Site icon வே. மதிமாறன்

பின்லேடன்-அமெரி்க்கா சண்டையும் இந்தியா,பாகிஸ்தான் விசுவாசமும்

பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதினால், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்பது உண்மையாகிறது’ என்று ப. சிதம்பரம் சொல்லியிருக்கிறாரே?

-சிரா. சென்னை.

உண்மைதான். பின்லேடன் போன்ற தீவிரவாதிக்கு மட்டுமல்ல, அமெரிக்க ராணுவத் தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் தந்திருக்கிறது பாகிஸ்தான்.

தங்கள் நாட்டினுள், தங்களின் ராணுவத் தலைமை அலுவலகத்திற்கு அருகில் வேறு  நாட்டு ராணுவ சிப்பாய்கள் உள்ளே புகுந்து, அந்த நாட்டு ராணுவத்திற்கே தெரியாமல், சர்வதேச அளவில் தேடப்படுகிற ஒருவரை பெரும் சண்டைக்குப் பிறகு சுட்டுக் கொன்றிருக்கிறது, அந்நேரம்…பாகிஸ்தான் ராணுவம் என்ன கோடைகால ஓய்வுக்காக குளிச்சியான பகுதிக்கு போயிடுச்சா?

ஒரு தர்க்கத்திற்கு… ‘பின்லேடனாவது தலைமறைவா இருந்தாரு, பாகிஸ்தான் ராணுவத்தினால் கண்டுபிடிக்க முடியல’ என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அமெரிக்க ராணுவம் இப்படி பகிரங்கமாக உள்ளே புகுந்திருக்கே, இது எப்படி பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்திற்கும் தெரியாமல் இருக்கும்?

அமெரிக்க ராணுவம் அத்துமீறி இன்னொரு நாட்டினுள் நுழைந்ததை பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார் சிதம்பரம்? அந்த விசுவாசத்தில்தான் இருக்கிறது பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள ஒற்றுமை.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மே மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/may2011/

தொடர்புடையவை:

ஒபாமா; அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

Exit mobile version