
தமிழ்நாட்டில் பெண்கல்வி, பெண் விடுதலை, சாதீய ஒற்றுமை குறித்து பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையில் நீங்கள் காணும் வேற்றுமை என்ன?
பாரதி பெண் கல்வி, பெண்விடுதலை, ஜாதீய ஒற்றுமையை இந்து மத, பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையில் எழுதினார்.
பாரதிதாசன் பெரியார் சிந்தனையின் பின்னணியில் எழுதினார்.
பாரதி ஏற்றத்தாழ்வுகளோடே ஒற்றுமையாக இருக்கவேண்டும், என்று ஜாதீய ஒற்றுமையை வலியுறுத்தினார்.
பாரதிதாசன் பெரியாரின் சிந்தனையான ஜாதி ஒழிப்பு பற்றி எழுதினார்.
சுருங்கச் சொன்னால் பாரதி வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டினார்.
பாரதிதாசன் பெரியாரின் பேச்சை கவிதையாக மொழி பெயர்த்தார்.
பெரியாரை தவிர்த்து விட்டால், பாரதிதாசனிடம் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பாரதி ஆதரவையும் சேர்த்து.
***
’இந்த பதில் பாரதிதாசனை விமர்சிப்பதாக இருக்கிறது’ என்று சொல்லி, என்னுடைய முழு பேட்டியையும் பிரசுரிக்கவில்லை ‘தமிழர் தொலைநோக்கு’
***
தமிழர் தொலைநோக்கு இதழுக்காக எழுதிய பதில்களை 2008 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதத்தில் முழுவதுமாக பிரசுரித்து இருந்தேன். இதில் சொல்லப்பட்ட பதில்கள் கூடுதல் கவனம் பெறவேண்டும் என்ற காரணத்தால், இப்போது அதை ஒவ்வொரு கேள்வி-பதிலாக பிரசுரிக்கிறேன்.
தொடர்புடையவைகள்:
‘சமஸ்கிருத கலப்பே தமிழை மேம்படுத்தும்’
`பாரதி சரஸ்வதியிடம் வரம் வாங்கியவர்’ – Via English
`பாரதி’ ய ஜனதா பார்ட்டி: முன்னுரை
‘என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` -Intellectual approach
மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும்
