பாரதியும் பாரதிதாசனும் சின்ன விவாதமும்
நேற்று(25-07-20014 தோழர் Mani Varma தனது பக்கத்தில் பாரதிதாசன் பாடலைப் பதிவு செய்திருந்தார்.
அதில் தீக்கதிர் ஆசிரியர் தோழர் Kumaresan Asak, பாரதிதாசன் பாடலில் உள்ள //தாய்மொழிதான் கண்கள்
தழுவும் மொழிகள் புண்கள்
நோய்மொழியை நுழைத்தால் சாவு
நூறாயிரம் எண்கள்!//- என்ற பகுதியை குறிப்பிடடு;
//தாய் மொழி தமிழ் நிச்சயமாக வாழ் மொழிதான். அதற்காக பிற மொழிகள் நோய் மொழியாகிவிடுமா?.// என்று எழுதியிருந்தார். அதற்கு நான்:
ஒன்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிற எதுவம் நோய்தான். அதுபோல்.. ஒரு மொழி மீது ஆதிக்கம் செலுத்துகிற எந்த மொழியும் நோய் மொழிதான், என்று எழுதினேன்.
Kumaresan Asak //மிகையான உணர்ச்சிநிலை மொழிப்பற்றுதான் அறிவியல்வூர்வ அணுகுமுறைக்கும், தமிழுக்கான சரியான போராட்டத்திற்கும் தடைக்கல்லாவிடுகிறது.///
வே. மதிமாறன்:
உணர்ச்சி நிலை அப்படித்தான் இருக்கும். என் மகன், தம்பி, தாய், என் தமிழன் இறந்தார்கள் என்கிறபோது எழுகிற உணர்ச்சி நிலை… குறிப்பாக உழைக்கும் மக்களிடம் வெடித்துக் கிளம்பும். கதறி குமுறும்.
ஆனாலும், தமிழ் மீது இந்தி ஆதிக்கம் நடந்தபோதெல்லாம், அதை எதிர்த்துப் போராடி வெற்றிக் கண்டவர்கள், எழுத்துப் பிழையோடு எழுதி, தமிழை உணர்வோடு அணுகிய, உணர்ச்சிவசப்பட்ட எளிய தமிழர்கள் தான்.
மாறாக, அறிவியல்பூர்வ அணுகுமுறைக் கொண்ட கம்யுனிஸ்டுகள், தமிழைக் கரைத்துக் குடித்த தமிழறிஞர்கள் உட்பட பல விஞ்ஞானிகள் வேடிக்கை தான் பார்த்தார்கள்.
மிகையான உணர்ச்சி நிலையில் சிலநேரங்களில் அறியாமை இருக்கலாம். ஆனால், அது ஆபத்தானதில்லை. திட்டமிட்டு அறிவுபூர்வமாக ஒரு பொய்யை சொல்வதுதான் ஆபத்தானது.
பாரதி சொன்னாரே ‘சம்ஸ்கிருதமே தேவபாஷை. தமிழ் உட்பட எல்லா மொழிகளிலும் அதிலிருந்து தோன்றியதுதான்’ என்று.
அப்படி சொன்ன பாரதியின் மோசடியை மூடி மறைத்து அவரை மிகச் சிறந்த தமிழ் மொழி பற்றாளனாக காட்டியதும் ஆபத்தானது தான்.
அந்த ஆபத்தை பாரதி தாசனும் கம்யுனிஸ்டுகளும் சேர்ந்தே செய்தனர்.
பாரதிதாசனுக்கும் கம்யுனிஸ்டுகளுக்கும் ஒத்துப்போகிற ஒரே இடம், பாரதியைப் பற்றிய மிகையான உணர்ச்சிநிலை .
Kumaresan Asak: பாரதி அன்றைய சூழலில், மற்றவர்கள் மதவாதத்தையும் சாதிப்பாகுபாடுகளையும் வைத்துக்கொண்டு தேசியம் விடுதலை என்று பேசிக்கொண்டிருந்தபோது, சாதி மதங்களைப் பாரோம் என்று பாடியதன் அடிப்படையிலும், மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்ற சொன்ன வகையிலும் மட்டுமே அவரை கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாடினார்கள். சமஸ்கிருதம் பற்றிய அவரது கருத்தை கம்யூனிஸ்ட்டுகள் ஏற்கவில்லை. வரலாற்றின் அந்தக் க்ட்டத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு பாரதி பாடல்கள் துணையாக இருந்தன என்ற கண்ணோட்டத்தோடும்,
இலக்கிய வரலாற்றில் புதியவற்றை அறிமுகப்படுத்தினான் என்ற முறையிலும் அவரை ஒரு முன்னோடியாகக் கொண்டார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அதே வேளையில் ஒரு பரிணாம வளர்ச்சியாக பாரதிதாசன், பட்டுக்கோட்டையார் ஆகியோரையும் தம் பதாகையில் கம்யூனிஸ்ட்டுகள் பொறித்துக்கொண்டார்கள். இதில் மிகையுணர்ச்சி எங்கே இருக்கிறது?
ஒருவேளை அது மிகையுணர்ச்சிதான் என்றால், கம்யூனிஸ்ட்டுகளே அதை வெளிப்படுத்தியிருந்தாலும், நிச்சயமாக அதை நான் ஏற்க மாட்டேன். நான் என் கண்ணோட்டத்தில் ஒரு சிறிய கருத்தைப் பின்னூட்டமாக இடுகிறபோது, தேவையின்றி இயக்கத்தை ஏன் இழுக்கிறீர்கள் வே மதிமாறன் ? மற்றபடி, எதையும் உணர்ச்சி நிலையிலிருந்தே அணுகுவதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை.
3 hrs · Like
வே மதிமாறன்: நல்லது.
பெரியாரின் பின்னணியில் பகுத்தறிவு, பெண் விடுதலை, பட்டாளி வர்க்கம் பற்றிய பாடல், மொழி உணர்வு, ஜாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு எழுதிய பாரதிதாசன்,
அவரின் சொந்த கருத்தாக இனவாத்தை எழுதினார். அவரின் இனவாதத்தை கடுமையாக விமர்சிக்கிற தோழர்கள்,
பாரதியின் பார்ப்பன ஆதரவு. சம்ஸ்கிருத ஆதரவு. கிறித்துவ, இஸ்லாமிய எதிர்ப்பு இவைகளுக்காக பாரதியை விமர்சித்ததேயில்லை.
மாறாக இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக அவர் எழுதிய போலி பெண் விடுதலை, போலி ஜாதி எதிர்ப்பு, போலி தமிழ் உணர்வு போன்றவற்றையே பாரதி என்பதுபோல் கொண்டாடி மகிழ்ந்தார்கள். மகிழ்கிறார்கள் .
பாரதியின் கொண்டாட்டத்தில் பெரியார், டாக்டர் அம்பேத்கரின் புறக்கணிப்பே முக்கிய வினையாற்றியது.
நன்றி.
3 hrs · Edited · Like · 1
Kumaresan Asak: வே மதிமாறன் இன்று நாங்கள் என்ன நிலைபாடுக்ள் மேற்கொண்டிருக்கிறோம் என்பதை விட்டுவிட்டு, (அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளைக் கொண்டுசெல்வதில் எங்களது இன்றைய உண்மை முனைப்புகளை மறைத்துவிட்டு) காலண்டரில் கிழித்துப்போடப்பட்ட தேதிகளிலேயே குடியிருப்பீர்களானால் அது உங்க்ள் உரிமை என மதிக்கிறேன். நன்றி.
3 hrs · Like
வே மதிமாறன்: ஆமாம். உங்களின் டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஆதரவை நான் அறிவேன். அதற்கு என் நன்றி. ஆனால், இப்போது கூட பாரதிதாசனை தான் உங்களால் விமர்சிக்க முடிகிறதே ஒழிய… பாரதியை முடியாது.
என் உரிமையை மதித்தற்கு நன்றி தோழர்.
பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்
//அது உங்க்ள் உரிமை என மதிக்கிறேன். நன்றி.///
அ.கு.வின் இப்படிப்பட்ட பண்பான அனுகுமுறையில் மெய்சிலிர்க்கிறேன்.
எனினும் கூட தோழர் மதிமாறன் அவர்களின் கீழ் கண்ட கேள்விக்கு….
///ஆனால், இப்போது கூட பாரதிதாசனை தான் உங்களால் விமர்சிக்க முடிகிறதே ஒழிய… பாரதியை முடியாது.///
பதில் சொல்ல முடியாத அ.கு.வின் நிலைகண்டு பரிதாபப்படுகிறேன்…