ஆப்கனிஸ்தானில் ‘விஸ்வரூபம்’

Afghan-villagers-gather-011

ஆப்கானிஸ்தானில் ஒரு கிராமமே நேற்று புதைந்துவிட்டது. 1000 கணக்கான மக்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். ஆப்கான் ‘தீவிரவாதத்திற்காக’ ஒட்டு மொத்த ஊரையும் குண்டு போட்டு அழித்த நம்ம அமெரிக்க தேசபற்றாளன், ‘விஸ்வரூப’ நாயகனுக்கு இப்ப சந்தோஷமா?

ஒரு சின்ன தோட்டா கூட செலவில்லாமல், முடிந்திருக்கிறது மக்களின் வாழ்க்கை. சிக்கனமான சாவு. செலவே இல்லாமல் அடக்கம்.

தன் வீட்டை அடகு வைக்காமல், ஒரு கூடாரம் கூட செட் போடாமல் ‘பிரம்மாண்ட காடசி’ அரங்கேறி அழிந்திருக்கிறது. அமெரிக்கருக்கு மகிழ்ச்சியிருக்காதா என்ன..?

அதை live வா பாக்க முடியலியே என்பதைத் தவிர வேற என்ன கவலை இருக்கப் போகிறது அமெரிக்க மனிதாபிமானிகளுக்கு?

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

7 thoughts on “ஆப்கனிஸ்தானில் ‘விஸ்வரூபம்’

  1. endrraikku ankulla buthar silaikalai gundu vaithu thakartharkalo andraikku aarampithathu avarkalukku kedukaalm

  2. பொதுவில் அனைவரும் தாங்கள் பார்க்கும் அல்லது கேட்கும் விஷயத்தைப்பற்றி தங்கள் சிந்தனைப்படி சிந்தித்துகொண்டிருந்தால் தாங்கள் மட்டும் இந்த விஷத்தை பற்றி இவன் என்ன நினைத்துகொண்டிருப்பான்?அவன் என்ன நினைத்துகொண்டிருப்பான் என எண்ணுவதை மட்டுமே தங்கள் கருத்தாக கொண்டிருப்பீர்கள் போல இருக்கிறது.
    சம்பந்தப்பட்டவர் ஏதேனும் ஒரு அறிக்கை மூலமோ பேட்டி மூலமோ தங்களது கருத்தை தெரிவித்திருந்து அதன்பிறகு தாங்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்தால் கூட பரவாயில்லை.
    ஆனால் தாங்களாகவே அவன் இப்படித்தான் நினைத்திருப்பான் என கருத்து தெரிவிப்பது முற்றிலும் அநாகரீகமானது.
    ஒரு வேலை தங்களுக்கு கூடு விட்டு கூடு பாயும் சக்தியிருப்பின் பகுத்தறிவாளர் என்றும் பாராமல் அந்த அதிசய சக்தி பற்றி ஒரு கட்டுரை வெளியிடவும்.

  3. உலகிலேயே தங்கள் ஒருவரைத்தவிர ஒருவனுக்கும் மனிதாபிமானம் என்பதே கிடையாது என்பது உங்கள் எண்ணம் போல.
    ஆனால் உங்களுள்ளும் பழிவாங்கும் எண்ணம் தவிர வேறேதும் இல்லை என்பது தங்களது கருத்தை படிக்கையிலே தெரிகிறது.
    ஒருவேளை தாங்கள் கூறியதுபோல இந்நிகழ்விற்கு அமெரிக்கர்கள் மகிழ்வார்கள் என்றால் அமெரிக்காவில் இப்படி ஒரு பேரிடர் நிகழ்ந்திருந்தால் தாங்கள் மகிழ்வீர்கள் என்பதுவும் தெளிவாக புலப்படுகிறது.
    இதில் தங்களுக்கும் தாங்கள் குறிப்பிடும் அமெரிக்கர்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?
    எங்களுக்கும் அமெரிகாவின் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது.ஆனால் அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும் என்பதால் உங்களைபோல குழப்பிக் கொள்வது கிடையாது.
    இந்தியாவில் இருப்பவரெல்லாம் மன்மோகன் சிங்கின் கருத்தை கொண்டிருப்பார்கள் என்பதைப்போலவே உள்ளது தங்களின் கருத்து.
    உங்களைபோன்ற தொண்டர்களால் தான் சமுதாயத்தில் பெரியார் மிக மிக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார்.

  4. அன்புள்ள மதிமாறன்,
    இது போன்ற பதிவுகள் தங்களுக்கு அழகல்ல. You expose yourself to attack.

  5. வேலுமணி சார்… மதி எப்பவும் ’அவன்’ எப்போ மண்டைய போடுவான்னு நெனக்கிற நெகட்டிவ் ஆளு….இவருக்கு பதில் பாப்பானே பரவாயில்லன்னு தோணிடும்…. அதுவும் சரி.. அமெரிக்காவுக்கு அப்படி ஆச்சுன்னா அங்க சாவுறது யாரு தெரியுமா…?… நம்ம கம்யூனிஸ்ட்டு லீடர் பசங்க.. இவரு ஆதரிக்கும் திமுக பிரமுகர் பசங்க… எல்லாத்தையும் விட பல பெரியாரிஸ்ட் காரங்க பசங்க கூட நெறய பேரு வேல பாக்கறாங்க.. அவ்வளவு ஏன் சில முன்னாள் இன்னாள் தீவிர கம்யூனிஸ்ட் தலைவர்கள் பசங்க கூட வேல பாக்கறாங்க… அவங்களுக்குத்தான் பாதிப்பு… அத பத்தி ஏதாவது கவல இருக்கா இவருக்கு… நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை.. அவனுக்கு ஒரு கண்ணாவது காலியாகணும்னு நென்க்கிற ஆள்தான் இவரு…

  6. i think, you were so happy when gujarath was affected by earth quake. you should not think all are saddists .

Leave a Reply

%d bloggers like this: