Site icon வே. மதிமாறன்

தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு இல்லை- என் 10 தொகுதிகள் பயண அனுபவம்

என்னுடைய பிரச்சார பயண அனுபவத்தில் முதல் இடத்திற்கும் 2வது இடத்திற்கும் இடைவெளி நீண்டதாக இருக்கிறது.

இன்னும் நெருக்கிச் சொன்னால் உண்மையில் 2வது இடம் காலியாக இருக்கிறது.

அந்த இடத்தில்தான் ‘அதிமுக’ இருக்கிறது என்று சொல்வதைவிட ‘இரட்டை இலை’ இருக்கிறது என்பதே சரி. பாஜகவிற்கு 3 இடம்.

கிராம மக்களுக்கு பாஜகவையோ தாமரையையோ தெரியாது. தெரியவில்லை. அவர்களுக்குத் தளபதியின் 3 ஆண்டுகள் சாதனை, உதயசூரியன் மற்றும் இரட்டை இலை மட்டும்தான் தெரிந்திருக்கிறது.

பல கிராம மக்களுக்கு எடப்பாடியைக்கூடத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

என்னுடைய பிரச்சார முறை கொரோனா முதல் பாஜக+அதிமுக ஆட்சியின் சீரழிவிலிருந்து மீட்ட தளபதியின் மூன்றாண்டு சாதனையை எளிய மக்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பேசியதுதான். பெண்கள் கொண்டாடி வரவேற்றார்கள்.

தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு இல்லை. காரணம் பாஜகவைப் பலருக்கும் தெரியவே இல்லை.

ஊடகங்கள் பாணியில் சோசியல் மீடியா முறையில் நகர்புற அரசியல் தொனியில், தெரியாத பாஜகவைத் தெரியவைத்து பிறகு அதை எதிர்க்க வேண்டும் என்று பேசுவதை விட;

தெரிந்த திமுக ஆட்சியின் 3 ஆண்டுக்கால சாதனையை உயர்த்தி சொல்வதும் அதன் வழியாக அவர்களை அம்பலப்படுத்துவதும் முக்கியமானது.

பெண்களை மாதந்தோறும் திமுக அரசின் நலத்திட்டங்களின் பயனாளர்களாக ஆக்கியிருக்கிறார் தளபதி. முதல்வருக்கும் பெண்களுக்குமான பாசப்பிணைப்பு திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றியை ஓங்கி ஒலிக்கிறது.

கூட்டணிக்கட்சி தோழர்களிடமும் மேடையிலும் நேரிலும் இதைதான் வலியுறுத்தினேன்.

இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால், மோடி ஜெயித்தால் ரூபா 1000 கிடைக்காது. இலவச பேருந்து பயணம் இருக்காது. அதைப் பிடுங்கி விடுவார்கள் என்றால் மக்களே அவர்களை அசிங்கமாகத் திட்டி குரல் எழுப்புகிறார்கள்.

மாறாக மோடி தோற்று திமுக கூட்டணி ஆட்சியமைத்தால் ஆயிரம் இரண்டாயிரமாகும் நலத்திட்டங்கள் பெருகும் என்றால் பெண்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.

பாஜக+அதிமுகவிடம் ஏராளமான பணம் இருக்கிறது. அவர்கள் ஓட்டுக்கு அதிகம் பணம் தருவது மட்டுமல்ல, தொகுதியில் தன்னை எதிர்க்கிற கட்சிகளின் பொறுப்பாளர்களுக்கும் அதிக விலை பேசுவார்கள்.

அதை மக்களும் பொறுப்பாளர்களும் முறியடித்து டெபாசிட் தொகைகூட இல்லாமல் இந்தக் கள்ளக்கூட்டணியை விரட்டியப்பார்கள்வே. மதிமாறன்.

Exit mobile version