காஞ்சி மகா ஸ்வாமிகளின் 116 ஜெயந்தி. இவுரு ரொம்ப… நல்லவரு…
ஸ்ரீ சங்கரபகவத்பாதரின் மறு அவதாரமாகப் போற்றி வணங்கப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ மகா ஸ்வாமிகளின் 116 ஆவது பிறந்தநாள் விழா 7-6-2009 அன்று மேன்மக்களால், பிறக்கும்போதே பிரம்மத்தை உணர்ந்தவர்களால், பிறக்கும்போதே மற்றவர்களைவிட உயர்வானவர்களாக பிறந்தவர்களால், பிறக்கும்போதே அறிவாளிகளாக பிறந்தவர்களால் பயபக்தியுடன் கொண்டாடப்பட்டது.
குருசேவா சங்கல்பஹேம்சி மாஜே பூர்ணதப
குருசேவை செய்வதே தவத்திற்கு முழுமை என்று வாழும் நமது காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர-விஜயேந்திர சுவாமிகளின் (எதுக்கு சிரிக்கிறேள்?) அருளாசியுடன் 108 வேத விற்பன்னர்களை கொண்டு மஹா ருத்ரஹோமம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு, மஹா ப்ரஸாதமும் வழங்கப்பட்டது.
மகா ஸ்வாமிகளின் மஹா தத்துவங்கள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது, ‘தீண்டாமை ஷேமகரமானது’ என்று அவர் சொன்னது. பெரியவாளின் இந்த சிறப்பான தத்துவத்தை மிக மோசமாக திட்டுபவர்களும் இருக்கிறார்கள்.
அதில் முக்கியமானவர்கள் இந்து மற்றும் நம்பளவாவோட ஜென்ம எதிரிகளான ராமசாமி நாய்க்கனோட ஆட்களும், இந்த அம்பேத்கரோட ஆட்களும்தான்.
அதேபோல் மகா ஸ்வாமிகளின் அற்புதங்கள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது காமராஜ் ஆட்சியில் மந்திரியாக இருந்த கக்கனை, நேரில் பார்த்தால் தீட்டாகிவிடும் என்பதால் அவருக்கு குறுக்கே பசுமாட்டை நிறுத்தி கக்கனுக்கு தரிசனம் தந்நது.
மகா ஸ்வாமிகளுக்கும் அவருடைய சீடர் நம்முடைய இப்போதைய பெரியவா ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கும் ஒரு சின்ன வேறுபாடு உண்டு. பெரியவா பிராமணப் பெண்ணாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கணவனை இழந்த பெண்களை சந்திக்க மாட்டர். அது அபசகுனம் அல்லது தீட்டாகிவிடும் என்பதே காரணம்.
ஆனால், அவருடைய சீடர் வாழும் கடவுளான நம்முடைய ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்குப் பிராமண விதவைப் பெண்கள் என்றால் அவ்வளவு இஷ்டம். மிகுந்த அன்பாக இருப்பார்.
நம்ம மஹா ஸ்வாமிகள் வெளிநாட்டுக்காரர்கள் கிட்டேயும் பல அற்புதங்கள் பண்ணியிருக்கா. அப்படித்தான் ஒரு முறை, பால் பிராண்ட் என்கிற ஒரு வெள்ளைகாரர், சுவாமிகளைப் பார்க்க வந்திருந்தார்.(கக்கனுககுக் குறுக்கால பசு மாட்டை நிறுத்தியது போல், ஸ்வாமிகள் வெள்ளைக்காரருக்கு குறுக்கால மாட்டை நிறுத்தல)
அந்த பரவசத்தை பால் பிராண்டே எழுதிருக்கிறார்:
“காஞ்சி பெரியவரை சந்தித்துவிட்டு நான் என் அறைக்கு வந்து படுத்து தூங்கிவிட்டேன். திடீரென்று என்னை அறியாமலே விழித்துக் கொண்டேன். அப்போது நான் படுத்திருந்த படுக்கைக்கு அருகே ஓர் ஒளி தெரிந்தது. அந்த ஒளியில் காஞ்சி பெரியவர் தெரிந்தார். என்னை நோக்கி பணிவோடு இரு. நீ நினைத்ததை அடைவாய் என்று சொன்னார். திடீரென்று அந்த ஒளி மறைந்து விட்டது. அந்த ஒளியால் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன்.”
வெள்ளைக்காரருக்கு ஒளியாய் காட்சி தந்த நம் ஸ்வாமிகளின் கண் ஒளிக்கு ஒருமுறை பிரச்சினை வந்தது.
ஸ்வாமிகளை தரிசிக்க வந்த ஒரு பெரிய டாக்டர் ( நம்பளவாதான் ) மஹா ஸ்வாமிகளின் கண்களை பரிசோதிச்சு, அவருக்கு கண் ஆபரேஷனும் செஞ்சார். பிறகு ஸ்வாமிகளிடம் ஒருவாரம் தலைக்கு குளிக்காதீங்கோ, குளிச்சா கண்ணுக்கு ஆபத்து என்றார்.
ஆனால் ஸ்வாமிகள் ஆசாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் தலைக்கு குளித்தார். அதில் ஸ்வாமிகளின் ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. ஆசாரத்திற்காக தன் கண்ணையே தியாகம் செய்த மஹா பெரியவரை சிலர் கிண்டல் செய்கிறார்கள். கேவலமாக பேசுகிறார்கள்.
இதை எப்படியோ தெரிந்து கொண்ட கட்டையில போற ஒரு கம்முனாட்டி, ஸ்வாமிகளைப் பற்றி இப்படி எழுதினான்:
‘அந்த கண்ணைப் பார்த்துதான் ஒளி தெரிகிறது ஜோதி தெரிகிறது அருள் வழிகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் நினைத்துக் கொண்டிருப்பார், உங்களுக்கு என் கண்ணில் ஒளி தெரியுது, ஜோதி தெரியுது. அடப்பாவிகளா, எனக்கு கண்ணே தெரியலடா…’ .
இந்த ராமசாமி நாயக்கன் பத்தி பேசுற ஆளுங்களாலதான் நமக்கு பிரச்சினை. கம்யூனிஸ்ட்டுன்னு சொல்றாளே… அதான் சிபிஎம்., சிபிஐ ன்னு சொல்றாளே, அவா எல்லாம் எவ்வளவு நல்லவாளா இருக்கா…. அவா மாதிரி இருந்துட்டா நாட்டுக்கு எவ்வளவு நல்லதா இருக்கும்.
இப்படித்தான் ஒருமுறை.. ஸ்வாமிகள் தீண்டாமை ஷேமகரமானதுன்னு சொன்னது, கக்கனுக்கு குறுக்கே மாட்டக் கட்டிப் பார்த்தது, விதவைப் பெண்களை பார்க்க மறுத்தது-இவைகள் இந்து தர்மத்துககு நியாயமானது, அதனால்தான் அவா மஹா பெரியவாளா இருக்கா என்றேன், ஒருத்தன்ட்ட. அந்தப் பாவி ஏதோ கம்யூனிஸ்ட்டுன்னு நினைச்சுப் பேசிட்டேன்.
வேலியில போற ஓணானை எடுத்து வேட்டியில உட்டுக்கிட்ட கதையா, அந்தக் கம்முனாட்டி… தமிழ்நாட்டையே கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கயிருக்கிற…. ராமசாமி நாயக்கனோட ஆளுன்னு தெரியாம அவனான்டா பேசிட்டேன்.
அவன் கண்ணுல கொள்ளி வைக்க… அந்தக் கட்டையில போறவன், மஹா பெரியவாள கண்டபடி திட்டி பேசிட்டான். தீண்டாமையை கடைபிடிச்ச அவர், அவர் மஹா பெரியவர் இல்ல. மஹா மோசக்காரன்…அது இதுன்னனு இஷ்டத்துக்கு… பேசிட்டான்.
என் காதே தீஞ்சி போச்சி….
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க
ஆனால், அவருடைய சீடர் வாழும் கடவுளான நம்முடைய ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்குப் பிராமண விதவைப் பெண்கள் என்றால் அவ்வளவு இஷ்டம். மிகுந்த அன்பாக இருப்பார்.////
பின் பெரியவள் மாறி சும்மா இருக்க முடியுமா என்ன??
‘அந்த கண்ணைப் பார்த்துதான் ஒளி தெரிகிறது ஜோதி தெரிகிறது அருள் வழிகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் நினைத்துக் கொண்டிருப்பார், உங்களுக்கு என் கண்ணில் ஒளி தெரியுது, ஜோதி தெரியுது. அடப்பாவிகளா, எனக்கு கண்ணே தெரியலடா…’ என்று எழுதினான்.///
யாரும் இல்லை அப்பரும் எடுக்கு தான் டீ போடுற…..
//ஆனால், அவருடைய சீடர் வாழும் கடவுளான நம்முடைய ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்குப் பிராமண விதவைப் பெண்கள் என்றால் அவ்வளவு இஷ்டம். மிகுந்த அன்பாக இருப்பார்//
ஆமாமா ரொம்ப நிறய பாசமாம்.
தேனொழுகற அந்த ஊத்த வாயை யப்பா நினச்சாலே புல்லரிக்குதே, கய்தே, பேமானி, கஸ்மாலம்,கபோதி,பருதேசி…….இப்புடியெல்லாம் சுவாமிகளை திட்டனும்னு ஆசைதான் ச்சே ! கொஞ்சம் டீஜெண்டா பேச வேண்டியதா இருக்குது (எப்புடி சுவாமிய ஊத்தவாயன்னு சொல்லலாம்ன்னு வருவாரே ஒரு வக்கீலு )
இப்பதிவுக்கான சரியான தமிழ்மண வாக்களிப்பு சுட்டி
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க
வாக்களிக்க விரும்புவோர் இந்த சுட்டிகளைப் பயன்படுத்துவீர்.
சங்கர மட தீண்டாமைக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல மதிமாறன்….
பூணூல் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள சட்டையைக் கழட்டிவிட்டுத்தான் உள்ளே வரச் சொல்லுவானுங்க. பத்திரிகைக்காரர்களுக்கும் இதே நிலைதான்… ஒருத்தனும் ஏன் எதுக்குன்னு கூட கேட்க மாட்டேங்குறான்…
பொம்பளங்களுக்கு அந்தாளு பிரசாதம் கொடுக்கிற லட்சணத்தை நீங்க நேர்ல பாத்தீங்கண்ணா, அங்கேயே செவுல்ல நாலு போடு போடுவீங்க…
எல்லா பத்திரைகையிலயும் இவனுங்களுக்கு இப்பவும் எடுப்புகள் இருப்பதுதான் வேதனை கலந்த உண்மை…
என்ன ரொம்ப நல்லவரை பற்றி எழுதியிருக்கிங்க. வலை உலகில் அவரை போலவே ரொம்ப நல்லவரான ஆர்.வி அய்யரை கொஞ்ச நாளாஆளைக் காணோம்.
காஞ்சி பெரியவர் தன்னுடைய தெய்வத்தின் குரலில் கீழ்வருமாறு கூறியிருக்கிறார். இதை உங்கள் பார்வைக்கு வைக்க ஆசைப்படுகிறேன். (சந்தேகமாக இருந்தால், நீங்கள் நூலகத்தில் அந்த நூலை (இரண்டாம் பாகம்) படித்துத் தெரிந்து கொள்ளலாம்).
“மகான்கள் – அப்பர், நம்மாழ்வார், சேக்கிழார், நந்தனார், கண்ணப்பர் மாதிரியானவர்கள் எந்த ஜாதியிலும்தான் தோன்றியிருக்கிறார்கள். ஆச்சார்யாளே கண்ணப்பரை சிவானந்த லஹரியில் ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார். எவனொருவனும் தான் இன்னொருவனைக் காட்டிலும் உசந்தவன் என்று நினைக்கிறதே பாபம் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிறது. மஹான்களும் இப்படித் தான் நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை சுதந்திர யுகத்தில் போய் விட்டது தான் கோளாறு. வாழ்க்கை முறையிலும், பொருளாதார ரீதியிலும் பேதம் இல்லாமல் எல்லாரும் எளிமையாக இருந்து விட்டால் கொஞ்சம் கூடப் பொறாமை, வயிற்றெரிச்சல் இருப்பதற்கு இடமில்லாமல் போகும்.
நன்றி!
பாலா
ஜெயேந்திர சரஸ்வதியை பார்க்க போன அப்துல்கலாமை நிற்க வைத்தே பேசி அனுப்பிய சுவாமிகள், ஆசிர்வாதமும் அரசியல் ஆலோசனையும் வாங்க சென்ற அம்மாவிற்கு நாற்காலியெல்லாம் போட்டு உபசரித்து பிரசாதமெல்லாம் கொடுத்தனுப்பினாராமே… இது உண்மையாங்கோ…யாராவது சொல்லுங்கப்பா
//இந்திய சுதந்திரத்திற்காக தீரமுடன் போராடிய வீர வாஞ்சிநாதனின் நினைவு தினம் இன்று.இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்த போது சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் போராடினார்கள். அகிம்சை வழி, தீவிரவாத வழி என இரண்டு வழிகளிலும் சுதந்திர போராட்ட தியாகிகள் போராடினர். இந்த தியாகிகளில் வீர வாஞ்சி நாதனும் ஒருவர்// – thatstamil.com
வாஞ்சிநாதனின் உண்மைக்கதை : பிரசவ வலியில் தவித்த ஒரு தலித் பெண்ணை அக்ரகார வழியாக தன்னுடைய சாரட் வண்டியில் ஆஷ் துறை கொண்டு சென்றதால் வந்த தீட்டை துடைக்க பிராமண இந்து வெறியர்களால் நடத்தப்பட்ட கொடூரக்கொலை இது .- காஞ்சி பிலிம்ஸ்
PLEASE EXPLAIN THE TRUTH TO OUR FELLOW TAMILS IN YOUR STYLE.
Tamilians are capable of twisting anything at any time to their advantage and make it appear it as truthful, trustworthy
o
இவரு பெரிய பெண் பித்தர் என்று இவரைப் பற்றி ஜெயேந்திர சரஸ்வதி சொன்னதாக அனுராத ரமணன் கோர்ட்டில் சொன்னதாக நக்கிரன் இதழில் அப்போதே செய்தி வந்தது.
///அதேபோல் மகா ஸ்வாமிகளின் அற்புதங்கள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது காமராஜ் ஆட்சியில் மந்திரியாக இருந்த கக்கனை, நேரில் பார்த்தால் தீட்டாகிவிடும் என்பதால் அவருக்கு குறுக்கே பசுமாட்டை நிறுத்தி கக்கனுக்கு தரிசனம் தந்நது.///
எவ்வளவு பெரிய அயோக்கியனா இருக்கிறான் இவன்.
I am deeply pained to see a blasphemy article against His Holiness Maha Periyavaa the only person who got accredition from the peace loving Buddhist Monk Dalai Lama.
We Brahmins are spread across all countries. Millions and thousands of followers from all sects (including Muslims, Chirtian Fathers) paid their homage to the Maha Periyavaa after he attained samadhi with tears. He lived for our culture, values and Integrity. He never spoke anything discriminatory to anybody. We brahmins are proud that he took birth in our caste and rose to very heigh spiritual heights that even the worst offenders of Hinduism including the current TN CM would measure his words before speaking about Maha Periayavaa. I dont mind you speak anything against brahmins with prejudice but please stop this evil defamation against his Holiness. From the Prime Minister to the President, from layman to the vedic scholars, from child to a great grand father, everybody would get attracted towards his speech and discourses. Please dont incur the wrath of the Almighty. We dont have any rights to speak against Maha Periayavaa.
Mr.Krishna!why it is painful?
When a poor bramin sankararaman was murdered in broad daylight,where were TRUE Bramins?
Now time is running out:u cannot impose VARUNAshrama Policies,hence ur community has stopped heavy drummimg:just tell us: why Bramins are against Tamileelam?
Well said Krishna!!!!
Mr.verummaramum, if you are against community that’s fine – but not holy souls. Just turn and think what all your Tamil speaking “Gods” did to tamil eelam – why blame just bramins?
Yes.. i do agree with Krishna.. If u are against Brahmins dats fine.. dats ur own problem.. but u dont hav rights to degrade a holy soul..
ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். தங்களை போன்ற மேன்மை மிகுந்த பகுத்தறிவாதிகளுக்கு இது முட்டாள்தனமாக தெரியலாம், தெரியும். எனினும் எழுதுகிறேன், பெரியவாளின் படம் மற்றும் அவர் பெயரை எழுதியதாலேயே நீங்கள் புண்ணியர் என்று நான் கருதுகிறேன். உங்களுக்கு பாக்கியம் இருந்து அவரின் கருணை இருந்தால் அவரை பற்றி தெரிந்து கொள்வீர்கள். மற்றபடி வேறொன்றும் இல்லை. உங்கள் பிராமன த்வேஷத்தை தாராளமாக செய்யுங்கள். நன்றி. வாழ்க பல்லாண்டு. பெரியவா பாதங்களே சரணம்.
All human souls are equal. there is no holy soul among the souls. The kanji sankarachary are not the unanimous leader of the so called hindusim. They are lots of caste leaders in the country, Sankaracharys are the claimed to be the leaders of Brahmin caste.
why kalam has to visit sankarachary? It is a sin to visit a caste leader.
மகா சிறியவா
sankara, உங்கள் பெரியவர் பற்றி விபரமாக அறிய, அக்கினிஹோத்ரம் ராமானுச தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது எனும் நூலைக் கொஞ்சம்
படிக்கவும்.
எத்தனை காலம் ஏமாற்றுவீர்கள்.