16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்
ஒரு படத்தின் பின்னணி இசை எந்த அளவிற்கு படத்திற்கு முக்கியத்துவம் தரும்?
-அப்துல் ஜமால், கோவை.
படத்திற்கான பின்னணி இசை, படம் எடுத்து முடித்தவுடன் சேர்ப்பது மட்டுமல்ல; படம் எடுப்பதற்கு முன்பே பின்னணி இசையை முடிவு செய்யவேண்டும்.
இந்கக் காட்சிக்கு இந்த வசனம் முக்கியம்; இந்தக் காட்சிக்கு வசனத்தை விட இசைதான் முக்கியம்; என்று திரைக்கதையிலேயே எழுதியிருக்கவேண்டும். இசையமைப்பாளரை மனதில் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதைதான் மிக நேர்த்தியான திரைக்கதை.
சில உணர்வுகளை வார்த்தைகளைவிட இசை நுட்பமாக சொல்லும் என்கிற புரிதல் இயக்குநருக்கு இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் பின்னணி இசை சிறப்பாக அமையும்.
பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம்; பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’.
பின்னணி இசையின் மூலமாக பல நுட்பமான தனிமனித உணர்வுகளை மட்டுமல்ல, அரசியல் ரீதியான செய்திகளையும் சொலல முடியும்; என்று உணர்த்தியப் படம் கமல்ஹாசனின் ‘ஹேராம்’. இந்த இரண்டு படத்திற்கும் இசை, இசைஞானி இளையராஜா.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஏப்ரல் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு
இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்
‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?
இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!
இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்
இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?
பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்
பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?
‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு
Alagana vilakkam
தோழா வணக்கம்,
சும்மா பின்னிட்டீங்க போங்க…. அருமை, அற்புதமான பதில். ஆமா! நீங்க எப்ப இயக்குனாராகப் போறீங்க? 🙂 எனக்கு ஒரு வில்லன், காமெடியன் வாய்ப்பு எதாச்சும் குடுங்க…
இசைஞானி இளையராஜா அவர்களைக் குறித்த மிக நுட்பமான செய்திகளை வெளியிடுவதற்கு நன்றி.
மா. தமிழ்ப்பரிதி
http://www.thamizhagam.net
மற்றுமொரு உதாரணம்..பாலு மகேந்த்ராவின் வீடு திரைப்படத்தின் முதியவர் தன் பேத்தி கட்டி வரும் வீட்டை பார்ப்பதற்காய் பேருந்தில் பயணம் செய்து ,வெயிலில் குடையை தவறவிட்டு நடக்கும் அந்த நீள காட்சிக்கு பின்னணி இசையின் அழுத்தத்தின் மீதான நம்பிக்கையில் எடுக்கப்பட்டதாகவே தெரியும்… இது இயக்குனரின் குருட்டு நம்பிக்கை இல்லை ,அறிந்த ஆழமான நம்பிக்கையை இருந்திருக்க வேண்டும் .ஒரு வேளை இந்த காட்சிக்கு இசை சுமாராய் இருந்திருந்தால், காட்சி மிகப்பெரிய சொதப்பலாய் இருந்திருக்கும்..முதியவர் அந்த கட்டி முடிக்காத வீட்டின் கூரையின் அடியில் கால் வைக்கும் பொது வெய்யிலில் வந்த வசந்தமாய் அந்த இசை அந்த காட்சியை மாற்றியிருக்கும் … கண்ணீரை சுரக்கவும் , சுரந்த கண்ணீரை வழியாமல் கண்ணிலேயே தேக்கவும் வைத்திருக்கும் ராஜாவின் இசை …
https://www.youtube.com/watch?v=bLecr6PyQ-Y
இந்த இணைப்பு வீடியோவின் சரியாக 1:33:00 வில் தொடங்கி 1:38:00 வரை சரியாக ஒரு பாடலுக்கான நேரம் தான், ஆனால் இந்த நேரத்தில் யாரும் திரையில் இருந்து கண்களை விளக்க முடியாது ..