பெரியார்; ஜாதி ஒழிப்பு வழியாகத்தான் கடவுள் மறுப்பு நிலைக்கு வந்தார்

துதான் ஆனந்த விகடன் – குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை -1

எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல – 2

சைவம், அசைவம் தாண்டிய மூன்றாவது உணவு முறை-3

***

நாகூர் இஸ்மாயில்: பெரியாரின் முதன்மையான கருத்து என்று எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?

வே. மதிமாறன்: காங்கிரசிலிருந்து பெரியார் வெளியேறியபோது,‘ ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் இருவரைப்போலவே காங்கிரசும் தீவிரமான பக்தர்கள் நிரம்பிய கட்சியாக இருக்கிறது; கடவுள் இல்லை, இல்லேவே இல்லை; அதனால் நான் கட்சியை விட்டுபோகிறேன்’ என்று சொல்லி வெளியேறவில்லை.

ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் உட்பட்ட ஒட்டுமொத்தக் காங்கிரசும் சாதிவெறி கட்சியாக இருக்கிறது என்பதினால்தான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். சாதி ஒழிப்புற்காகத்தான் தனி இயக்கமும் கண்டார். இறைநம்பிக்கை கொண்ட நீதிக்கட்சி தலைவர்களை அவர் ஆதரித்ததும் அதன் பொருட்டே.

நீதிக்கட்சி தலைவர்களின் இறைநம்பிக்கையில் தலையிடமால் அவர்களின் சாதி உணர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் பெயருககு பின்னால் சாதி பெயரை போட்டுக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியதும் அதனால்தான்.

பெரியாரின் கருத்துக்களில் முதன்மையானது சாதி ஒழிப்பு தான். சாதி ஒழிப்பு வழியாகத்தான் பெரியார் கடவுள் மறுப்புக்குள் வருகிறார். அதன் பிறகு கடவுள் இல்லை என்பதை அறிவியல் ரீதியாக புரிந்து கொண்டு முழுமையான பகுத்தறிவாளராக திகழ்ந்தார்.

ஆக, பெரியாரின் அடிப்படை நோக்கம் சாதிஒழிப்புதான்.

-தொடரும்

தொடர்புடையவை:
பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

காந்தி படுகொலையும்
அப்பாவி பார்ப்பனஅகிம்சாமூர்த்திகளும்
*
தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

3 thoughts on “பெரியார்; ஜாதி ஒழிப்பு வழியாகத்தான் கடவுள் மறுப்பு நிலைக்கு வந்தார்

  1. ஆக, பெரியாரின் அடிப்படை நோக்கம் சாதிஒழிப்புதான்.////

    Nakkakum antha adippadai Nookkam vendam…

    Saathi olippu dhan tamilzan muthal velai

  2. சரியான பார்வை. பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது மிகவும் ஆழமாக விவாதிக்கவேண்டிய ஒன்றே. பெரியாரின் கடவுள் மறுப்புக்கும், மார்க்சியத்தின் கடவுள் மறுப்புக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை நாம் ஆராயவேண்டும். கடவுள் இல்லை என்பது உண்மை. ஆனால், கடவுள் நம்பிக்கை ஒரு மனித சமூக இயல்பு. அது சமூகத்தின் வெளிப்பாடு. அந்த மூடநம்பிக்கைத் திரையை கிழிக்கவேண்டிய அவசியம் பெரியாரியலுக்கும் மார்க்சியத்திற்கும் ஏற்பட்ட விதத்தில் வேறுபடுகின்றன. கடவுள் நம்பிக்கை என்ற கருத்தியலையே சாதிவழிச் சமூகக் கட்டமைப்பிற்கு பயன்படுத்திய இந்தியச் சமூகத்தில் பெரியாரின் பார்வை கடவுள் மறுப்பின் மீது அதிகம் குவிந்ததாகத் தோற்றமளிக்கின்றது. ஆனால் பெரியார் சொல்வது போல் ‘உனது கடவுளை இந்தச் சாதியிடமிருந்து பிரித்துக்கொண்டு போய்விடுவாயேயானால் நீ கடவுளை வைத்துக்கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை’ என்பது தான் பெரியாரின் தர்க்கம். ஆனால் சாதியும் கடவுள் நம்பிக்கை தளமான மதமும் இரண்டறப் பின்னியிருப்பதால் தான் பெரியார் இரண்டையும் சம வேகத்தில் மோதினார். பெரியாரின் கடவுள் மறுப்பு மூர்க்கமாக இருக்கவேண்டிய சமூக இறுக்கம் அன்று நிலவியது. மார்க்சிய அறிவியல் படி கடவுள் மறுப்பும் மதமும் அத்தகு அடிப்படையான கட்டமைப்பு விதிகளோடு பார்க்கப்படவில்லை. காரணம், வர்க்க சமூக் அரசியலின் தன்மை அய்ரோப்பாவில் அவ்வாறு இருந்தது. மேலும் மறுமலர்ச்சி, தொழிற்புரட்சி, பிராட்டஸ்டண்ட் இயக்கம் போன்றவை அய்ரோப்பிய சமூகத்தின் மீதான மதத்தின் இறுக்கத்தைத் தளர்த்தியிருந்தது. எனவே மார்க்சியம் பார்க்கும் கடவுள் மறுப்பு பெரியாரியலின் கடவுள் மறுப்போடு கட்டமைப்பில் வேறுபடுகின்றது. சாதி என்ற கட்டமைப்பையே கடவுள் நம்பிக்கையின் தளத்தில் நிறுவியதால் பெரியார் கடவுள் நம்பிக்கையையே நேரடியாகவே மோதவேண்டி வ்ந்தது. பெரியாரின் கடவுள் நம்பிக்கை என்பது இந்திய சமூக இயங்கியல் சார்ந்தது. இந்தக் கருத்தை முரண்படும் மார்க்சியலாளர்களுக்கு இது பதிலாக அமையும். விமர்சனங்களை எதிர்நோக்கி, நன்றியுடன் முரசு

  3. பொருளாதாரத்தில் மேல் நிலையிலுள்ளவனின் சாதி உணர்வு, மத உணர்வைக் காட்டிலும் வலுவற்றதாகவே உள்ளது. சாதி உணர்வா மத உணர்வா என்று வரும்போது அவன் மதத்தைத்தான் பிடித்துத் தொங்குகிறான். தன் சாதி மக்களோடு முரண்படும் போது மட்டும் வர்க்கத்தின் பக்கம் சாயும் அவன், மதத்தையும் சேர்த்தேதான் கைகழுவுகிறான். ஆனால் தவிர்க்க முடியாத திருமண உறவில் மட்டும் சாதியோடு சேர்த்து வர்க்கத்தையும் புறந்தள்ளுகிறான், அங்கு மதம்தான் அவனுக்கு கடைசி நம்பிக்கையாக உள்ளது. அது மட்டும் விட்டுப் போகாததே, அவனைத் தேற்றுவதாயுமுள்ளது.
    இப்படி முரண்பாடுகளோடே முட்டிக்கொண்டிருக்கும் மேல்தட்டு வர்க்கம் எந்த நிலையில் எதை விடுவார்கள், எதைப் பிடித்துத் தொங்குவார்கள் என்பது அதனதன் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும். சாதியின் ஆணிவேரே இந்து மதமாக இருப்பதால் தந்தை பெரியார் அவர்கள் இந்து மதத்தைத் தாக்கினார். அய்யா அவர்களின் ஒவ்வொரு போராட்டமும், அது எந்த வடிவத்தில், எந்த நோக்கத்தில் இருந்தாலும், அதன் அடிப்படை நோக்கமே சாதியைத் தகர்க்கக் கூடியதான உள் நோக்கத்துடனேயே அமைந்திருந்தது என்ற நண்பர் மதிமாறனின் உரையாடல்களே இப்போது இதற்குப் பொருந்துவதாயுள்ளது. காசிமேடு மன்னாரு.

Leave a Reply

%d bloggers like this: