காதலர் தினமும் தொழிலாளர் தினமும்
முதலாளித்துவ கவர்ச்சி திட்டமான காதலர் தின பூக்களால் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டது தொழிலாளர் தினம்.
தொழிலாளர்களையே மே தினத்தை விட காதலர் தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அமெரிக்க தொழிலாளர்கள் பெற்றுத் தந்த 8 மணிநேர வேலை திட்டத்தை, அதே அமெரிக்காவிலிருந்தே உலகம் முழுவதும் 12 மணி நேர வேலை திட்டமாக மாற்றப்பட்டு வருகிறது.
ராப் பகலாக 12 – 14 மணி நேரம் வேலை செய்யுது, Week End கொண்டாடும் அடிமைகளே, மே தினத்திற்கு பதில் காதலர் தினத்தை கொண்டாடுகிறா்கள், பரிந்துரைக்கிறார்கள்.
தொழிலாளர்கள் வளமாக இல்லாத எந்த நாட்டிலும் காதலர்கள் நலமாக இருக்க முடியாது.
பூக்கள் நறுமணம் தரும் அழகிய உணர்வுகள் தான். ஆனால் அதை ரசிப்பதற்கு நீ மனிதனாக இருக்க வேண்டும்.
தன் மீது மலர்களை குவியல் குவியலாக குவிக்கப்பட்டாலும் பிணங்கள் நுகருமா பூக்களின் நறுமணம்??
அழுகிய பிணத்தின் நாற்றத்தை மறைபதற்கே மலர் மாலைகள் பயன்படுவதைப் போல், வர்த்தக லாபத்தை மறைப்பதற்கே மே தினத்திற்கு மாற்றாக காதலர் தினம். இன்னும் புதிய புதிய பொழுதுபோக்கும் நாட்களும் கொண்டாடப் படுகிறது.
பூக்கள் அழகானவை தான்.
உன் தாயின்.. மகளின்.. காதலியின்.. மனைவியின்.. பிணங்களின் மீது சூடப்பட்ட பூக்களை ரசிக்க முடியுமா உன்னால்.?
மலர்களின் நறுமணத்திற்குள் மறைந்திருக்கிறது விவசாயத் தொழிலாளர்களின் வியர்வை வாசம். அந்த ‘வியர்வை நீர்’ பாய்ச்சப்பட வில்லையென்றால் ‘மணம்’ மட்டுமல்ல, மலர்களே இருக்காது.
தொழிலாளர்களின் துயரங்களை புரிந்து கொண்டவர்களுக்கே பூ க்களின் நறுமணத்தை நுகர யோக்கியதை இருக்கிறது.
ஏப்ரல் 1 உனது நாளாக இருந்தால்
பிப்ரவரி 14 தான்
மே 1 நாளை விட
உனக்கு சிறப்பானதாக இருக்கும்.
மே1, 2014 எழுதியது.
காதலர் தின எதிர்ப்பு; கள்ளக் காதலர் தினம் கொண்டாட வேண்டிய அளவிற்கு பண்பாடு
தொழிலாளர்களின் துயரங்களை புரிந்து கொண்டவர்களுக்கே பூ க்களின் நறுமணத்தை நுகர யோக்கியதை இருக்கிறது.
அற்புதம்.
தற்போதெல்லாம் சாப்பிடும்பொழுது ஒவ்வொரு பருக்கையையும் அதிசயித்து வியந்தபடியே சாப்பிடுகிறேன்.தட்டில் கிடக்கும் ஒவ்வொரு அரிசியும் விதை நெல் காலத்திலிருந்து வயலில் விளைவது,அறுவடையாவது,வணிகத்திற்கு வருவது,நமது சமயலறையில் சாதமாவது,நமது தட்டில் வந்து சேர்வதுவரை எத்தனை எத்தனை சந்தர்ப்பங்களில் எத்தனை மனிதர்களின் உழைப்பை உரமாக்கி நம்மை வந்து சேர்ந்திருக்கிறது?இந்த சாதத்தில் ஒரு பருக்கையை வீணடிப்பது கூட பல மனிதர்களின் உழைப்பை வீணடிப்பது போலவே உணர்கிறேன்.
ஆட்டு கூட்டதை வேட்டையாட நினைத்த குள்ளநரி ஒவ்வொரு ஆட்டிடமும் சென்று நீ பயப்படாதே, நான் ஆடுகளைத்தான் வேட்டையாடுவேன்,நீ ஆடல்ல சிங்கம் என குறி ஏமாற்றி ஒவ்வொரு ஆடாக வேட்டையாடிவிடும்.
ஒரு ஆடு வேட்டையாடப்படுகையில் அதைப்பார்க்கும் சக ஆட்டுக்கு “அது ஆடு ஆனால் நாம் சிங்கம் ஏனவே பயப்பட தேவையில்லை என எண்ணியபடியே சாதாரணமாக இருந்துவிடும்.இப்படி எந்த வித எதிர்ப்புமின்றி மொத்த ஆட்டு கூட்டதையும் அந்த குள்ள நரி வேட்டையாடிவிடும்.
அதுபோலவே பதவிகளின் பெயராலும், ஊக்கதொகை,ஆடம்பரத்திற்கு கடன்வசதி என பல பசப்பு வலைகளில் இன்றைய மனிதர்களை முதலாளித்துவ வர்க்கம் வேட்டையாடிகொண்டே இருக்கிறது.
நாமும் ஓநாயின் வார்த்தையை நம்பிய ஆடுகள் போலவே அனுதினமும் பலியாகிகொண்டு வருகிறோம்.
அருமையான பதிவு தோழர். முதலாளித்துவத்தின் மற்றொரு முகம் தான் காதலர் தினத்தில் வெளிப்படுகிறது. எதையும் லாப நோக்கத்தில் பார்க்கும் முதலாளித்துவம், தொழிலாளர் நாளை புறக்கணிக்கவே செய்யும். மக்கள் முன்னால் நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பது காலத்தின் தேவை. காலத்தின் தேவையறிந்து பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்.
நன்றி.