பின்லேடன்-அமெரி்க்கா சண்டையும் இந்தியா,பாகிஸ்தான் விசுவாசமும்

பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதினால், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்பது உண்மையாகிறது’ என்று ப. சிதம்பரம் சொல்லியிருக்கிறாரே?

-சிரா. சென்னை.

உண்மைதான். பின்லேடன் போன்ற தீவிரவாதிக்கு மட்டுமல்ல, அமெரிக்க ராணுவத் தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் தந்திருக்கிறது பாகிஸ்தான்.

தங்கள் நாட்டினுள், தங்களின் ராணுவத் தலைமை அலுவலகத்திற்கு அருகில் வேறு  நாட்டு ராணுவ சிப்பாய்கள் உள்ளே புகுந்து, அந்த நாட்டு ராணுவத்திற்கே தெரியாமல், சர்வதேச அளவில் தேடப்படுகிற ஒருவரை பெரும் சண்டைக்குப் பிறகு சுட்டுக் கொன்றிருக்கிறது, அந்நேரம்…பாகிஸ்தான் ராணுவம் என்ன கோடைகால ஓய்வுக்காக குளிச்சியான பகுதிக்கு போயிடுச்சா?

ஒரு தர்க்கத்திற்கு… ‘பின்லேடனாவது தலைமறைவா இருந்தாரு, பாகிஸ்தான் ராணுவத்தினால் கண்டுபிடிக்க முடியல’ என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அமெரிக்க ராணுவம் இப்படி பகிரங்கமாக உள்ளே புகுந்திருக்கே, இது எப்படி பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்திற்கும் தெரியாமல் இருக்கும்?

அமெரிக்க ராணுவம் அத்துமீறி இன்னொரு நாட்டினுள் நுழைந்ததை பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார் சிதம்பரம்? அந்த விசுவாசத்தில்தான் இருக்கிறது பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள ஒற்றுமை.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மே மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/may2011/

தொடர்புடையவை:

ஒபாமா; அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

7 thoughts on “பின்லேடன்-அமெரி்க்கா சண்டையும் இந்தியா,பாகிஸ்தான் விசுவாசமும்

  1. பின்லேடனை சுட்டுக்கொன்ற செய்தியைவிட, “சம்பவ இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில்தான் பாகிஸ்தான் ராணுவ அகாடமி இருந்தது ” என்ற செய்திதான் உலக தொலைகாட்சிகளில் ஹாட் நியூஸ். இது இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் பாகிஸ்தான் மீதுள்ள பாசத்தையே காட்டுகிறது.

    கிரிகெட் மேட்ச் என்றாலே “பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் இன்றைய ஆட்டம்” என்று வர்ணிக்கும் (வர்ணனை உபயம்-கலைஞர் டிவி ) நம்ம ஊர் தொலைகாட்சிகள் இந்த விஷயத்தை சும்மா விடுமா என்ன? முடிவாக பின்லேடன்கொல்லப்பட்ட இடத்திற்கு “இராணுவ நகர்” என்று பெயரே வைத்துவிட்டனர் (எப்புடி).

    அனைத்துலக நாடுகளும் முக்கியமாக இந்தியா, தாங்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்று , பின்லேடன் மரணச் செய்தியை வரவேற்பதிலும், அமெரிக்காவை பாராட்டுவதிலும் நிரூபித்துவிடலாம் என்று, கொஞ்சம் over perform பண்ணிவிட்டன.

    தற்பொழுது பின்லேடன் மரணத்தின் மீது பல சர்ச்சைகள் எழுந்துள்ளன……. கூட நாலு பிட்ட சேத்துப்போட்டு பெரிதாக்குவோம் வாங்க,,,

    சம்பவ இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த பாகிஸ்தான் // ராணுவத் தலைமை அலுவலகத்திற்கு அருகில் வேறு நாட்டு ராணுவ சிப்பாய்கள் உள்ளே புகுந்து, அந்த நாட்டு ராணுவத்திற்கே தெரியாமல், சர்வதேச அளவில் தேடப்படுகிற ஒருவரை பெரும் சண்டைக்குப் பிறகு சுட்டுக் கொன்றிருக்கிறது, அந்நேரம்…பாகிஸ்தான் ராணுவம் என்ன கோடைகால ஓய்வுக்காக குளிச்சியான பகுதிக்கு போயிடுச்சா?//(அந்த இடமே சுற்றுலா தளம்தானே)

    பின்லேடன் இருந்த இடம் அடந்தகாடோ அல்லது தப்பிக்க ஏதுவான இடமோ இல்லை. அந்த வீட்டைச் சுற்றிலும் வெட்ட வெளியாக இருந்தும் பின்லேடனை ஏன் உயிரோடு பிடிக்கவில்லை?

    பின்லேடனின் உடலை ஏன் கடலில் வீசினார்கள்? எரிக்கக்கூட அமெரிக்காவிடம் காசில்லையா அல்லது என்ன இல்லை?

    பின்லேடனின் சடலத்தின் புகைப்படத்தை ஏன் வெளியிட மறுக்கிறது அமெரிக்கா?

    வெளியிடப்பட்ட புகைப்படத்தின் மீதான பல சந்தேகங்கள்…. இந்த சுட்டிகளைப் பார்க்கவும்.
    http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1605

    http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1625

  2. நக்கிப் பிழைக்கும் ஜெயாவும்,கருணாவும் இருக்கும் வரை,தமிழன் தலை நிமிர முடியாது!

  3. உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.நா. சபை அறிக்கையின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன…..

    பதில்?

Leave a Reply

%d bloggers like this: