ஜாதிக்கு எதிரான, மதத்திற்கு எதிரான அரசியல் காரணங்கள் இல்லாமல், காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் மத வெறியர்களாக, ஜாதி வெறியார்களாக இருக்கிறார்கள்.
கணவன் என்ன ஜாதியோ அல்லது என்ன மதமோ அவனது அடையாளமே மனைவி மற்றும் குழந்தைகள் மீது வன்முறையாக திணிக்கப்படுகிறது.
குழந்தைகளின் ஜாதி அடையாளமாக கணவனின் ஜாதி அடையாளமும் அவனுது குடும்ப பழக்கமுமே கடைப்பிடிக்கப் படவேண்டும் என்று அடாவாடித்தனம் நிகழ்கிறது.இவைகளை ஒத்துக் கொள்ளாதபோது சண்டை, வன்முறை, விவாகரத்து போன்றவை ஏற்படுகிறது.
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களின் மத, ஜாதி அடையாளங்களை ஒழித்து, பொது அடையாளத்திற்கு அதாவது ஜாதி, மத எதிர்ப்பாளராக – பகுத்தறிவாளராக இருந்தால்தான் குழந்தைகளையும் சிறப்பாக வளர்க்க முடியும். காதலையும் காப்பாற்ற முடியும். காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இல்லையேல்…….
விரிவாக தெரிந்து கொள்ள, கீழ் உள்ள ஒலி சுட்டி……
பகுதி ஐந்து
12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு இருந்தது. அதன் இணைப்பையும் இதில் ஏற்கனவே கொடுத்திருந்தோம்.
‘தனித்தனி கேள்வி-பதில்களாக வெளியட்டால் இன்னும் நீங்கள் சொன்ன செய்திகள் ஆழமாக கேட்பவரை போய் சேரும். இன்னும் அதிகமானவர்கள் கேட்க முடியும்’ என்று நண்பர்கள் கேட்டுக்கொண்டதால், ஒலி வடிவப் பேட்டியை ஒவ்வொரு கேள்விகளாக வெளியிடுகிறோம்.
இந்தக் கேள்விகளை தனித்தனியாக சிறப்பான முறையில் தொகுத்து எடிட் செய்த நண்பர் ஸ்ரீதருக்கு நன்றி.
கேட்க விரும்பினால், கீழே உள்ள ஒலி சுட்டியை அழத்தவும்.
12.4.2009 அன்று எடுத்தப் பேட்டி.
-தொடரும்
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க
