அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, முதல்வருக்கு விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்குமான தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் முதல்வருக்குத்தான் உண்டு. அதனால் அவர்களை காப்பாற்றுமாறு வழக்கறிஞர்கள் உட்பட பலர் தமிழக முதவரிடம் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், ‘3 பேர் தூக்கு தண்டனையை நிறுத்த முதல்- அமைச்சருக்கு அதிகாரம் இல்லை’ என்று முதல்வர் மறுத்திருக்கிறார்.
‘இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுதர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்` என்ற தீர்மானத்தை சட்டசபையில் நிறேவேற்றிய அதே முதல்வர்தான் இதை அறிவித்திருக்கிறார்.
உண்மையில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குத்தான் முதல்வருக்கு அதிகாரம் இல்லை அல்லது அந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை.
பேரறிவாளன், முருகன், சாந்தன் இந்த மூவரின் தூக்கை நிறுத்தி வைக்கும் அதிகாரம் மாநில சட்டசபைக்கு உண்டு.
முதல்வரின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட, ’இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுதர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர்,
தன் அதிகாரத்திற்கு உட்பட்ட, 3 பேர் தூக்கு தண்டனையை நிறுத்த மறுக்கிறார்.
முதல்வரின் இந்த நடவடிக்கை தங்கபாலு, பொன்.ராதாகிருஷ்ணன், சுப்பிரமணிய சுவாமி, எஸ்.வி. சேகர், சோ போன்றவர்களுக்கு ஆதரவாகவும்; மனிதர்களுக்கு அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது.
தொடர்புடையவை:
The same stand applies to Mr.Karunanthi, When he was in power.
நான் கூட ரொம்ப ஃபீல் பண்ணேன். கொலைகாரர்களுக்கு மன்னிப்புத் தராத பதவியும் ஒரு பதவியா? அதைத் தூக்கி எறிய வேண்டாம்?
மூன்று பேரின் தூக்கு 8 வாரங்களுக்கு இடைக்கால தடை. மூவருக்கு மக்களின் ஆதரவும் அதற்கான மக்களின் போராட்டமும், நேற்று அதிகாரம் இல்லையென்று பேசிய ஜெயாவை இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தது. இதிலிருந்து பாடம் பெற்றுக்கொண்டு அரசியல் வாதிகளை நம்பாமல் மக்களின் போராட்டத்தை இனியாவது நம் மக்களும் மக்களை மயக்கும் தலைவர்களும் நம்பட்டும்.
எல்லா விவகாரத்திலும் ஒரு எதிர்கட்சியை உருவாக்கிக் கொள்ளுவது சரியல்ல…
ரொம்பவே வடித்தெரிச்சலை கொட்டிக்கராங்க இந்த காங்கிரஸ் காரங்க
//நான் கூட ரொம்ப ஃபீல் பண்ணேன். கொலைகாரர்களுக்கு மன்னிப்புத் தராத பதவியும் ஒரு பதவியா? அதைத் தூக்கி எறிய வேண்டாம்?//
சங்கரராம ஐயரைக் கொன்ற ஜெயேந்திரன் அலையஸ் இருள்நீக்கி சுப்ரமணிய ஐயருக்குக் தூக்கு தண்டனை குடுத்தா கூட அதை எதிர்க்கிற நேர்மையான பார்ப்பணராக நம்ம ஜவகர் இருப்பார் என்று நம்புவோம்.
தூக்கு தண்டணையிலிருந்து விலக்கு கொடுத்தால் என்று முந்தைய பின்னூட்டத்தில் மாத்தி படிக்கவும்.
// Jawahar (12:06:07) :
நான் கூட ரொம்ப ஃபீல் பண்ணேன். கொலைகாரர்களுக்கு மன்னிப்புத் தராத பதவியும் ஒரு பதவியா? அதைத் தூக்கி எறிய வேண்டாம்? //
சிங்களர்களுடன் கூட்டு சேர்ந்து ராஜீவால், தமிழனின் அடக்கி ஒடுக்கப்பட்ட ஈழ வரலாற்றையும், தமிழ் மக்களின் தன்மானமும், உயிரும் மிதித்து எறியப்பட்ட வரலாற்றையும், தமிழ் இன பெண்களின் கற்ப்பு கிழித்து எறியப்பட்ட வரலாற்றையும் ஒரு முறை படித்துவிட்டுவந்து கருத்து தெரிவிக்கவும் நண்பரே ஜவகர்.!
தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?
http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_5747.html
பார்பன பக்கிகளின் குரல் ஒரே மாதிரி கூக்குரலிடுகிறது. ஆனால் ஜெயேந்திரனின் வழக்கில் மட்டும் வாய்திறக்க மாறுகிறது.
பார்பன பக்கிகளின் குரல் ஒரே மாதிரி கூக்குரலிடுகிறது. ஆனால் ஜெயேந்திரனின் வழக்கில் மட்டும் வாய்திறக்க மறுக்கிறது.
முருகன் உள்ளிட்டோருக்கு தவறான தீர்ப்பு வழங்கியமையை திருத்தி, உண்மையை வெளிக் கொண்டுவருவதில் கருத்து வேறுபாடில்லை. மூன்று மாணவகளை உயிரோடு எரித்துக் கொன்றவர்களுக்கும் கருணையா எம் நண்பர்களே!. செங்கொடி மட்டும்தான் நம் உறவா. ஜெயலலிதாவிற்கு தீர்ப்பினை தவறாக வழங்கியமை காரணம் காட்டி எரிக்கப்பட்ட கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோரும் நம் உறவுகள்தானே. ஒட்டுமொத்தமாக தூக்கினை ரத்து செய்யும் போராட்டத்திற்கு முன் சற்று சிந்தியுங்கள்.
makkal poratthinal marunal paninthar thamizhaga muthelvar.