Site icon வே. மதிமாறன்

ஆமோகமான ஆப்பு; யாருக்கும் வெட்கம் இல்லை

‘மலடிகள் வாழத் தகுதியற்றவர்கள்’ – பிரேமலதா விஜயகாந்த்
‘உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும்’ எனறு தமிழக முதல்வரை பார்த்து, பிரேமலதா பேசிய வன்முறையான பேச்சு,

‘மலடி’ என்று மருமகளைத் துன்புறுத்துகிற மாமியாரின் பேச்சை விட இழிவானது. அதுகூட அறியாமையிலும் தன் மகன் மற்றும் குடும்ப வாரிசு ஏக்கத்திலும் வருகிற சொல்.

ஆனால் பிரேமலதாவின் பேச்சு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்களை வாழத் தகுதியற்றவர்களாகச் சித்திரிக்கிறது.

ஒரு முதல்வரையே இப்படிப் பார்க்கிறார் என்றால் சாமான்ய பெண்களை எவ்வளவு இழிவாக மோசமாகப் பார்ப்பார்.
இந்த லட்சணம் கொண்ட இவர், எதிர்க்கட்சியின் தலைவர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், குழுந்தைப் பெற்றுக் கொள்ள முடியாவர்களை எல்லாம் கொலை செய்துவிடுவார்கள் போலும்.

பாவம், இவருக்கு மருமகளாக வரப்போகிற பெண்களை நினைத்தால் மனம் பதறுகிறது.

ஒரு நொடிக்கு முன் பேசிய வார்த்தையைகூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் அடுத்த வார்த்தையைத் தொடர்பற்றுப் பயன்படுத்திக் கேட்பவனைக் கேலி செய்கிற, எவனுக்கும் புரியாத விஜயகாந்தின் பேச்சு; பிரேமலதா பேச்சை விடப் பல மடங்கு முற்போக்கானது.
ஏன் பிரேமலதா மீது அவதூறு வழக்குப் பதிவு செய்து சிறையில் வைக்கக்கூடாது? அதை ஏன் நாம் வலியுறுத்துக் கூடாது?
21 February at 13:54

’உனக்குக் குடும்பம் இல்லை அதனால் ஆண்களை மதிப்பதில்லை’ – ‘உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும்’
குடும்பமும் குழந்தையும் இருந்தால்தான் ஒரு பெண் முழுமையானவள் அன்பானவள் என்று பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

இதோ, இந்தப் பெண்ணுக்கு இணையாகக் குழந்தை பெற்ற ஒரு குடும்ப் பெண்ணை உங்களால் காட்ட முடியுமா?

இவரைப் பற்றிகூடத் தெரியாமல் பேசிய நீங்கள் தலைவராக அல்ல.. பெண்ணாகப் பேசுவதற்குக்கூட உரிமையில்லை.
22 February

யாருக்கும் வெட்கம் இல்லை

தேர்தல் அரசியல் எவ்வளவு இழிவான முறை என்பதை, ஒவ்வொரு தேர்தலின்போதும் அது தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொள்கிறது. நிரூபிக்கிறது.

தமிழகத்தில் கடந்த தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் அதைக் கூடுதலாக அம்பலப்படுத்துகிறது விஜயகாந்த் குடும்பத்தாரால் நடத்தப்படுகிற கட்சி.

‘வாரிசு அரசியல்’ நேரு குடும்பம் இந்த நாட்டுக்கு கற்றுக் கொடுத்த ‘தியாக’ மெத்தட். அதையே தூக்கி சாப்பிட்டு விட்டார் விஜயகாந்த். அரசியலுக்கு வரும்போதே பொண்டாட்டி, மச்சினன், கொழுந்தியா, மாமியார், சகலபாடி என்ற புதுபாணியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் நாட்டின் கடந்த 50 ஆண்டுகால அரசியலின் அடிப்படை. 1. இடஒதுக்கீடு, சிறுபான்மை மக்களின் உரிமையை உள்ளடக்கிய சமூகநீதி அரசியல். 2. மொழி உணர்வு.

இந்த இரண்டு பற்றியும் எந்தக் கருத்தும், பெயரளவிலான புரிதலும் கூட அந்தக் கட்சிக்கு இல்லை.
1 மணி நேர வித்தியாசத்தில் கூட்டணி பற்றி எந்தக் கட்சியோடும் பேச்சு நடத்துகிறார்.
கூட்டணி வைப்பதற்கு அரசியல் ரீதியாகப் பொதுப் பிரச்சினையில் என்ன நிபந்தனை என்பதைப் பெயரளவில் கூட எப்போதும் அறிவிக்க மறுக்கிறார். மிக வெளிப்படையாகத் தனக்கான முக்கியத்துவம் மட்டுமே அவரிடம் இருக்கிறது.

இந்தத் தேர்தல் அரசியலை முழு நிர்வாணமாக்கி அதை முச்சந்தியில் நிறுத்துகிறார்.
ஆனால், கூச்சமே இல்லாமல், அவரிடம் தான் கூட்டணி வைப்பதற்குக் காத்துக்கிடக்கிறது சமூகநீதியும், மொழி உணர்வும் நிரம்பிய கட்சியாகத் தன்னை அறிவித்துக் கொள்கிற திமுக.
விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதற்கு ஜெயலலிதாவுடனேயே கூட்டணி வைத்துக்கொள்ளலாம் கலைஞர். ஒட்டுமொத்தப் பிரச்சினையும் முடிவுக்கு வந்துடும்.

திமுகவும் சரியில்ல, அதிமுகவும் சரியில்ல மாற்று என்று முழுங்குகிறவர்கள் ‘உங்களை முதல்வராக்குகிறோம்’ என்று எந்தக் குற்ற உணர்வும், கூச்சமும் இல்லாமல் தைரியமாகக் கெஞ்சுகிறார்கள் தேமுதிக தலைமையிடம்.

விஜயகாந்தை முதல்வராக்குவோம் என்று அறிவித்த பிறகு இவர்களுக்கு பி.ஜே.பி யை எதிர்ப்பதற்குக் கூட குறைந்தபட்ச நேர்மை இல்லை.

கோமாளி என்கிறார்கள், விஜயகாந்தின் பேச்சைக் கேட்பவர்கள். அவரல்ல கோமாளி. இந்தத் தேர்தல் முறை எவ்வளவு கோமாளித்தனமாக இருக்கிறது என்று அம்பலப்படுத்தியிருக்கிறார் அந்தக் காரியக் கோமாளி. அந்த வகையில் அவரைப் பாராட்டிதான் ஆகவேண்டும்.
23 February at 21:27 ·

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், திமுக வை விட விஜயகாந்துக்கும் அவர் கட்சிக்கு தான் பிரச்சினை. ஆப்பு அமோகமா இருக்கும்.

அதனால், திமுக இப்படி அவரிடம் தொங்குவதை விட்டு விட்டால், அவராகவே திமுகக் கூட்டணிக்கு வருவார்

கூடுதல் சீட், துணை முதல்வர் பதவி இதெல்லாம் கொடுத்துதான் அவர கூட்டணிக்குச் சேர்ப்பதாக இருந்தால்,
இப்போதைய அதிமுக ஆட்சி நீங்கள் அமைக்கப்போகும் துணை முதல்வர் விஜயகாந்த் ஆட்சியை விடப் பல மடங்கு சிறப்பானது.

திமுக இன்று இருக்கும் நிலையோ அதை விடச் சுயமரியாதை உள்ளது. ஆப்பை தேடி போய்த் திமுக அடித்துக் கொள்வதற்குப் பதில், அம்மாவிடம் தோற்பதே அதுக்குப் பாதுகாப்பானது.

பெயரளவில் கூடச் சமூகப் பொறுப்பு இல்லாத தேமுதிகவிற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்தும்,
அதிமுக மற்றும் அம்மா மேல் தான் மரியாதையை ஏற்படுத்துகிறது.
25 February

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

Exit mobile version