Site icon வே. மதிமாறன்

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

வச்சக் குறி தப்பாது, நிச்சயம் தமிழன் பாக்கெட்டை பதம் பார்க்கும்

மூவரின் தூக்கிற்கு எதிராக தமிழக அரசின் சட்டசபை தீர்மானத்தை பலர் எதிர்பார்க்கவில்லை. ஏன் தமிழகரசே கூட எதிர்பார்க்கவில்லை.

மூவரின் மரண தண்டனைக்கு எதிராக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான அறிகுறிகளை, அதற்கு முதல்நாள் வரை ஜெயா டிவியிலோ, அதிமுக பிரமுகர்களிடத்திலோகூட பார்க்க முடியவில்லை.

தா. பாண்டியன் கூட, ‘மூவரையும் சோனியா காந்திதான் காப்பாற்ற முடியும்’ என்று முதல்வரை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்தார்.

ஆனால், வழக்கறிஞர்களும். சட்டக்கல்லூரி மாணவர்களும், கலைக்கல்லூரி மாணவர்களும்  போர்க்குணத்தோடு போராடி தமிழக முதல்வர் இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டுவர காரணமாக இருந்தனர்.

அம்மா இப்படி ஆதரவா தீர்மானம் கொண்டு வருவாங்கன்னு தெரிஞ்சிருந்தா, அன்னா அசாரே உண்ணாவிரதத்திற்கு டெல்லிபோய் வாழ்த்திட்டு வந்த நம்ம இளைய தளபதி விஜயும், ஈழ சம்பந்தி எஸ். ஏ. சந்திரசேகரும்; வழக்கறிஞர்கள் உண்ணாவிரத பந்தலில் முதல்நாளே வந்து உக்காந்து இருப்பாங்க. நம்மளும் இளைய தளபதி முகத்துல வழியற தமிழ் உணர்வை கிட்ட இருந்து பாத்து இருக்கலாம். என்ன பண்றது? 

JUST MISS.

பரவாயில்லை அதனால் என்ன? நமக்குத்தான் இளைய தளபதியோடோ வேலாயுதம் படம் ரிலீசாக போகுதே, பட்டைய கிளம்புவோம்.

புலம் பெயர்ந்த தமிழர்களே, தமிழக தமிழர்களே இனி நமக்கு தூக்கு தண்டனை ரத்தாகுமா என்பதைவிடவும் வேலாயுதம் படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா என்பதே கவலைக்குரியதாக இருக்கும்.

அப்புறம் என்ன, குடும்பம் குடும்பமா கிளம்பி போய் படத்த பாருங்க. தமிழ் சமூகம் நல்லா வௌங்கும்.

தொடர்புடையவை:

செப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு

அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, முதல்வருக்கு விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

சிவாஜிக்கு பிறகு வசனம் பேசுவதில் கில்லாடி..

செப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு

Exit mobile version