Site icon வே. மதிமாறன்

முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)

முல்லைப் பெரியாறில் மலையாளிகளோடும், காவிரி நதிநீரில் கன்னடர்களோடும் சண்டை. இந்த ஆறுகளால் பண்ணையார்களாய், நில உடமையாளர்களாய் இருக்கிற ஆதிக்க ஜாதிக்காரர்களுக்குத்தான் பாதிப்பு. நிலமற்ற தலித்துளுக்கு என்ன பாதிப்பு?

-நிலவன்

இரண்டு ஆறுகளிலும் தமிழகத்த்திற்கு தண்ணீர் வராமல் இருந்தால், மூப்பனார், வாண்டையார், நாயக்கர், தேவர் போன்ற நில உடமையாளர்களுக்கு பிரச்சினைதான். விவசாயம் பொய்த்துப் போகும். அதனால், பண்ணையார்கள் யாரும் பட்டினியால் சாகமாட்டார்கள். உக்காந்து சாப்பிடுவதற்கு தலைமுறைக்கும் சொத்து இருக்கிறது அவர்களுக்கு.

அதுவும் மீறினால், நிலத்தை விற்று விட்டு தொழில் அதிபர்களாக மாறிவிடுவார்கள்.

ஆனால், பட்டினிச் சாவுக்கு பலியாகும் உயிர்கள் கூலி விவசாயிகளாக இருக்கிற நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அவர்களைத்தான் பட்டினியைப் போக்க, எலிக்கறி சாப்பிடச் சொல்லி அரசு ஆலோசனை வழங்கும்.

நதிநீர் பிரச்சினை நில உடமையாளர்களுக்கு வாழ்வாதார பிரச்சினை என்றால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயிர் ஆதார பிரச்சினை.

நிலமற்ற மக்கள்தான் விவசாயம் பொய்த்தபோது, பிற மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்கப் போவார்கள். அவர்களில் அதிக எண்ணிக்கை உடையவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களே.

அது மட்டுமல்ல, எப்போதுமே பிற மாநிலங்களில் இனரீதியான தாக்குதலுக்கு உள்ளாகிற மக்கள் மிகப் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களே. மும்பையில் கூட ‘இந்தி பேசும் மாநிலத்தவர்கள்’ என்ற அடையாளத்தோடு, மராட்டிய சமூக விரோதிகளிடம் அடிவாங்கியவர்கள் பிகார் மாநில தலித் மக்களே.

சமூக விரோதிகளுக்கு எளிய மக்களை தாக்குவதுதான் எளிது. பிரச்சினை அற்றது. மாறாக வேறு இனத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்களையோ, அதிகாரிகளையோ தாக்க முடியாது. பணக்காரர்கள், உயர் வருவாய் உள்ளவர்கள் அந்த மாநில காவல் துறையின் பாதுகாப்போடு பத்திரமாக இருப்பார்கள்.

உதராணத்திற்கு, காவிரி நீர் பிரச்சினை வந்தபோதெல்லாம், கன்னட சமூக விரோதிகளால், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, பெங்களூரில் கூலிகளாகவும், தொழிலாளர்களாகவும் இருந்த தமிழர்கள்தான் தாக்கப்பட்டார்கள்.

பெங்களூரில் உயர் அதிகாரியாக வேலை பார்த்த  எழுத்தாளர் சுஜாதா ஒரு முறைகூட தாக்கப்படாமலேயே ஓய்வு பெற்று விட்டார்.

தொர்புடையவை:

‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்

வாழ்க புரட்சித் தலைவி! வாழ்க அச்சுதானந்தன்! – What a trick?

Exit mobile version