ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்

victory-boy

குமுதத்திற்கு அனுப்பிய வக்கீல் நோட்டிஸ் விவிரம்:

எம். பாலச்சந்தர்

வழக்கறிஞர்

காட்டூர்

கோவை-9


1.சம்பத் பிஏ பிஎல்., 2. ஈ.மு. சாஜித் பிஎஸ்சி எல்எல்பி.,

3. அ. பார்த்தசாரதி பிஏ பிஎல்., 4. வெண்மணி எம்ஏ பிஎல் 5. லெனின் பிஎஸ்சி பிஎல்., 6. ஜோதிக்குமார் பிஏ பிஎல்., 7. ஷிலா ராஜ் பிஏ பிஎல்., 8. மதுசூதனன் பி.ஏ பிஎல்.,

9. கலையரசன் பிஏ பிஎல்., 10. விஜயராகவன் பி.ஏ பிஎல்., 11. எஸ். கணேசன் பிஏ பிஎல்., 12. ஆனந்தராஜ் பிஏ பிஎல்., 13. ஜெயந்திநாதன் பிஏ பிஎல்., 14. ஆன்ந்திஈஸ்வரன் பிஏ பிஎல் ஆகிய வழக்கிறஞர்கள் சார்பாகவும், என் சார்பாகவும் தங்களுக்கு அனுப்பப்படும் வழக்கறிஞர் நோட்டீஸ்.


‘1. நான் தமிழன்என்ற தலைப்பில் ஒவ்வொரு ஜாதியைப் பற்றி நீங்கள் குமுதம்இதழில் வெளியிட்டுவருகிற கட்டுரை, மக்கள் மனதில் ஜாதி உணர்வுகளை தூண்டுகிறது. தமிழ் சமுதாயத்திற்காக பாடுப்பட்டத் தலைவர்களை, தியாகிகளை நீங்கள் வெறும் ஜாதிக்காரராக சுருக்கி வெளியிடுவது அவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது.


2. வீரன் அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் போன்ற பல தலைவர்களை, நீங்கள் ஜாதிரீதியாக அடையாளப்படுத்துவது அவர்களின் தியாகங்களை கேவலப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் வெள்ளையனை எதிர்த்து தங்கள் ஜாதிக்காரர்களுக்காக போராடவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களுக்காத்தான் போராடினார்கள்.


3. ஜாதி ரீதியாக பிளவுப்பட்டு இருக்கும் சமூகத்தில், ஒருவரையொருவர் வீரோதமாக பார்க்கும் சமூகத்தில், ஜாதி கலவரங்கள் நடக்கும் சமூகத்தில் & பிரபலங்களை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்துகிற உங்கள் வேலை சமூக விரோத நடவடிக்கையாகவே இருக்கிறது. பல பிரபலங்கள், கலைஞர்கள் என்ன ஜாதி என்று தெரிந்து கொள்ளவிரும்பாமலேதான், மக்கள் அவர்களை தமிழர்கள்என்ற பொது அடையாளத்தோடுதான் ஆதரித்து இருக்கிறார்கள்.


4. மக்களின் உணர்வு இப்படி இருக்கையில் நீங்கள் அந்தப் பிரபலங்களை, கலைஞர்களை, தியாகிகளை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்துவது, அந்தப் பிரபலங்கள், கலைஞர்கள், தியாகிகள் சார்ந்த ஜாதிக்காரர்களைத் தவிர மற்றவர்களிடம் அந்நியமாக்குகிற வேலையாகத்தான் இருக்கிறது. இந்த கேவலமான ஜாதி வெறி செய்கைக்கு நான் தமிழன்என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலமாக இருக்கிறது.


5, என் ஜாதியில் நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள்.‘ ‘என் ஜாதியில்தான் நாட்டுக்கு போராடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள்என்பது போன்ற தேவையற்ற விவாதங்களை, சண்டைகளை உங்கள் குமுதம் இதழில் வருகிற, ‘நான் தமிழன்கட்டுரை தூண்டுறது. அது மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தனிப்பட்ட முறையில் அல்லாமல் அந்த மக்களே, தங்கள் வாழ்க்கையை சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகியும், அதை எதிர்த்தும் போராடி வருகிறார்கள்.


6, நீங்கள் பெருமையாக குறிப்பிடுகிற பல ஆதிக்க ஜாதிகளில் இருக்கிற, ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பல கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நீங்கள் அந்த ஆதிக்க ஜாதிகளின் பெருமை பேசினால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தப்படுகிறது.


7. ஆகவே, நீங்கள், ‘நான் தமிழன்என்ற பெயரில் ஜாதி உணர்வை தூண்டுகிற கட்டுரையை உடனடியாக நிறுத்தவேண்டும். இதுவரை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்தி வெளியிட்டு தியாகிகளை கேவலப்படுத்திய செயலுக்காக, நீங்கள் உங்கள் குமுதம்இதழில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்கவேண்டும்.

8. அப்படி செய்யாத பட்சத்தில் உங்கள் மீது சமூகத்தில் ஜாதி கலவரங்களை தூண்டிய முறையிலும், தியாகிகளை ஜாதிரீதியாக அவமானப்படுத்திய வகையிலும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடருவோம்.


எம். பாலச்சந்தர்

வழக்கறிஞர்

26.03.2009


மேற்கண்ட வழக்கறிஞர்களுக்கு நம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் சமூக பொறுப்புக்கு மரியாதைக்குரிய வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

20 thoughts on “ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்

 1. பிரபல எழுத்தாளர்கள் முற்போக்காளர்கள் குமுதத்தில் எழுதுவத்ற்காகவும்
  அதில் பேட்டி கொடுப்பதற்காகவும் அலைகிறார்கள்.

  அதனால் அவர்கள் குமுதத்தின் எந்த மோசமாச செயலையும் கண்டிக்க மறுக்கிறார்கள்.

  இந்த சூழலில் உங்களின் துணிச்சல் பாராட்டுதலுக்குறியது.

  சுயமரியாதையுள்ள இவ்வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன்.

  குமுதத்திற்கு வழக்கறிஞர்கள் கொடுத்துள்ள இக்கண்டனம் அதில் எழுதும்
  முற்போக்காளர்களுக்கும் பொருந்தும்.

  இனிமேலாவது குமுத்தின் இம்மாதிரியான மோசடிகளை குமுதத்திற்கு வெளியிலாவது அந்த எழுத்தாளர்கள் கண்டிக்கிறார்களா என்று பார்ப்போம்.

  சதிஸ்
  சுவிஸ்

 2. குமுதம் செட்டியார்களின் புகழ்பாடி செய்த கூத்துக்கள் எத்தனையோ. கடந்த ஓராண்டுக்குள் கூட செட்டியாரின் வெற்றிகள் என்கிற வகையில் தொடர்ச்சியாக சில இதழ்களில் செய்தி வெளியிட்டிருந்தது.

  அதுமட்டுமல்லாமல் திரையில் சின்ன கலைவாணாராகவும், நிஜத்தில் ஜாடி வெறியராகவும் இருக்கும் விவேக் “எனக்கு பின்னால் (சில லட்சம்) முக்குலத்தோரும் அணிதிரள்வார்கள் என்று சன் டிவிக்கு சவால் விட்ட பேட்டி கூட குமுதம் இதழிலேயே வந்தது

 3. அருமையான பதிவு……….

  சரியான சாட்டையடி……….ஜாதி வெறியர்களுக்கு………..

  இனி எந்த பத்திரிக்கையும் இது போல செய்ய யோசிக்கும்……..

  நன்றி

 4. குமுதம், ஆ.வி, போன்ற வணிக நோக்கத்திற்க்காகவும், மக்களை மாந்தைகளாக்கவும் நடத்தப்படும் இதழ்கள், தங்களுக்கு பல்வேறு முகங்கள் இருப்பதாக(?) காட்டிக்கொள்வது ஒரு வியபார உத்தி..
  அதில் முற்போக்கு முகத்திர்க்கு கொஞ்சம் கூடுதலா கல்லாவையும் கட்டிக்கலாம், அறிவு ஜீவிகளுக்கான பத்திரிக்கை என்ற பெயரும் வாங்கிக்கலாம் பாருங்க..

 5. தோழர் பாலா உள்ளிட்ட வழக்குரைஞர் அணி மிகச்சிறப்பான இன மானப்பணியினை மேற்கொண்டுள்ளனர்; அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்.

  மா.தமிழ்ப்பரிதி
  http://www.thamizhagam.net/

 6. பார்ப்பன மூளை தமிழனுக்காக எப்போதும் சிந்திக்காது என்பது நாம் அறிந்த செய்தி தானே!

  அடுத்தவன் ஒற்றுமையின்மையில் தான் தனது இருப்பு இருக்கிறது என்று 4000 அண்டுகளாக திட்டமிட்டு செயலாற்றுவது தானே பார்ப்பனீயம்.

  பார்ப்பன இதழ்களை முற்றாக ஒதுக்க வேண்டும்.

 7. நாங்கள் பத்துபேர் கொண்ட குழவாக பல விஷயங்களில் ஒண்றினைந்து இயங்கி வருகிறோம்.இந்த வழக்கில் எங்களையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறோம். யாருடன் தொடர்பு கொள்வது, தகவல் தெரிவிக்கவும்.

 8. Yes we should definetely condemn this activity of Kumudam. But why you have not opposed this when the same thing is being done at

  1. Movies – There are several movies doing this activity
  2. Jathi Sangam – There are several Jathi sangams
  3. Attacking Parppans unnecessarily – I have seen many of your own posts which is creating hatred towards brahmin community. I was a normal person initially and I have several Muslim / hindu (Dalit and all other communities) friends and I never had any problem and I do not even know what their caste is. But unfortunately after going through your posts for some time, I started having the feeling that I have to start support the brahmin community. I am not sure whether you are aware because of your writings you are making the normal persons (who are not attached to the caste) to follow the caste. When I realized this I stopped reading your articles and similarly others Vinavu, tamilovia, tamilachi and others.

  Even in one of your previous posts you said Pappans are not supporting Tamil elam and the reasons, but at the end you also thanked the pappans who are supporting.

  It means there are Pappans who are supporting and who are opposing and you are writing against the pappans who are opposing fine.

  But does it mean no others are opposing Tamil elam? If so why you have not written about their community and you only written about them? It clearly shows you want to oppose only Parppans in general and others individually.

  I just wanted to raise this because by your writings you are not trying to suppress the pappan community rather they are clearly raising their caste feelings. Who ever does not want to get affected simply ignore your writings by doing this there are moving away from you in understanding your problems and not supporting you. Others are raising their voice severly by opposing what ever you are doing.

  Currently I am staying abroad and I have a boy of 6 years old but he does not even know what is caste, I do not want to teach him about anything. I had a plan of coming back to India later but unfortunately I am bit concerned about all the things which is happening now and I do not want him to come back to India because I feel he will get into the unwanted caste trap in the colleges.

  Also I have seen when ever a clear argument is put against you with the necessary proofs, all your followers will start jump against them clearly specifying the words like Pappara naye, pappan ozhikkanum etc.,

  So this clearly shows you just want to suppress only pappans how others (this includes all FC, MBC, OBC and BCs) have done it to Dalits.
  At least it is good that most of the time you are not responding to any other comments.

  I know for sure that you will have some genuine brahmin friends, ask them to read all these and try to take their feelings and find out what is happening.

  Other thing is sondha karuthu, what only others can have sondha karuthu? Pappans should not have their own sondha karuthu?

  I am sorry I am totally disappointed because of the poor agenda you have in your mind even though your writings are too good.

 9. இந்த தொடரை பார்த்த உடனே கடுப்பாகி அந்த மஞ்சள் பத்திரிக்கையை வாங்கும் (பணிரெண்டு வருட பழக்கம். படிக்கவே கூடாதுன்னு யோசிச்சாலும் அது ஒரு பழக்கமாவே இருந்துச்சு…) பழக்கத்தையே விட்டு விட்டேன். அவன் அவன் ஜாதியை ஒழிக்கணும் னு யோசிக்கையில இவங்க புத்தகம் விக்கிறதுக்கு எந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறானுங்க பாருங்க. அது சரி நடிகையின் கதையை தொடரா போட்டவனுங்கதானே.

 10. குமுதம் மஞ்சள் பத்திரிகை என்பது மக்களுக்கு புலப்பட தொடங்கி விட்டது. பத்திரிகை என்ற பெயரில் இயங்கும் இந்த கோமாளிக்கூட்டம் இப்படி செய்தி வெளியிட்டு வயிற்றை நிரப்புவதற்கு பதிலாக வேறு ஏதாவது செய்து பிழைப்பு நடத்தலாம். இவர்கள் மலங்காட்டு பொறுக்கிகள் அப்படித்தான் செயவார்கள். ஆபாசம், சாதி வெறியை தூண்டுவது உள்பட பல சமூக விரோத குற்றங்களை பத்திரிகை என்ற பெயரில் நீண்ட காலமாக நடத்தி வருவது குமுதம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நான் குமுதம் வாங்குவதை நிறுத்தி 10 ஆண்டுகள் ஆகி விட்டது.

 11. தமிழனை அவன் ரசனையை கீழ்தரத்திற்கு இட்டுச் சென்றதில் குமுதத்திற்கு மிகப் பெரிய பங்குண்டு. சாதிகள் பெயரெல்லாம் வீதிகளின் பெயரிலிருந்து சுமார் 20, 25 வருடங்களுக்கு முன்னமே நீக்கியும் 2009ல் சாதியை முன்னிருத்தி தொடர் எழுதிவருவது பச்சை அயோக்கியதனம்.

 12. சாதிச் சங்கங்கள் இருக்கின்றன.சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு.
  அதை நியாயப்படுத்தும் பெரியார் ஒரு தலைவர். இதையெல்லாம் ஏற்பவர்கள் ஒரு பத்திரிகை சாதி குறித்து எழுதினால்
  வழக்குப் போடுவார்களாம்.போட்டுப் பார்க்கட்டும்.அந்த வழக்கறிஞர்களுக்கு ஒரு சவால். பொத்தாம் பொதுவாக எழுதாமல்
  எந்தப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர்வீர்கள் என்பதையும் குறிப்பிட்டு,
  எந்த நீதிமன்றமாவது எங்காவது சாதிகளைப் பற்றி எழுதுவதே
  குற்றம் என்று தீர்ப்பு தந்துள்ளதா என்பதையும் குறிப்பிட்டு எழுத தயாரா. மதிமாறன் போன்ற வெறியர்கள், வெறுப்பை பரப்புவரகள் குமுதத்தினை கண்டிப்பது கேலிக் கூத்து. வழக்குத் தொடருங்கள்
  முதலில். நீதிமன்றம் என்ன தீர்ப்பு தருகிறது என்பதைப் பார்க்கலாம்.

 13. நான் தமிழன் தொடர் திட்டமிட்டே பார்ப்பனதாசர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும், பல தலைவர்களின் ஊடே செயகாந்தன் போன்ற கருப்பு பார்ப்பனர்களின் பெயரையும் சேர்த்து வெளியிடுகிறார்கள்.ஆமா வ உ சியும் பிள்ளை இவனும் பிள்ளை யென்று அந்த நாயை வ உ சியோடு ஒப்பிட்டு கொச்சை படுத்துகிறார்கள்.

  இன்னும் பெரியார் பெயர் தான் வரவில்லை என்று நினைக்கின்றேன்
  ——————————————————————————-
  என்னா

  சீனிவாசு உங்கப்பன் சங்கராச்சாரி நன்னா இருக்காளா? அவனுக்கு நீதான் காலயில வாழைஇலையை எடுத்துண்டு போறீயாமே

 14. //சாதிச் சங்கங்கள் இருக்கின்றன.சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு.
  அதை நியாயப்படுத்தும் பெரியார் ஒரு தலைவர். ….//

  சாதிச் சங்கங்கள் இருக்கின்றன அந்தந்த சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினர்கள். அந்த சங்கங்கள் அந்த சமூகத்தினருக்காகவே தொடங்கப்பெற்று மத்த சமூகத்தினரது சுதந்திரத்திலோ உள்விஷயங்களிளோ தலையிடுவதில்லை.

  பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு வந்த சமூகத்தினரை விடுவிக்குமுகமாக சமூக நீதி கருதியே கொண்டு வந்ததுதான் இட ஒதுக்கீடு.

  இப்போது குமுதம் செய்யரதென்னமோ யாருக்கும் உபயோகமில்லாத அதே சமயம் சாதி பற்றுதலை தூண்டுகிற வேலைதான். பதிவை மீண்டுமொறுமுறை வாசிக்கவும்.

  தோழர் மதிமாறன் மற்றும் என்னை போன்ற லட்சக்கணக்கானோர் இன்று தமிழகத்திலே தலை நிமிர்ந்து (படித்து நல்ல வேலையில்) இருக்கிறோமென்றால் அது பெரியார் மாதிரி தலைவர்கள் அந்நாளில் இருந்ததால்தான். அது பொறுக்கமாட்டாமல்தான் ஒரு சில சமூகத்தினர் பெரியாரை கடுமையாக விமரிசிக்கின்றார்கள்.

  தோழர் மதிமாறன் மீதுள்ள காழ்ப்புனர்ச்சி காரணமாக போயும் போயும் குமுதத்திற்கு வக்காளத்து வாங்காதீர்கள்.

 15. என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் நான் சாதி சங்கங்களை ஆதரிப்பது போன்ற தோற்றமிருப்பின் அதற்காக வருந்துகிறேன். நான் அடிப்படையில் சாதிகளையோ அல்லது சாதி சங்கங்களையோ ஆதரிப்பவனல்ல. நான் சொல்ல வந்தது சாதி சங்கங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட பல லட்ச வாசகர்களை கொண்ட குமுதம் போன்ற பத்திரிக்கைகள் ஒரு விஷயத்தை எழுதும்போது அதனுடைய தாக்கம் அதிக விளைவுகளை ஏற்படுத்துமென்பதே.

 16. Dear Brother Mathi,

  How are you & your family,

  Thanks verymuch for your regular e-mails,regularly i am reading your blog.your thoughts & activites really caste should eratic in future,we never forgot your action & duty.

  Thanking you very much for your hearwork& service to the people.

  with truly your brother
  P.Selvaraj
  Neelangarai,Chennai-600 041

 17. பார்ப்பண வெறுப்பு சாதி வெறி இல்லை என்றால் குமுதம் தொடரும் சாதி வெறி அல்லாததுதான்.

 18. ஈழத் தமிழர்கள் சாதி வெறி அற்றவர்கள்.. தமிழகத்தை சேர்ந்த பெரியார் இன மக்களும், மற்ற இனத்தவர்களும் அவர்களை கெடுத்து குட்டிசுவர்களாக்குவதிலிருந்து அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 19. /////ஈழத் தமிழர்கள் சாதி வெறி அற்றவர்கள்.////

  அய்யா நகைச்சுவை எதுவும் பன்னவில்லையே. ஈழ தமிழர்கள் ஒரு காலத்தில் சாதி வெறி பிடித்து சொந்த சகோதரனையே ஒடுக்க அலைந்து அவர்களுடைய சாதியை சேர்ந்தவர்கள் என்று கருதிய சிங்களர்களுக்கு ஆதரவளித்ததால் தான் இன்றைக்கு அவர்கள் அந்த நிலைமைக்கு

  அய்யா செல்வா நாயகம் தமிழர்களை ஒருங்கிணைக்க போராடி கொண்டிருந்த போது பல கருங்காலிகள் சிங்கள வெறியர்களோடு கைகோர்த்து செயல் பட்டதெல்லாம் உங்களுக்கு தெரியாதா

  இப்போது ஈழ தமிழர்கள் அதை புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள்

  தை தமிழகத்து தமிழர்கள் புரிவது எப்போதோ

Leave a Reply

%d bloggers like this: