‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’

பார்ப்பனர் மட்டுமல்ல; அருந்ததியர் முன்னால் எல்லா ஜாதிக்காரனும் குற்றவாளிதான்

***

துதான் ஆனந்த விகடன் – குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை -1

எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல – 2

சைவம், அசைவம் தாண்டிய மூன்றாவது உணவு முறை-3

பெரியார்; ஜாதி ஒழிப்பு வழியாகத்தான் கடவுள் மறுப்பு நிலைக்கு வந்தார்-4

***

நாகூர் இஸ்மாயில்: ஆனாலும் கடவுள் மதம் குறித்து பெரியார் கடுமையாக விமர்சித்தாரே?

வே. மதிமாறன்: சாதாரண பக்தனின் இறைநம்பிக்கையைவிட, ஒரு ஆர்.எஸ்.எஸ். காரனின் மத நம்பிக்கை ஆபத்தானது.  கிராமத்தானின் இறை நம்பிக்கை முட்டாள்தனமானதாக இருக்கலாம். ஆனால், அது அடுத்த மதக்காரனை துன்புறுத்துகிற அளவிற்கு ஆபத்தானது இல்லை.  அவன் கும்பிடுகின்ற எந்த கடவுளிடமாவது ‘நான் நல்லா இருக்கணும், ஊர்ல மழை பெய்யணும்’ என்று வேண்டிக் கொண்டு அவன் பாட்டுக்கு போய் விடுவான்.

ஆனால்  அவனிடமிருப்பதில் மோசமானது, சாதீய உணர்வு தான். ஏனெனில் தன்னுடைய சுய சாதியை முன்னிறுத்த நினைப்பவன் மற்ற மனிதர்களை தனக்கு கீழாக நினைக்கிறான். இது மிகவும் கேவலமானது. ஆபத்தானது.

ஒரு அப்பாவி பக்தனுடைய கடவுள் நம்பிக்கையை அவனுடைய சாதி உணர்வு, ஆபத்தானதாக மாற்றிவிடுகிறது. தாழ்த்தப்பட்டவர்களை தங்களின் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும், அவர்களை தங்கள் கடவுள்களை வழிபட தடுப்பதும், அப்படி மீறி வழிப்பட்டால் அவர்களை கொலை செய்கிற அளவிற்குக்கூட சாதி உணர்வு அவனுடைய இறைநம்பிக்கையை பயங்கரமானதாக மாற்றிவிடுகிறது.

அதனால்தான் பெரியார் சாதிஒழிப்பின் நோக்கத்தில்தான் இறைமறுப்பையும் தீவிரப்படுத்தினார். பெரியாரின் 70 ஆண்டு கால கடின உழைப்பால் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான், முற்போக்கானவர்கள் மட்டுமல்ல; பிற்போக்கான சாதி சங்கத் தலைவர்கள்கூட  தனது பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதில்லை. அப்படி போட்டுக் கொள்வதற்கு விரும்பம் இருந்தாலும், அதை பகிரங்கமாக வெளிபடுத்த வெட்கப்படும்படியான நிலையை ஏற்படுத்தினார்.

ஆனால் இன்று சாதி உணர்வு பழைய மாதிரி மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது. ‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’ என்பது மாதிரியான போக்கு தீவிரமாக வளர்ந்து வருகிறது. முற்போக்கானவர்களாக காட்டிக்கொள்கிறவர்கள் சாதி சங்கத் தலைவர்களை ஆதரிக்கிறபோக்கும் வளர்ந்து வருகிறது. இது மிகுந்த ஆபத்தானது.

தொடரும்

தொடர்புடையவை:
சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

காந்தி படுகொலையும்
அப்பாவி பார்ப்பனஅகிம்சாமூர்த்திகளும்
*
தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

2 thoughts on “‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’

  1. //ஆனால் இன்று சாதி உணர்வு பழைய மாதிரி மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது.//

    ஆம், யாதவ மகாசபை என்ற ஒரு கட்சியை ஏற்படுத்தி அதில் இணைபவர்கள் கட்டாயமாக பெயர்களுக்கு பின்னால் ”யாதவ்” என்று போடவேண்டும் என கட்டளை இட்டுள்ளான் ’விண் டி.வி’யின் முதலாளி தே.நாதன் (சாரி…. தேவநாதன்).

    அவர்கள் உயர்ந்த சாதியாம் …. ஆனா இடஒதுக்கீடு வேண்டும்ன்னு கூட்டம் நடத்துரான்……

    இவனை எல்லாம் என்ன செய்யலாம்.

  2. மத உணர்வோடே சிலர் முற்போக்காளர்களாக இருக்கிறார்களே. அதற்கு என்ன சொல்கிறிர்கள்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading