‘பச்சைத் தமிழன்’
தமிழ் வழிக் கல்வி வேண்டும் என்ற கோரிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கோரிக் கொண்டு இருக்கும் போதே, சமஸ் கிருதத்தில் நிறைய மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, ஊக்கப் படுத்துகிறார் ஒரு பச்சைத் தமிழர். யார் அந்தப் பச்சை?
ஜெயேந்திர சரஸ்வதி.
பிறகு சமஸ்கிருதத்தின் மேன்மைகளைப் புகழ்ந்து தமிழில் பேசுகிறார். தமிழில் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள்தானே. ஆகவே, அவர் பச்சைத் தமிழராகிறார்.
சரி, அதெப்படி இந்துக்களில், தமிழர்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் சமஸ்கிருதம் முக்கிய மொழியாக இருக்கிறது?
ஒரு வேளை இது தமிழர்களுக்கான சிறப்புத் தகுதியோ?
தமிழ்நாடு முழுவதும் இருக்கிற தமிழர்கள், வட்டார வழக்கு பேசுகிறார்கள். குடும்பத்திற்குள் தெலுங்கும், வெளியில் தமிழும் பேசுகிற தமிழர்களும் வட்டார வழக்கைத் தெளிவாகப் பேசுகிறார்கள்.
கோவை, மதுரை, திருநெல்வேலி, நகர்கோவில் என்று தமிழகமெங்கும் பரவலாக வாழுகிற ‘பச்சைத் தமிழர்கள்’ வாயில் மட்டும் வட்டார வழக்கு வர மறுக்கிறதே ஏன்?
சொல்லி வைத்தாற்போல தமிழகம் முழுக்க, எல்லா பச்சைத் தமிழர்களும், ‘ஸ்நானம், ஜலம், ஆத்துக்கு, என்று பேசுகிறார்களே, இந்த ‘நெட்வொர்க்’ அவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? சமஸ்கிருதம் எப்படிப் புனிதமாயிற்று?
‘பேசிய வார்த்தைகளைவிட, பேசாத வார்த்தைகளுக்கே மரியாதை அதிகம். மவுனம் ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லும்’ என்று இலக்கிய வாதிகள் அவிழ்த்து விடுவார்களே, அப்படித்தான் பேசுகிற தமிழைவிட பேசாத சமஸ்கிருதம் உயர்வான மொழியானதா?
இருக்கலாம்.
முற்போக்கு மற்றும் அறிவு ஜீவிகளின் சுப்ரீம் கோர்ட்டான ‘படுபச்சைத் தமிழன்’ மகாகவி பாரதி சொல்கிறார்.
‘‘நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்வோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.’’
பாரதியின் கூற்றுப்படி பார்த்தால், பச்சைத் தமிழன் ஜெயேந்திர சரஸ்வதி சமஸ்கிருதத்திற்கு சிறப்பு செய்தது சரிதானே! சரிதானா?
முற்போக்கு ஆய்வாளர்கள் இதைக் கொஞ்சம் ஆய்ந்து சொல்லட்டும். சொல்வார்களா?
எழுச்சி தலித் முரசு ஆகஸ்ட் 2002
ஜயேந்திரருக்கும் பாரதியருக்கும் என்ன சமபந்தம்? இந்த செய்தியில் முதலில் ஜயேந்திரரின் புகைப் படத்திற்க்கு அருகில் பாரதியின் புகைப்படம் முதலில் காட்சியளித்தது. பிறகு மனசாட்சி உறுத்தியதோ என்னவோ, பாரதியின் படத்தை இப்போது சிறிது இட மாற்றம் செய்து விட்டனர். ஜயேந்திரரின் புகைப் படத்திற்க்கு அருகில் ரவி சுப்ரமணியம், ரகு, அப்பு, விஜயேந்திரர் இவர்களின் படத்தைப் போட்டால், யாரும் ஆட்சேபம் தெரிவிக்கப் போவது இல்லை. சங்கர் ராமனின் படத்தைப் போட்டால் கூட யாரும் ஆட்சேபம் தெரிவிக்கப் போவது இல்லை! ஆனால் பாரதியின் படத்தைப் போடுவது ஏன்? ஜெயேந்திரரைப் பற்றி கூட அதிக விமரிசனம் இல்லை!ஏன் என்றால் ஏதாவது வழக்குகள் வரக் கூடும். ஜெயேந்திரக்கு செல்வாக்கும் உண்டு. ஆனால் பாரதியின் படத்தைப் போட்டு எழுதினால் கேட்க நாதி இல்லை! பாரதி உயிருடன் இல்லை. நாளை ஜெயேந்திரரின் முகத்தை எடுத்து விட்டு அதற்க்குப் பதில் பாரதியின் முகத்தைப் போட்டு, பாரதியார் காவி உடையில் (கையில் குச்சியுடன்) இருப்பது போல, காவலர் அழைத்து செல்வது போல கூட படத்தை வெளியிட்டாலும் வெளியிடுவார்கள்- யாரும் கேட்கப் போகிறார்களா? ஏன் இப்படி பாரதியின் மேல் காழ்ப்புணர்ச்சி? அவர் எல்லா மனிதர்களையும் நேசித்தவர் என்பதாலா? “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடியவர் என்பதாலா? “பாரதியாரைப் பற்றி எனக்குத் தெரியும்! எல்லோரும் சீர்திருத்தத்தைப் பற்றி எழுத்துக் கூட்டி படித்துக் கொண்டிருந்த போது, சீர்திருத்தத்தை
வாழ்ந்து காட்டியவர் பாரதியார்” என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறியதாலா? இல்லை இலக்கண சுத்தமாக எதுகை,மோனை தவறாமல், அசை சீர் தளை, அடி, சீர் என்று பிரிக்கும் வகையில் பாடல் நம்மால் எழுத முடியவில்லையே என்று ஆற்றாமையா?
இல்லை அவரின் எழுத்தில் இருந்த உண்மை, ஆற்றல், நேர்மை, கனல், புரட்சி நம்மிடம் இல்லையே என்ற ஆற்றாமையா? இல்லை, இன்று பெரும்பாலோர் செய்வதுபோல வெளியிலே சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லி விட்டு உள்ளே எரிமலை போலக் குமுறும் சாதி வெறியா? பணத்தின் பின் அலையாமல், நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதாலா? “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் செகத்தினை
அழித்திடுவோம்” என்று பாடியவர் என்பதாலா? முற்போக்கு ஆய்வாளர்களிடம்
இதற்க்கு பதில் கிடைக்குமா?
அருமையான கட்டுரை தோழர்!
நீங்கள் கேள்வி கேட்டுள்ள முற்போக்கு முகமூடிகளுக்கு இது நிச்சயமாக உரைக்காது. உங்கள் தளம் பற்றிக் கூட அவர்களிடம் பேச வேண்டியதில்லை; உங்கள் பெயரைச் சொன்னாலே அந்த முற்போக்குகளுக்கு வயிற்றுப் போக்கு தொடங்கிவிடுகிறது.
பாரதி குறித்த உங்கள் கட்டுரைகளும் தொடர்ச்சியான திரைகிழிப்புகளுக்கும் பின்னால் சிபிஐ கட்சி பாரதிக்கு விழா எடுப்பதை நிறுத்திவிட்டது. அவர்கள் உமது கட்டுரைகளுக்கு பதில் சொல்லவில்லையென்றாலும், அவர்களுடைய இச்செயல் உங்கள் கட்டுரயினை ஆமோதிப்பதாக இருக்கின்றது. ஆனால் நமது மதிப்பிற்குரிய முற்போக்கு கம்பெனி பிரைவேட் லிமிட்டெட் நெலமையோ பரிதாபத்திற்குரியது.
சென்ற பாரதியின் ஒழிந்தநாளிலோ அல்லது பிறந்த நாளிலோ(அது எந்தக் கருமம்பிடித்த நாளோ தெரியவில்லை) அவர்களுடைய தீக்கதிர் நாளேட்டில், எஸ். ஏ.பெருமாள் என்ற பார்ப்பன அடிமை (செம்மலர் இதழின் ஆசிரியர்) பாரதியின் புகழ்பாடி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பாரதி குறித்த விமர்சனத்துக்கு பதில் சொல்லுங்கடான்னு கேட்டா, நமக்கு பதில் சொல்லாம பம்முகிற இவர்கள் பாரதியின் புகழ்பாடுவதை நிறுத்தியபாடில்லை.
இதற்குப் பெயர்தான் முற்போக்கோ!!!
ஏகலைவன்.
உலகில் உள்ள எல்லா மொழிகளும் புனிதமானவைதான் சுவையானவைதான்.
இதற்கு ஒரு ஆன்மீக முடிச்சுப் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
சமஸ்கிருதம் மோசமான மொழி என்று சொல்வதும் சரியல்ல,
நமது குழந்தை நமக்கு அழகு என்பதால் பக்கத்து வீட்டுக் குழந்தை அசிங்கமல்ல.
சமஸ்கிருதத்தை ஒரு ஆயுதமாக நம் மீது பிரயோகித்தது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
அதனை நிச்சயமாக எதிர்க்க வேண்டும். இன்று மட்டுமல்ல, இன்னும் 5 ஆயிரம் கழித்து அந்நிலை வந்தாலும் எதிர்க்கத்தான் வேண்டும்.
சமஸ்கிருதத்திற்கு அது ஒரு மொழி என்பதைத் தவிர வேறு சிறப்பு ஏதுமில்லை.
உலகில் உள்ள அனைத்து மொழிகளும் அப்படித்தான்.
வட மொழி தெய்வத்தன்மை உடையது என்றால் அது ஏன் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விட்டது என்பதை தெய்வத்தின் குரல்களும் அவற்றின் எதிரொலிகளும் சொல்லட்டுமே.
உண்மையிலேயே சமஸ்கிருதத்தை வளர்க்க விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
அம்மொழியைக் கற்று புத்தகங்களை வெளியிட வேண்டும், நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், இலக்கியங்களைப் படைக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய் வேண்டும், மொழியைப் பரப்ப எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அப்படியா செய்கிறார்கள்?
அதனை ஒரு வழிபாட்டு மொழியாக மட்டுமே வைத்து அவர்களே அழித்தும் விட்டார்கள்.
அழிந்துவிட்டதால் புனிதமாகிவிட்டதாகக் கூறுகிறார்களோ என்னவோ?
///அம்மொழியைக் கற்று புத்தகங்களை வெளியிட வேண்டும், நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், இலக்கியங்களைப் படைக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய் வேண்டும், மொழியைப் பரப்ப எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அப்படியா செய்கிறார்கள்?///
நண்பர் துரையரசு அவர்ளே!
உமது மேற்கண்ட பின்னூட்டத்திலிருந்து இங்கு நான் மேற்கோள் காட்டியுள்ள அத்தனை விசயங்களும் இங்கு நடந்துதான் வருகின்றன. அதாவது சமஸ்கிருத புத்தகங்கள் முதல் ஆராய்ச்சி வரை அத்துனை கரும காரியங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.அதுவும் நாம் வரியாகச் செலுத்தும் தொகையிலிருந்து அரசாங்கத்தால் ‘சமஸ்கிருத வளர்ச்சி நிதி’ என்னும் பேரில் அனைத்து மாநிலங்களூக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன.
இதில் பிரச்சினை என்னவென்றால், நம்முடைய வரிப்பணத்திலிருந்து அரசாங்கத்தால் அவர்களுக்க்கு அளிக்கப்படும் பெருந்தொகையினைப் பயன்படுத்தி சமஸ்கிருதத்தையும் தன்னையும் பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொள்ளும் அம்பிகள், அந்த மந்திரங்களையும் இன்னபிற இத்தியாதிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதில்லை. என்பதுதான்.
///இதற்கு ஒரு ஆன்மீக முடிச்சுப் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
சமஸ்கிருதம் மோசமான மொழி என்று சொல்வதும் சரியல்ல,
நமது குழந்தை நமக்கு அழகு என்பதால் பக்கத்து வீட்டுக் குழந்தை அசிங்கமல்ல.////
சமஸ்கிருதத்தோடு ஆன்மீகத்தை முடிச்சுப் போட்டுவைத்து அதனை இன்றுவரை பாதுகாத்து வருவது யார் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
எமது தாய் மொழியான தமிழ்மொழியினை ‘நீஷ பாஷை’ என்றும் எமது உழைப்பாளிமக்களை ‘வேசி மகன்’ என்றும் மொழியின் பெயரால்தான் கீழ்மைப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றது. அதனை எழுதிவைத்து இன்று வரை அதனையும் பாதுகாப்பாக பராமரித்தும் வருகிறார்கள்.
என்னை நோக்கி மொழியின் பெயராலோ அல்லது சாதியின் பெயராலோ இழிவாகப் பேசும் பார்ப்பனர்களை விமர்சிப்பது ஏதோ பெருங்குற்றம் போல பார்க்கப்படுவது கொடுமை.
சமஸ்கிருதத்தைத் தவிர வேறு எந்த ஒரு மொழியும் வேற்று மொழி பேசுபவரை இழிவாகப் பேசியது, நடத்தியது கிடையாது. சமஸ்கிருதம் மீதான இத்தகைய எமது சாதாரண எதிர்விணையானது பல தலைமுறைக்கால வலியின் வெளிப்பாடுதான்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com
‘புறம்போக்கு’ அவர்களின் புலம்பலைப்பற்றி என்ன சொல்வது!!!!!
ஒருவேளை அவர் முற்போக்கு முகாமின் பிரதிநிதியாக இருப்பாரோ!!
ஏனென்றால் இரண்டுக்கும் ஓரிரு வார்த்தைகள் தானே வேறுபடுகின்றன.
பாரதிக்கு அடிமையானவன் பார்ப்பனீயத்துக்கு அடிமையானவனாகத்தான் இருக்க முடியும். பாரதியின் பிறப்புகுறித்து நமக்கு என்றுமே பிரச்சினை இருந்ததில்லை. அவனுடைய கேவலமான பார்ப்பன மயமான வாழ்க்கை கூட நமக்குப் பிரச்சினையில்லை, மாறாக நமக்கு நெருடலை எப்போதும் ஏற்படுத்துவது நமது ‘புறம்போக்கு’ போன்ற பாரதி அடிமைகள்தான்.
பாரதியைப்பற்றி விவாதிப்பதற்கு முன்னால் இதே தளத்தில் இருக்கும், தோழர் மதிமாறனின் பாரதீய ஜனதா பார்ட்டி புத்தக இணைப்பை படித்து விட்டு விவாதிக்க வாருங்கள் நண்பர் ‘புறம்போக்கு’ அவர்களே!
விவாதத்தை எப்படி வேண்டுமானாலும் தொடரலாம்…
தோழமையுடன்,
ஏகலைவன்.
வாருங்கள் புறம்போக்கு (உங்கள் உன்மையான பெயர் தெரியாததால் உங்களை இப்படி அழைக்கிறேன். மன்னிக்கவும்),
பாரதியின் மேல் வைக்கிற விமர்சனங்களுக்கு வருந்தி ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள். நல்லது. உங்கள் பின்னூட்டத்துக்கு முழுமையாக பதில் சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்காவது பதில் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன்.
தமிழறிஞர் நன்னன் அவர்கள் அடிக்கடி ஒன்றைச் சொல்லுவார். ஒரு சொல் ஒரு செய்யுளிலோ, கவிதையிலோ எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகிறதோ அதுதான் அதன் உன்மையான பொருள் என்று. பாரதி விஷயமும் அதேதான்.
பாரதி என்கிற ஆளுமை எதை மனதிலே நிறுத்தி தன் எழுத்துக்களில் கொண்டுவந்ததோ அதுதான் அந்த ஆளுமையினுடைய சுய உருவம். மதிமாறன் போன்றவர்கள் அந்த உருவத்தைத்தான் இப்போது வெளியில் கொண்டுவருகிறார்கள்.
தான் பிறந்த சமூகத்தையே சாடியவன் பாரதி என்கிறீர்கள், அப்படியென்றால் அவருடைய கொடும்பாவியை அவர் பிறந்த சமூகத்தில் பிறந்தவர்களே கொளுத்தியிருக்க வேண்டுமல்லவா? ஏன் கொளுத்தவில்லை? எதனால் அவர்கள் பாரதியை கொண்டாடுகிறார்கள்? எதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாரதி வேஷம் போட்டு அழகு பார்க்கிறார்கள்? இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள். என்ன பதில் வருகிறதோ அதையும் இங்கே பின்னூட்டமாக எழுதுங்கள்.
பாரதியைக் குறித்து பாரதிதாசன் சொன்னதையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நல்லது. ஒரு உதாரணத்தோடு சொன்னால் நீங்கள் விளங்கிக்கொள்ள வசதியாக இருக்கும். சங்கராச்சாரியை கைது செய்தது பார்ப்பனரான ஜெயலலிதாதானே. ஆனால், அடுத்து வந்த தேர்தலில் பிராமணர்கள் அதிகம் வசிக்கிற மைலாப்பூரில் ஜெயித்தது யார்? எஸ்.வி.சேகர் என்ற அ.தி.மு.க. வேட்பாளர்தானே. எவ்வாறு சாத்தியமானது இந்த வெற்றி? நிறுத்தப்பட்ட வேட்பாளரும், அவருடைய கட்சித் தலைவரும் பிராமணர் என்கிற அபிமானத்தால்தானே இந்த வெற்றி சாத்தியமாயிற்று.
அதே போலதான் கவிதை என்கிற தளத்தில் கனகசுப்புரத்தினம் (பாரதிதாசன்) பாரதியின் அபிமானி. அபிமானிகளிடமிருந்து உன்மையான விமர்சனங்களை எதிர்பார்க்க முடியாது. அப்படி பாரதியின் கருத்துக்கள் முழுமையும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்றால் பாரதிதாசனும் பாரதியை அடியொற்றி எழுதியிருக்க வேண்டுமே, ஏன் அவ்வாறு எழுதவில்லை?
மதிமாறன் அவர்களைப் போன்றே நீங்களும் பாரதி இயலில் ஆராய்ந்து பாருங்கள். அதற்கான முடிவுகளுடன் வெளியே வாருங்கள். அப்போது ”நான் பாரதியின் அபிமானியாகத் தொடர வேண்டுமா?” என்ற சிந்தனை உங்களுக்கே வரும்.
VANAKKAM…..
PACHAI THAMIZHAN kaddurai arumai……
VAZHTHUGAL….
m.khathiravan
mumbai
நண்பர் ஏகலைவன் அவர்களே,
நீங்கள் சொல்லும் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். நான் சமஸ்கிருதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் முடிச்சுப்போடுவதாகக் குற்றம் சாட்டுவது பிராமணீயத்தை நோக்கித்தான். விமர்சகர்களை நோக்கியல்ல.
சமஸ்கிருதத்தைப் புத்தகத்தில் வளர்க்க நமது பணத்தை இவர்கள் பயன்படுத்துவது அநாகரீகம். யார் யாரெல்லாம் சமஸ்கிருதம் பேசுகிறார்களோ, எவருக்கெல்லாம் சமஸ்கிருதம் தாய்மொழியோ, அவர்களிடமிருந்து நிதி பெற்று அம்மொழியை உயிர்ப்பிக்கட்டும். நான் பேசும் தமிழை இழிவென்று சொல்லிக்கொண்டு என் காசைக் கொண்டு தேவ மொழி வளர்ப்பவர்களை என்ன திட்டினாலும் தகும். உங்கள் கருத்தில் முற்றாக உடன்படுகிறேன் நான்.
சமஸ்கிருத ஆராய்ச்சியாளர்கள் ஒரு நல்ல காரியம் செய்தால் நல்லது. அதாவது கோவில்களிலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஈமச் சடங்குகளிலும் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்களை மொழியாக்கம் செய்து நம்மிடம் வழங்கட்டும். அப்புறம் அந்தப் புனித வார்த்தைகளின் (“அதிர்வுகள்”வேறு) யோக்கியதை தெரிந்தபிறகு அதனை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைக்கலாம். ஆனால் எனது திடமான நம்பிக்கை என்னவென்றால் நாம் வாழும் காலத்தில் இதனை யாரும் செய்யத் துணிய மாட்டார்கள்.
புத்திர காமேஷ்டி யாகம் செய்துதான் ராமர் பிரான் பிறந்தார் என்று கதைகளில் படிக்கிறோம். அந்த யாகம் செய்வது எப்படி என்று யாராவது தமிழில் விளக்கினால் தேவ பாஷையின் பெருமையும் தேவர் குலப் பிறப்புகளின் பெருமையும் நன்கு விளங்கும்.
பார்ப்பனீயம் என்னும் அடக்குமுறைத் தத்துவத்தை எதிர்ப்பதை முற்றிலும் ஆதரிக்கிறேன். ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் பிறக்கும்போதே சூது வாதுடன், வஞ்ச எண்ணத்துடன் பிறக்கிறது என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிறப்பிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்¬ப் சேர்ந்தவன் வீட்டில் பிறக்கும் குழந்தை பிறக்கும்போதே இழிவானது என்கிறது இந்துமதம். நமது முற்போக்காளர்களில் பலர் அதேபோல பிறவியிலேயே ஒரு பிராமணன் கெட்டவன் என்று கூறுகிறார்கள். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
இவை இரண்டும் அறிவியல் பூர்வமான கருத்துக்கள்தானா? நான் சப்பை கட்டுவதற்காகவோ வேறு எந்த பலன்களுக்காகவோ பிராமணர்களை ஆதரிப்பதாக இந்தக் கருத்தைக் கருதிக் கொள்ள வேண்டாம். இதுகுறித்து விவாதிக்க வேண்டுகிறேன்.
“தான் பிறந்த சமூகத்தையே சாடியவன் பாரதி என்கிறீர்கள், அப்படியென்றால் அவருடைய கொடும்பாவியை அவர் பிறந்த சமூகத்தில் பிறந்தவர்களே கொளுத்தியிருக்க வேண்டுமல்லவா? ஏன் கொளுத்தவில்லை? எதனால் அவர்கள் பாரதியை கொண்டாடுகிறார்கள்? எதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாரதி வேஷம் போட்டு அழகு பார்க்கிறார்கள்? இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்” superng naaa…..
பாரதி குறித்த விமர்சனங்களுக்கு முறையாக பதிலேதும் இதுவரை சொல்லாமல்; விவாதிக்கச்சொல்லி பலமுறை வெளிப்படையாக அழைத்தும் பசப்பி ஓடிய ‘முற்போக்கு’ வேடதாரிகள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் இன்றுவரை பாரதியை கொஞ்சமும் வெட்கமின்றி உயர்த்திப்பேசுவதை நிறுத்தியதாகத் தெரியவில்லை.
தமுஎச என்கிற ஒரு கம்பெனி இருக்கிறது. அதன் பொதுச்செயலாளர் ச. தமிழ்ச்செல்வன் என்பவராகட்டும் அவ்வமைப்பைச்சார்ந்த மற்ற எழுத்தாளர்களாகட்டும், இதுவரை மதிமாறனுடைய ஆய்வு குறித்து ஏதேனும் ஒரு பதிலைச் சொல்லியிருப்பார்களா? இல்லை. ஆனால், சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த பாமகவின் எழுத்தாளர்சங்க துவக்க விழாவில் கலந்து கொண்ட ச. தமிழ்ச்செல்வன் முதலாக பாரதிகிருஷ்ணகுமார் வரை அனைவரும் பாரதி பாரதி என்று கூப்பாடு போட்டது ஏன்?
இவர்கள் உண்மையாக பாரதியை வரித்துக் கொண்டு செயல்படுபவராக இருந்தால், பாரதியைப் பற்றி ஒரு கடுமையான விமர்சனம் வெளியாகி எட்டாண்டுகள் ஆகிவிட்டது. அவ்விமர்சனம் பாரதி என்கிற பொய்மூட்டையின் முடிச்சுகளை அவிழ்த்து அனைவருக்கும் திறந்து காட்டியிருக்கிறது. அதற்கு யோக்கியமான ஒரு பதிலைச் சொல்ல வக்கற்ற இக்கும்பலுக்கும், குஷ்புவுக்கு கோயில் கட்டி கும்பாவிஷேகம் செய்து வழிபடும் கூட்டத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
அவ்வளவு ஏன், ரஜினியின் சுவரொட்டிக்கு பாலூற்றி அபிசேகம் செய்யும் ரசிகன் கூட ரஜினிக்காக உயிரைக் கொடுப்பேன் என்கிறான். அது கண்மூடித்தனமானதாகவும் அவலமாகவும் இருப்பினும்; அவர்களுக்கிருக்கும் அந்த குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல், பாரதிக்காக ஒரு மயிரைக் கூட இழக்க விரும்பாத கூட்டம், அவன் புகழ்பாடி பவனி வருவது எவ்வளவு கேவலமானது என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
மேடைக்கு மேடை தன்னைத்தானே எழுத்தாளன் படைப்பாளி அது இதுன்னெல்லாம் பீற்றிக் கொள்ளும் இந்த ‘முற்போக்கு’ கும்பல் பாரதி பற்றிய மதிமாறனின் மதிப்பீடுகளுக்கு ஏதாவது ஒரு பதிலை இன்று வரை எழுதியிருக்கிறார்களா என்று யாரேனும் அவர்களைப் பார்த்து கேட்டுப் பாருங்களேன். பதிலேதும் கிடைக்கிறதா பார்ப்போம்.
********************************************************************************
அவ்வகையில் நண்பர் துரையரசு அவர்கள், அந்த முற்போக்கு கும்பலைப் போல் இல்லாமல், விவாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தோடு செயல்படுகிறார். அதற்கு எனது பாராட்டுக்கள்.
நண்பர் துரையரசு அவர்களே, தோழர் மதிமாறனுடைய இன்ன பிற கட்டுரைகளையும் படித்துப் பார்க்கவும், எல்லாவற்றிலும் இருக்கும் உமது கருத்து முரண்பாடுகளைத் தொகுத்து விவாதிக்க வந்தால் நாம் நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடர முடியும் என்று கருதுகிறேன்.
இன்றைய பார்ப்பனீயம் சற்று வித்தியாசமானது. நவீனப்படுத்தப்பட்ட பார்ப்பனீயம் அது, அய்யா ‘பெரியார் அடித்த அடியிலே அரண்டு’, ‘பிடித்த பிடியிலே பிதுங்கி’ வேறு வழியின்றித் தவித்த பார்ப்பன கூட்டம், இப்போது இந்து மதம், தேசபக்தி என்கிற போர்வைகளுக்குள் ஒளிந்து கொண்டு மீண்டும் ஒரு முறை இச்சமூகத்தை வலையவரத் திட்டமிட்டுள்ளது.
அவற்றை எப்படி முறியடிக்கப் போகிறோம் என்கிற நோக்கில் இனி விவாதங்களைத் தொடரலாம் நண்பரே!
தோழமையுடன்,
ஏகலைவன்.
‘இதற்கு பதில் கிடைக்குமா?/ @purambokku.
kidaikkum.
நானும் பதில் சொல்கிறேன்.
பாரதிக்கு இருமுகங்கள் உண்டு. ஒன்று சமுகம். மற்றொன்று பார்ப்பனரிஇயம்.
முதல் முகத்தை வெளிக்காட்ட ‘ஜாதிகள் இல்லையடி’ பாப்பா.
இரண்டாவதைக் காட்டிக்கொள்ள
‘ஈனப்பரையர்கள்/ புலையர்கள், வேதம் தெரிந்தவன் பாப்பான், பெயஅரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள், சமஸ்கிருதம் தேவ பாசை ‘ போன்ற வார்த்தைகள்.
இவ்வாறு இரட்டை வேடம் போட்டவர் பாரதி.
எது உண்மை? எது பொய்?
ஏகலைவனுக்கு: ஆர்.எஸ்.எஸ் உட்பட பல அமைப்புகள் சம்ஸ்கிருதத்தினை அனவைருக்கும் கற்பிக்கின்றன. இதில்
சாதி,மத,பாலின பாகுபாடில்லை. சேர்ந்து நீங்களும் பலன்
பெறலாம். சம்ஸ்கிருத்தத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவது
சரியே.அது போல் பாலி,பிராக்ருத்ம் போன்றவற்றிற்கு நிதி
ஒதுக்கப்படுகிறது. இவை பழங்கால மொழிகள் என்ற அளவில்
சிறப்பு கவனம் பெற வேண்டியவை.அதைத்தான் செய்கிறார்கள்.