பாரத மாதாவை விற்கும் பா.ஜ.க

matha

‘இந்திய பாதுகாப்புத் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க மோடி அரசு முயற்சி.
ரயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 100 சதவீதம் கொண்டு வரவும் திட்டம்’

இன்னும் ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள பட்டைய கிளப்புறாய்ங்க..

காங்கிரஸ்காரர்கள் ராஜபக்சேவுடன் 10 ஆண்டுகளா ‘பழகி’ தமிழர்களின் கழத்தறுத்தார்கள். இவர்கள் முதல் நாளே 10 ஆண்டுகளின் சாதனையை முறிடித்து, ராஜபக்சேவை அழைத்து கொண்டாடினார்கள்.

காங்கிரஸ்காரர்கள் 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் 50 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டை கொண்டு வந்தால்.. இவர்கள் நாலு நாட்களிலேயே 100 சதவீதம் கொண்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு சொந்த மண்ணில் இருக்கிற முஸ்லிம்களும் கிறித்துவர்களும் அந்நியர்கள்.

வெள்ளைக்கார பெரு முதலாளிகள் இந்தியர்கள். அதுவும் நாட்டை பாதுகாக்கும் அளவிற்கு…!

இவர்களின் ‘பாரத மாதா’வை பாதுகாக்கக் கூட துப்பில்லாத இவர்களுக்குப் பெயர் ‘சுதேசி’கள்.

இந்த தேசப்பற்றாளர்கள் நம்மை தேசத்துரோகி என்கிறார்கள்.

அப்படி செய்யறதுக்கு பதில் இப்படி செய்யலாமே..

சொந்த நாட்டு அரசைவிட, அந்நிய முதலீடு பாரத மாதாவை பத்திரமா பாதுகாக்கும் என்றால்…

பேசாமா பிரதமர் பதவியையும் மந்திரி சபையையும் ஒரு நல்ல அமெரிக்க கம்பபெனிக்கு குத்தகைக்கு விட்டுட்டு..
இவுங்க நிம்மதியா காசி, ராமேஸ்வரம் ன்னு புனித பயணம் போலாமே..

அமெரிக்க கம்பெனியும் அமர்களமா ஆட்சி செஞ்சிட்டு போறான்.

பாரத் மாத்தாக்கி ஜே…

பாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..

5 thoughts on “பாரத மாதாவை விற்கும் பா.ஜ.க

  1. (தினமலர்செய்தி 31/05/2014…………….தற்போது, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் அதன் துணை நிறுவனங்கள் மூலம், பாதுகாப்பு துறை சார்ந்த சாதனங்களை தயாரிக்க முடியும். ஆனால், அவற்றின் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் இந்தியர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த முடியும்.மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே, அயல்நாட்டு வல்லுனர்கள் இந்நிறுவனங்களில் தொழில்நுட்பஆலோசகர்களாக பணிபுரியலாம். இந்நிறுவனங்கள், இந்தியாவை விட்டு வெளியேறும்பட்சத்தில், எதையும் எடுத்துச் செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.மொத்தத்தில், பாதுகாப்பு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மூலம், உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும். பாதுகாப்பு சாதனங்கள் சார்ந்த இறக்குமதி செலவினம் குறையும்……)

    ஏதோ நம் நாட்டு ராணுவ வீரகளை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அமெரிக்க ராணுவத்தை கொணர்ந்து நமது எல்லை பாதுகாப்புபணியில் விட்டுவிட்டமாதிரி திரு மதிமாறன் அவர்கள் என்னமாய் கூப்பாடு போடுகிறார்.
    ஆனாலும் சும்மா சொல்லக்குடாது. நாட்டுக்கு ஒன்று என்றால் மனுஷன் என்னமாய் துடிதுடித்துபோகிறார்.
    நல்ல மனுசன்தான்.
    ஆனால் என்ன ஒன்று ,எதையுமே சரியாக படிக்க மாட்டார்.சரியாக கேட்கமாட்டார்.
    விஸ்வருபம் படம் வரும் முன்னரே போஸ்டரை வைத்தே படத்தின் ஒருவரி வசனம் கூட விடாமல் இப்படிதான் இருக்கும் படம் என படத்தைப்பற்றி கமலுக்கே தெரியாத பல விசயங்களை புட்டு புட்டு வைத்து அதிசயிக்க வைத்தவர்.
    மற்றபடி சொக்க தங்கம்தான்.பகுத்தறிவு சிங்கம்தான்.

    இந்திய விடுதலைபோர் முதல் சுதந்திர இந்தியாவின் ராணுவம்வரை சாதிபிரச்சனையை கிளப்பிகொண்டிருப்பவர்கள் இக்கட்டுரையில் தங்களை தன்னிகரில்லா தேசப்பற்றாளர்கள் போல காட்டிகொண்டு கூவி இருக்கிறார்கள் என்றால் அதுதான் மோடி வித்தை என்பது.

  2. Why do you care about Bharatmata? If Americans are allowed to rule India, you must be happy, being Periyar’s disciple. After all he also welcomed White’s Rule and deplored Independence day as Black Day.

  3. வே. மத்மாறன்,

    சரியாக சொன்னீர்கள்,
    பிஜேபிக்காரர்களிடத்தில் நாட்டை கொடுத்துவிட்டார்கள்,
    இனி சிலை (கல்) வணங்கிகளுக்கும், அதனை பொழப்பாக்கி காசு பண்ணும் பார்ப்பனர்களுக்கும்தான் கொண்டாட்டம்.
    சந்தோசத்தில் திக்குமுக்காடி நிற்கின்றார்கள்.
    பார்ப்போம் எத்தனை நாளைக்கு என்று???

  4. “இவர்களுக்கு சொந்த மண்ணில் இருக்கிற முஸ்லிம்களும் கிறித்துவர்களும் அந்நியர்கள்.
    வெள்ளைக்கார பெரு முதலாளிகள் இந்தியர்கள். அதுவும் நாட்டை பாதுகாக்கும் அளவிற்கு…!”

    உயர் சாதி இந்துக்கள் எங்களை ஆள்வதைவிட வெள்ளையனே எங்களை ஆண்டுவிட்டுபோகட்டும் என்றும் இந்திய சுதந்திர நாளை கறுப்புதினமாக அனுஷ்டிக்கிறோம் என்றும் உரைத்த
    பெரியாரின் கருத்துகளை உலகிலேயே முற்றிலும் உணர்ந்த இருவருள் ஒருவரான திரு மதிமாறனா இது ?
    (எனக்குத் தெரிந்து; பெரியார் – டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படித்து, ஒப்பிட்டு விரிவான விளக்கங்களோடு பேசக்கூடடிய ஆற்றல் உள்ள அறிவாளி ஆ.ராசா.
    அப்படி பேசக்கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இவருவர் மட்டும்தான்.
    ஒன்று அவர்.
    இன்னொன்று நான்.
    இதை கர்வத்தோடும் பெருமையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்………மே 16..2014…..திரு மதிமாறன்)
    (பெரியாரையே எதிர்க்கிறார்ணா இவரு பெரிய ஆள்தான்பா. )

    நண்பர் திரு குலாம்,,,,,,”இனி சிலை (கல்) வணங்கிகளுக்கும், அதனை பொழப்பாக்கி காசு பண்ணும் பார்ப்பனர்களுக்கும்தான் கொண்டாட்டம்”.

    பெரியார் ,அம்பேத்கார் சிலைகள் சேதமடைந்தால் பொங்கி எழுபவர்களிடமும் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பிற்கு கண்டனம் தெரிவித்தவர்களிடமும் இந்த கல் வணங்கும் காட்டுமிராண்டித்தனம் பற்றி கூறுங்கள்.
    உங்களுக்கு இருப்பது மட்டும் தான் உணர்வு .மற்றவர்களுக்கு என்றால் அது மடமைத்தனம்.இல்லையா?

  5. Md. Maran, i was expecting, that you and people like Gulam would welcome this move. There is a possibility that Taliban and its associates could capture India”s defence sector. ( In 2G also, Pakistan indirectly entered) . Atleast Modi gave one chance for you to welcome his act.

Leave a Reply

%d bloggers like this: