அழகி..!?
அழகி போட்டி நடைபெறுவது ஆரோக்கியமானதா?
-விஜயராகவன், திருச்சி
அழகிபோட்டி நடைபெறுவது ஆரோக்கியமானதுதான்; நமக்கல்ல. வர்த்தக நிறுவனங்களுக்கு.
ஒரு காலத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கொக்கோ கோலா, மீண்டும் இந்தியாவில் வர்த்தகம் நடத்த அனுமதிக்கப்பட்டபோது, இந்தியாவின் முதல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மிதா சென்னின் கையில் கொக்கோ கோலா பாட்டிலை கொடுத்து அனுப்பியது அந்த நிறுவனம். அவர்தான் அதற்கான மாடல்.
கோக்கின் போட்டி நிறுவனமான ‘பெப்சி’ பார்த்தது, ‘ இந்தியாவில உனக்குதான் அழகி கிடைப்பாளா? எனக்கு கிடைக்க மாட்டாளா?’ என்று அது ஒரு அழகி போட்டிய நடத்தி, ஐஸ்வர்யாராயை உலக அழகியாக தேர்ந்தேடுத்து, அவர் கையில பெப்சி பாட்டில கொடுத்து அனுப்பியது. அவர்தான் அதற்கான மாடல்.
அதுல இருந்து புடுச்சுது இந்தியாவ ‘அழகிகள் பிசாசு’.
நம் மக்கள் மீது பன்னாட்டு நிறுவனங்கள் என்கிற மந்திரவாதிகள் ஏவி விட்டு இருக்கிற இந்த பிசாசுகளை அடித்து ஓட்டுவதற்கும், மந்திரவாதிகளை ஓட ஓட விரட்டுவதற்கும் தலைவர் லெனினை போல் ஒரு பூசாரி வேண்டும். ஆனால், நமக்கு கிடைச்ச தலைவர்களோ மந்திரவாதிகளுக்கு கூட்டாளிகளான ஜார் மன்னர்கள்தான்.
***
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
ennayya idhu….? pappan parpanarnnu vaarthe illama uppu sappu illatha pathivu ….
அமெர்க்க நுகர்வு கலாச்சாரம் நம் நாட்டிலுள்ள பெண்களை எப்படி பிடித்து ஆட்டுகிறது என்பதை எளிமையாய் விளக்கும் பதிவு.
‘இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள‘ என்ற எம்.ஜி.ஆர் பாடல் பெண்ணடிமைத்தனத்துடன் இருந்தது. இன்றும் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று fair & lovely போன்ற முகப்பூச்சு நிறுவனங்கள் பெண்களுக்கு கற்பிக்கின்றன.
பெண்கள் தங்களை அழகு படுத்திக் கொள்வதே தவறா?
அழகு என்பதன் அர்த்தத்தை பெண்கள் எவ்வாறு கற்பிதம் செய்து கொள்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டு விட்டு பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள். சரியா தவறா என்று!
புதுசா இருக்கே