கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்?

cricket-ball1

ஆட்டக்காரர்களை வீரர்கள் என்பது கேவலமானது என்பதால், ஆட்டக்காரர்களை ஆட்டக்காரர்கள் என்றே குறிப்பிட்டு இருக்கிறேன்.

 

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் 8 ஆட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கினறன.

 திட்டமிட்டு இலங்கை ஆட்டக்காரர்கள் மீது மட்டும் தாக்குதல் நடந்திருப்பதால், இந்த பழியை பாகிஸ்தான் மீது போட்டு, ‘பாகிஸ்தானில் சர்வேதச இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துவருவது, இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.’ என்று அறிவித்து பாகிஸ்தானில் தீவிரமாக மூக்கை நுழைக்க அமெரிக்க முயற்சிக்கலாம்.

 மும்பை குண்டு வெடிப்பில், பாகிஸ்தானை `கார்னர்` செய்த அமெரிக்க, இந்த முறை இந்தத் தாக்குதலை வைத்து மிகத் தீவிரவமாக பாகிஸ்தானுக்கு எதிராக இயங்க அதிக வாய்ப்பிருக்கிறது.

 ஆக, இந்த தாக்குதலை தீவிரவாதிகள் பெயரில், அமெரிக்க தீவிரவாதமே செய்திருக்க அதிக வாய்பிருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினையான இந்த விவகாரத்தில்,  இன்னும் சில மணிநேரங்களில் அமெரிக்க மூக்கை நுழைத்து கருத்து சொல்வதின் மூலம் அது நிரூபிக்கப்படலாம்.

 இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு காரணமாக இருக்கிற இந்திய அரசு, பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை கொஞ்சமும் கூச்சமில்லாமல் வன்மையாக கண்டிப்பதின் மூலம், அமெரிக்காவிற்கு பாகிஸ்தானை காட்டிக்கொடுக்கலாம்.

 காட்டிக் கொடுப்பதற்கு என்ன தகுதி வேண்டும்?

ஞானம் இருந்தால் போதும்.

இந்தியாதான் ஞான பூமியாயிற்றே?

இங்கே ‘ஞாநி’ களுக்கா பஞ்சம்?

14 thoughts on “கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்?

 1. இது பாகிஸ்தான் அமெரிக்க கூட்டுச் சதியாகவும் இருக்கலாம்!
  இந்தியா மீது பழி போடுவதற்காகவும் மும்பை தாக்குதலை திசை திருப்புவதற்காவும் இப்படி ஒரு தாக்குதல் நாடகம் நடத்தப்பட்டிருக்கலாம்!

 2. இந்தியாதான் ஞான பூமியாயிற்றே?

  இங்கே ‘ஞாநி’ களுக்கா பஞ்சம்?//

  ஆமாம் சிதம்பரம் சொல்லிவிட்டார் வீரர்களுக்கு சரியான பாதுகாப்பு தரவில்லை என்று…

  இந்தியாவில் நடக்கும் போது இவர் ஒத்துகொள்வாரா?? வழக்கம் போல் உலவுதுறை முன்கூட்டியே தெரியபடுத்தியது மாநில அரசின் கவனகுறைவு என்று சொல்லிவிடுவாரா??

 3. சில போக்கிரிகளின் கேவலமான செயல் இது.தாக்குதலோ, போராட்டமோ இல்லாத நாளே பாகிஸ்தானில் இல்லை எனலாம். பாக் அரசு செய்வதறியாது நிற்கிறது. இனி என்னென்ன நடக்கப் போகிறதோ.. நீங்கள் சொல்லும் அமெரிக்க படையெடுப்பும் சாத்தியமாகலாம் !!!
  நம்ம ஆளுங்கள என்னனு சொல்றது… எல்லாம் பச்சோந்திகள் 🙁

 4. உங்களிடமிருந்து இது போன்ற சிறுபிள்ளைத்தனமான பதிவு வருவது வருத்தமளிக்கும் விஷயம்.

 5. பாகிஸ்தான் அரசு இந்தியாவின் ரா அமைப்பை குற்றம் சாட்டி இருகிறது, இந்தியா தைன் மறுத்து இருகிறது. இது மும்பை தாக்குதலின் பதில் தாகுதலாம்.

 6. காது வழியா மூளை வழிஞ்சோடுது பாரு. தொடைப்பா. மூளையால யோசிக்கவே மாட்டீங்களா நீங்க எல்லாம்?

 7. எந்த கோணத்தில் வேண்டுமானாலும் இதை அலசலாம். இன்னும் சில நாட்களில் உண்மைகள் கசியலாம்.
  இது நேர்மையற்றோர்களின் உலகம். தீவிரவாத வேர்கள் ஆழ ஊடுருவ வளமான மன், இந்த உலகம்.

 8. ////ஆக, இந்த தாக்குதலை தீவிரவாதிகள் பெயரில், அமெரிக்க தீவிரவாதமே செய்திருக்க அதிக வாய்பிருக்கிறது.

  மெனகெட்டு உக்காந்து யோசீபீங்களோ!! அமெரிக்காகாரனுக்கு இப்ப சொந்த நாட்டிலே சூனியம் நடந்துகிட்டு இருக்கு .. இப்படி எல்லாம் அவன் யொசிக்க -நேரமில்லை நன்பரே .. இது ஜிகாதிகளால் நடத்தபடும் ஒரு கவன ஈர்ப்பு தாக்குதல்.. அது சரி அடிபட்டது சிங்கள காமவெறி கூட்டம் தானே .. விட்டு தொலைங்க..

 9. மதிமாறன் மிகவும் சிறுபிள்ளைத் தனமாய் இருக்கிறது இந்த பதிவு.

  துப்பாக்கிச் சூடு நடந்த சில மணிகளிலேயே எந்த வித ஆதாரமோ, தகவல்களோ இல்லாமல் பொதுவாய் இந்த குண்டுவெடிப்பிற்கு இந்தியாதான் காரணம் என்று திருவாய் மலர்ந்தாரே ஒரு பாகிஸ்தான் அமைச்சர், அது எந்தளவுக்கு பைத்தியக்காரத்தனமாய் எனக்கு பட்டதோ அதே அளவு பைத்தியக்காரத்தனமாய் இது படுகிறது.

  இது போன்ற பதிவுகள் உங்கள் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கிறது.

  http://blog.nandhaonline.com

 10. மதிமாறன் நீங்க எப்ப இந்த Pakistan I.S.I. கைக்கூலிகளான எ.மார்க்ஸ், சுப.வீரபாண்டியன், Sun TV வீரபாண்டியன், புதுச்சேரி சுகுமாரன் வரிசையில் சேர்ந்தீர்கள்.?

 11. ///
  ‘பாகிஸ்தானில் சர்வேதச இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துவருவது, இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.’
  ////
  இது உண்மை தானே
  சந்தேகமா??????

 12. இங்கே ‘ஞாநி’ களுக்கா பஞ்சம்?
  unmai than , ummai ponru payarel maatumee “mathi” ulla ‘ஞாநி’ களுக்கா பஞ்சம்?

Leave a Reply

%d bloggers like this: