தமிழ்த்தேசிய மேக்கப்

Advanced-Haircareஒரு வழியா ராஜபக்சே திரும்ப ஊர் போய் தொலைஞ்சான். 4 நாள் நம்மள என்ன ஆட்டம் காட்டிட்டான். ஒரு வான வேடிக்கை பாக்க முடியல. ஒரு சீரியல் செட்டு பாக்க முடியல. டும் டும் னு வெறும் சத்தம் தான் கேட்டுது.

அவ்வளவு ஏன் நம்ம மோடி பதவி ஏத்துக்கற அழக பாக்கலாம்னு எவ்வளவு ஆர்வமா ‘புது ஹேர் டை’ எல்லாம் வாங்கி வச்சிருந்தோம். கடைசியில அத இவன எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தல தான் போட்டுக்கிட்டு போக முடிஞ்சிது.

வௌங்கதவனுங்க இத கூட கிண்டல் பண்ணுவானுங்க.. ‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குதான்னு’

நாங்க எல்லாம் அப்பவே.. எப்போ 2009 ல புலிகளும் லட்சகணக்கான தமிழர்களும் கொலை செய்யப்பட்டபோது கோபமும் அழுகையுமா கொத்தளித்தமே,

அப்பவே ஆர்ப்பாட்டம் நடத்திய நேரத்த விட அதிகமான நேரம் ‘ஒண்ணே முக்கால் மணி நேரம்’ செலவு செஞ்சி மேக்கப்போட்டுக்கிட்டு வந்துதான்…

சாவுக்கே சாலிடன மேக்கப்போடுதான் போவம். ஆர்ப்பாட்டமெல்லாம் எங்களுக்கு கல்யாண வீடு மாதிரி விட்டுறுவோமா?

எங்க போனாலும் வீடியோ கவரேஜ் வைக்கிறாங்க இல்ல.. சும்மா போக முடியுமா?

4 thoughts on “தமிழ்த்தேசிய மேக்கப்

  1. Kalaignar is the only person in the world, whose stand is consistent on Srilankan’s tmails.

Leave a Reply

%d bloggers like this: