சுஜாதாவும் சுஜாதா வைப் போன்றவர்களும்..
இலக்கியத் தரம், முற்போக்கு, பெண்ணியம் என்றெல்லாம் மூச்சு முட்ட பேசுகிறவர்கள்;
‘சுஜாதா’ என்கிற கழிசடை பேரில் விருது கொடுத்தால், முண்டியடித்து முன்னால போய் நிற்கிறார்கள்.
பாவம் அந்த அம்மா.. இந்த ஆளு அசிங்க அசிங்க எழுதுனதுக்கு.. அந்த அம்மாவுக்கு தண்டனை. திட்டுறவுங்கெல்லாம் அந்த ஆள திட்டமுடியாமா, அந்த அம்மாவையே திட்ட வேண்டியதா இருக்கு.
‘சுஜாதா’ என்று தன் மனைவியின் பெயரில் பொறுப்பற்று பெண்களுக்கு எதிராகவும் பொறுக்கித்தனமாகவும் எழுதியது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்.
‘தன் பெயரால் எழுதப்படுகிற எந்த மோசமான விசயமும் தனக்குத் தெரியாது’ என்கிற நிலை, ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரிய அவமானம். அவலம்.
பொதுவாக பெண்கள் பெயரில் எழுதுகிற ஆண்கள், பாலியல் உறவுக் குறித்து அதிகம் எழுதுகிறார்கள். காரணம், சீக்கிரத்தில் பிரபலமாகலாம் என்பதினாலேயே.
செக்ஸ் சம்பந்தமாக ஒரு ஆண் எழுதுவதை விட, ஒரு பெண் எழுதுவதை தான் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள்.
‘ஒரு பெண் இப்படியெல்லாம் எழுதுகிறாள்’ என்கிற எண்ணம் ஒரு ஆணை கூடுதலாக கிளர்ச்சி அடைய வைக்கும். அதனால்தான் தொலைக்காட்சியில் பாலியல் சந்தேகங்கள் நிகழ்ச்சியல் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
இரண்டு ஆண்கள் மட்டும் அதை பேசினால் அதைப் பார்ப்பதற்கு ஆளே இருக்காது.
வாசகர்கள் சார்பாக பெண், கூச்சமில்லாமல் சந்தேகம் கேட்கிறார் என்பதே அந்த நிகழ்ச்சியின் வரவேற்புக்குக் காரணம்.
விஜய் டி.வி. காலத்திலிருந்து கேப்டன் டி.வி காலம் வரை.. ஆண்களின் அந்த அற்ப ஆசையின் மூலமாக காசு பார்ப்பதற்கும் உடனடியாக பிரபலமாவதற்கும் எழுத்தாள ஆண்களுக்கும் பெண்கள் பெயர் பெரிதும் உதவுகிறது.
அதனால் தான் சரோஜாதேவி, சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ஹேமா ஆனந்ததீர்த்தன், சாருநிவேதிதா.
எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல
சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த..
Captain tvla ippovullam kuupudrathillaiya?
நானும் முற்காலத்தில் சுஜாதா புக்சுக்கு பைத்தியமாய் அலைவேன் இப்பொழுது அவருடய கதைகள் நஞ்சாக வெறுக்க வைக்கிறது. வெறும் குப்பை
boss…..enakku therinju Sujatha onnum asingama ezhuthuna mathiri theriyala…..unga Brahmin kannadiya kazhzttittu paarunga
இந்த ஆளு சரியான கூமுட்டை. அஜால், குஜால் எழுதும்போது ‘சுஜாதா’ அப்பிடின்னும, அறிவியல் பத்தி எழுதும் போது ‘ஐன்ஸ்டீன்’ அப்பிடின்னும், புறநானூறு பத்தி எழுதும் போது ‘நச்சினார்க்கினியன்’ அப்பிடின்னும், கடவுள்-பிரம்மசூத்திரம் பத்தி எழுதும் போது ‘சங்கரன்’ அப்பிடின்னும், என்னிக்காவது முற்போக்கா எழுதும்போது ‘மதிமாறன்’ அப்பிடின்னும் பேர் வெச்சு எழுதி இருந்தாருன்னா லம்ப்பா கெடைச்சிருக்கும்!
A blog write up without any substantial back up. Even it is true it needs to be shown how the author come to this conclusion for others to see and help others to take a stand.
Thanks
திரு மதிமாறன் அவர்களின் பல இடுகைகளை படிக்கையில் காலை பத்தரை மணி காட்சி சினிமா பார்போரின் நினைவுதான் வருகிறது.
காலை காட்சி மலையாளப்படங்களில் என்னதான் சிறந்த கதை அம்சம், காட்சி ஒளிப்பதிவு,நடிப்பு ,பாடல் என இருந்தாலும் அவை எதுவும் மனதில் தங்காது.
இடை செருகலாக வரும் அந்த சில நிமிட உடலுறவு காட்சியை பற்றிமட்டுமே மனம் நினைத்துகொண்டிருக்கும்.
அப்படி எத்தனையோ நல்ல விசயங்களைபற்றி பலர் எழுதி இருந்தாலும் அதைவிடுத்து அவர்கள் போகிற போக்கில் சொல்லிருக்கும் ஒரு பலான விசயதைபற்றியே நீங்கள் நினைத்துகொண்டிருப்பது உங்களது தவறாக தான் தெரிகிறது.
ஒரு வேளை ஆள்,பேர்,சாதி பார்த்து விமர்சனம் செய்வது தான் பகுத்தறிவோ?