தில்லானா மோகனாம்பாளில் பெரியாரின் பங்கு

comedy7

பரதநாட்டியத்திற்குத் தோதாக எப்போதும் தவில், நாதஸ்வரத்தை வைக்க மாட்டார்கள். மிருதங்கம், ஜதி தான் பிரதானமாக இருக்கும்.

நாதஸ்வரம், தவில் வைத்தால் அது தரம் குறைந்தது என்ற கண்ணோட்டம் உண்டு. இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டையும் கரகாட்டத்திற்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஏன் பரதநாட்டியத்திலிருந்து தவிலும் நாதஸ்வரமும் அப்புறப்படுத்தப்பட்டது?
பரதநாட்டியத்தை இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆடியபோது தவிலும் நாதஸ்வரமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பார்ப்பனர்கள் பரதநாட்டியத்தைக் கைபற்றிய பிறகு அவர்கள் செய்த முதல் காரியம் நாதஸ்வரத்தையும் தவிலையும் அப்புறப்படுத்தியதுதான்.

அதே தாளம், ராகம், அதே ஏழு சுவரங்கள் அப்படியே எல்லாத் தரமும் இருந்தும் ஏன் அப்புறப்படுத்தினார்கள்?
கர்நாடக சங்கீத அம்சங்கள் முழுமையாக நிறைந்த நாதஸ்வரத்தையும் தவிலையும் பார்ப்பனர்கள் தீவிரமாக ரசிப்பார்களே தவிர, ஒரு போதும் அதை வாசிக்க மாட்டார்கள்.
இவை இரண்டும் கல்யாண ஊர்வலம், சாமி ஊர்வலம் என்று தெருக்களிலும் வாசித்து எளிய மக்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது என்பதினாலும், இரண்டையும் வாசிப்பதற்கு அதிகமான உடல் உழைப்பும், சக்தியும் செலவழிக்க வேண்டும் என்ற இன்னொரு முக்கியக் காரணமும்.

செஸ், டென்னிஸ், கிரிக்கெட் விளையாடுகிறவர்கள்கள் ஏன் கால்பந்தும், கபடியும் விளையாட வருவதில்லை? என்பதற்கு என்ன விடையோ அதே தான் இதற்கும்.
இந்தச் சூழலில், தில்லானா மோகனாம்பாளில் பரதநாட்டியத்திற்கு இணையாக நாதஸ்வரத்தையும் தவிலையும் முன்னுறுத்தி சிறந்த படத்தைத் தந்ததில் இருக்கிறது, ஏ.பி. நாகராஜனின் அரசியல் கண்ணோட்டம்.

பரத நாட்டியம், கர்நாடக இசையில் பார்ப்பனர்கள் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்தபோதும்; தில்லானா மோகனம்பாள் படத்தில் சிவாஜி குருப், பத்மினி குருப் இரண்டிலும் ஒரு பார்ப்பனக் கதாபாத்திரம்கூடக் காட்டாமல்
படத்தில் தொடர்ந்து சிண்டு முடித்து வில்லத்தனம் செய்கிற ‘வைத்தி’ கதாபாத்திரத்தை ஒரு பார்ப்பனராக அதுவும் ஒரு பார்ப்பனரையே நடிக்க வைத்துக் காட்டியதிலும் இருக்கிறது, இயக்குநர் ஏ.பி. நாகராஜனிடம் பெரியாரின் தாக்கம்.

பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னைப் புறக்கணித்தவர்களிடமும் எதிர்த்தவர்களிடமும் கூட ஒளியைப்போல் ஊடுறுவினார் என்பதற்குத் தில்லானா மோகனாம்பாள் படமும் சாட்சி.
16 March at 15:00

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

10 thoughts on “தில்லானா மோகனாம்பாளில் பெரியாரின் பங்கு

 1. இரண்டையும் வாசிப்பதற்கு அதிகமான உடல் உழைப்பும், சக்தியும் செலவழிக்க வேண்டும்–அப்படியா விசயம்..

 2. Vera oru example sollattumaa!!!.
  Eppadi mathimaran avargal edhuvume pannaama vaai kiliya mattum pesuvaaro adhu madhiri – yennaa adhukku adhigamaana udal ulaippum sakthiyum thevai ille !!!!. So Mathimaran avargale, oru vagaiyile paathaa neengalum oru paarpaan dhaan …. ha ha ha ……

 3. அதே ஏ.பி.நாகராஜன் திருவிளையாடல்,திருவருட்செல்வர், திருமால்பெருமை திருமலை தென் குமரி என்று பக்திப் படங்களாக எடுத்து தள்ளினாரே அதற்கும் பெரியார்தான் காரணமா?எது நடந்தாலும் பெரியார்மண்,பெரியார்தான் காரணம் என்று நம்பவைக்க முயல்வதும் எழுதுவதும் ஒருவகையில் மூடநம்பிக்கையே.

 4. ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ

 5. ஹி…ஹி….தில்லானா மோகனாம்பாள் ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு நாவல். அதை எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு….அவர் ஒரு பிராமணர்….

  வைத்தி அப்படி சினிமாவில் இருப்பதால் ஒட்டுமொத்த பிராமண சமுதாயமும் அப்படித்தான் என்று அர்த்தம் இல்லை…

  நாவலை நாவலாகத்தான் பார்க்க வேண்டும்….நந்தனார் கதையில் கோ.கி. பாரதி தான் முதலில் அந்த பண்ணையாரை பிராமணராக உருவகப்படுத்தி கதா காலட்சேபம் செய்தார்….

 6. அவர் வழி வந்தவர்கள் டிவிக்களில் பேய்தொடர்கள் பக்திதொடர்கள் மானோட மயிலோட என்று களைகட்டுகிறதே? அதில் அவரின் நொங்கு என்னவோ

 7. Kali Das · Friends with Tamil Selvan and 25 others
  பதிவுன்னா இப்படி இருக்கணும்…
  16 March at 15:16 · Like · 4

  Govi Lenin அருமை தோழர்..
  16 March at 15:19 · Like · 3

  Ramu Ruso · Friends with Arulmozhi Adv and 36 others
  வைத்தி கதாபாத்திரத்தில் நடித்த நாகேஷ் அவர்கள் பார்ப்பனர் அல்ல கிறிஸ்தவர் அவருடைய பெயர் பீட்டர் நாகேஷ் என்று நினைக்கிறேன்
  16 March at 15:40 · Like · 2

  Jai Prakash · Friends with Prakash Jai and 2 others
  Arumaiyana pathibu
  16 March at 16:16 · Like · 1

  Puliangudi Seyad Ali · 66 mutual friends
  பதிவுன்னா இப்படி இருக்கணும்…
  16 March at 16:38 · Like · 1

  Rebel Ravi · 99 mutual friends
  இந்தக்கதையை எப்படி ஒரு பிராமணர் கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருக்க முடியும் எனக் குழம்பியதுண்டு ..அண்மையில் ஒரு நண்பர் சொன்னார் சுப்பு வேளாளர் என்று..நாகராஜனை விட. சுப்புவையே பாராட்ட வேண்டும்…
  16 March at 16:51 · Like · 6

  வே மதிமாறன் https://mathimaran.wordpress.com/2014/06/03/thillana-827/

  ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்
  சில பாடல்கள் மட்டுமே காட்சிகளாக பார்க்க…
  MATHIMARAN.WORDPRESS.COM
  16 March at 17:39 · Like · 5 · Remove Preview

  ஞாநி சங்கரன் · Friends with மகிழ்நன் பா.ம and 40 others
  கொத்தமங்கலம் சுப்பு பிறப்பால் பார்ப்பனர்தான். தஞ்சை இசை வேளாலர் வாழ்க்கை முறையை அவர் பெருமளவு நேர்மையாகப் பதிவு செய்தவர். தில்லானா மோகனாம்பாள் தவிர பந்தநல்லூர் பாமா என்ற நாவலும் எழுதியிருக்கிறார்.ஏ.பி.நாகராஜனிடம் பெரியாரின் தாக்கம் இருந்ததால்தான் இந்தப…See More
  16 March at 17:39 · Like · 17

  M M Basha Mtmmk · Friends with Editör Alaudeen
  இளம் தலைமுறையினர் இடையில் பெரியார் என்றால் ஒர் இறை மறுப்பாளர் என்ற நிலயை உங்களின் பல்வேறு ஊடக தளங்களிலும், முகநூல்களின் வாயிலாகவும் அய்யா ஒர் ஒப்புயர்வற்ற “சமூகப் போராளி, தமிழ்சமுதாயத்திற்கு மட்டுமல்ல அனைத்து ஒடுக்கப்பட்ட சிறுபாண்மையினர்க்குமான நாயகர் ” என உணர்த்தியமைக்கு வாழ்த்துக்கள்.
  16 March at 17:48 · Like · 3

  இளங்கோ மணிவண்ணன் சுயமரியாதை வரலாற்றை அற்புதமாக பதிவு செய்துள்ளார்.
  16 March at 17:48 · Like · 1

  Rebel Ravi · 99 mutual friends
  நன்றி ஞாநி..என் ஊகம் சரியே. நான் பந்தநல்லூர் பாமாவையும் படித்துள்ளேன். என் வீட்டில் தினமணி கதிரில் அ கல்கியில் அது வாராவாரம் தொடராக வந்த போது அப்பா தொகுத்து வைத்த பிரதி இருந்தது…ஏபிஎன்..மபொசியின் கூடாரத்தில் இருந்ததால் அவரை எருமைக் குரலோன் ஏபிஎன் என திமுகவினர் எள்ளி நகையாடிய கதையும் நான் கேட்டதுண்டு…
  16 March at 17:49 · Like · 4

  வே மதிமாறன் தோழர். M M Basha Mtmmk // சிறுபாண்மையினர்க்குமான நாயகர் ” //
  இனவாத தமிழ் கும்பல் நாயக்கர் என்று திரிச்சிட போறாங்க தோழர்.
  16 March at 17:52 · Like · 6

  Parimalam Raman · 36 mutual friends
  மதி! பல ஆண்டு பார்த்து ரசித்த படம்.சுயமரியாதை இயக்கதை சார்ந்த எனக்கு இப்படி ஓர் பார்வை வரவில்லை,வைத்தியை நினைத்தது உண்டு.
  நல்ல பதிவு தோழர்.
  16 March at 18:13 · Like · 1

  புதியதடம் மேகவண்ணன் //எல்லாவற்றையும் பெரியார்மீது போட்டுத்தான் அவரது ஆளுமையின் பிரம்மாண்டத்தை உணர்த்தவேண்டும் என்ற அவசியமில்லை// ஹி ஹி
  16 March at 18:14 · Like · 1

  வே மதிமாறன் தோழர் ஞாநி சங்கரன் நன்றி.
  பார்ப்பனர்களின் நாதஸ்வரம், தவில் பற்றிய கண்ணோட்டத்தைப் குறித்தும் கருத்துச் சொல்லியிருக்கலாம். இந்த எழுத்தின் மையமே அது தான்.
  16 March at 18:36 · Like · 7

  Jeeva Sagapthan உண்மை தோழர்.பெரியார் ஒரு சகாப்தம்.விமர்சிப்பவர்களும் அவருடைய தாக்கத்தை பெற்றிருப்பர்.
  16 March at 19:43 · Unlike · 7

  Gnanashanmugam Subramanian வைத்தி பார்ப்பனர் பாத்திரப் படைப்பு பெரியார் காட்டிய பார்ப்பனர் இனங்காட்டலே.
  16 March at 19:48 · Unlike · 3

  Thamilan Ram Rjpm · 269 mutual friends
  சாதாரண கண்ணுக்கும் ஈரோட்டு கண்ணாடி அணிந்த கண்ணுக்கும் உள்ள வித்தியாசம்
  16 March at 20:12 · Like · 3

  Karthick Karthickeyan மிக அருமையான பதிவு தோழர்.
  16 March at 20:55 · Like

  Karthikeya Sankar Muthurajan நன்றி, தில்லான மோகனமால்ல இவ்வளுவு விசயமா ? நன்றி தகவலுக்கு ….
  16 March at 20:57 · Like · 1

  உகந்தை தமிழ்மாறன் தமிழ்ப்புலிகள் · 17 mutual friends
  அருமை.இதற்கு பேர் தான் சமூக பகுப்பாய்வு
  16 March at 21:48 · Like · 3

  Veera Varatharajan · Friends with Saravana Prabu
  Arumaiyana pathivu tholare
  16 March at 22:49 · Like

  ஞாநி சங்கரன் · Friends with மகிழ்நன் பா.ம and 40 others
  வே மதிமாறன் சம்பிரதாயமான பார்ப்பனர்களுக்கும் இசை வேளாளர்களுக்கும் உள்ள உறவு, குறிப்பாக தஞ்சை பகுதியின் உறவு, மரபிசையில் இருவரும் உறவாடும் விலகும் புள்ளிகள், இருவருக்கும் கோவிலுக்கும் உள்ள உறவு எல்லாம் ஒற்றை வர்ணனையில் சொல்லித்தீர்க்க முடியாதவை. அதில் ச…See More
  17 March at 08:30 · Edited · Like · 11

  வே மதிமாறன் நல்லது.
  16 March at 23:11 · Like · 1

  காதலை வாழி · 5 mutual friends
  தேர்ந்த கண்ணோட்டடம். படிக்கவே அற்புதமாய் இருந்தது
  16 March at 23:58 · Edited · Like

  RajFilms East · Friends with RajaRaja Ark
  nantri
  17 March at 00:19 · Like

  Sekar Elumali · Friends with Arumugam Bsnl and 1 other
  சுயமரியாதை வரலாற்றை அற்புதமாக பதிவு செய்துள்ளார்.
  17 March at 08:55 · Like

  Kingsly Thomas “வைத்தி” எல்லா காலத்துக்கும் பொருந்தும் பாத்திரம்.அதிகார மையத்தை குறி வைத்து அதோடு தன் பிழைப்பை ஏற்படுத்தும் அந்த வைத்தி கதா பாத்திரம் என்றும் என்றும் அவாளின் முகத்தை காட்டும்.
  17 March at 09:22 · Like · 3

  சரவணன் தமிழ் சங்கத்தான் · 9 mutual friends
  தோழர். M M Basha Mtmmk // சிறுபாண்மையினர்க்குமான நாயகர் ” //
  இனவாத தமிழ் கும்பல் நாயக்கர் என்று திரிச்சிட போறாங்க தோழர்….See More
  17 March at 10:38 · Like

  சூ.ம. ஆரோக்கியராசு அருமையான பதிவு.
  17 March at 10:46 · Like

  Yuva Krishna · Friends with Govi Lenin and 980 others
  ஏ.பி.நாகராஜன், ம.பொ.சி.யின் தமிழரசு கழகத்தைச் சார்ந்தவர். பெரியாரிய இயக்கங்கள் மட்டுமின்றி பார்ப்பனரல்லாத இயக்கங்கள் தமிழ்ச்சூழலில் ஏராளம் உண்டு. அவர்களுக்கும் பார்ப்பன எதிர்ப்பு உண்டு. குறிப்பாக தமிழ்தேசிய இயக்கங்கள் 99% பார்ப்பன எதிர்ப்புத்தன்மை கொண்…See More
  17 March at 10:48 · Unlike · 5

  Haji Barkath Ali · Friends with Kap Oor and 1 other
  பார்ப்பனர்ஈவ்வளவு
  சுள்ச்சியாலர்கல்
  என்றல்…See More
  17 March at 11:26 · Like

  Ashick Ahamed · Friends with வேந்தன். இல and 4 others
  Arumaiyana varalatru pathivu…..
  17 March at 13:43 · Unlike · 1

  Ashick Ahamed · Friends with வேந்தன். இல and 4 others
  Oru Chinna veandukol, thodarndhu idhu pola varatru pathivukalai pathiyungal…. Ilaya thalaimuraiku mikavum payanullathaka irukum
  17 March at 13:44 · Like

  Kasimedu Mannaru தந்தை பெரியாரை எதிர்த்தவர்கள்கூட அவரது கருத்துக்களையும் சேர்த்து எதிர்க்கவில்லையே! பார்ப்பனர்களின் சூழ்ச்சி, கூட்டிக் கொடுத்து முன்னேறுவது, அதிகார மையத்திடம் நக்கிப் பிழைப்பது என்ற பார்ப்பனர்களின் பிறவிக் குணத்தை தந்தை பெரியாரின் படிப்பினையில் உணர்ந்தவ…See More
  17 March at 21:16 · Unlike · 3

  Eswaran Dmk · Friends with Dhalapathi Raj and 37 others
  Good
  18 March at 08:05 · Unlike · 1

  Samathuva Munnani Garkey · 63 mutual friends
  இது தான் தோழா் மதியின் மதிநூட்பா பார்வை
  19 March at 14:55 · Like · 3

  வே மதிமாறன் நன்றி.
  19 March at 15:25 · Like

  Chola Nagarajan · 313 mutual friends
  இதில் இன்னொரு கூடுதல் செய்தியை நீங்கள் சேர்க்க மறந்துவிட்டீர்கள் போலும். தில்லான மோகனாம்பாள் கதை கொத்தமங்கலம் சுப்பு எழுதியது. அவர் பிறப்பால் பார்ப்பனர். அப்படியென்றால் பரத நாட்டியத்தையும், நாதஸ்வரத்தையும் ஏ.பி. நாகராஜன் அல்ல, ஒரு பார்ப்பனரான கொத்தமங்க…See More
  23 March at 11:19 · Like · 2

  Valaikudaa Nanban Tamilwala · 4 mutual friends
  Deeep view….
  23 March at 16:13 · Like

  Samathuva Munnani Garkey · 63 mutual friends
  தோழா் மருதைய்ன் bjp கார்களை குறிப்பிடும் போது வைத்தி போட்டு இருக்கும் தூண்டோடு இனைத்து கிண்டல் செய்வா்
  23 March at 20:22 · Like

Leave a Reply

%d