தீர்ப்பை எதிர்த்து சிறப்பாக நடக்கும் பெரியார் பணி
அண்ணா திமுக கார்களை விட, கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரிக்கிற இந்த ‘அம்மா திமுக’ தொண்டர்கள் தான்… கை தேர்ந்த சவடால் சந்தர்ப்பவாதிகளாகவும் நல்ல entertainer களாகவும் இருக்கிறார்கள்.
சும்மா சொல்லக் கூடாது நம்ம வக்கீல் வண்டு முருகனை, லாலு பிரசாத்தோடு ஒப்பிட்டு சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை உதாரணம் காட்டி – வாதாடி, வாதாடி கேசை சுப்ரீம் கோரட்டுக்கே கொண்டுபோய்ட்டாப்ல..
அப்புறம் என்ன லாலுவுக்கு கிடைச்சா மாதிரி 100 நாட்களுக்குப் அப்புறம் தான் ‘அது..’
சும்மாவா பின்ன..? எவ்வளவு பெரிய லாயர்..
வழக்கமாக ‘இனி பொழைக்கிறது ரொம்ப கஷ்டம்..’ என்று மருத்துவர்கள் கை விரித்தப் பிறகு தான்; மண் சோறு சாப்டறது.. தீ சட்டி தூக்கறது.. தீ மிதிக்கிறது.. பிரர்த்தனை பண்றது… ‘இறைவா உன் மாளிகையில்..’ என்று பாட்டு பாடறது போன்ற பக்தி சார்ந்த வேலைகள் நடக்கும்.
ஆனால் இந்த முறையோ ஊழல் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதியானதைக் கண்டித்து.. தீ சட்டி, மண்சோறு. பால்குடம் எல்லாம் நடந்தது…
இது கடவுளுக்கே பொறுக்கல.. அதான்.
தீவிரமான பகுத்தறிவு பிரச்சாரம் நடக்கிறது. ‘20 ஆம் தேதியிலிருந்து 27 க்கு மாற்றினால்.. கட்டாயம் நமக்கு சாதகமாக தான் வரும்’ என்ற ஜோதிடத்தை பொய்யாக்கியது… ‘வந்தது’.
பால் குடம், தீ மிதி, தீ சட்டி, மண்சோறு இதெல்லாம் நடந்தும்; ‘அது’ கிடைக்கவில்லை.
பெரியார இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பல ஆண்டுகள் மூலை முடுக்கெல்லாம் சென்று சொல்ல வேண்டியதை.. ஒரு சிலநாட்களில் கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி.
சன்-கலைஞர்:சொத்துக் குவிப்பு ‘திரும்ப திரும்ப பேசுற நீ’
தான் கூவிதான் சூரியன் உதிப்பதாக சேவலும்,தான் கத்திதான் மழை வருவதாக தவளையும் நினைத்து மார்தட்டி கொண்டால் எவ்வளவு அர்த்தம் இல்லாதனமாக இருக்குமோ அப்படிதான் இருக்கிறது இன்றைய பகுத்தறிவுவாதிகளின் வாதமும் ஆத்திககர்களின் செயல்களும்.
“பால் குடம், தீ மிதி, தீ சட்டி, மண்சோறு இதெல்லாம் நடந்தும்; ‘அது’ கிடைக்கவில்லை”.
திரு.மதிமாறனின் வாதப்படி தான் “வேண்டியது” கிடைத்தால் கடவுள் இருப்பது உண்மையென்றும் கிடைக்காவிட்டால் கடவுள் இல்லை என்றும் அர்த்தம் கொள்ளலாமா?
நல்ல பகுத்தறிவு.
திரு.மதிமாறனால் பெரியார் மேலும் பெருமைபடுத்தப்பட்டிருக்கிறார்.
இவ்வளவு கேளிக்கூத்துக்கும் காரணம்|
MGR