மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/01/jalli.jpg?w=1170

சுற்றுலாபொருட்காட்சி எந்தவகையில் பொங்கல் பண்டிகையைவிட சிறந்தது?

சீ.பிரபாகரன்

அதை விளக்கிதான் முந்தைய பதிலில் எழுதினேன். மீண்டும் அதையே கேட்டு இருக்கிறீர்கள். சுற்றுலாபொருட்காட்சியில் ஜாதி பார்த்து அனுமதிப்பதோ, அனுமதி மறுப்பதோ இல்லை.

பொங்கல் அப்படியா?

ஊருக்குள் நடக்கும் மாடு விரட்டிலோ, ஜல்லிக்கட்டிலோ தாழ்த்தப்பட்ட மக்களையும் அவர்களின் மாடுகளையும் அனுமதிப்பதில்லை.

அதற்கான காரணம் மிகவும் அவலமானது, கேவலமானது என்றாலும் அதை புரிந்து கொள்வது எளிதானது.

ஆதிக்க ஜாதிக்காரர்களின் மாடுகளோடு சமமாக தாழ்த்தப்பட்டவர்களின் மாடுகள் கலந்து கொள்வதை எந்த ஜாதி தமிழன் அனுமதிப்பான்?

‘தாழ்த்தப்பட்ட மக்களை விட தான் உயர்ந்தவன்’ என்பதுபோலவே, ‘தாழ்த்தப்பட்ட மக்களைவிட, அவர்களின் மாடுகளைவிட தன் மாடு உயர்ந்தது’ என்கிற எண்ணம் ஜாதி தமிழர்களிடம் வலுவாக இருக்கிறது.

மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு.

கவுண்டர், தேவர் வீட்டு ‘வீரம் நிறைந்த’ காளை மாட்டை அருந்ததியரோ, பறையரோ, பள்ளரோ அடக்கிவிட்டால்……?

***

தொடர்புடையவைகள்:

‘சுற்றுலாபொருட்காட்சி’தான் உண்மையான ‘தமிழர்திருவிழா’; பொங்கல் அல்ல.

பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

11 thoughts on “மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு

  1. சாதித்திமிரின் தோலுரிக்கும் மிக எளியப் பதிவு. சாதி வெறியினை அழிக்க, மதவெறியினை மாய்க்க இன்னும், இன்னும் ஏராளமாய் எழுத வேண்டியுள்ளது.வாழ்த்துக்கள் மதிமாறன்.

    -மா. தமிழ்ப்பரிதி
    http://thamizhagam.net/

  2. மிக அருமையான பதில் ,தொடர்ந்து பழைய கேள்வி பதில்களை அனுப்பி வையுங்கள் மிக்க நன்றி உங்களின் அறிவுபணிக்கு தமிழ்சமூகம் என்றும் கடமை பட்டுள்ளது

  3. //கவுண்டர், தேவர் வீட்டு ‘வீரம் நிறைந்த’ காளை மாட்டை அருந்ததியரோ, பறையரோ, பள்ளரோ அடக்கிவிட்டால்……?//
    அதுக்கு கவுண்டர் மாடு, தேவர் மாடுன்னு வேணா சொல்லுங்க. தேவையில்லாம பார்ப்பனரை ஏன் இழுக்கிறீர்கள்? பார்ப்பன மாடுன்னு ஏப்படி சொல்லப் போச்சு?

    அவர்கள் எப்போதுமே இந்த விளையாட்டுக்காக மாடுகள் வளர்த்து விட்டதாக அறிந்ததில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  4. இந்த எல்லா மாட்டையும் உருவாக்கிய திருந்தாத மாடு பார்பன மாடுதான !

  5. Even in Animalkind also the hidhuism see the difference,

Leave a Reply

%d bloggers like this: