கமல்ஹாசனின் வைணவப் பகுத்தறிவு

நடிகர் கமலஹாசன் உண்மையில் நாத்திகரா? இல்லை நாத்திகர் போல் நடிக்கிறாரா?

-மதன், சென்னை

ஒரு கம்யூனிஸ்ட் அல்லது ஒரு முற்போக்காளன் நாத்திகனாக இருக்க வேண்டியது கட்டாயம்; ஆனால் நாத்திகனாக இருப்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்டாகவோ, முற்போக்காளராகவோதான் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது தவறு.

தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிற பெரிய நிறுவனத்தின் முதலாளி, நாத்திகனாக இருக்கலாம். ஆனால், அவர் முற்போக்காளன் கிடையாது. ‘கடவுள் இல்லை’ என்பது ஒரு அறிவியல். அந்த அறிவியலை புரிந்தவர்கள். புரியாதவர்கள். அவ்வளவுதான்.

‘கமலஹாசன் நாத்திகரா?’ என்று கேட்டு இருக்கிறீர்கள்.

‘கமஹாசன்’ அல்ல; ‘கமல்ஹாசன்’ என்பதுதான் சரியானது. 90களுக்கு முன்புவரைதான் அவர் கமஹாசன் (KAMLAHASAN). அதன் பிறகு அவர் கமல்ஹாசன் (KAMALHASAN).

எந்த எண் ஜோதிடனை கேட்டு இந்த ‘நாத்திகர்’ தன் பெயரில் இருந்த A வை நீக்கினாரோ தெரியாது.

‘கமலஹாசன் உண்மையில் நாத்திகரா?’இந்தக் கேள்வியை நீங்கள் கமலிடமே கேட்டிருந்தால், அவர் நாயகன் திரைப்படத்தில்,“தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா?” என்று கேட்ட பேரனை பார்த்து, “தெரியலையேப்பா…” என்று ‘தெளிவாக’ பதில் சொன்னாரே…அதுபோன்ற வசனத்தைதான் பதிலாக அளிப்பார்.

அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கண்டிப்பாக இந்து மதத்தின் ஒரு பிரிவான அய்யங்கார்கள் கடைப்பிடிக்கும் வைணவத்தின் மீதும் அதன் சடங்குகள், வழக்கங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது. அதை அவருடைய படங்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார். அவர் விஸ்பரூபமாக எடுத்து நின்ற ‘தசவதாரம்’ அதைத்தான் ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது.

சரி, இப்ப நீங்களே சொல்லுங்கள், கமல்ஹாசன் நாத்திகரா? ஆத்திகரா?

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2010 நவம்பர் மாத இதழில்  வாசகர் கேள்விக்கு எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

கமல்ஹாசன் பிராமணர் என்பதாலா…..

தசாவதாரம்

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

ஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

24 thoughts on “கமல்ஹாசனின் வைணவப் பகுத்தறிவு

  1. கமலஹாசன் [எ] கமல்ஹாசன் அவர் விருப்பம் போல பெயரை வைத்துக் கொள்ளலாம். அதற்க்கு அவர் என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லலாம், [மற்றவர்கள் அழைப்பதற்கு வசதியாக உள்ளது என்பது போல]. பெயரை மாற்றியவன் எல்லோரும் நியூமராலாஜி மீது நம்பிக்கை உள்ளவன் என்று முத்திரை குத்திவிட முடியாது. மேலும் அவர் பல்வேறு விதமான பாத்திரங்களில் நடித்துள்ளார். திருடன், கொலை காரனாகவும் கூட நடித்துள்ளார். அதை வைத்து அவருக்கு அந்த புத்திதான் என்று சொல்ல முடியுமா? அதே போல தசாவதாரம் படத்தில் கதிக்குத் தேவைப் பட்ட பாத்திரம், அதைச் சிறப்பாகச் செய்தார் அவ்வளவுதான், நடிப்பு அவருக்கு தொழில், அதை வைத்து ஆத்திகன் என்று எப்படிச் சொல்ல முடியும்? //இந்து மதத்தின் ஒரு பிரிவான அய்யங்கார்கள் கடைப்பிடிக்கும் வைணவத்தின் மீதும் அதன் சடங்குகள், வழக்கங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது.// சரி இருந்தா என்ன தப்பு? மற்றவர்கள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக அவர் அவற்றை எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். மஞ்சள் துண்டு போட்டுக் கொண்டு மசூதிக்கு கஞ்சி குடிக்கப் போகும் ஒருத்தன் நான் நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு திரிகிறான், மகள் செய்தால் மட்டும் அவர் ஐயங்கார் ஆகி விடுவாரோ?

  2. //மகள் செய்தால் மட்டும் அவர் ஐயங்கார் ஆகி விடுவாரோ?// கமல் செய்தால் மட்டும் அவர் ஐயங்கார் ஆகி விடுவாரோ?
    //கதிக்குத் தேவைப் பட்ட பாத்திரம், அதைச் சிறப்பாகச் செய்தார்//கதைக்குத் தேவைப் பட்ட பாத்திரம், அதைச் சிறப்பாகச் செய்தார்.

  3. தங்கம் பத்திரிக்கை பற்றிய மேலதிக தகவல் இருந்தால் நன்றாக இருக்கும்.

  4. ஐய்யா ஜெயதேவ்,

    கமல் ஐயங்கார் புராணம் பாடுவது மீண்டும் கோகிலாவிலிருந்து தசாவதாரம் வரை தொடர்கிறது. “கதி”க்குத் தேவைப்படுகிறது என்கிற சாக்கு அவருக்கு சௌகரியமாக இருக்கிறது, தனது ஐயங்கார் ஜாதி அபிமானத்தை மறைக்கிற கேடயமாக.

  5. வைணவ பக்தர் திருச்சிக்காரனை ஆளையே காணோம்.

  6. அட, நம்மை நினவு கூறும் அன்பு சகோதரர் திரு. சிவராஜுக்கு உண்மையிலே நன்றி.

    ஆனால் நான் வைணவர் என்று எப்படி கணிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    நாமோ கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று கேட்கிறோம், அப்படி கேட்க வைணவத்தில் இடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதே நேரம் நாம் வைணவர்களை வெறுக்கவோ, இகழவோ இல்லை. அமைதியாக அவர்கள் வழிபாட்டை நடத்தும் வரையிலே நாம் அவர்களை குறை சொல்ல என்ன இருக்கிறது? ஆனால் பிற மதங்களை கண்டிக்கும், மறுக்கும் எந்த ஒரு மதமும் மத நல்லிணக்கத்துக்கு இடையூறே, அமைதிக்கு பாதிப்பே.

    மற்றபடி என்னைப் பொறுத்தவரையில் கமல்ஹாசனை எதிலுமே சேர்க்க முடியாது. திடீரென்று ஒரு நாள் கருப்ப சட்டை போட்டுக் கொண்டு நாத்தீகர்களைக் கட்டிப் பிடிப்பார். ஷூட்டிங்கில் பூஜை போடும்போது தீபாராதனை காட்டினால் அதை ஒத்திக் கொள்ள மாட்டார். சத்யராஜ் கூட என்ன நீங்க கூட தீபாராதனை ஒத்திக் கொள்ளாமல் என்பது போல் பார்த்தார். பூஜை போட்ட புரோகிதர் தயங்கிய படியே நின்றார். ஒத்திக் கொள்ளாமலே, போங்கள் என்று சொல்லி விட்டார். இதை எல்லாம் ஒரு டி .வி. நிகழ்ச்சியில் அவர்கள படத் துவக்க காட்சியை ஒளி பரப்பிய போது காண நேரிட்டது. தசாவதாரம் வெளியான போது, “நான் கடவுள் இல்லை என்று எப்போது சொன்னேன்” என்று கமல் கேட்டதாக பத்திரிகையில் படித்தத் நினைவு. எனவே கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் மறுப்பு என்பது கமலுக்கு அவர் முகத்திலே தாடியையும் , மீசையையும் வைப்பது போலவும் எடுப்பது போலவும் போல தான் தெரிகிறது. திடீரென மீசை தாடி வைக்கிறார், திடீரென எடுக்கிறார். அவ்வளவு எளிதாக கோட்பாடும் மாறுகிறது. பிரபலமானவர்களுக்கு பல கஷ்டங்கள். எனவே அவ்வப்போது கோட்பாட்டை மாற்றிக் கொள்வார்கள்.

    நம்மைப் போல அல்லது என்னைப் போல சாதரணமானவர் களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள இல்லை. பகுத்தறிவு அடிப்படையில் ஆராய்ந்து நாம் புரிதல் செய்தவற்றை எழுதலாம். நாம் அறிந்தவற்றில் உறுதியாக இருக்கறோம். நாம் புரிதல் செய்தது தவறு என்பது நிரூபணமானால் மாற்றிக் கொள்ளவும் தயார். ஆனால் முதலில் நாம் எடுத்த நிலைப்பாடும் பகுத்தறிவின் அடிப்படையிலே, பிறகு மாற்றிக் கொள்வதும் பகுத்தறிவு காரண, காரியத்தின் அடிப்படையிலே- சந்தர்ப்பத்துக்கு ஏற்றார் போல அல்ல.

    சகோதரர் சிவராஜ் அவர்களே, நம் தளத்துக்கும் வந்து கருத்து தெரிவிக்கலாமே, பல விவாதங்கள் நடக்கின்றன.

    நன்றி.

  7. //ஆனால் பிற மதங்களை கண்டிக்கும், மறுக்கும் எந்த ஒரு மதமும் மத நல்லிணக்கத்துக்கு இடையூறே, அமைதிக்கு பாதிப்பே.//

    The above statement is corrected below. Kindly read as follows

    பிற மதங்களின் வழிபாட்டு முறைகளின் மீது சகிபுத் தன்மை இல்லாமையை உருவாக்கும் எந்த ஒரு கோட்பாடும், தன மதம் மட்டுமே இருக்க வேண்டும் , பிற மதங்கள் எல்லாம் இல்லாமல் அழிய வேண்டும் என்று சொல்லும் எந்த ஒரு கோட்பாடும் மத நல்லிணக்கத்துக்கு இடையூறே, அமைதிக்கு பாதிப்பே.

  8. திரு. திருச்சிக்காரன் எழுத்தில் நிறைய மாற்றங்கள் தெரியுது. வாழ்த்துக்கள் திருச்சிக்காரன்.

  9. appadiye kalaignarin manja thunda enn endra kelviyum sethu pathil solla vendiyathuthaane../

  10. குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்குபவர் சிலர் இருக்கிறார்கள்,அதில் உங்களுக்கும் இடம் உண்டு,
    தான் மட்டும் தான் புரட்சியாக சிந்திப்பதாக எண்ணிக்கொண்டு மற்றவர்களை குறை கூறுவதே உங்களை போன்றவர்களுக்கு வேலையாகி விட்டது,எதையும் சந்தேகம் படுவதும் ந்ல்ல சிந்தனை யாகாது,

  11. ஐயங்கார் பாசம்.உங்களுக்கு தாழ்த்தபட்டவன் அல்லது தலீத் என்ற பாசமா,எல்லோரும் அவர் வாழ்க்கையில் அவர் அவர் வளர்ந்த சூழலின் பாதிப்பு இருக்கும்,கமல் அய்யங்காராக பிறந்ததால்,அவர் தன் படத்தின் கதாபாத்திரத்தில் அதை கதைக்கு ஏற்ப அதை வைக்கிறார்,ஆனால் அதற்காக அவர் அய்யங்கார் பாசம் என்று கூறி இழித்து கூறுவது சரியல்ல,அவர் ஒரு முழுமையான நாத்திகர் அதில் சந்தேகம் இல்லை,ஆமாம் விமர்சிக்கும் உங்களுக்கு கூட சாதி (உங்கள் சாதி)பாசம் பொங்கிவருகிறது,வளர்ந்த விதம் தானே,அதனால் தானே அம்பெதக்ர் புகழ் பரப்பும் செய்லாளராக இருக்கிறீர்கள்,

  12. நீங்கள் உயர் வகுப்பிபிறந்து தீண்டாமையை எதிர்த்திருந்தால் அது தான் பாரட்டுக்குரியது,அம்பெத்கர் தீண்டாமையை எதிர்த்தார் என்பது ஆச்சரியம் அல்ல,காரணம் அவரே தலீத் இனத்தில் பிறந்தவர் தன் இன பிரச்சனையை அவர் பேசினார்,அதில் அச்சரியமோ,பாராட்டுவதற்கோ ஒன்றும் இல்லை,ஆனால் காந்தியடிகள் தீண்டாமையை எதிர்த்திருக்கிறார்.ம்கா கவி பாரதியார் சாதி தீண்டாமையை எதிர்த்திருக்கிறார்,தந்தை பெரியார் சாதி தீண்டாமையை எதிர்த்திருக்கிறார்,இவர்கள் தான் பாராட்டுக்குரியவர்கள்,

  13. உங்களது பல கட்டுரைகளில் பார்ப்பன எதிர்ப்பு இருக்கிறது,இதற்கு பெயர் என்ன?
    இது சாதி வெறி இல்லாமல் வேறு என்ன?சிந்தியுங்கள்,

  14. ஒருவன் தன்னுடைய இனத்தின் மேல் என்னும் பாசமில்லாமல் இருக்க முடியாது. ஒரு குழந்தை வாகணத்தில் அடிபட போகின்றது என்றால் அதை தடுக்க ஏறாளமானோர் முன்வருவர். ஆனால் ஒரு குருவிக்கோ, நாய்க்கோ சிலர்தான் முன் வருவார்கள்.

    அது இயற்கையான இனத்தின் பாசம். கமல் மீது தவறில்லை.

  15. //நீங்கள் உயர் வகுப்பிபிறந்து தீண்டாமையை எதிர்த்திருந்தால் அது தான் பாரட்டுக்குரியது,அம்பெத்கர் தீண்டாமையை எதிர்த்தார் என்பது ஆச்சரியம் அல்ல,காரணம் அவரே தலீத் இனத்தில் பிறந்தவர் தன் இன பிரச்சனையை அவர் பேசினார்,அதில் அச்சரியமோ,பாராட்டுவதற்கோ ஒன்றும் இல்லை,ஆனால் காந்தியடிகள் தீண்டாமையை எதிர்த்திருக்கிறார்.ம்கா கவி பாரதியார் சாதி தீண்டாமையை எதிர்த்திருக்கிறார்,தந்தை பெரியார் சாதி தீண்டாமையை எதிர்த்திருக்கிறார்,இவர்கள் தான் பாராட்டுக்குரியவர்கள்//

    ஆக உங்கள் வாதப்படி தாழ்த்தப்பட்டவன் சுயமரியாதையோடு இருக்கக் கூடாது? தாழ்த்தப்பட்டவனின் மரியாதை கூட ஆதிக்க சாதிக்காரன் போட்ட பிச்சையாகத் தான் இருக்க வேண்டும் என்கிறீர்கள். நல்லா இருக்குதே நீங்க சொல்ற லாஜிக்.

    ஒரு வாதத்துக்காகவே நீங்கள் சொல்வதை ஏற்கொண்டாலும், வேத மந்திரங்களை ஒரு பார்ப்பனன் அட்சர சுத்தமாக உச்சரிப்பதில் ஆச்சரியமில்லை. அதை ஒரு சூத்திரன் உச்சரிப்பதில் தான் இருக்கிறது சிறப்பு என்று எந்தப் பார்ப்பனனும் ஒப்புக் கொள்வதில்லையே? ஏன்.

    மதிமாறனை மிக இழிவான ஒரு சொல்லைச் சொல்லித் திட்ட முடியாத உங்கள் கோபம் தான் மேற்கண்ட வார்த்தைகளின் வழியாகத் தெரிகிறது.

    காலம் காலமாக அம்பேத்கர் தலித் மக்களுக்காக மட்டும் தான் பேசினார் என்ற பரப்புரை திட்டமிட்டுப் பரப்பப்பட்டுவருகிறது. அது அப்பட்டமான பொய். பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத அனைத்து சாதியினருக்காகவும் குரல் கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர்.

    காந்தியின் மீது நாங்கள் வைக்கிற மிகப் பெரும் குற்றச்சாட்டு இரட்டை வாக்குரிமையைத் தடுத்தார் என்பது தான். மிகச் சாமர்த்தியமாக இதை காந்தியவாதிகள் திசைதிருப்புவார்கள். தலித் என்ற காரணத்துக்காக அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக அவர்கள் காலமெல்லாம் ஒதுங்கியே இருப்பார்கள் என்ற புரட்டு தான் அது. உயிரை விட்டுடுவேன்னு மிரட்டி காந்தி இரட்டை வாக்குரிமையைத் தடுத்து ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அதைத் தடுத்து நிறுத்தியதால் இன்றைக்கு தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையே என்ன ஒற்றுமையா நிலவுகிறது?

    அது மட்டுமல்லாமல் நீங்கள் சொன்ன பட்டியலில் பாரதியார் அப்பட்டமான சுயசாதி அபிமானி, காந்தியார் தாழ்த்தப்பட்டவர்களைத் “தேவிடியா மவன்” என்று அழைப்பதற்கு புதிதாக ஒரு வார்த்தையையே கண்டு தந்தார். அரிசனம் – ராமகோபாலன் அண்ட் கம்பெனி இதையே “திருக்குலம்” என்று தூய தமிழில் பெயர்த்துச் சொல்லுகிறது. பெரியார் ஒருவர் தான் தன் சாதியைக் குறித்த பிரக்ஞையற்று இருந்தவர். இவர்கள் மூவருக்கும் ஒரே அளவுகோல் என்பது தான் இடிக்கிறது.

  16. தலித் பெருமக்களை திருக்குலம் என்று அழைத்தது ஆசார்யன் இராமானுசன் ,ராமகோபாலன் போன்ற சாதி வெறியர்கள் அல்லர்.பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே தலித் உடன்பிறப்புகளை மைசூர் மேல்கோட்டை கோயிலுக்குள் கூட்டிசென்றவர் இராமுனுசர்.சக மனுசனை என்ன சாதி என்று கேட்பது, நீ உன் தாயின் கற்பை சந்தேகிப்பதற்கு ஒப்பாகும் என்று சொன்ன ஆதி சீர்த்ருத்தவாதி.பெரியார் மற்றும் அம்பேத்கார் அன்பர்கள் கொஞ்சம் படிப்பது நல்லது.

  17. கமல்ஹாசன் அய்யங்கார் என்பதால் அவர்களுக்கோ, நாத்தீகர் என்றால் அவர்களுக்கோ எந்த விருப்பமோ வேட்கையோ இருக்க வாய்ப்பு இல்லை. அதற்கான முக்கிய காரணம் கமலின் தனி வழிவின் ஒழுக்கமின்மை. எப்படி கருணாநிதி அவர்கள் நிறைய பெண் தொடர்புகள் உடையவரோ, மனங்கள் பல புரிந்தவரோ, அதே போல கமலும் நிறைய பெண் தொடர்புகள், தோல்வி அடைந்த மனங்களும் கண்டிருக்கிறார். சொந்த வாழ்வில் ஒழுக்க கேடு இருப்பதனால், அவரை நீங்கள் திட்டி தீர்ப்பதில், ஐயங்கார்களும், நாத்தீர்களும் மகிழ்ச்சியே அடைகிறார்கள்.

  18. Dasaavadharathukku munnadi “Anbe Sivam” , “PammalKSambantham”thula Sivan vesham, “Salangai Oliyila” siva thaandavam ellam nallathane pannaru..avara oru nadigana mattum paarunga oru madha guruva paakkaatheenga.

Leave a Reply

%d bloggers like this: