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து:

  (1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத
  உயர்வு தாழ்வு நிலைகள்.

  (2) சூத்திரர்கள், தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை.

  (3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது
  என்று தடை.

  (4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை.

  (5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது. பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை, கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும்.

  ஒரு சிலர் மட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர் கள் கல்வியைத் தங்களது ஏக போகமாக்கியுள்ளார்கள். அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள். அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள்.

  சூத்திரர் களையும் , தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

  ஏனென்றால் தாங்கள் வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள். எதை அவர்கள் நிலை குலையாமல் காப்பாற்றினார்கள்? சூத்திரர்கள், தீண்டப்பாடதவர்களாக, வலிமையற்றவர்- களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு விட்டார்கள்.

  இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும் கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொள்கையின் பலனேயாகும்.

  பார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ இல்லை. ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின் மதம். அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக் கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள் தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த எண்ணமாகும்.

  ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக் கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள் `உடன்கட்டை ஏறுதல்’ என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள். “உடன்கட்டை ஏறுதல்” என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறார்கள்.

  விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை;
  இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 -வயது அடைவதற்கு முன்னேயே திருமணம்
  செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப்
  பிறகு பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம் அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை.

  அந்தக் கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான். பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம் இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம் இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச் சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும்.

  ஒரு படித்த வகுப்பார், தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத மக்களை எ

 9. ஒரு படித்த வகுப்பார், தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும் என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல? இந்தியாவில்உள்ள பார்ப்பனர்கள் செய்தது போல்.

  தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப் போல் தான் தோன்றும்.

  ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ
  ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்- காரனுக்கு, ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான். தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான் செய்கிறது.

  பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ, நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

  (டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட “காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?” என்ற நூலிலிருந்து –
  பக்கம்: 215-216)

  ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்!
  தந்தை பெரியார் அவர்களின் கூற்று!

  “ஆங்கிலோ-இந்தியர்கள் எப்படியோ அதேபோலத் தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும்; ஆங்கிலோ- இந்தியர்கள் நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள்தாமே ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம்நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் “டேய் டமில் மனுஷா” என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர்! அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள்? என்ற வரலாற்றை அறியாமல், தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியது போலச் சாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்!

  அதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து
  வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட , ஆரியசாதி முறைகளையும் அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ்ச்சாதிகளாக அடிமைகளாக மதித்து நடத்துகிறார்கள்.”

  – குடிஅரசு 28.05.1949

  அண்ணல் அம்பேத்கர் கூற்று!

  “தமது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பனியத் தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்துச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஓர் பக்கம் நிறுத்தி மற்றொரு
  பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர் களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல் நாட்டினரைப் போல்தான் தோன்றுவர். ஒரு ஜெர்மனியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ , ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ, அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.”

  (காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன? என்ற நூலிலிருந்து -பக்கம்- 215)

 10. annal ambedkar pattri pesa varthaigal pothavillai…avar thazhthapata makkaluku eithu irukum thondu azhapariyathu…

 11. ippodhu dalit iyakkangal mattumalla pirpaduthapaator matrum migavum pirpaduthapattor anaivarum theenda thagadha thalavarai paarpadhu thanthai periyarai than yenbadhu
  kodumai

 12. Dear RKV, Regarding Vedas,it is very old one and at that time there was no caste system, varna system was also is in its initial stage, since viswamitra was a chatriya,he created gayatri mandra,at that time a brahmin can become chatriya,and a chatriya can become brahmana,such a practice was there.so both poets from either brahmana or chatriya created Veda hymns had equal value.so many Veda hymns are created by chatrias and vaisyas and women.At that time there was no sudras,later period whoever king from chatriya varna opposed the varna system became degraded to sudra varna and an interesting point is the word sudra is the name of a clan that means a stock of people having their own culture. Such a clan called as sudra opposed that varna system very first vehemently, they questioned brahmanas and challenged them. They damaged the head position of brahmanas. Brahmins waited silently for their time to come, later they took revenge against sudras by denying poonool to sudra clans of people,and then later whoever kings opposed brahmins, they denied for poonool and they dubbed as sudras,that’s why kings and their people from south India are all called sudras only because, they opposed varna system, this was the story of sudras.sastras and smirtis was later to Vedas,it was written by brahmins, to revenge sudras ,the whole brahmins used their time and knowledge to write such literatures like puraanaas ..etc to retain their head position in chaturvarna and to degrade sutras,their whole education and knowledge are totally wasted by writing such false justification literatures. Moreover they interpreted all ancient literatures like Vedas,Mahabharata,Ramayana..etc which was written by non-brahmins. They polluted all Hindu literatures,no one is pure in its original form. All are biased by brahmin intellectuals. So we can’t understand clearly our Hindu literature, lot of confusions and misunderstanding will arise,such was our history ends.

 13. Dear RkW, what Dr.Ambedkar said was true, you can refer Ambedkar books or from shastras,Brahmins grown the chaturvarna in India and it is the father of caste system.

Leave a Reply

%d bloggers like this: