அருணாக்கயிறு பூணூல் கயிறு தூக்குக் கயிறு

Janeu9_1414836526

பூணூல் அறுப்புக்கு, ரொம்பக் கவலைப்படுகிறார்களே.. பிராமணாளை விடச் சூத்திராள்?
தனக்குத் தெரிந்த ‘பிரமணாள்ஸ்’ இடம் அட்டனஸ் போடறதிலேயே கவனமா இருக்காங்க சூத்திராள்ஸ்.

இந்தச் சர்.. சூத்திராள் போல.. மதம் மாறினாலும் இன்னும் மனம் மாறாத ‘பாய்’ சூத்திராளும். இருக்கிறார்கள்.

எப்படியோ பூணூல் அறுப்புலேயும் உங்க மார்க்கெட்டிங்க நல்லா பண்றேள். வாழ்த்துகள். பிராமணாளோட உங்கள் ‘உறவு’ நல்லபடியா நடந்து, உங்கள் ‘பிராஜெக்ட்’ வெற்றிபெற.

*
தமிழர்கள் மட்டுமா… இந்தியர்களே கோவணம் கட்டுகிற பழக்கத்தில் இருந்து ஜட்டிக்கு மாறியப் பிறகு; இடுப்பில் கட்டிருந்த அருணாக்கொடியை அறுத்து எறிந்தார்கள்.

ஒன்றை தொடர்வதற்கும் கை விடுவதற்கும் காரணம் இருக்கும். எதையும் மனிதர்கள் தன் பயன்பாடு, எப்படியாவது பயன்படும் என்ற நம்பிக்கை அல்லது லாபம் (சமூக அந்தஸ்து) இல்லாமல் கடைப்பிடிக்க மாட்டார்கள்.

ஆனால், இந்தப் பூணூலில் பூ கட்டுவார்களா? இல்லையென்றால் எதற்கு பூணூல் என்ற பெயர்? அதன் பயன் பாடென்ன? இது இரண்டும் இல்லை என்றால்.. சமூக அந்தஸ்தா? அப்படியானால் பூணூல் இல்லாதவர்கள் சமூக அந்தஸ்து இல்லாதவர்களா?

*
‘தூக்குக் கயிறு’ க்கு எதிரா பேசுங்க என்றபோது, ‘முடியாது’ என்றவர்கள்; ‘பூணூல் கயிறு’க்கு ஆதரவா பேசுகிறாரகள்.
‘என்ன ஒரு மனிதாபிமானம்?’
22 April at 12:26 ·

‘பூணூல் அணிவது தவறு என்று அவர்களுக்குப் புரிய வைத்து, அவர்களையே கழட்ட வைக்க வேண்டும்’ என்று இப்போது நியாயம் பேசுகிற எத்தனைப் பேர்,
இதற்குமுன் ‘தவறு’ என்று அவர்களுக்குப் புரிய வைத்திருக்கிறார்கள்.

இதை ‘பூணூல் நியாயம்’ பேசுகிற ‘பார்ப்பன – சூத்திர’ உணர்வாளகளிடமே கேட்கிறேன்.
*
‘மேக்கப்’ நாடகத்திற்கல்ல..
*
பெரியார் அடிக்கடி பேசிய எழுதிய வலியுறுத்திய ‘பார்ப்பான்’ ‘பார்ப்பனர்’ என்ற வார்த்தையை ரகசியமாக பேசக் கூட தைரியமில்லாதவர்கள், விரும்பாதவர்கள்;

பூணூல் அறுப்பு சம்பவத்தை கண்டிக்கும் போதும் மட்டும், ‘பெரியாரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையான பெரியாரியர் தொண்டர்களாக இருக்க மாட்டார்கள்’ என்று தீவிர பெரியாரிஸ்ட்டை போல் ‘மேக்கப்’ போடுகிறார்கள்.
23 April at 12:26 ·
தாலியோ தாலி..

கி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்

3 thoughts on “அருணாக்கயிறு பூணூல் கயிறு தூக்குக் கயிறு

  1. I repeat my comments sent for your last post.
    No comments on my comments on your last post? The blogger should reply when I raise a valid point. Prove me wrong; Call me names; But please say something.
    என் அனுபவத்தில் கண்டது: தாலி கட் டுவது தமிழ்நாட்டில் மட்டும் தான். ஆந்திரம்,கர்நாடகத்தில் நல்ல பூசல தாடு என்ற கருமணி சங்கிலி தாலியாகக் கருதப்படுகிறது. அதையும் கணவன் கட்டுவது, எப்போ து ம் கழுத்தில் அணிவது என்றெல்லாம் இல்லை. மராட்டி, கருமணி; ஆனால் எப்போதும் அணிவது என்று இல்லை. ஒரிஸ்ஸா,வங்கம்,அஸ்ஸாமில் கழுத்தில்.சங்கிலி போட்டுக்கொள்வதே அரிது.; தாலி என்று ஒன்று அறியாதது. கேரளத்திலும் வங்கம் போன்றே என்று நினைக்கிறேன். அதாவது, தமிழகர்களுக்கேயான தாலி அகற்றப்பட்டு .விட்டது. சுபம்.
    Anyone with more exposure than me is welcome to offer alternate comments.

  2. athu poonool alla….. they used the thread hand cuffed the downdrodden people….we have tobreak the chain without any compromice……..

Leave a Reply

%d bloggers like this: