தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்களிடம் பேசுவது அயோக்கியத்தனம்
இதுதான் ஆனந்த விகடன் – குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை -1
எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல – 2
சைவம், அசைவம் தாண்டிய மூன்றாவது உணவு முறை-3
பெரியார்; ஜாதி ஒழிப்பு வழியாகத்தான் கடவுள் மறுப்பு நிலைக்கு வந்தார்-4
‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’-5
***
நாகூர் இஸ்மாயில்: அரசியில் ரீதியாக நீங்கள் செய்கிற இப்போதைய பணி…?
வே. மதிமாறன்: முக்கியமாக அம்பேத்கரின் கருத்துக்களை தலித் அல்லாதவர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்து வருகிறேன். அதற்கு எனக்கு ஆதரவை விட நிறைய எதிர்ப்பும், புறக்கணிப்பும்தான் கிடைக்கிறது.
நாகூர் இஸ்மாயில்: “நீங்கள் அம்பேத்கரின் படம் போட்ட டி-ஷர்ட் கூட கொண்டு வந்தீர்களே?’
வே. மதிமாறன்: ஆமாம், கிராமங்களில் கார்ல் மார்க்ஸ், லெனின் போன்ற மாபெரும் புரட்சியாளர்களின் படத்தை, சிலையை கூட எளிதாக திறந்து வைத்து விடலாம். அவர்கள் யார் என்று தெரியாததால்… அல்லது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல என்பதினாலும் அதற்கு எதிர்ப்பு இருக்காது.
ஆனால் இந்தியாவின் மாபெரும் தலைவரான அண்ணல் அம்பேத்கரின் படங்களை, சிலைகளை திறந்து வைத்தால் உடைத்து விட்டு போய் விடுவார்கள். ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதும் அத்தோடு தலித் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தினார் என்பதும் சிலையை உடைப்பவர்களின் கோபத்தின் முக்கிய காரணமாக இருக்கிறது.
பொதுவாக, நான் எந்த ஒரு தனி மனிதரின் உருவப் படத்தையும் டிஷர்ட்டில் போட்டுக் கொள்வதை விரும்பாதவன். அப்படி யாருடைய படம் போட்ட டி ஷர்ட்டை அணிந்ததும் இல்லை. அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட சட்டையைதான் விரும்பி அணிந்தேன். அதை யாரும் அணிவதில்லை என்ற காரணத்தினாலும்; அதை அணிவது சாதி எதிர்ப்பு அரசியிலின் பிரச்சார வடிவம் என்ற காரணத்தினாலும்தான்.
அதை அணிந்து கொண்டு வெளியி்ல் சென்றுவருவதே வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. என் இனிய தோழர்களோடு இணைந்து அம்பேத்கர் டி சர்ட கொண்டுவந்ததை என் வாழ்க்கையின் முக்கியமான விசயமாக கருதுகிறேன்.
நாகூர் இஸ்மாயில்: “தாழ்த்தப்பட்ட அந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள்?”
வே. மதிமாறன்: தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசுவது போல் அயோக்கியத்தனம் வேறொன்றுமில்லை. இது எப்படி என்றால் இந்துமத வெறியர்களின் கொடுமையை, இந்து மதத்தை விமர்சித்து இஸ்லாமியர்களிடம் பேசுவதை போல் உள்ளது. அப்படி பேசுவதால் பேசுகிறவர்களுக்கு வேண்டுமானால் நல்ல பயன், லாபம் இருக்குமே தவிர, சமூகத்திற்கோ, அந்த மக்களுக்கோ பயன் இல்லை.
எந்த தாழ்த்தப்பட்டவராவது, என்னை தொட்டால் தீட்டு என்றோ என்னை ஊருக்கு வெளியே வையுங்கள் என்றோ சொன்னதுண்டா? தீண்டாமையைப் பற்றி தாழ்த்தப்பட்டவர்களிடம் போய் பேசாமல் எவன் சாதியை கொண்டாடுகிறானோ, தீண்டாமையை கடைப்பிடிக்கிறானோ அவனிடம் போய் பேசுவது தான் முறையாகும்.
நன்றி:
http://nagoreismail786.blogspot.com/2010/07/13.html
சூலை 2 ஆம் தேதி மாலை 2 மணியளவில் என்னுடன் தோழர் இஸ்மாயில் தொலைபேசியில் உரையாடியதை அவருடைய தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதைதான் மீண்டும் வெளியிட்டேன்.
தொடர்புடையவை: காதல் ஜாதியை ஒழிக்காது…. அம்பேத்கர் என்னும் ஆபத்துகாந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பனஅகிம்சாமூர்த்திகளும்
சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி * ‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம் * அம்பேத்கர் என்னும் ஆபத்து * முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் * ‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது * ‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’ * இந்து என்றால் ஜாதி வெறியனா? * 60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்
*
தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை
* தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?
தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு
ungal pathil migavum nermaiyaanathu, naanayammanthu.ethey anugumurai eazhai,pengal visayathilum udanpadum.
vazhtthukkal
அம்பேத்காரை கட்சி ரீதியாக அனுகக் கூடியவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை வைத்து அம்பேத்காரின் சிலையை திறந்துவிடலாம். ஆனால் அம்பேத்காரை மக்கள் மனதில் நிலை நிறுத்த எளிய பிரச்சாரங்களும், அவரால் கிடைத்திட்ட நன்மைகளை உணரும் வகையில் எழுதப்பட்ட புத்தகங்களாலும் மட்டுமே முடியும்.
http://sagotharan.wordpress.com/
Anna,
Yours wordings are very powerful for the young generations.please continue this type of style writing.
Thanking you
Yours lovingly
D.MUTHU