ஸ்ரீ சங்கரபகவத்பாதரின் மறு அவதாரமாகப் போற்றி வணங்கப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ மகா ஸ்வாமிகளின் 116 ஆவது பிறந்தநாள் விழா 7-6-2009 அன்று மேன்மக்களால், பிறக்கும்போதே பிரம்மத்தை உணர்ந்தவர்களால், பிறக்கும்போதே மற்றவர்களைவிட உயர்வானவர்களாக பிறந்தவர்களால், பிறக்கும்போதே அறிவாளிகளாக பிறந்தவர்களால் பயபக்தியுடன் கொண்டாடப்பட்டது.
குருசேவா சங்கல்பஹேம்சி மாஜே பூர்ணதப
குருசேவை செய்வதே தவத்திற்கு முழுமை என்று வாழும் நமது காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர-விஜயேந்திர சுவாமிகளின் (எதுக்கு சிரிக்கிறேள்?) அருளாசியுடன் 108 வேத விற்பன்னர்களை கொண்டு மஹா ருத்ரஹோமம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு, மஹா ப்ரஸாதமும் வழங்கப்பட்டது.
மகா ஸ்வாமிகளின் மஹா தத்துவங்கள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது, ‘தீண்டாமை ஷேமகரமானது’ என்று அவர் சொன்னது. பெரியவாளின் இந்த சிறப்பான தத்துவத்தை மிக மோசமாக திட்டுபவர்களும் இருக்கிறார்கள்.
அதில் முக்கியமானவர்கள் இந்து மற்றும் நம்பளவாவோட ஜென்ம எதிரிகளான ராமசாமி நாய்க்கனோட ஆட்களும், இந்த அம்பேத்கரோட ஆட்களும்தான்.
அதேபோல் மகா ஸ்வாமிகளின் அற்புதங்கள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது காமராஜ் ஆட்சியில் மந்திரியாக இருந்த கக்கனை, நேரில் பார்த்தால் தீட்டாகிவிடும் என்பதால் அவருக்கு குறுக்கே பசுமாட்டை நிறுத்தி கக்கனுக்கு தரிசனம் தந்நது.
மகா ஸ்வாமிகளுக்கும் அவருடைய சீடர் நம்முடைய இப்போதைய பெரியவா ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கும் ஒரு சின்ன வேறுபாடு உண்டு. பெரியவா பிராமணப் பெண்ணாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கணவனை இழந்த பெண்களை சந்திக்க மாட்டர். அது அபசகுனம் அல்லது தீட்டாகிவிடும் என்பதே காரணம்.
ஆனால், அவருடைய சீடர் வாழும் கடவுளான நம்முடைய ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்குப் பிராமண விதவைப் பெண்கள் என்றால் அவ்வளவு இஷ்டம். மிகுந்த அன்பாக இருப்பார்.
நம்ம மஹா ஸ்வாமிகள் வெளிநாட்டுக்காரர்கள் கிட்டேயும் பல அற்புதங்கள் பண்ணியிருக்கா. அப்படித்தான் ஒரு முறை, பால் பிராண்ட் என்கிற ஒரு வெள்ளைகாரர், சுவாமிகளைப் பார்க்க வந்திருந்தார்.(கக்கனுககுக் குறுக்கால பசு மாட்டை நிறுத்தியது போல், ஸ்வாமிகள் வெள்ளைக்காரருக்கு குறுக்கால மாட்டை நிறுத்தல)
அந்த பரவசத்தை பால் பிராண்டே எழுதிருக்கிறார்:
“காஞ்சி பெரியவரை சந்தித்துவிட்டு நான் என் அறைக்கு வந்து படுத்து தூங்கிவிட்டேன். திடீரென்று என்னை அறியாமலே விழித்துக் கொண்டேன். அப்போது நான் படுத்திருந்த படுக்கைக்கு அருகே ஓர் ஒளி தெரிந்தது. அந்த ஒளியில் காஞ்சி பெரியவர் தெரிந்தார். என்னை நோக்கி பணிவோடு இரு. நீ நினைத்ததை அடைவாய் என்று சொன்னார். திடீரென்று அந்த ஒளி மறைந்து விட்டது. அந்த ஒளியால் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன்.”
வெள்ளைக்காரருக்கு ஒளியாய் காட்சி தந்த நம் ஸ்வாமிகளின் கண் ஒளிக்கு ஒருமுறை பிரச்சினை வந்தது.
ஸ்வாமிகளை தரிசிக்க வந்த ஒரு பெரிய டாக்டர் ( நம்பளவாதான் ) மஹா ஸ்வாமிகளின் கண்களை பரிசோதிச்சு, அவருக்கு கண் ஆபரேஷனும் செஞ்சார். பிறகு ஸ்வாமிகளிடம் ஒருவாரம் தலைக்கு குளிக்காதீங்கோ, குளிச்சா கண்ணுக்கு ஆபத்து என்றார்.
ஆனால் ஸ்வாமிகள் ஆசாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் தலைக்கு குளித்தார். அதில் ஸ்வாமிகளின் ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. ஆசாரத்திற்காக தன் கண்ணையே தியாகம் செய்த மஹா பெரியவரை சிலர் கிண்டல் செய்கிறார்கள். கேவலமாக பேசுகிறார்கள்.
இதை எப்படியோ தெரிந்து கொண்ட கட்டையில போற ஒரு கம்முனாட்டி, ஸ்வாமிகளைப் பற்றி இப்படி எழுதினான்:
‘அந்த கண்ணைப் பார்த்துதான் ஒளி தெரிகிறது ஜோதி தெரிகிறது அருள் வழிகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் நினைத்துக் கொண்டிருப்பார், உங்களுக்கு என் கண்ணில் ஒளி தெரியுது, ஜோதி தெரியுது. அடப்பாவிகளா, எனக்கு கண்ணே தெரியலடா…’ .
இந்த ராமசாமி நாயக்கன் பத்தி பேசுற ஆளுங்களாலதான் நமக்கு பிரச்சினை. கம்யூனிஸ்ட்டுன்னு சொல்றாளே… அதான் சிபிஎம்., சிபிஐ ன்னு சொல்றாளே, அவா எல்லாம் எவ்வளவு நல்லவாளா இருக்கா…. அவா மாதிரி இருந்துட்டா நாட்டுக்கு எவ்வளவு நல்லதா இருக்கும்.
இப்படித்தான் ஒருமுறை.. ஸ்வாமிகள் தீண்டாமை ஷேமகரமானதுன்னு சொன்னது, கக்கனுக்கு குறுக்கே மாட்டக் கட்டிப் பார்த்தது, விதவைப் பெண்களை பார்க்க மறுத்தது-இவைகள் இந்து தர்மத்துககு நியாயமானது, அதனால்தான் அவா மஹா பெரியவாளா இருக்கா என்றேன், ஒருத்தன்ட்ட. அந்தப் பாவி ஏதோ கம்யூனிஸ்ட்டுன்னு நினைச்சுப் பேசிட்டேன்.
வேலியில போற ஓணானை எடுத்து வேட்டியில உட்டுக்கிட்ட கதையா, அந்தக் கம்முனாட்டி… தமிழ்நாட்டையே கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கயிருக்கிற…. ராமசாமி நாயக்கனோட ஆளுன்னு தெரியாம அவனான்டா பேசிட்டேன்.
அவன் கண்ணுல கொள்ளி வைக்க… அந்தக் கட்டையில போறவன், மஹா பெரியவாள கண்டபடி திட்டி பேசிட்டான். தீண்டாமையை கடைபிடிச்ச அவர், அவர் மஹா பெரியவர் இல்ல. மஹா மோசக்காரன்…அது இதுன்னனு இஷ்டத்துக்கு… பேசிட்டான்.
என் காதே தீஞ்சி போச்சி….
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க

