‘அரசியல்வாதிகள்னாலே.. தியாகிகள்தானே’


hqdefault k

மோடி யை இந்திய ராஜபக்சே வாகவும்; ராஜபக்சேவை இலங்கை மோடி யாகவும் குறிப்பிட்டு ‘இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?’ என்ற தலைப்பில் 14-9-2013 அன்று, முதல் முறையாக நான் தான் எழுதினேன்.

அதற்கு முன், மார்ச் 21, 2013 அன்று ‘இலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே’ என்று அமெரிக்காவை குறிப்பிட்டும் எழுதியிருக்கிறேன்.
அதுபோலவே, இந்த மாதம் 22 தேதி ‘இந்திய ராஜபக்சே இலங்கை மோடி யை அழைத்திருக்கிறார் இதில் என்ன ஆச்சர்யம்?’ என்று எழுதினேன்.

பிறகு, என்னுடைய இந்தத் தலைப்புகள் பலரின் தலைப்புகளாக மாறின. மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் யாரும் என் பெயரை குறிப்பிடவில்லை. அவர்களின் தலைப்புகளாகவே அறிவித்துக்கொண்டார்கள்.
அதில் ஒன்றும் பிரச்சினையில்லை.

ஆனால், இப்போது பலரும் ‘அன்றே நான், நாங்கள் தான் குறிப்பிட்டோம்’ என்று உரிமைக் கொண்டாடுகிறார்கள். சந்தோசம்.

25-5-2014

‘இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்கும், இன்னல்களுக்கும் மத்திய அரசு, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பயன்படுத்தி, அவர் மூலமே தீர்வு காண வேண்டும்’ என்று சி.பி.எம் கட்சி அறிவித்திருக்கிறது.

அப்படியானால், குஜராத்தில் மோடியால் நடத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை, அந்த மாநில முதல்வர் மோடி யிடமே முறையிட்டு இருக்கலாமே சி.பி.எம்?
அவரை மட்டும் எதிர்ப்பானேன்?

26-5-2014

தனது பதவி ஏற்பு விழாவிற்கு வரச் சொல்லி மோடி விடுத்த ‘அன்பான’ அழைப்பை ஏற்று வந்த, ராஜபக்சேவை மட்டும் எதிர்த்து கடுமையாக போராடினார்கள் தமிழக அரசியல்வாதிகள்.


‘அரசியல்வாதிகள்னாலே.. தியாகிகள்தானே’

27-5-2014

C.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா?

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

இலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே !

தமிழ்த்தேசிய மேக்கப்

ராஜபக்சே வருகை; மோடி யை பாதுகாக்கும் வைகோ

4 thoughts on “‘அரசியல்வாதிகள்னாலே.. தியாகிகள்தானே’

  1. இலங்கை மோடின்னு சொன்னதும் பிரபாகரனை தான் சொல்லுறிங்களோன்னு நினைச்சேன். ஏனா பிரபாகரன் தானே முஸ்லீம்களை கொன்னான். ராசபக்ஷேவால் முஸ்லீம்களுக்கு எந்த தொல்லையும் இல்லையே.

  2. To neutralise the effect of Rajapakshe’s visit, India’s greatest friend Nawas sherif came to India.
    This happiness is enough for 100 years.

Leave a Reply

%d bloggers like this: