கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

pict0001தோழர் கொளத்தூர் மணியுடன் நான்

ழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்  சார்பாக  மதுரை திருப்பரங்குன்றத்தில் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரி, சிங்கள அரசிற்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்து திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகில் 25-2-2009 அன்று மாலை 5 மணியளவில் கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணியோடு நானும் கலந்த கொண்டு பேசினேன்.

நாகை திருவள்ளுவன் (தமிழ்ப்புலிகள்) பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்) வழக்கறிஞர் நா. கதிர்வேல் (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) மு. தமிழ்க்கூத்தனார் (முற்போக்கு கவிஞர் பேரவை) முதல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்)  இவர்களும் பேசினார்கள்.

மு. கனகவேல் தலைமையும் பி.எம். ரவிச்சந்திரன் முன்னிலையும் வகித்தார்கள்.  நன்றியுரை  ஐ.வி. கணேசனும், த. செந்தில் நிகழ்ச்சியை தொகுத்தும் வழகங்கினார்கள்.

***

தமிழர்களின் இதய துடிப்பு என்று தனக்கு தானே அடைமொழி தந்துகொண்டு, தமிழர்களின் Heart attackஆக திகழ்கிற குமுதம் வார இதழில், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், உலகின் தலைசிறந்த ஜனநாயகவாதியுமான ‘ஞாநி’ வார வாரம் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருவது அறிந்ததே.

ஆனால், இந்த முறை ஏதோ ஒரு கூட்டத்தில்  தோழர் கொளத்தூர் மணி பேசியதாக ஒரு பேச்சை குறிப்பிட்டு, அவரிடம் கேள்வியை கேட்டிருக்கிறார்.  கேள்வியின் சாரம், ராஜிவ் கொலையை ஆதரிக்கிற நீங்கள், ஏன் மரணதண்டனையை எதிர்க்கறீர்கள் என்பதுதான்.

மரண தண்டனைக்கு எதிரான மனிதாபிமானம் என்ற முற்போக்கு மூலம் பூசப்பட்ட பாணியில் இருந்தாலும், அந்தக் கேள்வியின் உள்ளடக்கம், காட்டிக் கொடுக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான் `பெரியார் திராவிடர் கழக தலைவர்` என்பதோடு மட்டும் நிற்காமல், `விடுதலைப் புலிகளின் ஆதரவாளருமான கொளத்தூர் மணி` என்று அவரை அடையாளப்படுத்துகிறார், ‘ஞாநி’.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு பேச்சு. கைதாவாரா சீமான்?’ என்ற தினமலர் பாணியிலான பச்சை பார்ப்பனத் தனமானதாக இருக்கிறது. அந்தக் கேள்வி.

ஞாநி எப்போதுமே பார்ப்பனத் தன்மை உள்ளவராக இருக்கிறார் என்று நான் பலமுறை தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால் பெரியார் திராவிடர் கழகம் ஞாநியை ஒரு தோழமை சக்தியாகவே கருதிவந்தார்கள். அவருடைய ‘பெரியார்’ என்கிற படத்தை தங்கள் கழகத்தின் மூலமாக தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து திரையிட்டு, அவரையும் அழைத்து பல நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஞாநி, தமிழக முதல்வரை ‘திராவிட இயக்கத் தலைவர்’ என்கிற காரணத்திற்காகவே, மிகத் தரக்குறைவாக எழுதியபோது, தமிழகத்தில் மிகப் பரவலாக முற்போக்காளர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டார் ஞாநி. அப்போதும் பெரியார் திராவிடர் கழக இதழான புரட்சி பெரியார் ழுழக்கம் அவரை பற்றி விமர்சிக்கவில்லை. ‘தோழமையானவராக  இருக்கிறார்’ என்று பெருந்தன்மையோடே,  அவரை கண்டிக்காமல் விட்டார்கள்.

என்னுடைய வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழாவில் பேசிய தோழர் கொளத்தூர் மணியும், தோழர் விடுதலை ராசேந்திரனும் ‘ஞாநி’ யைப் பற்றி நான் விமர்சித்து எழுதியிருந்த, பல பதில்களை குறிப்பிட்டு பேசுவதைக்கூட தவிர்த்தார்கள். ஆனால், ஞாநி….

இந்த பெருந்தன்மை எல்லாம் ஞாநிக்கு துளியும் இல்லை.” என்று சிலர் கோபப்படலாம். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனென்றால் அவர் இந்தியாவின் மிக சிறந்த ஜனநாயகவாதி. ‘யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அதனால் தோழமையானவர்களை, தெரிந்தவர்களை விமர்சிக்கக் கூடாது, என்பது நேர்மையல்ல’ என்கிற கருத்தைக் கொண்டவர்.

“அப்படியா? நீங்கள் சொல்றது உண்மையாக இருந்தால், உலகநாயகன், ஆஸ்கார் நாயகன் என்று கோமளித்தனங்களை செய்து கொண்டிருக்கிற கமல்ஹாசனை, பார்ப்பன ஜாதி வெறி கொண்ட அசோகமித்தரனை எல்லாம் ஏன் அவர் ஜனநாயக முறைப்படி விமர்சிக்க மறுக்கிறார் என்று நீங்கள் கேட்கலாம்.

இதை என்னிடம் கேட்காதீர்கள். ஞாநியிடம் கேளுங்கள்.

குறிப்பு:

தோழர் கொளத்தூர் மணியை காட்டிக் கொடுத்து எழுதியிருக்கிற ஞாநி எழுத்தை உதாரணம் காட்டி காங்கிரஸ்கார்கள், “கொளத்தூர மணியை எப்போது கைது செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்கலாம். உடனே தோழர் கொளத்தூர் மணியை தமிழக அரசு `தேசிய பாதுகாப்பு சட்டத்தின்` மூலமும் கைது செய்யலாம். அப்படி தோழர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டால், அதற்கு முழு பொறுப்பும் ஞாநிதான்.

இன்னொரு குறிப்பு:

பாம்புக்கு பால் வார்த்தாலும் என்கிற பழமொழி ஒன்று தமிழில் இருக்கிறது. பாவம் பாம்பு அது என்ன செய்யும்? அதற்கு அறிவா இருக்கிறது-? இது பகுத்தறிவற்ற கேள்வி.

அதனால் அந்த பழமொழியை மாற்ற வேண்டும். அதை எப்படி மாற்றுவது என்று தோழர்கள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புடையவை:

‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல

சின்மயி விவகாரமும் ஞாநியின் பஞ்சாயத்தும்

ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

யார் வெறி நாய்?

விஸ்வரூப தந்திரம்

144 thoughts on “கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

 1. ‘நான் கடவுள்’ படத்தின் இயக்குநர் பாலாவை குமுதம் ஓ பக்கங்களில், விமர்சித்த எழுத்தாளர் ஞாநி, அப்படத்துக்கு கதை-வசனம் எழுதிய ஜெயமோகனைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை.

 2. பெரியார் திராவிடர் கழகத்தினர் பார்ப்பனீயத்துக்கு விளக்கம் தெரியாமலே ஞானியின் பெரியார் நாடகத்தை தமிழகமெங்கும் போட்டனர்,அதில் கூட பல விமர்சனங்கள் உண்டு.அதில் பெரியார் காந்தியை ஆதரித்தவரென்றும் அவரினைப்பற்றிய பல விசயங்களையும் சொல்லாது மறைத்து இருந்தார். கேள்வி கேட்டதற்கு பெதிக நண்பர் சொன்னார் ” அவர் பொதிகை தொலைக்காட்சி அனுமதிக்கப்பட்ட அளவில் தான் எடுத்தார் என சப்பை கட்டு கட்டினர்,

  விபி சிங் ஐ விமர்சனம் செய்ததற்கு பார்ப்பனீயம் என பேசியவர்கள்,தவிப்பு ஞானியோடு தான் பல்லாண்டு பெரியாரியத்தை வளர்த்தார்களா என்பது கேள்விக்குறி.

  சுயவிமர்சனத்தை கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அது மட்டும்தான் செழிப்பாக்கும் அதை விடுத்துவிட்டு இதையும் பார்ப்பனீயம் எனச்சொன்னால் நாம் ஒன்றும் சொல்லமுடியாது.

 3. ஆரம்பத்தில் ஞானி மீது எனக்கு ஒரு சிறிய மதிப்பு இருந்தது .
  ஆனால் அது எப்போதோ குறைந்து விட்டது.
  தன்னை ஒரு ஜனநாயக வாதியாக ,மனிதஉரிமை ஆர்வலராக ,ஒடுக்கப் பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவராக அவர் காட்டிக்கொள்ள நினைத்தாலும் அவரது முகமூடி கிழிந்து பல காலமாகிவிட்டது.
  முதல்வர் கருணாநிதியை ,எப்போதும் விமர்சிக்கும் அவர் (அவருடைய கலைஞர் பற்றிய விமர்சனம் சிலசமயங்களில் உண்மை என்றாலும் ),ஏன் ஜெயலலிதாவை அப்படி கடுமையாக விமர்சிப்பதில்லை.?
  அவருடைய எழுத்துக்கள் சில வேளைகளில் அவருடைய மனத்தின் காழ்ப்புணர்வையும் உண்மையையான மன உணர்வையும் மறைக்கின்றதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது.
  கிளிநொச்சி விழுந்தபோது ஏன் கலைஞர் கவிதை எழுதவில்லை என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார்.
  அந்த கேள்வி கலைஞரை லேசாக நக்கல் அடிப்பதற்காகக் கேட்கப்பட்ட மாதிரி இருந்தாலும் ,கிளிநொச்சி சிங்கள அரசால் கைப்பற்று விட்டது என்ற தனது உள்மன மகிழ்ச்சியினாலும் , ஈழத்தமிழ் மக்களின் தோல்வியைக் கண்டதால் வந்த புளகாங்கித உணர்வாலும் வந்த கேள்விதான் இது.
  அமெரிக்க தலைவர்கள் பற்றி எழுதுபவர் ,தனது பக்கத்து நாடான இலங்கையில் அந்த அரசு நடத்தும் இனஅழிப்பு போர் பற்றியோ ,இலங்கை அரசு ஊடகவியலார்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை பற்றியோ ஒன்றும் எழுதவதில்லை.அங்கு எத்தனை ஊடகர்கள் கொல்லப்பட்டார்கள் ,கடத்தப் பட்டார்கள்,பொய் வழக்கில் கைது செய்யப் பட்டு கொடுமை செய்யப் படுகிறார்கள் தானும் ஒரு ஊடகவியலாளர் ,ஊடக சுதந்திரம் ,ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசுபவர் என்ற முறையில் என்ன செய்திருக்கிறார்.? இந்த விஷயத்தை பற்றி இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தாரா?
  என்னைப் பொறுத்த வரையில் இவருக்கும் ,இவர் விமர்சனம் செய்யும் அரசியல் வாதிகளுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை.

 4. தோழர், இந்தப் பதிவில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். இந்தப் பதிவோடு நேரடியாக தொடர்பில்லாதபோதும், பெரியார் திராவிடர்கழகத்தின் செயல்பாடுகளைக் கொஞ்சம் உரசிப்பார்க்கும் எனது பதிவு ஒன்றின் சுட்டியை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்.

  பெ.தி.கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், புதிய ஜனநாயகத்துக்கு பார்ப்பன பட்டம் சூட்டி முழுக்க முழுக்க அவதூறுகளாலான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதனை தருக்க ரீதியாக மறுக்கும் கடமையை உணர்ந்து நான் பதிந்த பதில்தான் மேற்கண்ட சுட்டியிலுள்ள பதிவு.

  பார்ப்பன-இந்துவெறிக்கும் ஜெயேந்திரனுக்கும் ஒத்தூதிக் கொண்டிருந்த ஞாநியை ‘தோழமையோடு இருக்கிறார்’ என்ற காரணத்திற்காக விமர்சிக்காமல் இருந்த பெ.தி.கழகம், ஜெயேந்திரன் கைதானபோது அவனது குற்றங்களை அம்பலப்படுத்தி, அதனுள் இருந்த பார்ப்பன-இந்துவெறி சதிவலைகளையும் மக்கள் முன் எடுத்துவைக்கும் பிரச்சார இயக்கத்தை நடத்திய ம.க.இ.க., புதிய ஜனநாயகத்தை காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு செய்தது சரி என்று கருதுகிறேன். ஞாநியின் தோழர்களால் புரட்சிகர சக்திகளை வேறெப்படி மதிப்பிட முடியும்?

  பெரியாரியத்தை வீரமணியின் கொட்டடியிலிருந்து மீட்டெடுத்த தோழர்கள் என்று பெ.தி.க. குறித்து நான் கொண்டிருந்த நல்ல மதிப்புகள் சரியும் வண்ணம் இருக்கிறது அவர்கள் ஞாநி போன்றவர்களை ‘தோழமையோடு பராமரிப்பது’. ஒருவேளை ஞாநி முற்போக்காளன் என்கிற அடையாளத்தோடு இருந்த காலகட்டத்தில் தோழமை பாராட்டியிருந்தால் கூட நாம் சகித்துக்கொள்ளலாம். அவன் முழுக்க அம்பலமாகிவிட்டபிறகும் அவனுடன் ‘தோழமை’ பேனுவதற்கு எந்த முகாந்திரமுமில்லை, பச்சையான சந்தர்ப்பவாதத்தைத் தவிர.

  ஞாநி, கொளத்தூர் மணியைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுளதைப் போல, நயவஞ்சக எண்ணத்தோடு எழுதியது, அவனது பார்ப்பனக் கொழுப்பின் எதார்த்தம். அவனைப்பற்றி நன்றாக தெரிந்திருந்தும், விமர்சிக்காமல் மவுனம்காத்த பெ.தி.க.வின் விடுதலை ராசேந்திரனும், கொளத்தூர் மணியும் எதார்த்தவாதிகள் அல்ல!

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 5. ///
  ‘நான் கடவுள்’ படத்தின் இயக்குநர் பாலாவை குமுதம் ஓ பக்கங்களில், விமர்சித்த எழுத்தாளர் ஞாநி, அப்படத்துக்கு கதை-வசனம் எழுதிய ஜெயமோகனைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை.
  ///

  அது தான் ஞாநியும் ஜெயமோகனும் சந்தித்துக்கொள்ளும் மையப்புள்ளி. ஞாநியின் புதிய இணையதளத்துக்கு தன்னுடைய இணையதளத்தில் தொடர்பு கொடுத்திருக்கிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இவர்களுடைய யோக்கியதையை.

  நீங்கள் கேட்ட இதே கேள்வி எனக்கும் தோண்றியது. அதைக் குறித்து ஒரு பதிவும் எழுதியிருந்தேன். பச்சை சந்தர்ப்பவாதி என்பதைத் தவிற வேறு என்ன சொல்வது அந்த ஆளை.

 6. //அதை எப்படி மாற்றுவது என்று தோழர்கள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//

  ”புட்டி நிறைய மை கொடுத்தாலும் மலத்தைக் கரைத்துத்தான் பேனாவை நிரப்புவேன் என்கிறார்”

  இது ஓரளவுக்குப் பொருந்துமா பாருங்கள் தோழர்.

 7. உங்கள் தொடர் கட்டுரைகளைப் படித்தவுடன்
  ஒரே ஒரு கேள்வி மட்டும்தான் தொக்கி நிற்கிறது…?
  எதையும் சாதி ரீதியாகத்தான் பார்க்க வேண்டுமா…?
  அதுதான் விஞ்ஞான பார்வையா…? நீங்கள் அதைதான்
  அளவுகோலாக வைத்து இயங்குவது போல் தெரிகிறது..
  நான் சொல்வது சரியா…? என்பதை தெரியப் படுத்தவும்…
  கந்தசாமி…

 8. “எதையும் சாதி ரீதியாகத்தான் பார்க்க வேண்டுமா…?”

  உங்களுக்கு விளங்க மாட்டேங்கிறது, சாதி உணர்வு ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு செயலிலும் ஊறிக் கிடக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ அது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வலையுலக பாணியில் சொல்லப் போனால் கொண்டை வெளியே தெரிகிறது.

  தோழர் மதிமாறன் அத்தகைய முகமூடிகளை கிழிக்க மட்டுமே செய்கிறார் என்பது என் கருத்து.

  ———-

  கடும் குளிரில் உறைந்து கிடக்கும் பாம்பை பார்த்து அடங்கி விட்டது என்று நம்பி விடாதெ, கோடை காலம் வந்தால் தெரியும் செய்தி –

  இது பொருந்தாதா?
  சொல்லுங்கள்

 9. அந்த ஆளை விடுங்க,
  ஞானியை பற்றி பிறகு பேசலாம்.
  உங்கள் கருத்தில் எனக்கும் கூட‌
  வேறுபாடு் கிடையாது.

  ஆனால் நீங்கள் இந்த கட்டுரையை
  யாருக்காக எழுதியுள்ளீர்கள்,
  இதன் மூலம் யாரை அம்பலமாக்குகிறீர்கள் ?

  ஞானி பார்ப்பான் தான்,
  ஆனா அவன் பார்ப்பான்னு ஒரு தனி
  நபரான உங்களுக்கும் எனக்குமே தெரியும் போது
  பெரியார் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும்
  கட்சி என்று சொல்லிக்கொள்கிற பெ.தி.க வுக்கு
  ஒரு பார்ப்பானை கூட கண்டுபிடிக்க முடியவில்லையே
  அது ஏன் ?

  எல்லாவற்றையும் பகுத்தறியும் பகுத்தறிவாளர்களான
  நம்ம பெ.தி.க தோழர்களுக்கு நீங்கள் இத்தனை
  வருடமாக கூறியும் அவன் பாப்பான்னு
  அவர்கள் ‘மண்டை’யில் ஏறவில்லையே ஏன்?
  அவர்கள் பக்கம் என்ன தவறு இருக்கிறது என்று
  நீங்கள் கூறவேயில்லையே, ஏன் ?

  ஒரு விசயத்தை இப்படி தான் பரிசீலிப்பீர்களா ?

  ஆனால் புதிய ஜனநாயகத்தில் பார்ப்பனியம் என்று
  மட்டும் விடுதலை ராசேந்திரனுக்கு பேசத்தெரிகிறதே
  அது எப்படி?

  உங்கள் கருத்துக்களில் நேர்மை இல்லை என்று நான்
  கருதுகிறேன்.

  நீங்கள் ஒரு நிகழ்வில் ஏற்பட்ட‌ தவறுகளை பரிசீலிக்கும்
  போது அதன் இரு தரப்புகளையும் தான் ஆய்வுக்குட்படுத்த
  வேண்டும்.ஆனால் நீங்கள் இங்கே அவ்வாறு செய்யவில்லை.
  நீங்கள் ஏன் அவ்வாறு அவர்களையும் விமர்சனம் செய்யவில்லை
  என்று நான் கருதுகிறேன் என்றால், நீங்கள் பெ.தி.க வை
  காப்பாற்றுவதாக‌ கருதிக்கொண்டு இவ்வாறு ஒருபக்க சாய்வுடைய ஒரு விமர்சனத்தை இங்கே வைத்துள்ளீர்கள் இந்த விமர்சனம் சரியான விமர்சனம் அல்ல‌ என்பது தான் எனது கருத்து.

  நீங்கள் எமது கருத்துக்களை இருட்டடிப்பு செய்யாமல்
  நேர்மையாக வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

  ஏற்கெனவே தோழர் ஏகலைவனுடைய பின்ணூட்டத்தை
  நீங்கள் இதுவரை வெளியிடாமல் நிறுத்திவைத்துள்ளதாக‌
  கேள்விபட்டோம்.எனவே தான் இந்த ரெக்வியூஸ்ட்.

 10. ஞாநியின் ஞானம் இது “ஓ”!

  இந்த வார குமுதத்தில் தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு எதிராக ஒப்பாரி வைத்து காட்டிக் கொடுக்கும் வேலையை மிகத் தந்திரமாக ஜனநாயக பேச்சுரிமையை முன் வைத்து ´குள்ள நரி´ வேலை செய்திருக்கிறார் திருவாளர் ஞாநி. பெரியார் திராவிடர் கழக தலைவரோடு, “விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்” என்று அடையாளப்படுத்தி உள்குத்து வைத்து கேள்விகளை வீசியிருக்கிறார்.

  கேள்விகளுக்கு தோழர்கள் ஆயிரம் பதில்களை அள்ளிவீச தயாராக இருக்கிறார்கள். உங்களுக்கு பதில் சொல்லும் யோக்கியதை இருக்கிறதா?

  சில மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் உதைவாங்கிய சிங்கள இயக்குனருக்கு ஆதரவாக, நடந்த நிகழ்ச்சியை ´வன்முறை´ என்று ஆவேசப்பட்ட உங்களுக்கு, 6000- ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், 1000- பெண்கள் பாலீயல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கிய இந்திய இராணுவத்தின் வெறியாட்டத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனைதான் ராஜீவ் காந்தியின் மரணம். அவை படுகொலையல்ல தண்டனை என்று தோழர் கொளத்தூர் மணி ஓர் கூட்டத்தில் பேசியதை வன்மம் என்று எந்த நடுநிலை பார்வையில் கேள்வி கேட்கிறீர்கள்?

  ராஜீவ் காந்தியின் மரணத்தை ´படுகொலை´ என்னும் வாதத்தில் ஞானியின் கருத்துக்கள் இருக்கும் போது, ராஜிவ் கொலையில் கைதானவர்களுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கமும், கருணை மனுக்களையும் ஞாநி ஆதரித்தது எந்த வகையை சேர்ந்தது?

  குழம்பிய குட்டையை குழப்பி குழப்பி ஞானத் தெளிவை வெளிபடுத்த முற்படுவதை தோழர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெ.தி.கழகத்தின் சார்பாக பல மேடையேறி உரையாற்றியவர் இன்று காங்கிரஸ் கட்சிக்கு தோழர் கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கிறார். இவ்வளவு பேசிய இவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டாமா என்னும் தொனியில் ´ஓ´ போட்டிருக்கிறார் நாரதர்.

  பார்ப்போம், இதை வைத்துக் கொண்டு தமிழகத்தில் என்ன கூத்து நடக்கப்போகிறது என்று. இருப்பினும், ஞாநியின் ஞானம் சில காலமாகவே சர்ச்சைக்குள் விழுந்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக உரிமை கருத்துச் சுதந்திரம் பேசும் ஞாநி நடுநிலை தவறி பல காலங்களாகிவிட்டது என்பதை ஞாநியின் எழுத்துக்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் சமூகவாதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. தன்னுடைய வரட்டுக் கௌரத்தை ஞாநி ´சுய விமர்சனம்´ செய்வது அவருடைய தடம்புரளும் நடத்தைக்கு நல்லது.

  தமிழச்சி
  28/02/2009

  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1010

 11. //அதை எப்படி மாற்றுவது என்று தோழர்கள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
  keep writing

 12. வைதீகப் பார்ப்பானை விட லவுகீகப் பார்ப்பானிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .

  பார்ப்பனர்களின் தன்மை எத்தன்மையது என்பது பற்றி பெரியார் அவர்கள் 23.4.1957 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதற்கு பதிலளித்துப் பேசியதிலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறேன். இதோ அது..

  “பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், பார்ப்பனரல்லாதார்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்கவிடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ, காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட நாட்களாக செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக் காட்ட முடியும்… ”

  1957 இல் மட்டுமல்ல 2009 -லும் பார்ப்பனர்கள் மாறாமல் அப்படியே இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு உதாரணம்.

 13. When this same gyani criticized president abdul kalam and Lk advani, all this modern. leftist, liberal, mkik, mkec, tlec, abcd groups celebrated by quoting from his writings in their speeches and articles.

  today, same gyani, when he comments on these groups, they get angry. what a hypocritic idiots!?

  PARAMS

 14. //எல்லாவற்றையும் பகுத்தறியும் பகுத்தறிவாளர்களான
  நம்ம பெ.தி.க தோழர்களுக்கு நீங்கள் இத்தனை
  வருடமாக கூறியும் அவன் பாப்பான்னு
  அவர்கள் ‘மண்டை’யில் ஏறவில்லையே ஏன்?//

  பெரியாரைப் பற்றி ஒரு தொலைக்காட்சித் தொடரை எடுத்த ஞானியை வைத்து அந்தத் தொடரை பல்வேறு ஊர்களில் திரையிடும் நிகழ்ச்சியை பெ.தி.க தோழர்கள் நடத்தினோம். அவர் பார்ப்பனர் என்பதைத் தெரிந்து, அவர் எடுத்த தொலைக்காட்சித் தொடரை மட்டுமே பயன்படுத்தினோம்.

  இனத்துரோகியான தி.க. தலைவர் வீரமணி அவர்கள் எடுத்த பெரியார் படத்திற்கு அரசு நிதி வழங்கியபோது அதைக் கண்டித்துப் பேசிய பார்ப்பன நடிகன் எஸ்.வி.சேகர் கொடும்பாவியை தமிழகமெங்கும் பெ.தி.க தோழர்கள் கொளுத்தினோம். அந்தப் படத்தை பார்க்குமாறு மக்களிடையே பிரச்சாரமும் செய்தோம். அந்தப் படத்தின் மீதும், படத்தை எடுத்த தலைவர் வீரமணி மீதும் எங்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் உண்டு. அந்த பெரியார் படத்தை பார்க்க பிரச்சாரம் செய்ததற்காக எங்களை தி.கவில் இணைத்துப் பார்க்கமுடியாது. வீரமணி அவர்களின் துரோகங்களை மறந்துவிட்டோம் என்ற பொருள் ஆகாது.

  ஞானியின் பெரியார் தொடரை ஒளிபரப்பிய நாங்கள்தான் கடந்த ஏப்ரல் 11 ஆம் நாளில் தோழர் பெரியார் வலைப்பதிவில் ஞானியின் பேனாவைப் பூணுால் தடுக்கிறதோ (http://thozharperiyar.blogspot.com/2008/04/blog-post.html) என்ற பதிவை போட்டோம். சிங்கள இயக்குநர் துசாரா பெய்ரீஸ் பெ.தி.க தோழர்களால் ஜெமினி லேபில் துவைத்து பிரிண்ட் போடப்பட்ட போது துடித்து எழுந்தான் ஞானி. அந்தத் துடிப்பைக் கண்டித்துத்தான் அப்பதிவு எழுதப்பட்டது. அப்போது ம.கஇ.க தோழர்கள் இணையத்தில் என்ன செய்தார்கள் என அறிய விரும்புகிறேன்.

  இன்று தமிழீழம் என்று சொல்லப் பயந்து சுயநிர்ணயஉரிமை என்றெல்லாம் மாற்றிப்பேசுபவர்களைப்போலவேதான் ஞானியும் பேசுபவார். ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சியாக சுதந்திர இந்தியா உருவாக்கப்படவேண்டும் என்பதை ஆதரித்து எழுதியவர்தான். அது தொடர்பாக அவர் குமுதத்தில் எழுதியபோது அதற்கு பதிலடியாக
  ஞானிகள் ஜாக்கிரதை (http://thozharperiyar. blogspot. com /2008/04/blog-post_12.html) என்ற பதிவையும் போட்டுள்ளோம்.

  தோழர் அசுரன் அவர்கள் தி.க தலைவர் வீரமணி அவர்களை மாமாவீரமணி என்று எழுதியபோது தோழர் வரவனையன் உட்பட்ட சில தோழர்கள் அசுரனுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஒரு பார்ப்பானை பொறுப்பாளராகக் கொண்ட ம.க.இ.க வீரமணியைத் திட்ட அனுமதிக்கக்கூடாது என வரவனையன் வாதிட்ட போது அவரது பதிவில் ம.க.இ.க வின் நிலையை ஆதரி்த்து கருத்து தெரிவித்தவன் நான். மற்றும் சில பெ.தி.க தோழர்கள் உள்ளோம். அதற்காக ம.க.இ.க வில் தலைமைப் பொறுப்பில் பார்ப்பனர்கள் உள்ளனர் என்பதை மண்டையில் ஏற்றாமல் உள்ளோம் என்று பொருள் இல்லை.

  ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வைத்து பொடா எதிர்ப்பு மாநாடு நடத்தியிருக்கிறோம். அதே இளங்கோவன் புலிகளை விமர்சித்த போது அவரது சொந்தத் தொகுதியில் ஓட ஓட விரட்டியிருக் கிறோம். காவல்துறை உதவியோடு மாறுவேடத்தில் தப்பி ஓடினார் இளங்கோவன்.

  அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு கலைப்போராளி என்று பட்டமளித்து மகிழ்ந்தோம். ஆனால் பெரியாரை மறுபரிசீலனை செய்யவேண்டும், காவடி துாக்குவது / அலகு குத்துவது இவையெல்லாம் முடநம்பிக்கை ஆகாது அவை தமிழனி்ன் அடையாளங்கள் என்று பேசியபோது அண்ணன் அறிவுமதி அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளோம்.

  சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ம.கஇ.க வின் பணிப் பாராட்டினோம். துணை நின்றோம். அதே சமயம் வி.பி.சிங் குறித்த மாற்றுக் கருத்துக்களையும் வைக்கிறோம்.

  பார்ப்பன ஞானி மட்டுமல்ல. இன்னும் சில பார்ப்பனர்களை / தமிழர்களை அவர்கள் பெரியாரியலுக்கு / ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கும்போது பாராட்டியிருக்கிறோம். எதிராக மாறும் போது எதிர்த்திருக்கிறோம்.

  ராஜீவ் – கொலை அல்ல, மரண தண்டனை என்ற விவாதம் தொடங்கப்பட்டு உள்ளது. அதை வளர்த்து விடுங்கள். திசை திருப்ப வேண்டாம். நன்றி- அதி அசுரன்

 15. //ராஜீவ் – கொலை அல்ல, மரண தண்டனை என்ற விவாதம் தொடங்கப்பட்டு உள்ளது. அதை வளர்த்து விடுங்கள். திசை திருப்ப வேண்டாம். நன்றி- அதி அசுரன்//

  இதையும் ம.க.இ.க வினர்தான் முதலில் சொன்னவர்கள். அதுவும் ராஜீவ் இறந்தவுடன். விடுதலை ராஜேந்திரனுடைய கருத்துக்கு பதில் கீற்று தளத்தில் உள்ளது அந்த விவாத்ததை முதலில் நடத்துங்கள். பெ.தி.க வினர் அதை பாதியில் விட்டுவிட்டனர். தவிர அதி அசுரனுடைய மறுமொழிக்கு பதிலாக இதை இங்கு சமர்பிக்கிறேன்
  /////‘காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, “குற்ற”ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை ‘துக்ளக் சோ’, ‘சு.சாமி’ கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். ‘பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது’ என்று “அவாள்”கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து./////
  மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசித்துப் பாருங்களேன். இது பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், புதிய ஜனநாயகத்துக்கு எதிராக கட்டியெழுப்பியுள்ள மணற்கோபுரம்!
  “பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்து மதவெறியர்களுக்கு அனுசரனையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்” என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் விமர்சனம், எப்படி பார்ப்பனியத்தைக் குளிர்விக்கும்? பார்ப்பன-இந்துவெறியர்களை ஆதரித்தவன் என்று ஒருவனைக் குற்றம் சாட்டினால், பார்ப்பனியவாதிகளுக்கு நம்மீது ஆத்திரம் வருமா, வராதா; என்பதை நீங்களே (வேறாருமல்ல இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்தான்) சொல்லுங்கள். ஆனால், இப்போது ஆத்திரம் விடுதலை ராசேந்திரனுக்கு வருகிறதே, அது ஏன்? இதனை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன-இந்துவெறியர்களை எதிர்த்து எழுதப்பட்டிருப்பதை அவதூறு செய்வதனால், விடுதலை ராசேந்திரனுக்கு பார்ப்பன ஆதரவு கண்ணோட்டம் இருப்பதாக நாமும் சொல்லலாமா? இல்லையா? ஆனால், அப்படியெல்லாம் நாம் சொல்லவில்லை. அது சரியான மதிப்பீடும் அல்ல என்பது விடுதலை ராசேந்திரனுக்குத் தெரியாது; நமக்குத்தான் தெரியும்.
  பிறகு ஏன், பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் ‘புடம்போடப்பட்ட(!)’ விடுதலை ராசேந்திரன் இவ்வாறு எழுத வேண்டும், என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
  ’சமூக நீதி’க் காவலராக திராவிடக் கட்சிகளாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் ’தலித்’ அரசியல் பேசுபவர்களாலும் போற்றப்படும் வி.பி.சிங்கின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் “காக்கை குயிலாகாது…” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அக்கட்டுரை வி.பி.சிங்கிற்கு எதிராக வைத்திருக்கும் கேள்விகளில் சிலவற்றை இங்கே (தேவை கருதி) பட்டியலிடுகிறேன்.
  1. சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் “பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி’ என்று கொண்டாட முடியுமா?
  2. காங்கிரசில் இருந்தபோது அவசரநிலை பாசிச ஆட்சியை அவர் தீவிரமாக ஆதரித்ததையோ, அவருடைய குருநாதர் சஞ்சய்காந்தி காட்டுமிராண்டித்தனமாக முசுலிம்கள் மீது பாய்ந்து குதறியபோது அதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததையோ, மனித உரிமை பேச காஷ்மீர் வரை போகும் அ.மார்க்ஸ் ஏன் கண்டுகொள்வதில்லை?
  3. அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், வி.பி.சிங்கின் அவசரநிலை ஆதரவை தி.மு.க. ஏன் விமர்சிப்பதில்லை?
  4. 1980இல் இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான், உ.பி. அரசின் ஆயுதப்படை போலீசு மொராதாபாத் முசுலிம்களை இனப்படுகொலை செய்து, இந்தியாவின் மதக்கலவர வரலாற்றில் புதுப்பரிணாமத்தை உருவாக்கியது. இவரின் ஆட்சியில்தான் ஆதிக்க சாதிப் பண்ணையார்களின் சட்டவிரோத ஆயுதப்படைகள் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தன. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் “நிலைமை விரைவில் சரிசெய்யப்படும்’ என்ற வெற்று அறிக்கையைத் தவிர, இவர் செய்தது எதுவுமில்லை. கான்பூருக்கு அருகேயுள்ள தஸ்தம்பூர் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, 1982இல் இவர் பதவி விலகவேண்டி வந்தது. 1984 சீக்கியப் படுகொலைக்காக 1989இல் மன்னிப்புக் கேட்ட வி.பி.சிங், தனது ஆட்சியில் கொலையுண்ட முஸ்லிம்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோருக்காகவோ மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்பது தொல்.திருமாவுக்கோ, தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்திற்கோ தெரியாதா?
  இன்னும் ஏராளமான, உறுதியான தருக்கங்களுடன் புதிய ஜனநாயகத்தின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. (நேரமிருப்பவர்கள் மேற்கண்ட சுட்டியை அழுத்தி படித்துக் கொள்ளலாம்) இக்கட்டுரைக்கு மறுப்பு என்கிற பெயரில் ”வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்” என்கிற தலைப்பில் ‘பார்ப்பனவாதி’ என்று எமது தோழர்களை வசைபாடியிருக்கிறார், விடுதலை ராசேந்திரன். ஆனால், அவருடைய அந்த நீண்ட பதிவினூடாக மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
  மேற்கண்ட பு.ஜ. கேள்விகளுக்கு [வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று ‘புதிய ஜனநாயகம்’ கேள்வி எழுப்புவது – அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி – காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.] என்கிற வரிகளைத்தான் தனது அதிகபட்ச பதிலாகத் தந்திருக்கிறார்.
  இடஒதுக்கீட்டையும், அதனைச் சாதித்தார் என்று வி.பி.சிங்கையும், ‘காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் அதனால் அவர்தான் தேசத் தந்தை’ என்று சொல்வதைப் போல உருவகப்படுத்தி முட்டுக்கொடுத்து நிறுத்தப் படாதபாடுபட்டிருக்கிறார். அதன் பொருட்டு தான் பு.ஜ.வுக்கு பார்ப்பன பட்டம் சூட்டி, அகமகிழ்ச்சி கொள்ள முயன்றிருக்கிறார் பாவம்!
  பார்ப்பன-வருணாசிரம படிநிலைகளில், பார்ப்பனன், சத்திரியன், வைசியன் ஆகிய வருணத்தாருக்கு சேவை செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்தனர் சூத்திர, பஞ்சம, சண்டாள வருணங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள். அந்த உழைக்கும் மக்களை சட்ட நிருவாகத்தின் மூலம் மிரட்டிப் பணியவைத்து, உழைப்பையும் உடமைகளையும் சுரண்டிக் கொடுத்து பார்ப்பன சேவையாற்றியதைத் தவிர வேறொன்றும் செய்யாத பிறவருணத்தவர்களை இடஒதுக்கீட்டின் மூலம் சூத்திரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தந்ததுதான் இவர்கள் வழிபடும் நீதிகட்சி முதல் வி.பி.சிங் வரையிலான ‘சமூக நீதி’ அரசுகளின் சாதனையாக இருக்கிறது. அதேநேரத்தில் வெகுசில பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இதன்மூலமாக சலுகைகளைப்(உரிமைகளை) பெற்றிருந்தாலும், இதனைச் சாதனையாக ஏற்கமுடியாது, இவை வெறும் சீர்திருத்தம் மட்டுமே. இந்த சீர்திருத்தத்தால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. இதனாலேயே இவர்கள் முன்னிறுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்பது பு.ஜ.வின் அழுத்தமான நிலைப்பாடு. இதனை, இடஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை என்கிற சிறு வெளியீட்டின் மூலம் ஏற்கெனவே நேரடியாகப் பதிவு செய்திருக்கிறது புதிய ஜனநாயகம்.
  ஆயிரமாண்டுகளாக நமது சமூகத்தை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்திய பார்பன கும்பலுக்கும், அவர்களின் எடுபிடிகளாக, அடியாளாக இருந்து கொண்டு நம்மக்களை அடிமை படுத்திவந்த ஆதிக்கசாதிக் கூட்டத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் இந்த ‘இட ஒதுக்கீடு’ குறித்த குழாயடி சண்டையில் புரட்சிகர அமைப்புகளுக்கு என்ன வேலை இருக்க முடியும்? ஆளூம் வர்க்கச் சேவையாற்றுவதற்கு நடக்கின்ற போட்டா போட்டியில், இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை துடைத்தெறிவதற்கு போராடும் புரட்சிகர அரசியல் இவ்விருகூட்டத்தையும் முற்றாக அழிப்பதைத்தான் முன்னிறுத்த முடியும். முன்னிறுத்துவோம்; இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.
  இடஒதுக்கீட்டையும் அதனூடாக வி.பி.சிங்கையும் மேன்மை படுத்தி எழுதியிருக்கும் விடுதலை ராசேந்திரன், புரட்சிகர அமைப்புகளின், இடஒதுக்கீடு குறித்த மேற்கண்ட நிலைப்பாடுகளை குறைந்த பட்ச அறிவு நாணயத்தோடு பரிசீலித்திருக்கிறாரா என்கிற ஐயத்தையே அவரது பதிவு ஏற்படுத்துகிறது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பது நமது நோக்கமல்ல என்று தெளிவாக, அழுத்தமாக புதிய ஜனநாயகம் தெரிவித்திருக்கிறது. அதனை ஆதரிப்பதில் உள்ள பிரச்சினைகளையும் தொகுத்தளித்திருக்கிறது. அதன் மீதான விடுதலை ராசேந்திரனின் கருத்துக்கள் எதையும் நான் படித்ததில்லை. அவ்வாறு எதேனும் அவர் இதற்கு முன்னதாக எழுதியிருப்பாரேயானல் எனக்கு யாராவது அறியத்தாருங்கள்.
  இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை சுக்கு நூறாகப் பிளப்பதன் பொருட்டு வேலை செய்துவரும் புரட்சியாளர்கள், அதே ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரும்பான்மையான கேடுகளுக்கும் துணை நின்ற, ஆளுவர்க்கப் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்த வி.பி.சிங்கை மண்டல் பரிந்துரை என்கிற ஒன்றைக் கொண்டு ஒருபோதும் புனிதப்படுத்த முடியாது. போபர்ஸ் பீரங்கி ஊழல் என்றும் மண்டல் கமிசனென்றும் வி.பி.சிங் கூச்சலிட்டது ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டும்தான். இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு சிறு துரும்பளவேனும் பலனில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்காதரவாக குரல் கொடுப்பது முற்றிலும் பலனற்றது.
  ////////ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் – வி.பி.சிங் – புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த ‘சமூக நிலையைக் குலைத்து விட்டாரே’ என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான ‘சேற்றை’ பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா? //////////
  இங்கே நான் குறிப்பிட்டுள்ள புதியஜனநாயகத்தின் இடஒதுக்கீடு மீதான மதிப்பீடுகளை அறவே புறக்கனித்து, திருவாளர் ராசேந்திரன் ‘’ஏற்கெனவே இருந்த சமூக நிலையைக் குலைத்துவிட்டாரே…” என்று புதிய ஜனநாயகம் புலம்புவதாக எழுதியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த, இப்போது இருக்கின்ற சமூக நிலைமைகளை அடியோடு புரட்டிப் போடுவதுதான் புதிய ஜனநாயகத்தின் அரசியல் என்பது விடுதலையாருக்குத் தெரியாது போலும்! சொல்வது அவதூறாக இருந்தாலும் கொஞ்சமாவது பொருந்தச் சொல்ல வேண்டாமா?
  அடுத்து, ம.க.இ.க.வின் திட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு கைவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இது அவதூறுப் பதிவு என்பதற்கான ஒரு சோற்றுப் பதம். ”இந்து எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற பல்வேறு சூழல்களில் களப்பணிகளில் இணைந்திருக்கிறோம்….” என்பதாக இக்கட்டுரையினைத் தொடங்கியுள்ள விடுதலையார்தான், ம.க.இ.க. பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகவும் திரிக்கிறார். இதில் எது உண்மை அய்யா?!
  இவர் குறிப்பிட்டுள்ள 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு மட்டும் ம.க.இ.க. மேற்கொண்ட பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்வதாக இருக்கிறது இவரது இந்த கருத்து. 2003 –ல் தான் ”பார்ப்பனிய, மறுகாலணிய பண்பாட்டுப் படையெடுப்பிற்கு எதிரான போராட்டமாக”, பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
  இவர் மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குப் பிறகுதான் தில்லைப் போராட்டத்தினை ஆறுமுக சாமியைக் கொண்டு தொடங்கி இன்றுவரை அதே வேகத்தோடும் வீச்சோடும் நடத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களில் ம.க.இ.க.வின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்களுக்குத் தெரியும், உங்கள் கட்சியிலுள்ள கீழ்மட்ட அணிகளுக்கும் நன்றாகவே தெரியும், பாவம் உங்களுக்குத்தான் தகவல் ஏதும் வரவில்லை போலும்!
  ///////”இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் – அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்” – (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). – என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள். //////
  ம.க.இ.க. குறிப்பிட்டுள்ள அந்த மூன்று மலைகள், பொருளாதார ரீதியில் தேசத்தைச் அடிமைப்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது. அந்த சுரண்டல் வாத ஆளும் வர்க்கத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் சேவை செய்யும் அமைப்பாகத்தான் பார்ப்பன பயங்கரவாதம் திகழ்கிறது, என்பதையும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும், மறுகாலணியத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கூர்மை படுத்தப்படவேண்டும் என்ற ம.க.இ.க.வின் அறைகூவலெல்லாம் விடுதலையாரின் செவிகளை எட்டவில்லை போலும்!
  ம.க.இ.க.வின் திட்டத்தை சுருக்கி, வெட்டி ‘தேவைக்கேற்ற வகையில்’ பயன்படுத்துகின்ற விடுதலையாரின் பார்வையில் நிறைந்திருக்கும் காழ்புணர்ச்சிக்கு என்ன பெயர் சூட்டியழைக்கலாம்? இவரது பார்ப்பன எதிர்ப்பை, ம.க.இ.க., பு.ஜ., மீதான அவதூறுகளை பாராட்டுபவனைக் கொண்டு பார்த்தாலே இவரது கருத்துக்களின் தரம் எளிதாகப் புரியும். இவரது கட்டுரையினை அட்சரம் பிசகாமல் தனது தளத்தில் பதிவிட்டு, நன்றியையும் பொங்கி வழியவிட்டிருக்கிறான், சிபிஎம் கட்சியின் செல்வப்பெருமாள்.
  வி.பி.சிங்கை பு.ஜ. விமர்சித்திருப்பது பார்ப்பனர்களைக் குளிர்வித்திருக்கிறது, என்று உருவகப்படுத்தும் விடுதலை ராசேந்திரனுக்கு ஒரேயொரு கேள்வி. உங்களுடைய இந்த கூற்று, பார்ப்பனியத்தில் கேவலம் பூநூலைக் கூட இழக்க மனமின்றி உழலும் சி.பி.எம். யோக்கியர்களைக் குளிர்வித்திருக்கிறதே, இதற்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா? உங்களின் கட்டுரை பு.ஜ.வை சிறுமைபடுத்தவில்லை, மாறாக அதனை சி.பி.எம். ஆதரிப்பதுதான் உங்களைக் கடுமையாகச் சிறுமை படுத்தியிருக்கிறது. உங்களை நோக்கி வரும் பாராட்டுக்களே உங்களுக்கு எதிர்வினையாக மாறியிருக்கிறது. இதையாவது கொஞ்சம் பகுத்தறிவு கண் கொண்டு பாருங்களேன்!
  …………………………
  நன்றி
  ஏகலைவன்
  http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_24.html

 16. ஞாநிகள் எப்போதும் மாறுவதில்லை.சமூக நீதி ,பெரியாரியம் , முற்போக்கு என்று பல வேடம் போட்ட ஞாநி புலிகளின் சிக்கலில் வேடம் போட்ட போது முகமூடி கழண்டு அம்பலப்பட்டுப்போனார். நாகப் பாம்பு தன் விடப்பற்களை மாற்றிக்கொண்டாலும் சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக்கொண்டாலும் கொள்ளுமே தவிர , பார்ப்பனர்கள் தங்களின் குணங்களை மாற்றிக்கொள்வதில்லை .

 17. வாய் கிழிய வலைப்பூ நாற பார்ப்பனிய மார்க்சியம் பேசும் மக இக soc இனரே குமுதத்தில் எழுதியது ஒரு ஞாநிதான் ஆனால் உங்கள் புதிய ஜனநாயகத்திலும் , புதிய கலாச்சாரத்திலும் எழுதுவது பல ஞாநிகள் தானே……….

  உங்கள் வினவும் கலகமும் செய்வது ஞாநியின் வேலையைத்தானே.

  உங்களுக்கும் ஞாநிக்கும் எந்த வகையிலும் வேறுபாடு இல்லையே. நீங்கள் அனைவரும் கடைந்தெடுத்த ஒரே பார்ப்பனிய சாக்கடை வகையறாக்கள்தானே.

  ஞாநியோ வாரம் ஒரு முறைதான் நாறடிக்கிறார். நீங்கள் நாள்தோறும் நாறடிப்பவர்கள்தானே.

  கலகமும் வினவும் பெயரை மாற்றினாலும் உங்கள் பார்ப்பனியம் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டே இருக்கும்.

  மார்க்சிய வேடமிட்டு முற்போக்கு பேசும் SOC மக இக வினரையும் ஞாநியையும் , ஏமாற்று பொதுவுடைமை பேசும் மணியரசனையும் , வேல் குத்துவது தமிழர் பண்பாடு என்று சொல்லும் அறிவு(?) மதியையும் வாழ்த்துவதும் பின்பு எதிர்ப்பதும் பின்பு கூட்டு சேர்வதுமே பெரியார் திகவினருக்கு வேலையாக போய்விட்டது.

  சில காலம் முன்பு மணியரசன் நெடுமாறனுடன் கூட்டு சேர்ந்திருந்த பொழுது மணியரசன் பழைய கண்ணோட்டத்துடன் மோதினார்கள் இப்பொழுது மணியரசன் கீழ் இணைந்து தமிழர் ஒருங்கிணைப்பாம்.

  இப்பொழுது SOC மக இகவினருடன் விபிசிங் பற்றி புதிய ஜனநாயகத்துடன் மோதல். இன்னும் சிறிது காலம் கழித்து பார்ப்பன மருதையன் கீழ் ஒருங்கிணப்பு சேருவார்கள்.

  உண்மையில் பெரியார் திகவினருக்கு சுயமரியாதை இருந்தால் இப்படி செய்வார்களா?

 18. //////தோழர் அசுரன் அவர்கள் தி.க தலைவர் வீரமணி அவர்களை மாமாவீரமணி என்று எழுதியபோது தோழர் வரவனையன் உட்பட்ட சில தோழர்கள் அசுரனுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஒரு பார்ப்பானை பொறுப்பாளராகக் கொண்ட ம.க.இ.க வீரமணியைத் திட்ட அனுமதிக்கக்கூடாது என வரவனையன் வாதிட்ட போது அவரது பதிவில் ம.க.இ.க வின் நிலையை ஆதரி்த்து கருத்து தெரிவித்தவன் நான். மற்றும் சில பெ.தி.க தோழர்கள் உள்ளோம். அதற்காக ம.க.இ.க வில் தலைமைப் பொறுப்பில் பார்ப்பனர்கள் உள்ளனர் என்பதை மண்டையில் ஏற்றாமல் உள்ளோம் என்று பொருள் இல்லை. ///////

  ஞாநியிலிருந்து அறிவுமதி வரைக்கும் அனைவரையும் பட்டியலிட்டு உங்களது நேர்மையை விளக்கியுள்ளீர்கள். இதோபோல் இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய –லெனினிய பார்வை என்கிற புதிய ஜனநாயகத்தின் வெளியீடு குறித்தும், வி.பி.சிங்கின் இந்துத்துவ சேவை பற்றி ‘காக்கை குயிலாகாது’ என்கிற பு.ஜ. கட்டுரை குறித்தும் நேர்மையான விளக்கங்களுடன் எதையாவது எழுதிவிட்டு பிறகு எமக்கு பார்ப்பன பட்டம் சூட்டவாருங்கள்.

  விடுதலைராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி என்கிற எனது சிறிய மறுப்புப் பதிவு ஒன்றையும் வலைதளத்தில் பதிந்துள்ளேன். அதுகுறித்தாவது ஏதேனும் பதில்களைத்தாருங்கள். அதைவிடுத்து ”ஞாநியைக் கண்டித்து ஏன் அன்றைக்கு எழுதவில்லை…” என்றெல்லாம் மழுப்பிக்கொண்டிருக்கவேண்டாம். ஞாநியைப் பற்றி இணையத்தில் நாங்கள் எழுதியதைவிட நீங்கள் எழுதியது குறைவுதான். ஞாநியை நேரடியாகச் சந்தித்து அவனது எழுத்துக்களைக் கண்டித்து பேசி அவமானப்படுத்தியிருக்கிறோம்.

  “பார்ப்பனத் தலைமை..” என்கிற மோசடியான வாத்த்தை சும்மா கிளிப்பிள்ளை கணக்காக திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ம.க.இ.க.வின் செயல்பாடுகளையும் அது முன்வைக்கும் அரசியல் விமர்சன்ங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்படைந்த போலி கம்யூனிஸ்டுகள், தமிழ்த்தேசியவாதிகளின் கூட்டுப் புலம்பலாகவே உங்களது “பார்ப்பனத் தலைமை…” என்கிற புராணம் இருக்கிறது. வெளிப்படையாக விவாத்த்தில் பங்கெடுத்து நேர்மையாகப் பேசிப் பழகுங்கள். தமிழ் மறந்து அவதூறு மொழியே உங்களது தாய்மொழியாகிவிடும் போலிருக்கிறது.

 19. இங்கே பார்ப்பான் பார்ப்பன்னு வார்த்தைக்கு வார்த்தை பார்ப்பன‌ புராணம் பாடும் அதி அசுரன் அவர்களே,முதலில் யார் பார்ப்பான்‍ எது பார்ப்பனியம் என்பதை சற்று விளக்குங்கள்.நாம் நின்று நிதானமாக ஒவ்வொரு விசயமாக‌ விவாதம் செய்து விளங்கிக்கொண்டு பிறகு போகலாம்

 20. இங்கே பார்ப்பான் பார்ப்பன்னு வார்த்தைக்கு வார்த்தை பார்ப்பன‌ புராணம் பாடும் அதி அசுரன் அவர்களே,முதலில் யார் பார்ப்பான்‍ எது பார்ப்பனியம் என்பதை சற்று விளக்குங்கள்.நாம் நின்று நிதானமாக ஒவ்வொரு விசயமாக‌ விவாதம் செய்து விளங்கிக்கொண்டு பிறகு போகலாம்.

 21. ///என்னுடைய ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் பேசிய தோழர் கொளத்தூர் மணியும், தோழர் விடுதலை ராசேந்திரனும் ‘ஞாநி’ யைப் பற்றி நான் விமர்சித்து எழுதியிருந்த, பல பதில்களை குறிப்பிட்டு பேசுவதைக்கூட தவிர்த்தார்கள்.///

  மதிமாறன், அந்தக் கூட்டத்தில் உங்களால் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டு, அதிகமான நேரம் பேச அனுமதிக்கப்பட்ட மருதையனும் தன்னுடைய பேச்சில், ஞாநியை பற்றி நீங்கள் எழுதிய பதில்களை குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்திருந்தார். அதை ஏன் இந்தக் கட்டுரையில், நீங்கள் குறிப்பிடவில்லை.? சந்தேகம் இருந்தால், நீங்கள் விற்பனைக்கு விட்டிருக்கிற சிடி யை கேட்டுப்பாருங்கள்.

  நீங்கள் மகஇக ஆதரவாளரா? இல்லை மருதையன் ரசிகரா?

  பகுத்தறிவு

 22. தோழர் ‘ஏகலைவன்’ கூறிய, “வி.பி.சிங்கின் இந்துத்துவ சேவை பற்றி ‘காக்கை குயிலாகாது’ என்கிற புதிய ஜனநாயக கட்டுரையையும், பெ.தி.க.வின் ‘விடுதலை ராஜேந்திரன்’ கட்டுரையும் படித்து குழப்பமாகவே இருக்கிறது. வி.பி. சிங் குறித்து போதிய அளவு வாசிப்பு இல்லை.

  தோழர் மதிமாறன் பு.ஜ. குறித்த மாற்று பார்வையும் விடுதலை ராஜேந்திரன் சிந்தனை பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

 23. ஏ ஏ கலைவா பல கேள்விகளுக்கு அமைதி காப்பதன் மூலம் தப்பித்துவிடலாம் என்று எண்ணுகிறீரா…….?

  எனக்கு பதில் இடாததன் மூலம் நீங்கள் பார்ப்பனியர்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

  ” எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் பார்ப்பான் பார்ப்பானே ”

  பார்ப்பானே ஆனாலும் எங்கள் பேச்சிலே மரியாதை இருக்கும். நீங்கள் ஞாநியை

  // ஞாநியைப் பற்றி இணையத்தில் நாங்கள் எழுதியதைவிட நீங்கள் எழுதியது குறைவுதான். ஞாநியை நேரடியாகச் சந்தித்து அவனது எழுத்துக்களைக் கண்டித்து பேசி அவமானப்படுத்தியிருக்கிறோம். //

  அவன் இவன் என்று அவரை கூறுவதிலே உங்களின் பார்ப்பனியத்தன்மையும் வெளிப்படுகிறது.

  என்னதான் முற்போக்கு முலாம் நீங்கள் பூசிக்கொண்டாலும் உங்கள் பார்ப்பனிய தன்மையை நீங்கள் விட்டுக்கொடுப்பதில்லையே CPI(M) போல்.

 24. வாங்க சி .பீ. எம் விடுதலை எலேய்ஸ் பகுத்தறிவு எலேய்ஸ் CPIML SOC – மக இக நெம்ப லேட் ஆச்சும்மா நாளைக்கு மீட் பண்றேன்

 25. //அதே சமயம் வி.பி.சிங் குறித்த மாற்றுக் கருத்துக்களையும் வைக்கிறோம். //

  மாற்றுக் கருத்து எதையும் விடுதலை ராசேந்திரனோ நீங்களோ வைத்த் மாதிரி தெரியவில்லையே? வி.பி.சிங் விமர்சிப்பது என்ற பெயரில் பல முற்போக்கு முகமூடிகளின் சமரசம் கேள்வி கேட்க்கப்பட்ட கடுப்பி மறைமுக பார்ப்பனியம் என்ற அவதூறை வாரியிறைத்தைத்தான் செய்துள்ளீர்கள். மறைமுக பார்ப்பனியம் என்று வெளிப்படையாகவே சொல்ல வேண்டியதுதானே? சந்தேகம் என்பது போல மூடி மறைத்த வெட்கங்கெட்ட வார்த்தை பயன்படுத்துவானேன்?

  //
  தமிழர்களை அவர்கள் பெரியாரியலுக்கு / ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கும்போது பாராட்டியிருக்கிறோம். எதிராக மாறும் போது எதிர்த்திருக்கிறோம்.//

  இப்படி ஒருவரது நிலைப்பாடு நேர்மையாக இருக்கும் பட்சத்தில் பாராட்டவும், எதிரிடையாக இருக்கும் போது அம்பலப்படுத்தவும் உங்களுக்கு மட்டும்தான் உரிமையுள்ளதா அதி அசுரன்? அப்படி எதுவும் காப்புரிமை வாங்கியுள்ளரா பெரியார் திகவின் மானமிகு விடுதலை ராசேந்திரன்?

  ம க இ கவிற்கு வி.பி.சிங்கின் இது போன்ற அரசியல் நேர்மையின்மையை விமர்சிக்கும் உரிமை கிடையாதா? அதை செய்தால் மறைமுக பார்ப்பனியம் என்று ஒற்றை வார்த்தையில் சேறு அடிக்கும் கேவலத்துக்கு வேறதாவது செய்யலாம் மானமிகு சுயமரியாதை செல்வங்கள். நேர்மையிருந்தால் அந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் சொல்லுங்கள்? ம க இ க கட்சித் திட்டத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு கைகழுவப்பட்டுள்ளது என்ற அரிய கண்டுபிடிப்பை/பொய்யை வெட்கமின்றி பேசியுள்ளாரே விடுதலை ராசேந்திரன் அதற்கும் நேர்மை என்று எதுவும் இருந்தால் பதில் சொல்லுங்கள்.

  வரவனையானை விமர்சனம் செய்த நீங்கள் அவரை போலவே தர்க்க நியாயமின்றி ‘மறைமுக பார்ப்பனியம்’ என்ற ஒற்றை வார்த்தையில் மறைந்து வாழும் அவலத்துக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?

  உங்களுக்கு வேறு பிரச்சினை. வி. பி. சிங்கை அம்பலப்படுத்தியதில் அம்பலமானது வி. பி. சிங் மட்டுமல்ல என்பதுதான் உங்களது இந்த ஆவேச பிதற்றலுக்கு அடிப்படை.

  அசுரன்

 26. //‘மறைமுக பார்ப்பனியம்’ //

  இதற்கு ஆதாரம் கொடுக்க சொல்லி நிர்ப்பந்திக்கிறேன் அதி அசுரன் உள்ளிட்டவர்களை. வெறுமனே மருதையன் என்ற ஒற்றை நபரை முன்னிறுத்தி ஒரு புரட்சிகர இயக்கத்தை பற்றி அவதூறு பேசுவதை விட கேவலம் எதுவுமில்லை என்பதை அதி அசுரனுக்கும் அவரது தலைவர் விடுதலை ராசேந்திரனுக்கும்(ஒரு வேளை இங்கு பேசுவது அந்த தலைவரின் காதுகளுக்கு எட்டும் எனில்) சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

  இப்படி ஒரு வாதம் வைப்பதே உங்களிடம் நேர்மையாக பேசுவதற்கு எதுவுமில்லை என்பதையே காட்டுகிறது.

  பெரியார் சிலை உடைப்பில் உங்களது அணிகளையே காட்டிக் கொடுத்த பெரியார் திக தலைமைதான் அந்த நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து இருந்த ம க இகவை மறைமுக பார்ப்பனியம் என்று சொல்லுகிறது.

  யாரை பார்த்து யார் சொல்லுவது? இந்திய பார்ப்பனிய தரகு வர்க்கத்தை எதிர்த்து உறுதியுடன் நிற்க துப்பில்லாத உங்களை நாங்கள் குற்றம் சாட்டுகிறோம் ‘மறைமுக பார்ப்பனியம்’ என்று விவாதம் செய்ய தயாரா?

  விளைவுகள் அஞ்சினால் வராதீர்கள்.

  அசுரன்

 27. ஈழ விடுதலைப் போரின் தமிழகத்து ஹோல்சேல் டிஸ்டிரிபியுட்டர்ஸ்களாக தம்மையே சொந்தமாக நியமித்துக் கொண்ட நெடுமாறன், வைகோ போன்றவர்கள் இன்றைக்கு ஈழவிடுதலைப் போரையே பாஜக உள்ளே வருவதற்கான அடிப்படை அரசியலாக மாற்ற ஒத்தாசை செய்வதையும். அதற்கு பெ. மணியரசன் கும்பல் ஒத்து ஊதுவதையும் குறித்து பெதிக என்ன கருத்து வைக்கும்? இது மறைமுக பார்ப்பனியம் என்று தைரியமாக விமர்சிக்கும் துணிச்சலும், சுயமரியாதையும், நேர்மையும் அதி அசுரனுக்கு இருக்க வேண்டாம, ஆனால் தலைவர் மானமிகு விடுதலை ராசேந்திரனுக்கு இருக்கிறதா?

  சொல்லுவாரா? சொல்லவில்லை எனில் நாம் வைக்கிறோம் பெதிக ஒரு மறைமுக பார்ப்பனிய கட்சி என்ற எமது சந்தேகத்தை.

  அசுரன்

 28. மதிமாறன் நீங்கள் ஏன் இதுவரை எனது கமெண்ட்டை போடாமல் இழுத்தடிக்கிறீர்கள்?
  ஏற்கெனவே ஏகலைவனுடைய கமெண்ட்டை வெளியிய்டாமலிருப்பது ஏன்?
  ‌ம.க.இ.க.வை அவதூறு செய்யும் சி.பி.எம் காரனை இங்கே அனுமதிப்பது ஏன்?
  விளக்கம் வேண்டும்.

 29. //பெரியாரைப் பற்றி ஒரு தொலைக்காட்சித் தொடரை எடுத்த ஞானியை வைத்து அந்தத் தொடரை பல்வேறு ஊர்களில் திரையிடும் நிகழ்ச்சியை பெ.தி.க தோழர்கள் நடத்தினோம். //

  தோழர் அதி அசுரன்,

  இச்செய்தி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இருப்பினும் நீங்கள் செய்தது தவறெனவே என் சிந்தனைக்கு தோன்றுகிறது. கடைசி வரையில் கழகத்தில் பார்ப்பனரை உறுப்பினராக சேர்க்க கூட அனுமதிக்கவே இல்லை தந்தை பெரியார். ஏன் என்ற காரணம் உங்களக்கு தெரியாததா?

  ///வீரமணி மீதும் எங்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் உண்டு. அந்த பெரியார் படத்தை பார்க்க பிரச்சாரம் செய்ததற்காக எங்களை தி.கவில் இணைத்துப் பார்க்கமுடியாது. வீரமணி அவர்களின் துரோகங்களை மறந்துவிட்டோம் என்ற பொருள் ஆகாது.///

  அதற்காக தோழர் வீரமணி அவர்களையும் ஞானியையும் ஒன்றாக வைத்து பார்க்க முடியாதல்லவா தோழர்? உங்களின் தடுமாற்றமான பின்னூட்டம் என்னுள் பல கேள்விகளை எழுப்புகிறது?

  //ஆனால் பெரியாரை மறுபரிசீலனை செய்யவேண்டும், காவடி துாக்குவது / அலகு குத்துவது இவையெல்லாம் முடநம்பிக்கை ஆகாது அவை தமிழனி்ன் அடையாளங்கள் என்று பேசியபோது அண்ணன் அறிவுமதி அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளோம். //

  இந்து கூத்த வேறு நடந்திருக்கிறதா? என்ன பேர் சொன்னீங்க? அறிவு மதி…. என்ன கொடுமையா இருக்கு. தமிழனின் அடையாளங்கள் என்று அவர் குறிப்பிட்டதை தான் பெரியார் காட்டுமிராண்டித்தனம் என்றார். பாரீசில் அலகு குத்திக் கொண்டும் தீச்சட்டி தூக்கிக் கொண்டும் காவடியும் எடுத்த கூத்தைக் கண்டு பிரான்ஸ் பகுத்தறிவு சங்கங்கள் எதிர்த்து தடை செய்தன. அவர்களுக்கு ஏன் தமிழனின் அடையாளங்களாக பார்க்க முடியவில்லை?

  ///பார்ப்பன ஞானி மட்டுமல்ல. இன்னும் சில பார்ப்பனர்களை / தமிழர்களை அவர்கள் பெரியாரியலுக்கு / ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கும்போது பாராட்டியிருக்கிறோம். எதிராக மாறும் போது எதிர்த்திருக்கிறோம்.

  ராஜீவ் – கொலை அல்ல, மரண தண்டனை என்ற விவாதம் தொடங்கப்பட்டு உள்ளது. அதை வளர்த்து விடுங்கள். திசை திருப்ப வேண்டாம். நன்றி- அதி அசுரன்///

  நீங்கள் சொல்வது சரி தோழர். ஆனால் தமிழகத்தில் இப்போதிருக்கும் சூழல் நீங்கள் அறியாதாதா? இந்த நேரத்தில் இப்படியொரு ஓ போட்டிருக்கிறார் ஞானி! அதறகான விவாதமாக தூண்டியிருக்கிறது தோழர் மதிமாறன் அவர்களின் பதிவு.

 30. இதைத்தானே எதிர்பார்த்தாய் சங்கரா…

  தோழர்களே, இந்த சகோதர சண்டைதான் ஞாநி போன்றவர்களை தைரியமாகப் பேசவும் எழுதவும் வைக்கிறது. நமக்குள் இப்படி அடித்துக்கொண்டிருந்தால் ஞாநியின் கயமையை எப்போது தட்டிக் கேட்பது. நமக்கிடையே நடந்து வரும் சகோதர சண்டையை ஞாநி வசமாகப் பயன்படுத்திக்கொண்டு குளிர் காய்கிறார். தோழர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்த விவாதம் குறித்து அலசுவோம். ஆள்காட்டி வேலை பார்த்த ”எழுத்து மாமா” ஞாநியின் கயமையை அம்பலப்படுத்துங்கள். இந்த நிமிடத் தேவை இதுதான்.

 31. எப்படியோ உங்க விவாதம் முடியறதுக்குள்ளே பெரியார் திக தலைவர் மணி ய உள்ளே போட்டாச்சு. எப்படியும் சீமான் மாதிரி ஓராண்டு ஓய்வெடுப்பாருனு நினைக்கிறேன். அவர் வெளியே வந்தாலும் உங்க விவாதம் முடியாதுனு நினைக்கிறேன்.

  மக இக என்னதான் ஆனாலும் பார்ப்பனியத்த விடமாட்டாங்க, அவங்களுக்கு சிறிலங்கா கூட்டாளி பி,இரயாகரன் கிட்ட இருந்து பெட்டி பெட்டியா வர்ரப்ப வாங்குனா காசுக்கு இங்கே நடக்கிற தமிழர் எழிச்சியை ஒடுக்கியாகனும் ல.

  மக இக என்பது தோழமை அமைப்பு என்று சொன்ன விடுதலை இராசேந்திரனுக்கு நல்லா பதில் சொல்லிட்டாங்க பார்ப்பன ம க இ க வினர் வல்லபேச அய்யங்கார் என்ற மருதையன்.

  மருதையன் இது வரைக்கு சிறைக்கு போனதா நான் கேள்விப்பட்டது இல்லை. அடிமட்ட அப்பாவி ம க இ க தமிழர்கள்தான் சிறையில் வாடுகின்றனர்.

  பிடிச்சு கொடுக்கிற ஆள்காட்டு மருதையன் எப்படி உள்ளே போவார்………………………………….????????

 32. //மக இக என்னதான் ஆனாலும் பார்ப்பனியத்த விடமாட்டாங்க, அவங்களுக்கு சிறிலங்கா கூட்டாளி பி,இரயாகரன் கிட்ட இருந்து பெட்டி பெட்டியா வர்ரப்ப வாங்குனா காசுக்கு இங்கே நடக்கிற தமிழர் எழிச்சியை ஒடுக்கியாகனும்ல.//

  தோழர் ஆழிக்கரை நீங்கள் தோழர் இரயாகரனை பற்றி தவறாக புரிந்திருக்கிறீர்கள். ஏன் இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை மீது சுமத்துகிறீர்கள் என்று புரியவில்லை?

  வெளிப்படையாக பேச விருப்பமில்லாவிட்டால் தனிப்பட்டமுறையில் உங்களுடைய விளக்கத்தை அளித்தால் நல்லது என்று தோன்றுகின்றது. எனக்குத் தெரிந்து தோழர் இரயாகரன் பாகுபாடு இன்றி ஈழ அரசியலை விமர்சிக்கிறார். ஒருவேளை புலியெதிர்ப்பு என்ற கண்ணோட்டத்தில் அவரை பார்த்தால் இதர புலியெதிப்பு மாமா கூட்டத்தினரைப் போன்றே அனைவருக்கும் நினைக்கத் தோன்றலாம். என்னைப் பொறுத்தவரை இரயாகரனைப் போன்ற நேர்மையான நடுநிலை விமர்சகர், சமூகவாதியாக தமிழ் இலக்கிய சமூகத்தில் அவர் ஒருவரே முண்ணனியில் இருக்கிறார்.

 33. தோழர்கள் அனைவரும் வார்த்தைகளை கவனமாக கையாள்வது நல்லது என்று தோன்றுகிறது. பிரச்சனை எங்கெங்கோ செல்கிறது. ஞானி இதைத்தானே நம்மிடம் எதிர்பார்க்கிறார்?

  000

  15.02.2009 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாவீரன் தோழர் முத்துக்குமாரின் வீரவணக்கக் கூட்டத்தில் கொளத்துார் மணி அவர்கள் ஆற்றிய உரையை தோழர் அதிஅசுரன் இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். தோழர் கொளத்தூர் மணி ராஜீவுக்கு நிகழ்ந்த மரணம் கொலையல்ல…. தண்டனை என்கிறார். இவை குறித்து நாம் விவாதத்தை தொடங்கலாமா தோழர்களே?

  பதிவின் இணைப்பு :

  http://thozharperiyar.blogspot.com/2009/03/blog-post.html

 34. //தோழர் கொளத்தூர் மணி ராஜீவுக்கு நிகழ்ந்த மரணம் கொலையல்ல…. தண்டனை என்கிறார். இவை குறித்து நாம் விவாதத்தை தொடங்கலாமா தோழர்களே?//

  இதில் விவாதிக்க என்ன இருக்கு. அது தண்டனைதான்.

  புரச்சி

 35. //ஞானி இதைத்தானே நம்மிடம் எதிர்பார்க்கிறார்? //

  ஞானி எதிர்ப்பார்ப்பது இதுதான். ஆனால், ம க இ கவை மறைமுக பார்ப்பனியம் என்று அவதூறு பேசுவதை எப்படி புரிந்து கொள்வது. அது சரி என்று கருதுறீங்களா தமிழச்சி.

  இப்படி சொல்லிக் கொண்டு எப்படி எங்களுடன் இணைந்து வேலை செய்ய முடியுது? இது மிக அநாகரிகமானது. மான ரோசம் உள்ளவன் செய்ய மாட்டான். களத்தில் வீரியமாக செயல்பட்டுவருவது எங்களது அமைப்புதான். அப்படி இருக்கும் போது, நேர்மையற்ற முறையில் செய்யப்படும் இது போன்ற அவதூறுகளை நாங்கள் புறந்தள்ளிச் செல்ல முடியாது தமிழச்சி. அதி அசுரன் பதில் சொன்னால்தான் அவரது நேர்மைக்கு அடையாளம். இது விடுதலை ராசேந்திரனுக்கும் பொருந்தும். சும்மா அவதூறு கிளப்பி விடுவதும் பிறகு வந்து ஒட்டி உரசுவதும் அசிங்கமாக வருகிறது வாயில்.

  அசுரன் குறிப்பிட்டுள்ளாரே பெரியார் திக ஒரு மறைமுக பார்ப்பனிய அமைப்பு என்று சந்தேகப்படுவதாக. அப்படி சந்தேகிக்கப்பது அவர்களது(அதி அசுரன்/விடுதலை ராசேந்திரன்) தர்க்க முறையின் படி சரிதானே?

  இதற்கு பதில் சொல்லுவதை தள்ளிப் போட முடியாது.

  புரச்சி

 36. இன்னொரு அபத்தமான கருத்து. மருதையன் வந்து கருத்து சொல்லுனுமாம். வினவு வந்து கருத்துச் சொல்லனுமாம். உங்க ரேஞ்சுக்கு நீங்க புரளியை எழுதியுள்ள போது அதற்கு இது மாதிரி எதிர்வினையே போதும் என்பதுதான் எனது கருத்து. புரளிக்கேல்லாமா ஆய்வு கட்டுரை எழுதுவார்கள்?

  புரச்சி

 37. //நம்மிடம் //

  இந்த “நம்மில்” மறைமுக பார்ப்பனியமும் இருக்கிறதா? சொல்லுங்க…..

  புரச்சி

 38. வார்த்தை கண்ணாமூச்சி எல்லாம் போதும்… அதி அசுரனோ அல்லது விடுதலை ராசேந்திரனோ வெளிப்படையாக பேசுவதே சரியாக இருக்கும்.

 39. கலைஞர் அரசு கண்டு கொள்ளாமல் இருக்காலாம் என்று இருந்திருந்தால் கூட ஞாநி மாதிரி எட்டப்பன் பரம்பரைகளின் சூதால் தோழர் கொளத்தூர் மணி சிறையடைக்கப்பட்டுள்ளார். வழக்கமாக ஜனநாயகம், கருத்துரிமை பற்றியெல்லாம் நமக்கு பாடம் எடுக்கும் ஆட்கள் தலைமறைவாக இருக்கிறார்கள் இப்பொழுது. இதுதான் நடுநிலைமை.

  நடுநிலைமை வாழ்க.

  நடுநிலைமையில் தீ வைக்க விரும்பும் புரச்சி

 40. வெள்ளாளத்திமிருடன் பெண்களுடன் தவறாக நடந்ததால் போராளிகளால் கைது செய்யப்பட்டு துரத்தி அடிக்கப்பட்ட இரயாகரனுக்கு தமிழச்சி எப்படி வக்காலத்து வாங்குகிறார் என்று தெரியவில்லை.

  பகுத்தறிவு பேசும் தமிழச்சி சாதிய உணர்வுள்ள ஒருவருக்கு ஏன் ஆதரவளிக்கிறார் என்று தெரியவில்லை.

 41. Why can’t we start a tamilar viduthalai katchi to set aside the ADMK and DMK?

 42. ஆனந்த விகடனில் எச்சில் சோறு திங்கும் சில தொம்பிகள் இங்கு பார்ப்பனியம் என்று புலம்புவது வேடிக்கையே. சோற்றுக்காக பார்ப்பனியத்தை அன்டி பிழைப்பவர்கள் மற்றவர்களை பார்ப்பனியம் என்று திட்டி சுய இன்பம் காண்கிறார்கள், காணடஃடும், களத்தில் முடியாதவர்களின் கடைசி புகலிடம் அதுதானே 🙂

 43. //பிடிச்சு கொடுக்கிற ஆள்காட்டு மருதையன் எப்படி உள்ளே போவார்//

  தோழர் மதிமாறன், உங்களுக்கு நன்கு பழக்கமுள்ள தோழர் மருதையனை பற்றி இப்படி அவதூறு எழுதும் பொழுது
  அதை நீங்கள் வெளியிட்டால் அதற்கு என்ன அர்த்தம், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளகிறீர்களா?

 44. தோழர் புரச்சி

  ///ஞானி எதிர்ப்பார்ப்பது இதுதான். ஆனால், ம க இ கவை மறைமுக பார்ப்பனியம் என்று அவதூறு பேசுவதை எப்படி புரிந்து கொள்வது. அது சரி என்று கருதுறீங்களா தமிழச்சி. ///

  தோழர்களை அப்படி சொல்லி இருந்தால் தவறுதான். ஆனால் என்ன சூழ்நிலையில் எதற்காக இதை உபயோகித்தார்கள் தோழர் (தெரியவில்லை என்பதால் கேட்கிறேன்)

  ///இப்படி சொல்லிக் கொண்டு எப்படி எங்களுடன் இணைந்து வேலை செய்ய முடியுது? இது மிக அநாகரிகமானது. மான ரோசம் உள்ளவன் செய்ய மாட்டான். ///

  தோழர் நாமும் இன்னமும் பக்குவப்படவில்லை போலும். அகங்காரம் சீறிக்கொண்டே இருக்கிறது.

  தோழர் அதிஅசுரன் இணையத்திற்கு வருவது குறைவு. அவர் கடைசியாக போட்ட பதிவுக்கு உடனே போட்ட பின்னூட்டம் கூட இன்னும் வெளியிடப்படவில்லை. கழகம் தொடர்பான வேலைகளில் அவர் இருக்கிறார். 3 மணிநேரம் தூங்குவது கூட அரிது அவருக்கு. இப்படியொரு விவாதம் இங்கு நடப்பது கூட தெரியாது. ஒருவேளை தோழர்கள் அதிஅசுரனுக்கு தகவல் தெரிவித்தால் கண்டிப்பாக பதில் அளிப்பார்.

  வி.பி.சிங் அல்லது தந்தை பெரியாரோ விமர்சிக்க கூடாதவர்கள் இல்லை ஆதாரங்களுடன் பேசுவோம். அவதூறுதான் வேண்டாம் என்கிறேன். அதிஅசுரன் பதில் அளிக்கும் வரையில் புரச்சி தோழர் பொறுமையாக வார்த்தைகளை எடுத்தாளுங்கள். வீரியம், எழுச்சி, சக்தி, எனக்குத்தான் கூட, எங்களுக்குத்தான் அதிகம் போன்ற வாதங்கள் தோழர்களுக்குள் வேண்டாம்.

 45. //////மதிமாறன், அந்தக் கூட்டத்தில் உங்களால் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டு, அதிகமான நேரம் பேச அனுமதிக்கப்பட்ட மருதையனும் தன்னுடைய பேச்சில், ஞாநியை பற்றி நீங்கள் எழுதிய பதில்களை குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்திருந்தார். அதை ஏன் இந்தக் கட்டுரையில், நீங்கள் குறிப்பிடவில்லை.? சந்தேகம் இருந்தால், நீங்கள் விற்பனைக்கு விட்டிருக்கிற சிடி யை கேட்டுப்பாருங்கள்.

  நீங்கள் மகஇக ஆதரவாளரா? இல்லை மருதையன் ரசிகரா?

  பகுத்தறிவு//////

  மதிமாறன், உங்களுடைய கூட்டத்தில் மருதையன் ஞாநியை விமர்சித்து பேசாததை ஏன் மறைத்தீர்கள்? பெ.தி.க ஞாநியை ஆதரித்ததுபோல் நீங்கள் மருதையனை ஆதரிக்கிறீர்களா?
  பெ.தி.க ஞானியை ஆதரிப்பதை சொல்கிறீர்களோ, மருதையன் ஞாநியின் பார்ப்பன ஜாதிவெறியை, கண்டித்திருக்கிறா? கடந்த இரண்டாண்டுகளில் ஞானி பார்ப்பன புத்தியோடு ஆள்காட்டி வேலையை செய்திருக்கிறார். அதை பெதிக இதழ் புரட்சி பெரியார் முழுக்கம் கண்டிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்களே?

  இந்த இரண்டு ஆண்டுகளில் ஞானியை மருதையனோ, புதிய கலாச்சாரமோ கண்டித்திருக்கிறதா? இருந்தால் உதாரணம் காட்டுங்கள். ஞானி விவகாரத்தில், ஏன் மருதையனையும் மகஇகவையும் காப்பாற்ற நினைக்கிறீர்கள்?

  நீங்கள் உண்மையான பெரியாரியவாதியாக இருந்தால், இதற்கு நீஙகள் அவசியம் பதில் சொல்லவேண்டும்.

  பதில் சொல்.

 46. என்னங்க கோழிக்கரையான்,

  தயவு செய்து பைத்தியக்காரர் போல உளராதீர்கள்,ரயாகனுடைய கருத்துக்கள் என்னனு தெரியுமா?உங்களமாதி கோழிங்க தான் ஆத்தங்கரைய கிளறி பெரியாரியத்த குழப்பி வச்சு இருக்கீங்க,

  ம க இ க வோட நடைமுறையில எங்க பார்ப்பனீயத்த காண்டீங்க,
  எதுக்கெடுத்தாலு இங்க பொறந்தாலும் அவன் பாப்பான் எங்கே பொறந்தாலும் அவன் தமிழன்னு கூவுறீங்களே,அதுசரி சிதம்பரம் செட்டியார் கூட தமிழந்தான் போய் அவரு வாய கழுவிட்டு வாங்க.

  உங்கள மாதி வீரமணி மாதிரி பெரியார பொருளா மாத்தி விற்பன பண்ணுறவங்களே ,

  ம க இ க வோட நடைமுறையில என்னயா பார்ப்பனீயத்த கண்டீங்க. திருவாரூ அந்த தியாகராஜனோட கச்சேரியில நாங்க தான் பறியடிச்சு கைதானோம்,மண்டை உடைக்கப்பாட்டோம்.னீங்க ஆத்தோரம் ஏதாவது கிளற ப்போனீங்களா? சிதம்பரம் கோயில் பிரச்சனையில் நெடு மாமா செஞ வேல தா ஊரே நாறிக்கிடக்குதே.அந்த கூட்டத்துல பாப்பான்ன்னு ஒரு வார்த்த கூட சொல்லல.- நோக்கு தெரியுமோ.

  அறிவாளி மாதி பேசுறீயளே அந்த ஞானி கிட்ட யே போயி கேளுயா அவன தூக்கி வச்சுகிட்டு ஆடுறது யாருன்னு.
  னீங்க என்ன நினைக்குறீங்கன்னா மாமா வீரமணி மாதிரி நாமும் கோழிமணி ஆயிடலாமுன்னு,
  பாப்பான் பாரதி சொன்ன மாதிரி எல்லோரும் இன்னட்டு மன்னர்கள் தான் ,ஆடுங்க,ஆடுங்க

  சரி எல்லாத்தையும் வுடுங்க

  னான் ஒரு மாண்வனா கேக்குறேன் பார்ப்பனீயம்னா என்ன கோழி சாரி ஆழி

 47. தந்தை பெரியார் ஒழித்தொழிப்பு அரசியலை நடத்தவில்லை. தனி நபர் கொலை, வன்முறையை முன் வைத்து அரசியல் செய்யவில்லை. மக்களிடம் சென்றார், மக்களை தன்பால் ஈர்த்தார், வென்றார். வன்முறை மூலம் ஆட்சியைக் கைப்பற்ற அல்லது சிலரை கொன்று அதன் மூலம் சமூகத்தை மாற்ற அவர் திட்டமிடவில்லை. அவை முட்டாள்தனமான செயல்கள் என்று அவருக்குத் தெரியும். ஐயா வீரமணியும் அதனால்தான் கொலை அரசியலை ஆதரிக்கவில்லை.

  புலிகள் பத்மனாபாவை சென்னையில் கொன்றார்கள். அதைக் காரணம் காட்டி திமுக ஆட்சியை காங்கிரஸ் ஆதரவு ஆட்சி கலைத்தது.பாராளுமன்ற,சட்டமன்ற தேர்தலுக்கும் முன் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.அதனால் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.ஜெயலலிதா முதல்வரானார்.மத்தியில் நரசிம்மராவ் பிரதமரானார்.இதனால் ஈழத்தமிழருக்கு என்ன நன்மை விளைந்தது. திமுகவின் தோல்வியால் பலனடைந்தது யார்?. அனுதாப அலையில் காங்கிரசும்,அதிமுகவும் ஆட்சியில் அமர்ந்தன. தடா பாய்ந்தது. ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

  பெரியார் பெயரில் இயக்கம் நடத்துபவர்கள் இதையெல்லாம் எண்ணிப் பாராமல் பேசுவதால் யாருக்கும் நன்மை இல்லை. இன்று எதைப் பேசினால் அது பொறுத்தமோ அதைப் பேசுங்கள். இன்று எதைச் செய்தால் ஈழத்தமிழருக்கு நல்லதோ அதை செய்யுங்கள். இன்று தமிழரிடையே ஒற்றுமை இல்லை. கலைஞரும், ஐயா வீரமணியும் செய்யும் முயற்சிகளுக்கு உதவுங்கள். அல்லது இடையூறு செய்யாமலாவது இருங்கள். ஞாநி எழுதியதை வைத்துக் கொண்டு நீங்கள் மோதிக் கொள்கிறீர்கள். இது தேவையா?

 48. பெருந்தன்மை உடைய ‘மதி’ மாறன் அவர்களுக்கு,

  நீங்கள் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கம் புரிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் கூறுவது போல ‘ஞாநி’ பார்ப்பன விஷம் தான். ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம் ‘ஞாநி’யை நீங்கள் கூறியது போல ‘பார்ப்பன பாம்பு’ தான் என்பதை பெரியார். தி.க -விடம் நிரூபிப்பதற்கு இந்த நிகழ்வு மற்றும் ஒரு சாட்சியா? அல்லது பார்ப்பன சதியில் சிக்கிய ஒரு தமிழனை காக்கும் நோக்கமா?

  சரி…. பெரியார் தி.க விடம் நிரூபிப்பதற்கு ஒரு சாட்சி என்றால் இத்தனை நாள் நீங்கள் கூறியது போல ‘திராவிட தலைவரை’ திட்டிய போது வராத கோபம், தமிழின ‘ஞாநி’ உருவாக்கிய பெரியார் படத்தை பல இடங்களில் திரையிட்ட போது வராத உணர்ச்சியை, இப்போது நீங்கள் தட்டி எழுப்பலாம். ஒருவேளை அந்த உணர்ச்சியும் பெருந்தன்மையாய் வராமலிருக்கலாம். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள், உங்கள் பெருந்தன்மையை ‘ஞாநி’ கூட பாராட்டலாம், என்னே மதிமாறனின் ஜனநாயகம் என்று.

  சரி, உணர்வு பெற்றுவிட்டால் தமிழனுக்கு சொரணை வந்து விட்டதாக புரிந்துக் கொள்ளலாமா?

  ஒரு சின்ன கேள்விங்க மதி, பெ.தி.க, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று நம்புறேன், ஒரு வேளை ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரனை நட்பு சக்தியாக கருதி பெ.தி.க பெருந்தன்மையாக அனுகுவதாக இருந்தால், அப்பொழுதும் நீங்கள் பெ.தி.க விடம் பெருந்தன்மையாக நடந்து கொள்வீர்களா? சரி ஆர்.எஸ்.எஸ்-காரன் சிந்தனை வேறு ‘ஞாநி’ யின் சிந்தனை வேறா? பதிலுக்காக காத்திருக்கிறேன்.

 49. //தோழர் நாமும் இன்னமும் பக்குவப்படவில்லை போலும். அகங்காரம் சீறிக்கொண்டே இருக்கிறது. //

  தமிழச்சி,

  இதில் அகங்காரம் ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன். இவர்களுக்கு பிடிக்காத எதையாவது சொன்னால் உடனே மறைமுக பார்ப்பனியம் என்று சொல்லுவதை ஒரு தடவை மறுத்து விளக்கம் தரலாம். எப்பொழுது பார்த்தாலும் அதே வாதத்தில் போய் தமது தவறுகளை மறைத்து புனித வட்டம் கட்டிக் கொள்ளும் மொள்ளமாறித்தனத்தை எத்தனை மூறை சகிப்பது?

  வி.பி. சிங்கை விமர்சனம் செய்தால் மறைமுக பார்ப்பனியமாம்? அப்படியெனில் திகவை விமர்சனம் செய்து வெளியே வந்த பெதிக மறைமுக பார்ப்பனியம் என்று வீரமணி கூட சொல்ல முடியும் இல்லையா?

  தோழர் மருதையன் பார்ப்பனராக பிறந்ததை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடித்து அது ஒன்றை மட்டுமே தமது ஆதார வாத அடிப்படையாக கொண்டுள்ள இவர்களை என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்கள்?

  ஒவ்வொரு முறையும் இவர்களது தவறுகளை சுட்டிக் காட்டினால் உடனே எம்மை இது மாதிரி சொல்லுவதன் நோக்கம், விவாதம் மறைமுக பார்ப்பனியம் கிடையாது என்பதை நோக்கி திசை திரும்பி விடும் என்ற காரணமே ஆகும். அதனால்தான் இந்த முறை மிக தீர்மானகரமாக மறைமுக பார்ப்பனிய குற்றச்சாட்டை பெதிக மீது வைக்கிறேன். அவர்கள் மறைமுக பார்ப்பனியவாதிகள்(அல்லது கள்ள பார்ப்பனியவாதிகள்) என்பதை குறிப்பிட்டு இங்கு இரண்டு எ-காக்களை கொடுத்துள்ளேன். நீருபிக்கட்டும் தோழர்கள் தாங்கள் கள்ள பார்ப்பனியவாதிகள் இல்லை என்று.

  //ஆனால் என்ன சூழ்நிலையில் எதற்காக இதை உபயோகித்தார்கள் தோழர் (தெரியவில்லை என்பதால் கேட்கிறேன்) //

  வி.பி. சிங் ஏதோ அப்பழுக்கற்ற தங்கம் போலும், சமூக நீதி காத்த வீரர் போன்றும் இவர்கள் தூக்கி வைத்த கொண்டாடிய வேளையில் அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்பதையும் அவரது அரசியலின் இன்னொரு பக்கத்தையும் அம்பலப்படுத்தி புஜவில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அது வெறுமனே வி.பி. சிங்கை மட்டும் குறித்து பேசவில்லை. சமூக நீதி என்கிற ஒற்றை வாதத்தின் மூலம் மட்டுமே தமது அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் புனிதப் படுத்திக் கொள்ளும் அரசியல் பசு மாடுகளின் தோலில் சவுக்கால் அடித்திருந்தது. அது பொருக்காத ஒரு தலைவரான விடுதலை ராசேந்திரன் வழக்கம் போல மறைமுக பார்ப்பனியத்துக்குள் தனது தலையை நுழைத்துக் கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லி உள்ளார். இதுதான் பிரச்சினை.

  அசுரன்

 50. //சமூக நீதி என்கிற ஒற்றை வாதத்தின் மூலம் மட்டுமே தமது அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் புனிதப் படுத்திக் கொள்ளும் அரசியல் பசு மாடுகளின் தோலில் சவுக்கால் அடித்திருந்தது.//

  இதன் அர்த்தம் ஒரு பக்கம் இடஓதுக்கீடு புனித பசுவில் பால் கறப்பது எமக்கு மட்டுமே உரிமை என்று சொல்லிக் கொள்வது இன்னொரு பக்கம் அந்த் புனித பசுவை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளின் பாத தாங்கிகளாக இருப்பது அல்லது பெதிக போல கண்டும் காணமல் இருப்பது. ம க இ கவில் மறைமுக பார்ப்பனியம் என்ற கருத்தில் நம்பிக்கையுள்ள அல்லது அது குறித்து கருத்து தெரிவிக்காமல் கள்ள மௌனம் சாதிக்கும் தோழர்களும், பேரறிவாளர்களும் இந்த கள்ள பார்ப்பனியம் குறித்து கருத்து சொல்ல வேண்டும்

  அசுரன்

 51. thozhar mathi,
  ma ka eka vukku eppavumea than oru vimarsanathukku apparpatta amaippu endru ninippu, athai yaaravathu sonnal appati oru kovam,,,,,,,,
  tamilagha suulalil yar entha amaippu athiga alavil porattangalai natathi athanal paathikkapattathu? endru ungallukea thiriyum….

 52. dear asuran,
  ungalai pol nan pistal i thalaiku vaithu thunguvathillai,,,,,,

  aanalum nan parthavaraikkum neengal ehanai varutangalai tn il ehthanai makkal diral porattangalai katti eluppineerkal????///
  Eela pirachinai vidungal,,,,, Tamilaga meenavarkal vaalvurimai,, veerappan pirachinaiel malaivaal makkal arasa padaiyal seeralikkapattathu,,, kalppakkam anu ulai,, kaviri pirachinai,,, Athil karnataka thamilarkal adithu virattapattathu,,,, neiveali minsaram karnataga povathu,, Mullai periyaaru,,, paalaaru,, Eppati tamilnaatin valvathaara pirachinaikalil ungal kural urathu olikkavillaiyea yean??????????????????????????????????????????????????????????????????????????

 53. aama yar entha MARUTHAIYAN?????????/

  tamilnaatu ramasamikkum kuppusamikkum avara theriyuma??? Ada atha vidunga, avar vasikkara area vilayaavathu yaarukachum thiriyuma?? Ella thalai maraiyu thozharo??? Unmaiyela enakku therila sami,,, eppadi rasikar manram levella matter poguthea? Yarnu soneenganna therinsukkuven,,,,,

 54. ஆழிக்கரை அம்பி ரொம்ப ஆட்டம் போடாத,

  நீ என ஜோசியக்காரனா வாய்க்கு வந்ததையெல்லாம்
  பேசிக்கிட்டே இருக்க ?

  மருதையன் சிறைக்கு போனாரா போகலையான்னு
  உனக்கு ரொம்பத் தெரியுமா?
  இந்த விவரத்தை கூட சரியாக சொல்லத் துப்பில்லை வாயத்தெறந்துக்கிட்டு வந்திட்ட பார்ப்பனியம் பத்தியும்,
  ரயகரனை பத்தியும் பேச, ரயாகரனை பத்தி உனக்கு என்ன
  புன்னாக்கு தெரியும்?

  பெரிய லாடு லபக்கு மாதிரி பேசிட்ருக்க.

  நீ எங்கெயாவது எந்த ம.க.இ.க தோழரையாவது
  சந்தித்து இதெல்லாம் எனக்கு ச்ந்தேகம் அல்லது
  உங்கள் அமைப்பு மீது எனது விமர்சனம் என்று
  முன் வைத்து பேசியிருக்கிறாயா ?
  நிச்ச‌யம் அதற்கு வய்ப்பில்லை என்று தான்
  நினைகிக்றேன்
  ஏன்னா உன் நோக்கம் உன்னை தெளிவு
  படுத்திக்கொள்வதல்ல புரட்சிகர அமைபுகளை
  அவதூறு செய்வது தான் உன்
  நோக்கமாக இருக்கிறது.

  பார்ப்பனியம்,பார்ப்பனியம்ன்னு பேசுறியே
  அந்த‌ பார்ப்பனியத்திற்கெதிராக நீ இதுவரைக்கும்
  என்னென்ன புடுங்கினன்னு சொல்றியாடா அம்பி?
  சாதி மறுப்பு திருமணம் செய்திருக்கிறாயா?
  உன்னுடைய வீட்டில் பார்ப்பனிய பண்பாடுகளை ஒழித்திருக்கிறாயா?
  நாலு ஆர்.எஸ்.எஸ் காரனை வீதியில் இறங்கி அடித்திருக்கிறாயா ? அல்லது நாலு பேரிடம் பேசி அவர்களை பார்ப்பன‌ இந்து மதத்திலிருந்து விடுவித்து வெளியே கொண்டு வந்திருக்கிறாயா?

  இதில் ஒன்றையும் புடுங்கவில்லை என்றால் நீயெல்லாம்
  ம.க.இ.க வை பற்றி பேசாதே,உனக்கெல்லாம் அதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது!

  நெட்ல‌ உட்கார்ந்துகிட்டு பெரிய வெட்டி முறித்த வெண்ணை மாதிரி எல்லோரும் தான் எழுதலாம். எவன் அப்படி வாழுறான்னு பாருடா அம்பி.

 55. Thozharkalea,,,,
  ennaku oru samsayam? mr.maruthaiyan enna iyervaala???
  Ana enakku therinsu avaal eppadi pear vaikkamaatal??
  Ella eva peyara mathinutala???
  Aama sontha pearroda erukarathu enna thappa????
  Oru cummunist eppadi ninaippala?????
  Oru vealai CBI, RAW, MI, CIA, MOSAD, Evaalam thedittu irrukkarathalea THALAIMARAIYU PEAYAR ro ennavo,,,,,

 56. ஆழிக்கரை அம்பி ரொம்ப ஆட்டம் போடாத,
  நீ என ஜோசியக்காரனா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கிட்டே இருக்க?

  மருதையன் சிறைக்கு போனாரா போகலையான்னு உனக்கு ரொம்பத் தெரியுமா?
  இந்த விவரத்தை கூட சரியாக சொல்ல துப்பில்லை வாயத்தெறந்துக்கிட்டு வந்திட்ட பார்ப்பனியம் பத்தியும்,ரயகரனை பத்தியும் பேச,
  ரயாகரனை பத்தி உனக்கு என்ன புன்னாக்கு தெரியும்?
  பெரிய லாடு லபக்கு மாதிரி பேசிட்ருக்க.

  நீ எங்கெயாவது எந்த ம.க.இ.க தோழரையாவது சந்தித்து இதெல்லாம் எனகு ச்ந்தேகம் அல்லது உங்கள் அமைப்பு மீது விமர்சனம் என்று முன் வைத்து பேசியிருக்கிறாயா ? நிச்ச‌யம் அதற்கு வய்ப்பில்லை என்று தான் நினைகிக்றேன் ஏன்னா உன் நோக்கம் உன்னை தெளிவு படுத்திக்கொள்வதல்ல புரட்சிகர அமைபுகளை அவதூறு செய்வது தான் உன் நோகமாக இருக்கிறது.

  பார்ப்பனியம்,பார்ப்பனியம்ன்னு பேசுறியே அந்த‌ பார்ப்பனியத்திற்கெதிராக நீ இதுவரைக்கும் என்னென புடுங்கினன்னு சொல்றியாடா அம்பி?
  சாதி மறுப்பு திருமணம் செய்திருக்கிறாயா,உன்னுடைய வீட்டில் பார்ப்பனிய பண்பாடுகளை ஒழித்திருக்கிறாயா,நாலு ஆர்.எஸ்.எஸ் காரனை வீதியில் இறங்கி அடித்திருக்கிறாயா ? அல்லது நாலு பேரிடம் பேசி அவர்களை பார்ப்பன‌ இந்து மதத்திலிருந்து விடுவித்து வெளியே கொண்டு வந்திருக்கிறாயா
  இதில் ஒன்றையும் புடுங்கவில்லை என்றால் நீயெல்லாம் ம.க.இ.க வை பற்றி பேசாதே,உனக்கெல்லாம் அதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது!

  நெட்ல‌ உட்கார்ந்துகிட்டு பெரிய வெட்டி முறித்த வெண்ணை மாதிரி எல்லோரும் தான் எழுதலாம். எவன் அப்படி வாழுறான்னு பாருடா அம்பி.

 57. appu venkata suppu,,,

  ethuthaan mathimaaran thappu, RSS ethuku??? athan ma ka eka kooda erukkararea?????/ AAAma mathi payanthukkathinga,, ma ka soc la evlavu payar namakku thiriyama engirunthanganu,,,,makkal kitta ponna thirupiyea yaarum parkarathillainu, poora pearum pala peayarrula computer rea kathinu kitakkuranga,,,,,,

 58. தோழர் கலகம்

  //பார்ப்பனீயம்னா என்ன கோழி சாரி ஆழி//

  தோழர் ஆழிக்கரை அவர்களை கிண்டல் செய்ய வேண்டாம். அப்பறம் பெரியாரை பெரியாருடன் நிறுத்திவிடுங்கள். வீரமணியையும், கொளத்தூர் மணியையும் வைத்துக் கொண்டு பெரியாரியத்தை கேலிக்குள்ளாக்காதீர்கள்.

  பார்ப்பனீயம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தோழர்?

  000

  //ஆனந்த விகடனில் எச்சில் சோறு திங்கும் சில தொம்பிகள் இங்கு பார்ப்பனியம் என்று புலம்புவது வேடிக்கையே. சோற்றுக்காக பார்ப்பனியத்தை அன்டி பிழைப்பவர்கள் மற்றவர்களை பார்ப்பனியம் என்று திட்டி சுய இன்பம் காண்கிறார்கள், காணடஃடும், களத்தில் முடியாதவர்களின் கடைசி புகலிடம் அதுதானே//

  தோழர் மா.சே. உங்கள் வாதம் தவறானது. யார் யார் அப்படி அண்டிப்பிழைக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு பேசவும். மொத்த பெரியாரிஸ்ட்டுக்களையும் உங்கள் சிந்தனை விமர்சிக்கின்றது, அவமதிக்கிறது.

  000

  //வி.பி. சிங்கை மட்டும் குறித்து பேசவில்லை. சமூக நீதி என்கிற ஒற்றை வாதத்தின் மூலம் மட்டுமே தமது அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் புனிதப் படுத்திக் கொள்ளும் அரசியல் பசு மாடுகளின் தோலில் சவுக்கால் அடித்திருந்தது. அது பொருக்காத ஒரு தலைவரான விடுதலை ராசேந்திரன் வழக்கம் போல மறைமுக பார்ப்பனியத்துக்குள் தனது தலையை நுழைத்துக் கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லி உள்ளார். இதுதான் பிரச்சினை.//

  தோழர் அசுரன்

  நீங்கள் குறிப்பிட்ட கட்டுரைகள் இரண்டும் இணையத்தில் இருந்தால் இணைப்பு கொடுங்கள். படித்துவிட்டு என் கருத்தை சொல்கிறேன்.

 59. தோழி தமிழச்சி,

  இதோ அந்த சுட்டிகள்:

  புஜ கட்டுரை: http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4772:2009-01-08-20-51-14&catid=278:2009&Itemid=30

  விடுதலை ராசேந்திரனின் எதிர்வினை: http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vp_singh.php

  ஏகலைவனின் எதிர்வினை : http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_24.html

 60. புஜ கட்டுரையின் முக்கிய பகுதிகள்:
  “””
  காங்கிரசுக்கு மாற்று என்ற பெயரில் ஆட்சியைப் பிடிப்பதற்காக இந்துவெறி பயங்கரவாதக் கட்சியான பா.ஜ.க.வுடன் சிங் கூட்டணி கட்டினார். அதற்கு முன்பு வெறும் 2 எம்.பி.களை மட்டும் வைத்திருந்த பா.ஜ.க. இவரது உதவியால் 89 இடங்களில் வெற்றி பெற்றது. தனது ஆட்சியின்போது பா.ஜ.க. இட்ட வேலைக்கெல்லாம் தட்டாமல் சேவை செய்தார். இந்து பயங்கரவாதி ஜக்மோகனை பா.ஜ.க. நிர்ப்பந்தத்தால் காஷ்மீரின் ஆளுநராக்கினார். ஜக்மோகன் பதவி ஏற்ற நாளிலிருந்து இந்திய ராணுவம் காஷ்மீரில் பச்சை இரத்தம் குடிக்கத் தொடங்கியது. நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் கொன்று வீதிகளில் வீசப்பட்டனர். நாடெங்கும் எதிர்ப்பு வலுத்த பின்னர் வேறுவழியின்றி சிங், ஜக்மோகனைத் திரும்ப அழைத்தார் . “”

  “”
  1990இல் சோமநாதபுரத்தில் இருந்து அத்வானி தொடங்கிய இரத யாத்திரையை அவர் எந்த இடத்திலும் தடுக்க முயலவே இல்லை. யாத்திரை சென்ற இடமெல்லாம் இரத்தக் களறியை ஏற்படுத்தி, முசுலிம்களைக் கொன்று குவித்தது. அத்வானியின் இந்துவெறி இரத யாத்திரை உ.பி. மாநிலத்தில் மட்டும் 3 மாதங்களில் 600 பேர்களைக் காவு கொண்டது. அலிகாரில் மட்டும் 88 பேரைப் படுகொலை செய்தது. இவ்வாறு நாடெங்கும் இந்துவெறி பயங்கரம் ஆட்டம்போட்டபோதும், தனது நாற்காலி மட்டும் கவிழ்ந்து விடாமல் சிங் பார்த்துக் கொண்டார். கடைசியில் பீகார் எல்லைக்குள் இரத யாத்திரை நுழையும்போதுதான் லாலுபிரசாத்தின் அரசு அத்வானியைக் கைது செய்தது.””

  “””ராஜீவ் காலத்தில் இந்திய அரசு மேற்கொண்ட அதே பிராந்திய மேலாதிக்கத்தைத் தான் வி.பி.சிங்கின் அரசும் பின்பற்றியது என்பதையோ, காஷ்மீர், அசாம் மாநிலத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அவரின் அரசும் கொடூரமாக நசுக்கிக் கொண்டிருந்தது என்பதையோ பேச இவர்கள் வாய் திறப்பதில்லையே, அது ஏன்?”””

  “””மண்டல் முக்கியமாய் பரிந்துரைத்திருந்த நிலச்சீர்திருத்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசு வேலை வாய்ப்பில் 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினார்.”””

  “””தாராளமயக் கொள்கைக்கு மனிதமுகம் தரும்படி, தன்னார்வக் குழுக்களின் பிரதிநிதியாகத்தான் அவர் இருந்தார். இந்தப் புள்ளிதான் வீரமணியில் இருந்து அ.மார்க்ஸ் வரை உள்ள “சமூகநீதி’ பக்தர்களையும் வி.பி.சிங்கையும் இணைக்கிறது.”””

  “”கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாதிக்கம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அனைத்து அரசு வேலைவாய்ப்புகளையும் அடைத்துவிட்டது. ஆக, மண்டல் பரிந்துரையால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நடைமுறையில் எந்தப் பலனும் இல்லை. இருப்பினும், அது ஒரு சமூக நீதிப் புரட்சியை நடத்தி விட்டதாகக் கூறுவது, பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றும் தந்திரமே.””

  விடுதலை ராசேந்திரனின் கட்டுரையில் அவர்களது கள்ளப் பார்ப்பனியம் வெளிப்படும் இடம்:

  “”தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே””

  ஒருவர் தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ நிலபிரபுத்துவ அரசியலில் இருப்பார். அதில் அவர் அதிர்வலை ஏற்படுத்தினாலே பெதிக ஆதரிக்குமாம். இதைவிட சந்தர்ப்பவாத நிலைப்பாடு வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படி இடஓதுக்கீடு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அதற்கு நடைமுறையில் துரோகம் செய்யும் இவர்களை கள்ளப் பார்ப்பனிய கட்சி என்று ஏன் சொல்லக் கூடாது. இதே போல நிலைப்பாடு கொண்ட பேரறிவாளர்களை கள்ளப் பார்ப்பனர்கள் என்று ஏன் சொல்லக் கூடாது? ராசேந்திரன் குறிப்பிட்டுள்ள அந்த நிலப்பிரபுத்துவம் இந்தியாவில் பார்ப்பனியம்தான். எனில் வி. பி. சிங் பார்ப்பனியத்தில் அதிர்வலை ஏற்படுத்தினார் என்பதால் மட்டுமே அவரை விமர்சனமின்றி கொண்டாடும் பெதிகவை ஏன் கள்ளப் பார்ப்பனிய கட்சி என்று சந்தேகப்படக் கூடாது?

  அசுரன்

 61. வாய் கிழிய வலைப்பூ நாற பார்ப்பனிய மார்க்சியம் பேசும் மக இக soc இனரே குமுதத்தில் எழுதியது ஒரு ஞாநிதான் ஆனால் உங்கள் புதிய ஜனநாயகத்திலும் , புதிய கலாச்சாரத்திலும் எழுதுவது பல ஞாநிகள் தானே……….

  உங்கள் வினவும் கலகமும் செய்வது ஞாநியின் வேலையைத்தானே.

  உங்களுக்கும் ஞாநிக்கும் எந்த வகையிலும் வேறுபாடு இல்லையே. நீங்கள் அனைவரும் கடைந்தெடுத்த ஒரே பார்ப்பனிய சாக்கடை வகையறாக்கள்தானே.

  ஞாநியோ வாரம் ஒரு முறைதான் நாறடிக்கிறார். நீங்கள் நாள்தோறும் நாறடிப்பவர்கள்தானே.

  கலகமும் வினவும் பெயரை மாற்றினாலும் உங்கள் பார்ப்பனியம் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டே இருக்கும்.

  மார்க்சிய வேடமிட்டு முற்போக்கு பேசும் SOC மக இக வினரையும் ஞாநியையும் , ஏமாற்று பொதுவுடைமை பேசும் மணியரசனையும் , வேல் குத்துவது தமிழர் பண்பாடு என்று சொல்லும் அறிவு(?) மதியையும் வாழ்த்துவதும் பின்பு எதிர்ப்பதும் பின்பு கூட்டு சேர்வதுமே பெரியார் திகவினருக்கு வேலையாக போய்விட்டது.

  சில காலம் முன்பு மணியரசன் நெடுமாறனுடன் கூட்டு சேர்ந்திருந்த பொழுது மணியரசன் பழைய கண்ணோட்டத்துடன் மோதினார்கள் இப்பொழுது மணியரசன் கீழ் இணைந்து தமிழர் ஒருங்கிணைப்பாம்.

  இப்பொழுது SOC மக இகவினருடன் விபிசிங் பற்றி புதிய ஜனநாயகத்துடன் மோதல். இன்னும் சிறிது காலம் கழித்து பார்ப்பன மருதையன் கீழ் ஒருங்கிணப்பு சேருவார்கள்.

  உண்மையில் பெரியார் திகவினருக்கு சுயமரியாதை இருந்தால் இப்படி செய்வார்களா?

 62. வணக்கம் கலகம்

  தமிழர்களை ஒன்று சேரவிடாமல் கலகம் செய்வதுதானே உங்கள் ம க இ க வின் எண்ணம்.

  எங்கே பார்த்தாலும் மக்களிடத்தில் ம க இ க தான் . மக்களுக்கு ஒரு பிரச்சினை னா அங்கே ம க இ க போராடி வெற்றி வாங்கி தருவது.

  இட ஒதுக்கீடா நாங்கதான் வாங்கி தந்தோம் – ம க இ க ( இட ஒதுக்கீடு கூடவே கூடாதுனு 1998 தீர்மானம் போட்டத பற்றி இப்ப கேட்க கூடாது எச்சி தொட்டு அழிச்சுடுங்க)

  அமெரிக்கா கோக் எதிர்ப்பா அதுவும் நாங்கதான் – மக இக ( இப்ப கோகோ பெப்சி கம்பெனி முன்ன விட நல்லா தயார்ப்பு அதிகமாய்டுச்சா அதைப்பற்றி கேட்க படாது இப்ப )

  நேபாளத்தில் புரட்சியாக அதுவும் ம க இ க தான் ( நேபாள் ஆதரவு கூட்டத்துல கடைசி நேரத்துல் ஓடி போனத கேட்கபடாது)

  சிதம்பரத்துல போராட்டமா அது நாங்கதான் – (த.தே.பொ.க , பெரியார் திக , விடுதலைச் சிறுத்தைகள் நடத்துன பல போராட்டங்கள் பற்றி கேடக கூடாது , த.தே.பொ.க ஆளுங்கதான் soc ம க இ க வோட hrpc கிட்ட சிவனடியாரா அறிமுகப்படுத்தி வைச்சதையும் கேட்க கூடாது )

  எப்பப்பா எத்தனை போராட்டங்கள்

  காவேரி தண்ணி வருதா அது நாங்க பண்ணுனதுதான்

  அந்த திட்டம் இந்த திட்டம் வெற்றி பெற்ற எல்லா திட்டமும் எங்களோடதான் – ம க இ க .

  என்ன கலகமே கலகம் செய்யலாமா ?

  என்னதான் make up ( முலாம் ) போட்டாலும் மழையடிச்சா சாயம் வெளுக்கத்தான் செய்யும் . அது கூடிய விரைவில் கலகம் என்ற பெயரில் பூணூல் போட்டவாளுக்கு நடக்கும்.

  சரி சரி மேலே உள்ளவற்றை விடுங்க

  உண்மையிலேயே உங்களுக்கு தைரியமிருந்தால் உங்கள் கட்சி பெயரை சொல்ல இயலுமா ?

  உண்மையான பெயரை சொல்ல இயலுமா ? அதை முதலில் சொல்லுங்கள் பின்னர் நீங்கள் சொல்லுவது உண்மையா என்று பார்க்கலாம்.

  கோழி கோழி என்று சொன்ன கலகமே கேள்விகள்

  1 ) உண்மையிலேயே நீங்கள் ஆண்மையுள்ள நபர் என்றால் தைரியமாக உங்கள் ம க இ க வின் உள்ளிருக்கும் உங்கள் பெயரை சொல்லுங்கள். உங்கள் கட்சியின் பெயரை இங்கே பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம்.

  தமுஎச வினரை CPI (MARXIST) என்று சொல்லும் நீங்கள்

  மக இக ——— CPI ML (SOC) என்ற உங்கள் பெயரை சொல்ல துணிவிருக்கா?

  இனி நீங்கள் உங்கள் உண்மையான பெயரான CPIML SOC என்பதை பயன்படுத்துங்கள் பார்க்கலாம். ………………

  2 ) தமிழகத்திலேயே மக்களிடம் தொடர்பு இல்லாத உங்கள் அமைப்பினருக்கு பிரான்சில் உள்ள இரயாகரனிடம் எப்படி அப்படி நெருக்கமான நட்பு ?

  ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசும் நீங்கள் வெளிநாட்டிலுள்ள நபரின் http://www.tamilcircle.net என்ற தளத்தினை உங்கள் soc சொத்தாக பாவிப்பது எப்படி ?

  அய்யர்வாள் கலகமே ………………… இருக்கா?

 63. நண்பர் மதிமாறனே என்ன உங்க கருத்துக்கள் எதையும் காணோம் ?

  ம க இ க பற்றிய உங்கள் பார்வைதான் என்ன ?

 64. வெளிப்படையாக ம.க.இ.க வின் பு.ஜ வில் வரும் விமர்சனங்களுக்கு பெரியார் முழக்கத்தில் அவசியம் பதில் வரும். எங்கள் இதழ் ஆசிரியருக்கு இருக்கும் வேலைப்பளுவில் தாமதமாகலாம். பதில் வரும்.

  இந்த விவாதத்தில் கருத்துக்களைச் சொல்லியுள்ள ஏகலைவன், புரச்சி போன்ற பலர் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அசுரன் அவர்கள் யாரென்று தெரியும். நான் மிக உயர்வான இடத்தில் வைத்திருக்கும் கருத்தாளர் அவர். அவரிடமிருந்து கீழ்க்கண்ட சொற்கள் வந்துள்ளன.

  //மறைமுக பார்ப்பனியம் என்று வெளிப்படையாகவே சொல்ல வேண்டியதுதானே? சந்தேகம் என்பது போல மூடி மறைத்த வெட்கங்கெட்ட வார்த்தை பயன்படுத்துவானேன்?//

  //ம க இ கவிற்கு வி.பி.சிங்கின் இது போன்ற அரசியல் நேர்மையின்மையை விமர்சிக்கும் உரிமை கிடையாதா? அதை செய்தால் மறைமுக பார்ப்பனியம் என்று ஒற்றை வார்த்தையில் சேறு அடிக்கும் கேவலத்துக்கு வேறதாவது செய்யலாம் மானமிகு சுயமரியாதை செல்வங்கள்.//

  //இப்படி ஒரு வாதம் வைப்பதே உங்களிடம் நேர்மையாக பேசுவதற்கு எதுவுமில்லை என்பதையே காட்டுகிறது.//

  //யாரை பார்த்து யார் சொல்லுவது? இந்திய பார்ப்பனிய தரகு வர்க்கத்தை எதிர்த்து உறுதியுடன் நிற்க துப்பில்லாத உங்களை நாங்கள் குற்றம் சாட்டுகிறோம் ‘மறைமுக பார்ப்பனியம்’ என்று விவாதம் செய்ய தயாரா? //

  //விளைவுகள் அஞ்சினால் வராதீர்கள்.//

  //அரசியல் பசு மாடுகளின் தோலில் சவுக்கால் அடித்திருந்தது. அது பொருக்காத ஒரு தலைவரான விடுதலை ராசேந்திரன் வழக்கம் போல மறைமுக பார்ப்பனியத்துக்குள் தனது தலையை நுழைத்துக் கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லி உள்ளார். இதுதான் பிரச்சினை.//

  இப்படிப் பட்ட சொற்களைக் கொட்டிவிட்டு அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் நான் இல்லை. எனக்கு கிடைக்கும் நேரம குறைவு. மதிமாறனின் இந்தப் பதிவில் ஞானியை பெ.தி.க தோழர்கள் விமர்சித்திருக்கிறோம் என்பதை மட்டுமே பதிவுசெய்ய விரும்பினேன். பெ.தி.க தோழர்கள் ஞானியை விமர்சித்த நேரங்களில் ம.க.இ.க வினர் என்ன செய்தார்கள் என்பதை அறியவும் விரும்பினேன். அவ்வளவுதான். அதற்கு பதில் இல்லை. அசுரனின் கருத்துக்களில் ஞானியைப் பற்றிய விமர்சனமும் அவருக்கு கண்டனமும் இல்லை. கொளத்துார் மணி அவர்களின் உரை சரியா தவறா என்ற விமர்சனமும் இல்லை. திசைதிருப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட பின்பும் யாரோ ஒரு ஏகலைவன், புரச்சி போன்றோர் மீண்டும் மீண்டும் பெ.தி.க பற்றிய விமர்சனங்களைச் செய்திருப்பதை புறந்தள்ளலாம். தோழர் அசுரனும் அப்படி எழுதுவது ஏமாற்றமாய் இருக்கிறது.

  பெ.தி.க பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள். உங்களது பு.ஜ விலேயே அசுரன் எழுதினால் நாங்களும் பெரியார் முழக்கத்தில் பதில் எழுதுவோம். முடிந்தால்….முடிந்தால் பு.ஜ.வில் வெளிப்படையாக எழுதுங்கள். விளைவுகளுக்கஞ்சா வீரர்களின் தலைவரான பார்ப்பன மருதையன் வெளிப்படையாக பு.ஜ. வில் எழுதினால் அது இன்னும் நன்றாக இருக்கும். அதுதான் சரியாக இருக்கும். பயனுள்ளதாக இருக்கும்.

  அப்படியெல்லாம் செய்யமுடியாது அடுத்தவர் பதிவில், அந்தப் பதிவின் நோக்கத்திற்கு எதிராக இப்படித்தான் திசைதிருப்புவோம் என்றால்…

  மன்னிக்கவும். அப்படி பதில் சொல்லி நான் சிறந்த அறிவாளி, சிறந்த கருத்தாளன், மிகப் பெரும் புரட்சிகர கடமைகளைச் செய்பவன், போராளி என்றெல்லாம் நிருபித்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் சார்ந்த இயக்கத்துக்கும் இல்லை.

  நான் விளைவுகளைக் கண்டு அஞ்சுகிறேன். இந்தியப் பார்ப்பனியத்தை எதிர்க்க எங்களுக்கு துப்பில்லை.

  உண்மையான புலியை விட புலிவேசம் போட்டவன் நல்லாவே உறுமுவான். இரண்டையும் பார்த்திருக்கிறேன். பார்க்கிறேன்.

 65. எமக்குக் கூட விடுதலை ராசேந்திரன் யார் என்று தெரியும். அவரைப் பற்றி மிக உயர்வான அபிப்ராயம் இதோ இப்போது கூட எம்மிடம் உள்ளது. அவரிடமிருந்துதான் கீழ் கண்ட சொற்கள் வந்துள்ளன.

  “மறைமுக பார்ப்பனியம்”
  “சந்தேகம்”
  “பார்ப்பன அரசியல்”

  புரச்சி

 66. அழுகிய முட்டையை எல்லாரும் ஸ்டாக் எடுத்து வச்சிகொங்க !! அடுத்த ரவுண்டு இந்த கூறுகெட்ட கூவ மனைவியை விவாகரத்து பண்ணிட்டு தறிகெட்டு திரியும் இந்த் ‘கோனி’ க்கு தான் .. வர வர இவன் போக்கே சரியில்லை .. இவன விகடன விட்டு விரட்டியாச்சி , இனி குமுதத்தை விட்டும் விரட்டனும் போல

 67. பெரியார் தி க நண்பர்களே

  ஒரு சந்தேகம் எதற்குஇப்படி மற்ற பார்ப்பனீய தாசர்களுக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்.நன்றாக யோசித்துப்பாருங்கள் புஜவில் விபிசிங் பற்றிய கட்டுரை என்னதவறினைக்கண்டீர்கள் அவர் ராஜபுத்திர தாசன் என்பதை மறுக்க முடியுமா? ,தேவை இன்றி நீங்களே சொல்லியபடி பல போராட்டங்களில் கைகோர்க்கும் ஒரு தோழமை அமைப்பை இப்படியா திட்டுவது,புஜ நண்பர்கள் யாராவது பெதிகவை அரசியலற்ற முறையில் விமர்சித்து இருக்கின்றார்களா?

  அதை விடுத்து ஏன் மருதையன் அசுரன் புஜவில் எழுதவில்லை ? இது தான் உங்கள் அரசியலா?

  சொல்லுகள் முத்துக்குமார் மரண ஊர்வலத்தின் போது எங்கே கண்டீர்கள் பார்ப்பனீயத்தை, நாங்கள் கண்டோம் வைகோவின் வாய்வீச்சில் மாமியை எதிர்க்காத அப்புலியில் வாசத்தில்,

  தமிழனாய், பிற்படுத்தப்பட்டவனாய் பிறந்தாலே ஒருவருக்கு வக்காலத்து வாங்க வேண்டுமா? அதுதான் அவ்சியமா?

  இன்னொன்றையும் தெரிவித்துகொள்ளுகிறோம்: தெருவில் நீங்கள் எழுதியிருந்த “கல்விக்கடவுள் சரஸ்வதி நாட்டில் எதற்கு தற்குறிகள் எதற்கு?மலமள்ளும் பாப்பாத்தியை கண்டதுண்டா” என்ற வாசகங்கள் தான் எங்களை ஒரு நாத்திகனாக பொதுவுடமை சிந்தனைகாரனாக மாற்றியிருக்கிறது.

  சாமி சிலையை செருப்பால் அடித்து அலகு குத்தி வரும் உங்கள் வீரத்தை யார் ஏசினாலும் எதிர்த்து பேசும் உங்கள் கருதை யாரும் விமர்சிக்கவில்லை, ஒவ்வொரு தேர்தலிலும் ஏன் மற்ற நாய்களுக்கு தோள் கொடுக்க போகிறீர்கள்? இது தான் எங்களின் கேள்வி/

  இப்போது உங்களின் மைய முழக்கம் என்ன நாடாளுமன்ற தேர்தலின் காங்கிரசை தோற்கடிப்போம் என்பதுதானே “இந்திய அரசை முறியடிக்காது இப்படி அதற்கு முட்டு ஏன் கொடுக்குறீர்கள்”

  கொலை வெறியன் ராஜீவ் செத்த உடனே புஜவில் வந்த கட்டுரையே சரியான .சாவுதானென்று.

 68. //தமிழர்களை ஒன்று சேரவிடாமல் கலகம் செய்வதுதானே உங்கள் ம க இ க வின் எண்ணம்//

  ஆழிக்கரை

  அய்யா யார் தமிர்ழகள் விளக்கம் தேவை

  ஜெயாவின் காலில் கிடக்கும் வைகோ, கிடந்த வீரமணி நெடுமாறன்,

  ராஜ பக்சே தலைக்கு லேட்டஸ்டாய் விலை வைத்த அர்ஜுன் சம்பத்,,திருநாவுக்கரசர், அப்புறம் சொல்லுங்கய்யா எல்லா கழிசடைங்க பேரையும்.

  ஒத்துக்குறோம்

 69. அதி அசுரன்,

  வார்த்தைகளில் கவனம் தேவை பார்ப்பன மருதையன் என உங்களால் விளிக்கப்படும் அந்நபரின் வாழ்வில் பார்ப்பனீயத்தினை காட்ட முடியுமா?

  யார் பார்ப்பனராய் வாழ்கிறார்கள்,சினிமாவில் பார்ப்பனர்க்கு ஆதரவாய் படம் எடுப்பவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவீர்கள்,பார்ப்பன சாதியில் பிறந்தாலும் அதை தூக்கியெறிந்து விட்டு மக்களுக்காக களத்தில் நிற்போரை பார்ப்பான் என கேலி செய்வீர்களோ?

  தனி நபரின் மீது அரசியலற்ற வசவுகளை நீங்கள் தொடரும் பட்சத்தில் உங்களைப்பற்றிய விமர்சனங்கள் தொடரும்.அதை விட்டுவிட்டு கோழியோடு சேர்ந்து எங்க உங்க கட்சியகாட்டு பல்லக்கு தூக்காதீர்கள்.

  கேள்விக்கு பதில் சொல்லாது இழுப்பது தான் பெரியாரிஸ்டுக்கு அழகா/ உண்மையில் உங்களை போல் அரசியலற்ற பெரியாரிய வாதியை கண்டதேஇல்லை

 70. சூப்பர்??? லிங்க்ஸ் உங்க மருதையனையும் தெரியும் அங்க இருந்து வந்த கார்முகில் பற்றியும் தெரியும்.

  சென்னையிலிருந்து விவாதம் செய்ய நேரில் வந்து மாட்டி ஓடிய உங்கள் soc யினரிடம் கேட்டுப்பார்த்தால் உங்களுக்கே தெரியும் நான் யாரென்று.

  ஓராண்டுக்கு முன்பு கோவை வந்து விவாதத்தில் ஈடுபட்டு வாங்கி கட்டிக்கொண்ட உங்கள் புஜ , புக SOC யினரிடம் கேட்டுப்பாருங்கள்…

  விரைவில் CPIML SOC யின் பழையது முதல் இன்று வரை உள்ள ஸ்தாபன அறிக்கைகள் விரைவில் வலைப்பூக்களில் தரவேற்றம் செய்யப்படும். scan செய்யவும், இணையத்துக்கு உட்காரவும் எமக்கு நேரமும் இல்லை வாய்ப்பும் இல்லை.

  விரைவில் உங்களுக்காக தொடரும்…. புரட்டுகள் உடையும்

 71. சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்பபானின் பிறவிக் குணம் மாறவே மாறாது ! சொல்வது பெரியார் !

  பெரியார் தி.க -ஞானியை விமர்சனம் செய்யவில்லை என்று விழுந்து பிராண்டுவதற்கு ஒரு யோக்கியதை வேண்டும்.

  மருதையன் அய்யங்காரின் தலைமையில் புரட்சி செய்யும் ம.க.இ.க பிராண்டுவது தான் கொடுமை.

  ம.க.இ..க மண்டையுடைப்பு புரட்சியில் சூத்திரபசங்களுக்குத் தான் மண்டை உடைகிறது.

  அய்யங்காருக்கு எத்தனை முறை மண்டை உடைப்பட்டுள்ளது?

  சூத்திரர்களை ” வானரசேனை” ஆக்கி சூட்சமமாக மேலே உட்கார்ந்திருப்பது தான் பார்ப்பனீயம். அது தான் ராமாயணம்.

  புத்தமதத்தை ஹீனயானம், மகாயானம் என செரிமானம் செய்தது பார்ப்பனீயம்.

  மார்க்சீயத்தை பாரதப்புண்ணிய பூமியில் நேரடியாக சனாதானப்படுத்தியது மார்க்ஸிஸ்ட் குழுமம்.

  மறைமுகமாக இதே வேலையை செய்கிறது ம.க.இ.க.

  இந்த சூதுகளையெல்லாம் யோசித்தே, பெரியார், திராவிடர் கழகத்தில் எந்தப் புரட்சிப் பார்ப்பானை கூட உள்ளே சேர்ப்பதில்லை என அறிவித்தார்.

  பெரியார் தி.க, ஞானியின் உழைப்பைப் பயன்படுத்தியிருக்கலாம்.

  ஞானிக்கு மட்டுமல்ல,எந்தப் பார்ப்பானுக்கும் பெரியார் தி.க பயன்பட்டது கிடையாது.

  பார்ப்பனத்தலைமையை ஏற்றுக் கொண்டு, பெரியாரியல் பேசும் புரட்சியாளர்கள், தங்கள் நிலைப்பாட்டை மீள்ப்பார்வை செய்வது நலம்.

 72. //பெரியார் தி க நண்பர்களே

  ஒரு சந்தேகம் எதற்குஇப்படி மற்ற பார்ப்பனீய தாசர்களுக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்.நன்றாக யோசித்துப்பாருங்கள்//

  தோழர் கலகம்

  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? பெ.தி.க.வை விட உங்களின் செயல்பாடுகள் வீரியமிக்கதாக இருக்கிறது என்றா? இருக்கட்டும் தோழர் நல்லது. தொடருங்கள் உங்களின் செயல்பாடுகளை. அதற்காக பெ.தி.க. தோழர்களை அவமதிக்க வேண்டாம்.

  என்ன தோழர் கொளத்தூர் மணிக்கு மற்ற தலைவர்களைப் போல் தொண்டர்களை தந்திரமாக சிறைக்கு அனுப்பத் தெரியவில்லை. அவரே போய் கொண்டிருக்கிறார். அந்த தன்மையாவது அவரிடம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

  ///தெருவில் நீங்கள் எழுதியிருந்த “கல்விக்கடவுள் சரஸ்வதி நாட்டில் எதற்கு தற்குறிகள் எதற்கு? மலமள்ளும் பாப்பாத்தியை கண்டதுண்டா” என்ற வாசகங்கள் தான் எங்களை ஒரு நாத்திகனாக பொதுவுடமை சிந்தனைகாரனாக மாற்றியிருக்கிறது.///

  ///சாமி சிலையை செருப்பால் அடித்து அலகு குத்தி வரும் உங்கள் வீரத்தை யார் ஏசினாலும் எதிர்த்து பேசும் உங்கள் கருதை யாரும் விமர்சிக்கவில்லை, ஒவ்வொரு தேர்தலிலும் ஏன் மற்ற நாய்களுக்கு தோள் கொடுக்க போகிறீர்கள்? இது தான் எங்களின் கேள்வி///

  தோழர் மதிமாறன் பதிவை மட்டும் போட்டுவிட்டு எதற்கும் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள். நீங்களும் ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில் தோழர் கலகம் குறிப்பிட்ட இருகேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்வது நல்லது.

  ///சாமி சிலையை செருப்பால் அடித்து அலகு குத்தி வரும் உங்கள் வீரத்தை///

  ஆம் தோழர் கலகம் அதற்கு அசாத்தியமான துணிவு வேண்டும். அத்துணிவு உங்களிடம் இருந்தால் நீங்களும் செய்துக்காட்டுங்கள்.

 73. //கேள்விக்கு பதில் சொல்லாது இழுப்பது தான் பெரியாரிஸ்டுக்கு அழகா/ உண்மையில் உங்களை போல் அரசியலற்ற பெரியாரிய வாதியை கண்டதேஇல்லை//

  தோழர் கலகம் உங்களுக்கு வேண்டுமானால் கலகம் செய்வதற்கும் கேள்விகள் கேட்பதற்கும் நேரம் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக தோழர் அதி அசுரனுக்கு இல்லை. எந்த பொருளாதார உதவியும் இல்லாமல் உடல் உழைப்பை மட்டும் கொடுத்து போராடும் பெ.தி.க. தோழ ர்களும் கழகபணிகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும்
  தோழர் அதிஅசுரனுக்கு உங்களுடைய கேள்வியை கண்டால் அலட்சியப்படுத்தி விட்டு போய் கொண்டே இருப்பார். அவருக்கு அந்த பக்குவம் இருக்கிறது. ஆனால் எனக்கில்லை. எனக்குத் தெரிந்த தோழர்களின் நடத்தையை அவதூறாக மாற்றி திரிபுவாதம் செய்துக் கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டிருக்கமாட்டேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். வார்த்தைகளை கவனமாக எடுத்தாளுங்கள். “போகிற போக்கிலே கேள்விக்கு பதில் சொல்லாது இழுப்பது தான் பெரியாரிஸ்டுக்கு அழகா/ உண்மையில் உங்களை போல் அரசியலற்ற பெரியாரிய வாதியை கண்டதே இல்லை”
  போன்ற சொல்லாடல்கள் விடாகண்டன் போலிருப்பதுமல்லாமல் ஒரு உண்மையான பெரியாரிஸ்ட் தோழனை அவமதிக்க முயல்வதை அனுமதிக்கமாட்டேன். பார்த்திருக்கிறீர்களா பெரியாரிஸ்ட் பெண் தோழிகளை. அத்துமீறும் போது இழுத்து வைத்து அறைவிடுகிறார்களாம். அதில் நானும் ஒன்று.

 74. ஆழிக்கரை , இணையத்தில் ஒளிந்து கொண்டு உதார் விடவேண்டாம், உங்கள் விலாசத்தை கொடுங்கள் உங்களை நேரில் சந்தித்து விவாதிக்க நான் தயார்……

  இல்லை நீங்கள் சென்னை வந்தால் அசோக் நகர் புதிய கலாச்சாரக் கதவுகள் உங்களுக்காக திறந்திருக்கும், அங்கும் விவாதிக்கலாம்….

  தப்பித்து ஓட முயற்சிக்காதீர்கள் சவால் விடுகிறேன் உங்களின் அரசியல் அஸ்தமனம் என் கையில்!

 75. தோழர் தமிழச்சி இது என்ன

  //அத்துமீறும் போது இழுத்து வைத்து அறைவிடுகிறார்களாம். அதில் நானும் ஒன்று.//

  தோழர் கலகம் உங்கள் கையை பிடித்து இழுத்த்து போல மிரட்டுகிறீர்கள்
  இதுதான் உங்கள் பெரியாரியமா? உங்களுக்கு அதி அசுரன் மேல் அபிமானம் இருப்பது போல எங்களுடைய தோழர் மருதையன் மேல் எங்களுக்கு அபிமானம் இருக்க கூடாதா? அவரைப்பற்றி புரளியும் அவதூறுமாக பேசும் போது அதற்கு உரிய முறையில் தானே பதில்வரும். முதலில் உங்கள் அதி அசுரனின் தவறை கண்டியுங்கள். இல்லை அவர் சொல்வது சரியென்றால் அதை ஆதாரத்தோடு நீங்கள் விளக்குங்கள் அவருக்குத்தான் நேரமில்லையே….அதை விடுத்து எங்கள் தோழரை நீங்கள் மிரட்டினால் நானும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்

 76. //தோழர் கலகம் உங்களுக்கு வேண்டுமானால் கலகம் செய்வதற்கும் கேள்விகள் கேட்பதற்கும் நேரம் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக தோழர் அதி அசுரனுக்கு இல்லை. //

  இதை இப்படி விளங்கிக்கொள்ளலாமா? அதி அசுரனுக்கு அவதூறு செய்ய மட்டும்தான் நேரமிருக்கும், அதை விவாதிக்க அல்ல

  /

 77. /எந்த பொருளாதார உதவியும் இல்லாமல் உடல் உழைப்பை மட்டும் கொடுத்து போராடும் பெ.தி.க. தோழ ர்களும் கழகபணிகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும்தோழர் அதிஅசுரனுக்கு உங்களுடைய கேள்வியை கண்டால் அலட்சியப்படுத்தி விட்டு போய் கொண்டே இருப்பார். அவருக்கு அந்த பக்குவம் இருக்கிறது.//

  ம க இ க தோழர்கள் என்ன பென்ஸ் காரில் வந்தா புரட்சி செய்கிறார்கள்
  அவர்களுக்கும் இந்த நிலைதான் சொல்லப்போனால் இன்னும் மோசம்… பெரியார் கொள்கைக்காவது புரவலர் உண்டு நக்ஸலைட்டுகளுக்கு ஏது ஆதரவு உழைக்கும் மக்களை தவிர..

  அதிஅசுரம் அமைதி காப்பது பக்குவத்தால் அல்ல அவருக்கு சொல்ல பதில் இல்லை என்பதுதான் உண்மை.

 78. //தோழர் மா.சே. உங்கள் வாதம் தவறானது. யார் யார் அப்படி அண்டிப்பிழைக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு பேசவும். மொத்த பெரியாரிஸ்ட்டுக்களையும் உங்கள் சிந்தனை விமர்சிக்கின்றது, அவமதிக்கிறது//

  உண்மையிலேயே பெரியாரிஸ்டுகளை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் துளியும் இல்லை, இங்கே பல புனைப்பெயர்களில் வலம் வருபவர்களின் ஒருவரை பற்றித்தான் குறிப்பிட்டேன். அது அவருக்கு புரிந்திருக்கும். அவர் பெரியாரிஸ்டு அல்ல பிழைப்புவாதியிஸ்டு

 79. ஆழிக்கரை முன்ன ஒரு பதிவுல மூளை குறைந்து கொண்டே வருவதாக சொன்னீர்கள் இப்போது சுத்தமாக காலியாகிவிட்டதா?

  SOC-CPIML தான் ம.க.இ.க வோட கட்சின்னு முக்கியமா Q பிராஞ்சுக்கு தெறியும் அப்புறம் ம.க.இ.க வோட உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் தெறியும், தெறியாதவங்க கேட்டு தெறிஞ்சுக்குவாங்க. இப்ப ம.க.இ.க வுல நீங்க சேருவதை தடுப்பது நாங்கள் எங்களை SOC-CPIML என்று அழைத்துக்கொள்ளாத்து தானா , அப்படி அழைத்துக்கொண்டால் உடனே வந்துவிடுவீர்களா? வேறு கொள்கை ரீதியான முரன்பாடே இல்லையா?

  நீங்க கூடத்தான் தாய்லாந்துன்னு பதிவுல போட்டு இருக்கீங்க அப்ப நீங்க அன்னிய சக்தியா… இல்ல தோழர் தமிழச்சி பிரான்ஸ் நாட்டுலேருந்து பெரியாரோட கொள்கையை பரப்புவது ஏகாதிபத்திய சதியா? இதில் உங்கள் குழப்பம் என்ன

  சிவனடியார் ஆறுமுகசாமியை பெ.தி.க அறிமுகப்படுத்திய பிறகு என்ன செய்தார்கள்? வழக்கு, போராட்டங்கள், கூட்டங்கள், செலவுகள் இதில் பெ.தி.க பங்கு என்ன? இதில் என்ன சொல்ல வருகிறீர்கள்

  மற்ற விஷயங்களுக்குள் போவதற்கு முன் ஒரு சந்தேகம்? பொதுவாக சீ.பீ.எம் அணிகள் தான் உங்களை போல உளறுவார்கள், நீங்கள் சீபிஎம் கட்சியா…அய்யோ இப்பதான் சவால் விட்டேன், நீங்க சீபிஎம் ஆ இருந்தா என் சவால நான் உடனை வாபஸ் வாங்கி கொள்கிறேன்.. தயவு செய்து நீங்கள் சார்ந்த அமைப்பு என்னவென்று தெறியப்படுத்துங்கள்… பிறகு பேசுவோம்!

 80. ///தோழர் கலகம் உங்கள் கையை பிடித்து இழுத்தது போல மிரட்டுகிறீர்கள். இதுதான் உங்கள் பெரியாரியமா? ///

  என்னுடைய கையை பிடித்து இழுத்தார் என்றா சொன்னேன்? திரும்பவும் அந்த பின்னூட்டத்தை போய் படித்து பார்க்கவும்.

  “அத்துமீறும் போது” என்ற வார்த்தையை உபயோகித்து இருக்கிறேன். அத்துமீறுதல் என்னும் இவ்வார்த்தையை நான் பெண்ணாக இருந்து குறிப்பிடுவதால் உங்கள் சிந்தனை இயல்பாக பாலீயல் தொடர்பான வாக்கியத்தினுள் நுழைத்துவிடுகிறீர்கள். நான் குறிப்பிட்டது பெ.தி.க. பெண்களிடமும், கொள்கைப்பிடிப்பும், பெரியாரிய பற்றும், சக தோழர்களை இழிவுபடுத்த முற்படும் போது பொங்கியெழும் போர்க்குணமும் உண்டு என்னும் வாதத்தில் என் கருத்தை பதிவு செய்தேன். இருப்பினும் நான் பெ.தி.க. வும் இல்லை தி.க.வும் இல்லை. உண்மையான பெரியாரிஸ்டுக்கள் எல்லோரும் என் தோழர்களே.

  விஷயத்திற்கு வருவோம்…,

  உங்களுடைய சகதோழனுக்காக உங்களுடைய வாதத்தை முன்வைக்க வருகிறீர்கள் இல்லையா? இத்தனைக்கும் நீங்கள் யாருக்கு ஆதரவாக பேசுகிறீர்களோ அந்த தோழர் ம.க.இ.க.வில் முக்கிய உறுப்பினராக கூட நிச்சயம் இருக்க மாட்டார்.
  தோழர் அதிஅசுரன் அப்படியில்லை. பெ.தி.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். தோழர் கொளத்தூர் மணி
  அவர்களின் வலது கரம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அவருடைய முக்கியத்துவத்துக்கு ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுகிறேன். தோழர் கொளத்தூர் மணி கோவை சிறையில் அடைக்கப்படும் முன்பு ஈழத்தமிழர்களுக்காக நடத்திய போராட்டத்தில் அதி அசுரனை கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னார். ஏனெனில் அதில் கலந்து கொள்பவர்களை தமிழகஅரசு கைது செய்வதாக இருந்தது. தோழர் கெளத்தூர் மணி தொண்டர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு தலைவர் அந்தஸ்த்துக்கு மட்டும் அலைபவர் இல்லை. தொண்டர்களோடு அவரும் சிறைக்கு செல்ல முடிவு கட்டியதால் தொடர்ந்து பெ.தி.கழக பணிகளை அதிஅசுரன் பொறுப்பில் இருப்பதற்காக அவரை போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதிலிருந்து தோழர் அதிஅசுரனின் முக்கியத்துவம் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

  அடுத்து தோழர் அதிஅசுரன் பெரியார் மீதும், பெரியாரியத்திலும் எவ்வளவு பற்று என்பதற்கு இன்னொன்று சொல்கிறேன். நான் பிரான்சில் தொழில் செய்து கொண்டும், நீங்கள் உங்களுக்கு தேவையான உத்தியோகத்தை பார்த்துக் கொண்டும் தான் கழகப்பணியில் செயல்படுகிறோம். தோழர் அதிஅசுரன் முழுநேரமும் கழகத்தில் செயல்படுவதற்காக தன் வேலையை தூக்கியெறிந்தவர்.

  மன்னிக்கவும் அவரின் தனிப்பட்ட செய்திகளை இங்கே பதிவ செய்வதற்கு. யார் செய்வார்கள் இப்படி? மிக அரிதாக சிலரைத் தவீர?

  அப்படிப்பட்ட எங்கள் தோழரை உங்கள் தோழர் “போகிற போக்கிலே கேள்விக்கு பதில் சொல்லாது இழுப்பது தான் பெரியாரிஸ்டுக்கு அழகா/ உண்மையில் உங்களை போல் அரசியலற்ற பெரியாரிய வாதியை கண்டதே இல்லை” என்கிறார். எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் எங்களால் தோழரே. கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஓர் தோழரின் அடிப்படை செய்திகளையே திரித்து நடத்தையை சந்தேகத்திற்கு உட்படுத்தும் போது தோழர் அதிஅசுரனை பற்றி தெரியாதவர்கள் என்ன நினைப்பார்கள்? பெ.தி.க. வின் செயல்பாட்டையே உளுத்து போய்விடச் செய்யாதா?

  ஆகையாலே நான் குறிப்பிட்டேன், “அத்துமீறும் போது, எங்கள் பெரியார் திரிபுவாதம் செய்யப்படும் போது, பெரியாரியம் கேள்விக்குட்படுத்தும் போது, எங்கள் நடத்தைகளை சந்தேகத்திற்குட்படுத்திய விமர்சனம் அத்துமீறும்போது பெ.தி.க. பெண் தோழர்களும் செவிட்டில் விட தயங்கமாட்டார்கள் என்று. இதிலும் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் எனக்கு உங்கள் தோழர் அசுரனின் நேர்மையான விமர்சனத்தின் மீது நம்பிக்கை உண்டு. இதைப் பற்றி அவர் பேசட்டும்.

  ///இதுதான் உங்கள் பெரியாரியமா?///

  இதற்கு ஏன் பெரியாரியத்தை இழுக்கிறீர்கள்?
  பெரியாரியம் அதைத் தான் செய்யச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. “அடங்கமறு, அத்துமீறு” என்பது ஆண் தோழர்களுக்கு மட்டும் பொறுந்தாது. பெண் தோழர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தோழர் மா.சே அவர்களே!

  ///உங்களுக்கு அதி அசுரன் மேல் அபிமானம் இருப்பது போல எங்களுடைய தோழர் மருதையன் மேல் எங்களுக்கு அபிமானம் இருக்க கூடாதா? அவரைப்பற்றி புரளியும் அவதூறுமாக பேசும் போது அதற்கு உரிய முறையில் தானே பதில்வரும். முதலில் உங்கள் அதி அசுரனின் தவறை கண்டியுங்கள். ///

  நீங்கள் தாளாரமாக உங்கள் தோழர்களுக்காக வாதாடலாம். அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. அதேபோல் எங்களுக்கும் உண்டு என்பதை நினைவில் வையுங்கள். அதேபோல் விவாதத்தில் யார் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டிருப்பது என்பதையும் கவனித்து உங்கள் நடுநிலைமையை கையாளுங்கள். அய்யய்யோ இவன் என் கையை பிடிச்சா இழுத்தான்னு கேட்கிறானே கேட்க நாதிஇல்லையா? என்று ஒப்பாரி வைக்கும் ஆள் நானில்லை. அதனால் வாதங்களை திசைமாற்றம் செய்ய வேண்டாம்.

  ///உங்களுக்கு அதி அசுரன் மேல் அபிமானம் இருப்பது போல எங்களுடைய தோழர் மருதையன் மேல் எங்களுக்கு அபிமானம் இருக்க கூடாதா? அவரைப்பற்றி புரளியும் அவதூறுமாக பேசும் போது அதற்கு உரிய முறையில் தானே பதில்வரும். முதலில் உங்கள் அதி அசுரனின் தவறை கண்டியுங்கள். இல்லை அவர் சொல்வது சரியென்றால் அதை ஆதாரத்தோடு நீங்கள் விளக்குங்கள் அவருக்குத்தான் நேரமில்லையே….அதை விடுத்து எங்கள் தோழரை நீங்கள் மிரட்டினால் நானும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்///

  தோழர் மா.சே.

  திரும்பவும் போய் முதலில் இருந்து என்னுடைய பின்னூட்டங்களை பாருங்கள். மிக கவனமாகவே என்னுடைய வாதங்களை எடுத்து வைத்திருக்கிறேன். அடுத்தது தோழர் மா.சே. திரும்பவும் போய் முதலில் இருந்து என்னுடைய பின்னூட்டங்களை பாருங்கள். மிக கவனமாகவே என்னுடைய வாதங்களை எடுத்து வைத்திருக்கிறேன். அடுத்தது தோழர்களுக்குள் கலகம் விளைவிக்க சில பெயர்கள் உபயோகிக்கப்பட்டுள்ளது. ம.க.இ.க. இருப்பவர்களாக காட்டிக் கொண்டு பெரியாரிஸ்ட் மீது சேற்றை வாரி இறைப்பது. இதில் பின்னூட்டம் செய்திருப்பவர்களில் அசுரன் எழுத்துக்களை நன்கு தெரியும். அவர் நேர்மையாகவே விமர்சனங்களை முன்வைப்பவர். பெ.தி.க. தோழர்கள் நேரிலும் அவரை பார்த்திருக்கிறார்கள்.

  //அதை விடுத்து எங்கள் தோழரை நீங்கள் மிரட்டினால் நானும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்//

  மிரட்டலா? நீங்க வேற நானெல்லாம் போட வேண்டிய இடத்தில் ஒரு போனை போட்டாலே மேட்டர் முடிஞ்சிடும். நான் எதுக்கு மிரட்டனும்? தோழர் மருதையன் மீது எனக்கு எந்த பகையும் இல்லை. அவருக்கும் என் மீது எந்த காழ்ப்புணர்வும் இல்லை. இந்த மாதிரி ஒரு பிரச்சனை என்றால் கூட போதும். புரிந்து கொள்வார்.

 81. //இதை இப்படி விளங்கிக்கொள்ளலாமா? அதி அசுரனுக்கு அவதூறு செய்ய மட்டும்தான் நேரமிருக்கும், அதை விவாதிக்க அல்ல//

  தோழர் மா.சே. நீங்கள் இன்னொரு கோணத்தை பற்றி சொல்கிறீர்கள். ஆனால் தோழர் அதி அசுரன் சொல்லியிருக்கிறார் கூடிய சீக்கிரம் வெளியிடுவோம் என்று. இதைக் கூட புரிந்து கொள்ளாமல் தோழர் அதிஅசுரன் மீது குற்றம் சுமத்துவதிலேயே இருக்கிறீர்கள். இது நியாயமா?

 82. //ம க இ க தோழர்கள் என்ன பென்ஸ் காரில் வந்தா புரட்சி செய்கிறார்கள்//

  தோழர் வேறொரு பதிவில் உங்களிடம் சொல்லி இருந்தேன். உங்களுக்கு நக்கல் நல்லா வருது என்று. அதே போல் எனக்கு உள்குத்துல கொஞ்சம் தேறுவேன். ஆனா பாருங்க நான் பென்ஸ் கார்ல தான் போறேன். ஒன்னுக்கு ரெண்டா வேறு இருக்கு. இருந்தாலும் சமூகத்தில் களப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். மாக்ஸீயம் கம்யூனிஸியம்
  பெரியாரியம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்கும்தான் சமூகத்தில் ஏதாவது புரட்சி செய்துவிட முடியாதா சமூகக் கோபங்களுடன் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

  //பெரியார் கொள்கைக்காவது புரவலர் உண்டு நக்ஸலைட்டுகளுக்கு ஏது ஆதரவு உழைக்கும் மக்களை தவிர.. //

  இந்த கூற்று பெ.தி.க.வுக்கு பொருந்தாது. குடியரசு தொகுதி வெளியிட தன் வீட்டை அடமானம் வைத்தவர் தோழர் கொளத்தூர் மணி.

 83. ///2 ) தமிழகத்திலேயே மக்களிடம் தொடர்பு இல்லாத உங்கள் அமைப்பினருக்கு பிரான்சில் உள்ள இரயாகரனிடம் எப்படி அப்படி நெருக்கமான நட்பு ?

  ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசும் நீங்கள் வெளிநாட்டிலுள்ள நபரின் http://www.tamilcircle.net என்ற தளத்தினை உங்கள் soc சொத்தாக பாவிப்பது எப்படி? ///

  தோழர் ஆழிகரை

  இரயாகரன் தளத்தில் என்னுடைய பதிவுகள் கூட வருகின்றன. தோழர் இரயாகரன் என்னுடைய சிறந்த கட்டுரைகள் வந்தால் தமிழரங்கம் தளத்தில் எடுத்துப் போட அனுமதி கேட்டார். சரி என்று சொல்லி இருந்தேன். இதுவரையில் 50 பதிவுகள் இருக்கிறது. தவீர
  பெரியாரியம் பகுதியில் தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளையும் தரவேற்றம் செய்திருக்கிறார்.

  அவருடைய அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்றால் பிரான்சில் நடந்த தலீத் மாநாட்டில் பார்த்தேன். நீங்கள் குறிப்பிடும் ரா அமைப்பை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை வைத்து பேசிக் கொண்டிருந்தார்.

  என்னுடைய பதிவுகள் தமிழரங்கத்தில் வருவது போல் சிறந்த பதிவுகளாக ம.க.இ.க. தோழர்களின் பதிவும் வரலாம் அல்லவா?

 84. ///CPI ML SOC மக இக /// வின் பலபின்னூட்டங்களை ஏன் வெளியிடாமல் வைத்திருக்கிறீர்கள். மகஇககாரனுங்க உங்களை மிரட்டுரானுங்களா? ஏற்கனவே அவர் கேட்டகேள்விக்கு, பதில் சொல்ல துப்பு இல்லாம, பெ.தி.கவும், மகஇகவும் அடிச்சிக்குறானுங்க.. அவருக்கு பதில் சொல்லிட்டு அதன் பிறகு அடிச்சிக்கிட்டு சாக சொல்லுங்க?

  மகஇக காரனுங்க பயந்த கொல்லிங்க. வெறும் வாய் சவடால் பேர் வழிங்க.. அந்தக் கட்சியிலே எல்லா பயலும் புனை பெயரில்தான் சுற்றி வருகிறான். எவனும் இருக்கற இடத்த காட்டிக்க மாட்டான். நீ யாரு நீ அட்ரசை சொல்லு என்றால்.. புதியகலாச்சாரம் அலுவலத்துக்கு வரசொல்லுவனுங்க..
  பெ.தி.க காரனுங்க வெறும் புலிவேச காரனுங்க. அது தவற அவனுங்க கிட்ட ஒன்னுமில்ல. உணர்ச்சிவசபட்டுபேசுவானுங்க..முட்டாள்தனமா எதையாவது பேசிட்டு, ஜெயிலுக்குப் போவானுங்க..

  இந்த ரெண்டு பேர்கிட்டேயும் தொடர்பு வெச்சிகிட்டு இருக்கிற உங்க யோக்கியதை…

 85. தமிழச்சி,

  நீங்கள் பதில் சொல்லுங்கள் மருதையனை பார்ப்பனன் என கூறும் அதிஅசுரனின் செயல் சரியா?

  சரியெனில் தோழர் மருதையனின் பார்ப்ப்னீய பண்புகலை காட்டுங்கள்.அதை விட்டுவிட்டு அறைவேன் என்றால் எப்படி இருக்கிறது?

  கலகம்,அசுரன் ஆகியோர் ஆரம்பத்தில் இருந்து கேட்ட கேள்விக்கோ பதில் சொல்லுங்கள்.

  எங்களில் யார் கொளத்தூர் மணியை பற்றி விமர்சித்தது அரசியலற்ற பார்வையில், உங்களின் மேல் மிகப்பெரிய மதிப்பு வைத்து இருந்தேன்.

  கேள்விகேட்டால் அறைவேன் எனில் இதை பார்ப்பான் சொல்லியிருந்தால் வேறு பதில் தந்திருப்போம்.

  உங்களுக்கு தெரிந்ததெல்லாம் வீரமணியும் கொளத்தூர்மணியும் ஒன்று,ஆழிக்கரையும் ராமகிருட்டிணனும் ஒன்று என.

  அப்படிஅல்ல இப்போது கூட கிராமங்கலில் சாதி ஒழிப்பூ போரில் முன்னணி யாக இருப்போர் தான் பெதிக,

  வீரமணி அப்படி அல்ல அவருக்கு மாமா வேலை பார்க்கவே- நேரம் இல்லை.

  மக இ கவில் பொறுப்பில் இல்லாதவன் சொன்னால் கேள்வி கேட்டால் உங்கள் கைகள் நீளுமா?

  இப்போது ஆணித்தரமாக கூறுகிறேன் கேள்வியை முன் வைக்கின்றேன்

  1. எதற்காக ஓட்டுப்பொறுக்கிகளுக்கு தோள் கொடுக்குறீர்கள்(இளங்கோவன்,வைகோ,நெடுமாறன் கருணாநிதி…..)

  2.பார்ப்பனீயம் என்பது ம க இக வின் நடைமுறைகளில் எங்கே உள்ளது

  யாரும் அவசரப்பட்டு கோபத்தில் எழுத வில்லை.உங்கள் எழுத்துக்களை பாருங்க நீங்கள் என்ன ரகசிய போலீசா

  //நீங்க வேற நானெல்லாம் போட வேண்டிய இடத்தில் ஒரு போனை போட்டாலே மேட்டர் முடிஞ்சிடும். நான் எதுக்கு மிரட்டனும்? தோழர் மருதையன் மீது எனக்கு எந்த பகையும் இல்லை. அவருக்கும் என் மீது எந்த காழ்ப்புணர்வும் இல்லை. இந்த மாதிரி ஒரு பிரச்சனை என்றால் கூட போதும். புரிந்து கொள்வார்//

 86. //. எனக்குத் தெரிந்த தோழர்களின் நடத்தையை அவதூறாக மாற்றி திரிபுவாதம் செய்துக் கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டிருக்கமாட்டேன். //

  இந்த உணர்வு உங்களுக்கு மட்டும்தானா தமிழச்சி? மருதையனை பார்ப்பனன் என்று அவதூறு செய்வதும், ம க இ கவை மறைமுக பார்ப்பனியம் என்று அவதூறு செய்வதும், அரசியலற்ற புரளி செய்வதும் உங்களது தோழர்கள் என்பதால் எமது வார்த்தைகள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? அவர்கள் எங்களது தோழர்களும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

  பெதிகவின் இந்த் புரளி அரசியல் குறித்து தமிழச்சியின் வாயில் உதிர்க்கும் முத்துக்களை கோர்க்க விரும்புகிறேன். ஏன் தோழி அந்த விசயத்தில் மட்டும் இது வரை கருத்து சொல்லவே இல்லை?

  அசுரன்

 87. //ஒரு உண்மையான பெரியாரிஸ்ட் தோழனை அவமதிக்க முயல்வதை அனுமதிக்கமாட்டேன். பார்த்திருக்கிறீர்களா பெரியாரிஸ்ட் பெண் தோழிகளை. அத்துமீறும் போது இழுத்து வைத்து அறைவிடுகிறார்களாம். அதில் நானும் ஒன்று.//

  பெரியாரி சுயமரியாதை எமக்கு உண்டு அன்பு தோழி தமிழச்சி. அறை விடுவதில் ஆண் பெண் பேதம் உண்டு என்று எண்ணுகிறீர்களா தோழி தமிழச்சி? அத்து மீறும் நாமும் அறைவோம்.

  அசுரன்

 88. //“போகிற போக்கிலே கேள்விக்கு பதில் சொல்லாது இழுப்பது தான் பெரியாரிஸ்டுக்கு அழகா/ உண்மையில் உங்களை போல் அரசியலற்ற பெரியாரிய வாதியை கண்டதே இல்லை”//

  இதே போலத்தான் தோழர் மருதனையனையும், ம க இகவையும் போகிற போக்கில் தலைவர் விடுதலை ராசேந்திரன் புரளி அரசியல் அவதூறு செய்வது சரியா? அது எமக்கு ஆத்திரத்தை உருவாக்காதா?

  சொல்லுங்க தமிழச்சி? உணர்ச்சி என்பதும் அதை வெளிப்படுத்துவதும் பெதிக மற்றும் அவர்களின் நம்பகமான தோழர்களுக்கு மட்டும்தானா? (நாங்கதான் சந்தேகத்திற்குரிய தோழர்கள் ஆகி விட்டோமே)

  அசுரன்

 89. தோழர் அதி அசுரன் மட்டுமல்ல, இன்னும் பல வேற்று அமைப்பைச் சேர்ந்தவர்களின் தியாகங்களை மதிப்பதும் அவற்றில் இருந்து கற்றுக் கொள்வதும் அடிப்படை தேவையாக இருக்கின்றன. ஆனால் இந்த பண்பாட்டை நாம் பெதிகவிடம் எதிர்பார்க்கிறோம். பெதிகவின் நம்பகமான தொழர்கள் இதனை பெதிகவிடம் தெரியப்படுத்துங்கள். சந்தேகத்திற்குரிய எங்களது கருத்துக்களை அவர்கள் அவதூறாக புரிந்து கொள்கிறார்கள் என்று உணர்கிறோம்.

  ம க இ கவின் தோழர்கள் எல்லாம் சுகமாக உண்டு கொழுத்து வலம் வரவில்லை. மருதையனும் அப்படித்தான். ஒவ்வொரு போராட்டத்திலும் முன்னணியில் நின்று போராடுபவர்தான் அவர்.

  அசுரன்

 90. ////ஒரு உண்மையான பெரியாரிஸ்ட் தோழனை அவமதிக்க முயல்வதை அனுமதிக்கமாட்டேன். பார்த்திருக்கிறீர்களா பெரியாரிஸ்ட் பெண் தோழிகளை. அத்துமீறும் போது இழுத்து வைத்து அறைவிடுகிறார்களாம். அதில் நானும் ஒன்று.//

  பெரியாரி சுயமரியாதை எமக்கு உண்டு அன்பு தோழி தமிழச்சி. அறை விடுவதில் ஆண் பெண் பேதம் உண்டு என்று எண்ணுகிறீர்களா தோழி தமிழச்சி? அத்து மீறும் நாமும் அறைவோம்.

  அசுரன்//

  மேலே உள்ளதில் சில எழுத்துப் பிழைகள் நிகழ்ந்துவிட்டன. அவை கருத்துப் பிழைகளாகும் தன்மை கொண்டதாக இருக்கின்றன. பொறுத்தருளுங்கள். அவற்றை திருத்தி கீழே இடுகிறேன்.

  /ஒரு உண்மையான பெரியாரிஸ்ட் தோழனை அவமதிக்க முயல்வதை அனுமதிக்கமாட்டேன். பார்த்திருக்கிறீர்களா பெரியாரிஸ்ட் பெண் தோழிகளை. அத்துமீறும் போது இழுத்து வைத்து அறைவிடுகிறார்களாம். அதில் நானும் ஒன்று.//

  பெரியாரி சுயமரியாதை எமக்கும் உண்டு அன்பு தோழி தமிழச்சி. அறை விடுவதில் ஆண் பெண் பேதம் உண்டு என்று எண்ணுகிறீர்களா தோழி தமிழச்சி? அத்து மீறும் போது நாமும் அறைவோம்.

  அசுரன்

  +++++++++++++++

  தோழர் அதிஅசுரன்,

  தோழர் கொளுத்தூர் மணி கைது குறித்து நான் கருத்து சொல்லாதது குறித்த உங்களது வருத்தம் நியாயமானதே. ஆனால் சமீப காலங்களில் சில பிரச்சினைகளில் விளக்கம் கொடுப்பது என்ற அளவில் மட்டுமே பின்னூட்டமிட்டு வருகிறேன். எனது அன்புக்கு உரிய புரட்சிகர அமைப்புகளின் மீது அடக்குமுறை செலுத்தப்பட்ட போதும் கூட நான் எனது கருத்துக்களை தெரியப்படுத்தவில்லை. ஏனெனில் எமது தோழர்களின் கருத்து எதுவோ அதுதான் எனது கருத்தும். வெறும் எண்ணிக்கைக்காகவோ அடையாளத்திற்காகவோ தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. அதுதான் குறிப்பாக தோழர் கொளத்தூர் மணி அவர்களின் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்காமைக்கு காரணம். வேறு எதுவும் உள்நோக்கம் இல்லை. இதுவே முன்பு போன்றதொரு இணையச் செயல்பாடு இருக்கும் நேரம் எனில் கொளத்தூர் மணி கைதுக்கு பதிவு எழுதியிருந்திருப்பேன்.

  எனது வருத்தம் இப்படி ஒரு விளக்கம் கொடுக்கும் நிலை ஏற்பட்டு விட்டதே என்பதுதான்.

  அசுரன்

 91. //( நேபாள் ஆதரவு கூட்டத்துல கடைசி நேரத்துல் ஓடி போனத கேட்கபடாது)///

  ஆழியூரானின் பொய்க்கு மேலே உள்ள ஒன்றே போதும். நேபாள் ஆதரவு கூட்டத்தில் என்ன நடந்தது, ம க இகவின் பாத்திரம் என்ன என்பதை பே. மணியரசனிடம் சென்று கேளுங்கள் ஆழியூரான். நேபாள கூட்டத்திலிருந்து ம க இக ஓடியதால்தான் நேபாள் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் இந்த கூட்டத்தை ந்டத்தும் பொறுப்பை புஜதொமுவிடம் கொடுத்தனரோ? அந்த அரங்கக் கூட்டத்தையே தடை செய்ய முயன்ற போலீசிடம் ம க இகவின் செம்படைக் கூட்டம் மிரட்டியதுதான் அதனை பொதுக் கூட்டமாக MGR நகர், சென்னையில் நடைபெறச் செயதது. ஓடிப் போனது யார் தெரியுமா? உங்களது பாசத்துக் குரிய திருமாவளவனும், மவோயிஸ்டுகளின் தமிழக தோழர்களும்தான்.

  அசுரன்

 92. மன்னிக்கவும் // ஆழியூரானின் /// என்று முந்தைய பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன். அதனை //ஆழிக்கரை// என்று படிக்கவும். பதிவர் ஆழியூரான் என்னை மன்னிக்க வேண்டும்.
  அசுரன

 93. அய்யா அதி அசுரன் அவர்களே!

  ஞாநியைப் பற்றிய பதிவென்றால் அவனைப்பற்றி மட்டும்தான் பேசவேண்டுமா? கொளத்தூர் மணியைப் பற்றி மட்டுமல்ல அவன் தனது பார்ப்பன கண்ணோட்டத்தோடு யாரை இழிவுபடுத்தினாலும், அனைவருக்கும் முன்னதாக எதிர்ப்புகளைத் தெரிவிப்பது எமது பழக்கம். ஒரு குறிப்பிட்ட தேதியில், சிங்கள இயக்குனருக்கு ஆதரவாக அவன் எழுதியதை ஏன் எதிர்த்து எழுதவில்லை, என்கிற சொத்தை வாதத்தை ஏதோ பெரிய பகுத்தறிவு நுணுக்கத்தோடு கேட்பதைப் போல உருவகப்படுத்துகிறீர்கள்!

  ஆனால், தோழர் மதிமாறன் எழுதியிருக்கும் இந்தப் பதிவு ஞாநியைவிட பெ.தி.க.வான உங்களைத்தான் கேள்விக்குட்படுத்துகிறது. அதுவாவது உங்கள் ஞானக்கண்ணுக்குத் தெரிகிறதா?

  //////கடந்த ஆண்டு ஞாநி, தமிழக முதல்வரை ‘திராவிட இயக்கத் தலைவர்’ என்கிற காரணத்திற்காகவே, மிகத் தரக்குறைவாக எழுதியபோது, தமிழகத்தில் மிகப் பரவலாக முற்போக்காளர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டார் ஞாநி. அப்போதும் பெரியார் திராவிடர் கழக இதழான ‘புரட்சி பெரியார் ழுழக்கம்’ அவரை பற்றி விமர்சிக்கவில்லை. ‘தோழமையானவராக இருக்கிறார்’ என்று பெருந்தன்மையோடே, அவரை கண்டிக்காமல் விட்டார்கள்.//////

  ஞாநியின் பார்ப்பனக் கொழுப்பு அம்பலமான பிறகும் அவனோடு ‘தோழமையோடு இருக்கிறார்’ என்று ‘பெருந்தன்மை’காத்தது நாங்கள் அல்ல. நீங்கள்தான் என்பதற்கு மதிமாறனின் மேற்கண்ட வரிகள் உத்திரவாதம் வழங்குகிறது. பச்சையான பார்ப்பனவாதியான ஞாநியிடம் தோழமை பாராட்டும் நீங்கள் எங்களை எதிர்த்து எழுதுவது குறித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே! அதில்தான் உங்களது பார்ப்பன அடிமைத்தனம் அடங்கியிருக்கிறது, அய்யா!

  ஞாநிக்கு எப்படி எதிர்வினையாற்றவேண்டும் என்பது பற்றி எங்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் அருகதை உங்களுக்கும் உங்கள் தலைமைக்கும் இல்லை என்பதை உங்களது செயல்பாடுகளே உறுதிப்படுத்துகின்றன. ஆனால், மையமான விடயம் வேறாக இருக்கிறது.

  வி.பி.சிங்கை யும் இடஒதுக்கீட்டையும் குறித்து மாற்றுக்கருத்துக்களைப் பதிவு செய்ததால் பார்ப்பனவாதி என்கிற அவதூறுக்கு நாங்கள் ஆளாகவேண்டும் என்கிற உமது மோசடியான, காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விடுதலை ராசேந்திரன் எழுதிய அவதூறுகளுக்கு பதில் சொல்லியுள்ளோம். அந்தப் பதில் அவரது கட்டுரை வெளியிடப்பட்ட கீற்று இணையதளத்திலேயே பின்னூட்டமாக உங்களின் பதில்களுக்காக, கடந்த ஒருவாரத்திற்கும்மேலாக காத்துக்கிடக்கிறது. அங்கே எந்த அதிஅசுரனையும் காணவில்லை. ஆக, இங்கே தென்படுபவர்களிடம் அதற்கான நியாயத்தைக் கேட்பது, பதில்களைப் பெறுவது என்ன பெரிய தேசதுரோகக் குற்றமா? தோழர் மதிமாறனின் பதிவை நாங்கள் திசை திருப்பிவிட்டதாகக் கதறுவது ஏன்? அதுபற்றி இங்கே பேசக்கூடாது என்றால் கீற்றுதளத்தில் வைத்து விவாதிக்கலாம், நீங்கள் வரத்தயாரா?

  உங்களால் வரமுடியாது! ஏனெனில், நீங்கள் கடுமையான பணிநெருக்கடியில் இருப்பீர்கள்! நாங்கள் உங்கள் பணிகளில் உள்ள புனிதத்தைமட்டும் இங்கே வாசித்துவிட்டு வாயை மூடிக்கிடக்க வேண்டும்! இது கேளிக்கைக் கூடாரமல்ல. இங்கே அரட்டையடிக்க நாம் குழுமியிருக்கவில்லை.

  ஏதோ கொளத்தூர் மணி தான்’ ராஜீவ் கொலையா-தண்டனையா’ என்கிற விவாத்தை கிளப்பிவிட்டுள்ளதாகவும், அதனை திசைதிருப்புவதற்காக நாங்கள் வேலைசெய்வதாகவும் உதார் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

  ராஜீவ் குண்டடிபட்டு குப்புறக் கிடந்தபோதே, அதனை துணிவோடு ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தது எமது தோழர்கள்தான் என்பது உங்களுக்குத்தெரியாது போலும்! நீங்கள் வழிபடும் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவராயிருந்த கிட்டு என்பவர் “ராஜீவ் கொலையில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரத்தின் தொடர்பு இருக்கிறது…” என்று மோசடியாக அறிவித்தபோதும் எமது தோழர்கள் துணிவோடு வழக்குகளைச் சந்தித்து எழுந்து நின்றார்கள். எனவே, ராஜீவுக்கு தண்டனைதான் வழங்கப்பட்டது என்கிற கருத்துக்களை ராஜீவ் செத்த நாளிலேயே நாங்கள் பேசியிருக்கிறோம், நீங்கள்தான் அப்போது காணாமல் போயிருந்தீர்கள்.

  இது நம்முடைய சாதனைகளை உரசிப்பார்த்துக்கொள்வதற்கான களம் அல்ல. ம.க.இ.க.வோ தோழர் மருதையனோ பார்ப்பனவாதிகள் என்கிற பல்லவியை நீங்கள் தொடருவதற்கு முன்னதாக அவற்றை கருத்தியல் ரீதியில் நிரூபித்துவிட்டு யோக்கியமாகப் பேசிப்பழகுங்கள்.

  தொடர்ந்து பேசுவோம்.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 94. தோழர் தமிழச்சியைப் பற்றி எனக்குத் தெரியும். தனக்குத் தவறு என்று படுவதை உடனே வெளிப்படையாகப் பேசுவார். தனக்கு நன்கு அறிமுகமாயிருந்த ‘மானமிகு’வீரமணியைப் பற்றி அவர் புரிந்து கொண்டதும் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார். அதேபோல, தன்னுடைய தவறுகளையும் தைரியமாக ஒப்புக்கொள்வார். மேற்கண்ட அவரது வார்த்தைகள் வெறும் உணர்ச்சி நிலையிலிருந்து எமது தோழர்களின் மீது பிரயோகிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

  உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல், கருத்துக்களை மாற்றுக்கருத்துக்களோடு அனுகவேண்டும் என்று அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.

  இங்கே பெ.தி.க.வுக்கு ஆதரவாக தொடர்ச்சியாகக் கருத்து பதிந்துவருவதும் தமிழச்சிதான். எனவே, அதிஅசுரன், மதிமாறன், இன்னபிற பெ.தி.க.வினருக்கு நாம் முன்வைக்கும் கேள்விகளுக்கெல்லாம் தோழர் தமிழச்சி பதில் சொல்லவேண்டும் என்றும் கோருகிறேன்.

  ஏகலைவன்.

 95. தோழர் மதிமாறன் அவர்களுக்கு
  இங்கே நடப்பது நேர்மையான‌ விவாதமாக இல்லை.
  இவை எமது அமைப்பையும்,அமைப்பு செயலாளரையும்
  ஆதாரமின்றி அவதூறு செய்து இழிவு படுத்தி அதன் மூலம்
  வக்கிரமாக சுகம் கானும் நோக்குடன் தமக்கிடையிலான
  அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு
  கேவலம் பாப்பாத்தி ஜெயலலிதா முந்தானையில் ஒழிந்து
  கொண்டிருக்கும் சி.பி.எம் காரனுடன் கூட சேர்ந்து கொண்டு
  ஒரே பொய்யையை,ஒரே அவதூறை எவ்வளவோ முறை
  தெளிவுபடுத்தப்பட்ட பார்ப்பனியம் என்கிற ஒரே வாதத்தை
  மட்டுமே வைத்துக்கொண்டு நடத்தப்படுகிற‌து.
  ம.க.இ.க‌ மீது அவதூறு பரப்ப அனைவரும் ஒன்றாக கூடி கூட்டணிக்கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

  இந்த ‘விவாதங்களிலிருந்து’ நான் விலகிக்கொள்கிறேன்.

  தோழமையுடன்
  சூப்பர்லிங்ஸ்

 96. தமிழச்சி கோபப்படகாரணம் நாம் பெதிகவை விமர்சித்ததால இல்லை வீரமணியை விமர்சித்ததால அ\

  அவர் இன்னும் வீரமணியை தோழர் என்கிறார். எந்த கருத்து ஒற்றுமையில் என தெரியவில்லை,ஆனால் கேள்வி கேட்டால் அடிப்பேன்,ஒரு போன் செய்தால் போதும் மேட்டர் முடிந்துவிடும் என தாதா போல உளறுகிறார்.

  கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது இப்படி உளறுவோருக்கு என்ன பதில் சொல்லத்தான் முடியும்.

  அவரின் புரிதல் அவ்வளவுதான் என விடமுடியுமா? கண்டிப்பாய் முடியாது,

  தன்னை பெரிய அறிவாளியாக காட்டிக்கொள்ளுவதற்காகவே அடிப்பேன்,போன் செய்வேன் என்ற பிதற்றல் என எண்ணுகிறேன். யாராவது அரசியலற்ற முறையில் பெதிகவையோ மாமாமணியையோ விமர்சனம் செய்தார்களா?

  இதற்கும் பதில் சொல்லாது வசவுகளில் இறன்கினால் நாம் மீண்டும் இறங்கப்போவதில்லை.புது விடுதலை என நினைத்து ஒதுக்கவே முடியும்.மல்லுக்கு நிற்பது வீரனாயிருந்தால் பரவாயில்லை,இப்படி போலி விடுதலையாயிருந்தால் என்ன செய்ய முடியும்

  வேறு வழி இல்லை சூப்பெர் லின்க்ஸ் வழிக்கு செல்லவேண்டியது தான்

 97. மகஇக காரரர்கள் பதில் சொல்லலாமே?

  //////மதிமாறன், அந்தக் கூட்டத்தில் உங்களால் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டு, அதிகமான நேரம் பேச அனுமதிக்கப்பட்ட மருதையனும் தன்னுடைய பேச்சில், ஞாநியை பற்றி நீங்கள் எழுதிய பதில்களை குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்திருந்தார். அதை ஏன் இந்தக் கட்டுரையில், நீங்கள் குறிப்பிடவில்லை.? சந்தேகம் இருந்தால், நீங்கள் விற்பனைக்கு விட்டிருக்கிற சிடி யை கேட்டுப்பாருங்கள்.
  நீங்கள் மகஇக ஆதரவாளரா? இல்லை மருதையன் ரசிகரா?
  பகுத்தறிவு//////

  /////மதிமாறன், உங்களுடைய கூட்டத்தில் மருதையன் ஞாநியை விமர்சித்து பேசாததை ஏன் மறைத்தீர்கள்? பெ.தி.க ஞாநியை ஆதரித்ததுபோல் நீங்கள் மருதையனை ஆதரிக்கிறீர்களா?
  பெ.தி.க ஞானியை ஆதரிப்பதை சொல்கிறீர்களோ, மருதையன் ஞாநியின் பார்ப்பன ஜாதிவெறியை, கண்டித்திருக்கிறா? கடந்த இரண்டாண்டுகளில் ஞானி பார்ப்பன புத்தியோடு ஆள்காட்டி வேலையை செய்திருக்கிறார். அதை பெதிக இதழ் புரட்சி பெரியார் முழுக்கம் கண்டிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்களே?

  இந்த இரண்டு ஆண்டுகளில் ஞானியை மருதையனோ, புதிய கலாச்சாரமோ கண்டித்திருக்கிறதா? இருந்தால் உதாரணம் காட்டுங்கள். ஞானி விவகாரத்தில், ஏன் மருதையனையும் மகஇகவையும் காப்பாற்ற நினைக்கிறீர்கள்?
  நீங்கள் உண்மையான பெரியாரியவாதியாக இருந்தால், இதற்கு நீஙகள் அவசியம் பதில் சொல்லவேண்டும்.
  பதில் சொல்.///////

  மதிமாறனை நோக்கி கேட்கப்பட்ட இந்தக் கேள்விகளுக்கு அவர் தான் கள்ள மௌனம் காக்கிறார். இந்தக் கேள்விக்கு மகஇக காரரர்கள் பதில் சொல்லலாமே? ஞானியின் பார்ப்பனத் தன்மையைப் பற்றி, மருதையனோ புதிய கலாச்சாராமோ கண்டித்திருக்கிறதா? எனக்கு தெரிந்து 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஞாநியின் தவிப்பு நாவலை விரிவாக எழுதி அதற்கு ஒரு நல்ல விளம்பரத்தை வாங்கித் தந்தது புதிய கலாச்சாரம்.

  மகஇக எடுத்த டாக்குமென்ரி படத்தை விமர்சிப்பதற்கு ஞானியிடம்தான் சிறப்பு கட்டுரையைக் கேட்டு வாங்கி, இவர்கள் பத்திரிகையில் பிரசுரித்துக் கொண்டார்கள். திரை விலகும்போது என்கிற அவர்களின் சினிமா புத்தகத்திலும் ஞாநியின் சிறப்புக் கட்டுரை வந்திருக்கிறது. அப்போது ஞானி சிபிஎம் கும்பலோடு நெருக்கமாக இருந்தபோதான் இவர்கள் பத்திரிகையில் சிறப்புக் கட்டுரை எழுத வைத்தார்கள். மற்றபடி புதிய கலாச்சாரம் ஞாநியை விமர்சித்ததேயில்லை. இப்போதும் அது தொடர்கிறது.

  கடந்த பத்தாண்டுகளில் அதிலும் குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் ஞானியின் பார்ப்பன ஜாதி வெறியை ஊரே காறி உமிழ்ந்தபோது, ஞானியை பார்ப்பான் என்றோ, அவருடைய பார்ப்பனத் தன்மையைசுட்டிக் காட்டியோ புதிய கலாச்சாரம் எழுதியதில்லை. இது குறித்து நான் மதிமாறனிடம் நேரில் கேட்டபோது ‘இல்லை கண்டிப்பாக எழுதுவார்கள். நானும் பேசியிருக்கிறேன்’ என்று குறிபிட்டார். ஆனால் எழுதவேயில்லை.

  இதில் பெ.தி.க மகஇக இரண்டு பேரும் ஞானியின் காலை கட்டிக் கொண்டிருப்பவர்கள்தான். பெ.தி.கவை மட்டும் காட்டிக் கொடுத்த மதிமாறன் மகஇக வை காட்டிக் கொடுக்கவில்லை. அவருடைய கள்ள மவுனத்திற்கு அதுதான் காரணம்.

  ஞாநியின் நடவடிக்கைகள் மிக மோசமானதாக மாறியப் பிறகு அவரை விமர்சிக்காமல்,அவரிடம் இருந்து பெ.தி.க.வும் மகஇகவும் விலகி இருந்தார்களே தவிர, விமர்சிக்கவில்லை. ஞாநி விலகியபோது காலியாக இருந்த அந்த அறிவாளிக்கான நாற்காலியில்தான் மதிமாறன் போய் அமர்ந்து கொண்டார். ஞாநியைப் போலவே அவரும் இரண்டு தலைமைகளிடமும் நெருக்கமாக இருக்கிறார். அவர் மகஇக, பெ.திக. என்ற இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்கிறார். இப்போது அவருடைய இந்த சவாரிக்குதான் சிக்கல் வந்திருக்கிறது.

  ஞாநி தனக்கு நன்கு பழக்கமானவர் என்று தெரிந்தும் சமரசம் இல்லாமல் ஞாநியின் பார்ப்பனத் தன்மையை கடுமையாக கண்டித்தவர் பேராசிரியர் அ. மார்க்ஸ் ஒருவரே.

  ஆனால் அவரை கடுமையாக விமர்சித்திருக்கிற புதிய கலாச்சாரம் ஞாநியை விமர்சித்ததில்லை. ஞாநியை பார்ப்பான் என்று புதிய கலாச்சாரம் விமர்சித்திருந்தால் அதை மகஇக காரர்கள் எடுத்துக் காட்டிவிட்டு, அதன் பிறகு பெ.தி.வோடு சண்டைபோடலாம். இல்லை என்றால் எல்லோரையும் கடுமையாக திட்டுவதுபோல் என்னையும் திட்டிவிட்டு விஷயத்தை மூடி மறைக்கலாம்.

 98. I regret the way people responding here over the issue of Gnani. I think Mathimaran has done a great deal of harm by taking a worthless issue. If at all he has to say something on Gnani he should have posted his comments on Kumudham. But instead of that he has created space to have an animosity between PDK and PALA.

 99. தமிழட்சி, ஆழி,அதிஅசுரன்,
  இவர்கலிடம் விவாதம் செய்வதை விட நம் நேரட்தை
  வினாக்கும் கார்ரியம் ஒன்ட்ருமில்லை

 100. ///ஞாநியின் நடவடிக்கைகள் மிக மோசமானதாக மாறியப் பிறகு ///
  ஆமா அதுக்கு முன்னால பெரிய புர்ரிட்சி காரரா ம க இ க மாரி
  இருந்தராகும்

 101. Dear தமிழட்சி, ஆழி,அதிஅசுரன் et.al,

  Could any of you expand what is மகஇக? And since when it (மகஇக) started functioning? Its goal? etc. I am following these posts, yet, unable to place மகஇக within the domain of TN politics as I left Madras a couple of decades ago….

 102. ///உண்மையிலேயே பெரியாரிஸ்டுகளை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் துளியும் இல்லை, இங்கே பல புனைப்பெயர்களில் வலம் வருபவர்களின் ஒருவரை பற்றித்தான் குறிப்பிட்டேன். அது அவருக்கு புரிந்திருக்கும். அவர் பெரியாரிஸ்டு அல்ல பிழைப்புவாதியிஸ்டு///

  தோழர் மா.சே. நீங்கள் இனம் கண்டது யார் என்று குறிப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால் மா.சே சொன்னது இவனாயிருக்குமோ அல்லது அவனா இருக்குமோன்னு சந்தேகக் கண் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதால் யாரைப் பார்த்தாலும் சந்தேகமாக இருக்கிறது.

 103. பாவம் மதி,
  மக்கல் கிட்ட போகாமெ ம க இ க கிட்ட இருந்தா
  மன்டை வீன்கி போயிடும் புரின்சா சரி!!!!!!!
  பெரியார் மக்கலை நம்பியவர்
  மன்டை வீன்கிகலை அல்ல!!!!!!!!!!

 104. தமிழச்சி வந்துட்டீங்களா,

  ஒரு சந்தேகம் இதுக்கு என்ன அர்த்தம் கொஞ்சம் சொன்னா பாதுகாப்பா இருக்கலாம்.

  //நீங்க வேற நானெல்லாம் போட வேண்டிய இடத்தில் ஒரு போனை போட்டாலே மேட்டர் முடிஞ்சிடும். நான் எதுக்கு மிரட்டனும்?

 105. சென்ற பின்னூட்டம் தவறாக வந்துவிட்டது,,

  தமிழச்சி வந்துட்டீங்களா,

  //ஒரு சந்தேகம் இதுக்கு என்ன அர்த்தம் கொஞ்சம் சொன்னா பாதுகாப்பா இருக்கலாம்.//

  ஒரு சந்தேகம் இதுக்கு என்ன அர்ததம்ன்னு சொன்ன கொஞ்சம் பாதுகாப்பா இருப்போம்

 106. கலகம்!

  /// நீங்கள் பதில் சொல்லுங்கள் மருதையனை பார்ப்பனன் என கூறும் அதி அசுரனின் செயல் சரியா?///

  மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எந்த நோக்கத்தோடு எதற்காக பார்ப்பனன் மருதையன் என்று அதிஅசுரன் சொன்னார் என்று எனக்குத் தெரியாது. தமிழ்நாட்டு சூழலில் நான் வசிக்கவில்லை. தமிழகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் எனக்குத் தெரியாது. ஆனால் தோழர் அதிஅசுரன் அப்படி இல்லை. 24 மணிநேரமும் சமூகப்பணியில் இருப்பவர். யாரார் தில்லுமுல்லு செய்பவர்கள் ஜால்ராக்கள் கைக்கூலிகள் போலி கொள்கைவாதிகள் என கணிக்கும் பகுத்தறிவு அவருக்கு உண்டு. உங்கள் கேள்விக்கு தோழர் அதிஅசுரன் பதில் சொல்வது பொறுத்தமாக இருக்கும். இருப்பினும் தோழர் அசுரன் அவர்கள் நான் கேட்டதால் இரண்டு பதிவுகளின் இணைப்புகளையும் கொடுத்திருக்கிறார். அவற்றை இன்று படித்துவிட்டு என் கருத்தை சொல்கிறேன். வி.பி. சிங் குறித்து எதிர்வினை செய்திருப்பது தோழர் ஏகலைவன். எனக்கு நன்கு அறிமுகம். நல்ல லட்சியாவாதி தோழர் அதிஅசுரனைப் போன்று.

  /// சரியெனில் தோழர் மருதையனின் பார்ப்ப்னீய பண்புகலை காட்டுங்கள். அதை விட்டுவிட்டு அறைவேன் என்றால் எப்படி இருக்கிறது?///

  அத்துமீறல் என்ற சொல்லாடல் மீண்டும் திரிபுவாதம் செய்யப்பட்டு அறைவேன் அறைவேன் அலறிக்கொண்டே இருப்பதை பார்த்தால் உங்களுக்கு இது எப்படி இருக்கிறது. கொஞ்சம் ஓவரா தெரியல… பேருக்கு ஏத்த வேலை இதுதானா?

  /// எங்களில் யார் கொளத்தூர் மணியை பற்றி விமர்சித்தது அரசியலற்ற பார்வையில்இ உங்களின் மேல் மிகப்பெரிய மதிப்பு வைத்து இருந்தேன். ///

  ஒரு மனிதனைப்பற்றிய மதிப்பு எப்போதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பதே முட்டாள்தனமானது. நீங்கள் என்னைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் கணித்துக் கொள்ளலாம். கணித்தல் என்பதை எழுத்துக்களை வைத்து இணையத்தில் கணித்துக் கொண்டிருக்கிறோம். அதுவே 100 க்கு 100 உண்மையாக இருக்கக் கூடும் என்று கண்மூடித்தனமான நம்பிக்கையானது முட்டாள்தனமானது என்பதை உணர்ந்தால் போதும். மற்றபடி நீங்கள் இப்படித்தான் என்னைக் கணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்காததால் என் இயல்பிலேயே நான் இருக்கிறேன். உங்கள் வார்த்தைகள் என்னை பாதித்துவிடவில்லை.

  /// உங்களுக்கு தெரிந்ததெல்லாம் வீரமணியும் கொளத்தூர்மணியும் ஒன்று ஆழிக்கரையும் ராமகிருட்டிணனும் ஒன்று என.///

  நீங்களே எதையாவது நினைத்துக் கொண்டு எதையாவது பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் என்றுமே தோழர் வீரமணி அவர்களையும் தோழர் கொளத்தூர் மணி அவர்களையும் ஒன்றாக இணைத்து பார்த்ததில்லை.

  நாட்டுடமை ஆக்கத் தகுதியில்லாத பெரியாரியம்
  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=976

  பெரியாரின் நினைவு தினமும், போலிப் பாசாங்குகளும்..!
  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=770

  /// ம.க.இ.கவில் பொறுப்பில் இல்லாதவன் சொன்னால் கேள்வி கேட்டால் உங்கள் கைகள் நீளுமா? ///

  ஏன்? நீளக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீளக்கூடாது என்று நீங்கள் நாட்டாமை செய்வீர்களா?

  /// 1. எதற்காக ஓட்டுப்பொறுக்கிகளுக்கு தோள் கொடுக்குறீர்கள்(இளங்கோவன், இவைகோ, நெடுமாறன் கருணாநிதி…..) ///

  யாரு தோல் கொடுக்கிறார்கள்? என் இணையப்பக்கத்தில் சமூகம் பிரிவில் போய் வாசித்துவிட்டு வந்து உங்கள் கேள்விகளை வையுங்கள் தோழரே!

  /// யாரும் அவசரப்பட்டு கோபத்தில் எழுத வில்லை. உங்கள் எழுத்துக்களை பாருங்க நீங்கள் என்ன ரகசிய போலீசா ///

  ரகசிய போலீசுக்கு மட்டும் தான் எழுத்துக்களை ஆராய உரிமை இருக்கிறதா? சமூக ஆய்வாளர்கள் ஆராய கூடாதா? யாரும் அவசரப்பட்டு கோபத்தில் எழுதவில்லை என்பதே பொய் வாதம். பெ.தி.க.வின் செயல்பாடுகளை தாக்கும் குறிக்கோளோடு இருக்கும் பின்னூட்டங்களை மீண்டும் வாசித்து பாருங்கள்.

  /// நீங்க வேற நானெல்லாம் போட வேண்டிய இடத்தில் ஒரு போனை போட்டாலே மேட்டர் முடிஞ்சிடும். நான் எதுக்கு மிரட்டனும்? தோழர் மருதையன் மீது எனக்கு எந்த பகையும் இல்லை. அவருக்கும் என் மீது எந்த காழ்ப்புணர்வும் இல்லை. இந்த மாதிரி ஒரு பிரச்சனை என்றால் கூட போதும். புரிந்து கொள்வார் ///

  ஆம் இவ்வாக்கியங்களை நான் தான் குறிப்பிட்டேன். அதே போல் இரண்டு இடங்களுக்கு போன் போட்டு உண்மை நிலவரங்களையும் அறிந்து கொண்டேன். நீங்கள் என்ன நினைத்துக் கொண்டீர்கள்? போன் போட்டு உள்ள தள்ளிவிடுவேன் என்றா? அதற்கு நான் பெரியாரியம், மார்க்ஸீயம், பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லையே தோழர். தவறான புரிதல்கள் உண்மையாகிவிடாது. ஆனால், உங்களுடைய தோழர் ஒருவர் வினவு இணையத்தளத்தில் தமிழச்சி மிரட்டுகிறார். நாங்கள் எதையும் சமாளிப்போம் கிழிப்போம் என்று தட்டி வைத்திருக்கிறார். பார்த்தீர்களா? பேச வேண்டியதை என்னிடம் பேச வேண்டியது தானே? http://vinavu.wordpress.com/2009/03/04/pak01/

 107. //ஒரு சந்தேகம் இதுக்கு என்ன அர்ததம்ன்னு சொன்ன கொஞ்சம் பாதுகாப்பா இருப்போம்//

  தோழர் கலகம் அதற்காக எப்போதும் பாதுகாப்புக்காக எல்லா இடத்திலும் தகடு சொருவி வைத்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? எதற்காக தோழர் உங்களுக்கு சிரமம்? நான் தமிழ்நாட்டுக்கு வரும் போது சொல்லி அனுப்புகிறேன். அப்போதைக்கு எச்சரிக்கையாக இருந்தால் போதுமானது. கலகப் பணி நமக்காக காத்திருக்கும் போது எதற்காக ரோபோ போல் திரிந்து கொண்டிருக்க போகிறீர்கள்? அடிக்கிற வெயிலில் ஹெல்மட்டை போட்டாலே தாங்க முடியல….

 108. /// நக்ஸலைட்டுகளுக்கு ஏது ஆதரவு உழைக்கும் மக்களை தவிர.. ///
  அட இப்பவே கன்னெ கட்டுதெ!!!!!
  ரெம்பெ ஓவெருன்னா!!!!

 109. /// இந்த உணர்வு உங்களுக்கு மட்டும்தானா தமிழச்சி? மருதையனை பார்ப்பனன் என்று அவதூறு செய்வதும், ம க இ கவை மறைமுக பார்ப்பனியம் என்று அவதூறு செய்வதும், அரசியலற்ற புரளி செய்வதும் உங்களது தோழர்கள் என்பதால் எமது வார்த்தைகள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? அவர்கள் எங்களது தோழர்களும்தான் என்பதை மறந்து விடாதீர்கள். ///

  தோழன் அசுரனே எந்த உணர்வுகளும் யாருக்கும் சொந்தமல்ல தோழமை உணர்வு என்பது எனக்கு மட்டும் சொந்தமானது என்னும் அறியாமையில் நான் பிதற்றுவதாக நீங்கள் பேசுவது நியாயமா தோழனே. யார் யாரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அது நீதிக்கு எதிரான அநீதியல்லவா? ஆனால் இங்கே நாம் எதை பதிவு செய்துக் கொண்டிருக்கிறோம். நம் பகையை நம் குறைப்பாடுகள் என இல்லாததை இருப்பதாக உருவாக்கி ஞானி போன்றவர்கள் நம்மை எள்ளளுடன் பார்க்கும்படி செய்துக் கொண்டிருக்கிறோம். இது தேவையா தோழனே?

  நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோழர் விடுதலை ராஜேந்திரன் உங்கள் குடும்ப உறவினர் தானே? நேரில் பேசி பிரச்சனை தீர்த்திருக்கலாம். அல்லது உங்கள் சந்தேகங்களை ப+ர்த்தி செய்திருக்கலாம். ஆனால் தோழர் மருதையன் தோழர் விடுதலை ராஜேந்திரன் பார்வைக்கு போகாத இணையத்தில் பிதற்றுவதால் யாருக்கு என்ன லாபம்?

  தோழனே உங்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம். எழுத்துக்களால் அல்ல. செயல்பாடுகளால்… பெ.தி.க. தோழர்களுக்கு நீங்கள் எந்தெந்த வகைகளில் உதவியிருக்கிறீர்கள் என்பதை மட்டும் வைத்து சொல்லவில்லை… சில விஷயங்களை தவீர்க்க விரும்புவதால் இத்துடன் போதுமானது. ஆனால் ஒன்று தோழர் மருதையனை தந்தை பெரியாரின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு பேசுவதை அவரே விரும்பமாட்டார் என்பதை நீங்கள் அறியாததா?

  //// பெதிகவின் இந்த புரளி அரசியல் குறித்து தமிழச்சியின் வாயில் உதிர்க்கும் முத்துக்களை கோர்க்க விரும்புகிறேன். ஏன் தோழி அந்த விசயத்தில் மட்டும் இது வரை கருத்து சொல்லவே இல்லை?////

  நீங்கள் கோர்(த்)து விடக் கூடாது என்பதால் தான் தோழனே; கருத்தை சொல்லவில்லை. (அட போங்கப்பா எப்படியெல்லாம் டயலாக் சொல்ல வேண்டியதா இருக்கு) இன்று இரவு தான் நிதானமாக படிக்கப்போகிறேன்.

 110. ///பெரியாரி சுயமரியாதை எமக்கு உண்டு அன்பு தோழி தமிழச்சி. அறை விடுவதில் ஆண் பெண் பேதம் உண்டு என்று எண்ணுகிறீர்களா தோழி தமிழச்சி? அத்து மீறும் நாமும் அறைவோம்.

  அசுரன்////

  நல்லது தோழனே நான் அறைவிட நீங்கள் அறைவிட நம் சகதோழர்கள் ஒருவருக்கு ஒருவர் அறைவிட்டுக் கொள்ள தொண்டர் கூட்டம் அறைவிட்டுக் கொள்வதைப் பார்த்து கழக தலைவர்களும் அறைவிட்டுக் கொள்ள ஓ இதுவல்லவோ பொறட்சி நடக்கட்டும் இதுவாவது நடந்து தொலையட்டும். எப்போது வசதிப்படும் உங்களுக்கு? எந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்?

  இப்படியெல்லாம் எழுத ஆசைத்தான். ஆனால் தோழர் அப்படியெல்லாம் எழுதமாட்டேன்.

  நீங்கள் மார்க்ஸீயவாதி தானே தோழன் மார்க்ஸ் பாரீஸ் கம்ய+ன் புரட்சியைப்பற்றி நடந்த விவாதத்தை குறித்து அறிக்கை வெளியிட்ட போது சொன்னார் :

  “ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டும்இ கட்சி பேசிக் கொண்டும் இருப்பதற்கு இது நேரமல்லஇ பாரிஸ் எழுச்சியானது தொழிலாளர்களின் எதிர்ப்புச் சக்திக்கு அறிகுறியாய் இருக்கிறது. தொழிலாளர் சமூதாயத்திற்கு யாரார் விரோதிகள் அவர்களுடைய உண்மையான கோலம் என்னவென்பவற்றை மேற்படி எழுச்சி எடுத்துக்காட்டிவிட்டது.”

  இவற்றை இங்கே நடக்கும் கூத்துக்களோடு பொறுத்திப் பாருங்கள் தோழனே!

 111. //இன்று இரவு தான் நிதானமாக படிக்கப்போகிறேன்.//

  சரி நாளை உங்கள் பதிலை பார்த்துவிட்டு நானும்…

 112. /////////மிரட்டலா? நீங்க வேற நானெல்லாம் போட வேண்டிய இடத்தில் ஒரு போனை போட்டாலே மேட்டர் முடிஞ்சிடும். நான் எதுக்கு மிரட்டனும்? தோழர் மருதையன் மீது எனக்கு எந்த பகையும் இல்லை. அவருக்கும் என் மீது எந்த காழ்ப்புணர்வும் இல்லை. இந்த மாதிரி ஒரு பிரச்சனை என்றால் கூட போதும். புரிந்து கொள்வார்.//////////

  தோழர் தமிழச்சி,

  இதற்கான அர்த்தம் எனக்குப் புரியவில்லை. இது எம்மை மிகவும் ஏளனம் செய்வதாக இருக்கிறது. இதைவிடக் கேவலமான உருட்டல்களையும் மிரட்டல்களையும் அன்றாடம் சந்திப்பதே எமது அரசியல் அனுபவம் என்பது உமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அப்படி நீங்கள் ‘மேட்டர முடிக்க…’ முடிந்தால் முதலில் என்னை முடிக்கச் சொல்லுங்கள், பார்க்கலாம்.

  இது சிறுபிள்ளைத்தனமான, விசிலடிச்சான் குஞ்சுகளுக்கிடையிலான விவாதமல்ல. இடஒதுக்கீடு என்கிற சமூக அரசியல் குறித்த ஒரு மாற்றுக்கருத்தைப் படித்து பரிசீலித்து எதிர்வினையாற்ற யோக்கியதையில்லாத நபர்கள், தம்மை பகுத்தறிவுவாதிகள் என்றும் பெரியாரியவாதிகள் என்றும் பீற்றிக்கொண்டு பார்ப்பனியக் கண்ணோட்டத்தோடு மற்றவர்கள் மீது வசைமழை பொழிவதையும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை அவதூறுகளாகப் பதிவதையும் நேர்மையாக மதிப்பிடுவதற்கு முடிந்தால் முயன்றுபாருங்கள், தோழர் தமிழச்சி.

  ஒரு போனைப் போட்டு மேட்டர முடிப்பதற்கு முன்னால் ஒருவரியிலாவது உங்கள் கருத்தை நேர்மையாகப் பதிவிடுங்கள்.

  ———————————————————

  பெரியார் திராவிடர் கழகப் புரட்டர்கள், சி.பி.எம். அம்பிகளுடன் கொண்டிருக்கும் இந்தக் கள்ளக்கூட்டணி குறித்த எனது எதிர்வினை:

  பாரதி பக்தர்களும், வி.பி.சிங் ரசிகர்களும் இணைந்த கள்ளக்கூட்டணிதான் பெ.தி.க. மற்றும் சி.பி.எம். கூட்டணி!…

  http://yekalaivan.blogspot.com/2009/03/blog-post.html

 113. //http://rsyf.blogspot.com/2009/03/blog-post.html//

  மறைமுக பார்ப்பனியக் கட்சியை போலீசு தண்டிக்கும் செய்தி.

 114. ///இங்கே பெ.தி.க.வுக்கு ஆதரவாக தொடர்ச்சியாகக் கருத்து பதிந்துவருவதும் தமிழச்சிதான். எனவே, அதிஅசுரன், மதிமாறன், இன்னபிற பெ.தி.க.வினருக்கு நாம் முன்வைக்கும் கேள்விகளுக்கெல்லாம் தோழர் தமிழச்சி பதில் சொல்லவேண்டும் என்றும் கோருகிறேன்.

  ஏகலைவன்.///

  தோழர் ஏகலைவன் இது எந்தவிதத்தில் நியாயமாகும்? தோழர் அதிஅசுரனாவது இணையத்திற்கு வர நேரமில்லை என்று சொல்லலாம். பதிவு போட்ட தோழர் மதிமாறன் சார்பாகவும் நான் பேசவேண்டும் என்பது நியாயமான கோரிக்கை அல்ல. இரு கட்டுரைகளையும் இன்று இரவு படித்துவிட்டு பதில் நிதானமாக எழுதுகிறேன் தோழர். இதில் இருக்கும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதவே நேரம் சரியாக இருக்கு.

 115. ///தோழர் தமிழச்சி,

  இதற்கான அர்த்தம் எனக்குப் புரியவில்லை. இது எம்மை மிகவும் ஏளனம் செய்வதாக இருக்கிறது. இதைவிடக் கேவலமான உருட்டல்களையும் மிரட்டல்களையும் அன்றாடம் சந்திப்பதே எமது அரசியல் அனுபவம் என்பது உமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அப்படி நீங்கள் ‘மேட்டர முடிக்க…’ முடிந்தால் முதலில் என்னை முடிக்கச் சொல்லுங்கள், பார்க்கலாம்.///

  இதென்ன வம்பாக போய்விட்டது. போகிற போக்கை பார்த்தால் இணைய ரவுடி பட்டத்தை உண்மையாக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே.

  தோழரே நீங்கள் கூடவா இப்படி பேசுகிறீர்கள். என்னவென்று விளங்கவில்லையென்றால் என்னிடம் பேசிவிட்டு எழுத வேண்டியதுதானே. ஏதோ தியாகம் செய்வது போல் முடிந்தால் என்னை முடிக்கச் சொல்லுங்கள் வீரம் பேசிக் கொண்டு வருகிறீர்கள். நீங்களாவது முகத்தை காட்டாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். பாரீஸ் தேர் திருவழாவை தடைசெய்ய போட்ட வழக்கில் என்னை தீர்த்துக்கட்ட ஆட்கள் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இதில் நான் வேறு உங்களையா? வரவர வடிவேலு கணக்காக தோழர்கள் பேச ஆரம்பித்துவிட்டீர்கள். தோழர் மதி தளம் செம சூடா இருக்கு. அவரையும் காணோம். இந்த தோழர்களை அமைதியாக்க என்ன செய்து தொலைப்பது?

 116. ///‘மேட்டர முடிக்க…’ முடிந்தால் முதலில் என்னை முடிக்கச் சொல்லுங்கள், பார்க்கலாம்.///

  தோழர் நீண்ட நாட்களுக்குப்பின் ரொம்ப சிரிக்க வைத்து விட்டீர்கள். உங்களுடைய ஆசையை நிறைவேற்ற முடிவு செய்துவிட்டேன். உங்கள் புகைப்படம், வீட்டு அட்ரஸ், போன் நம்பர் கிடைக்குமா?

 117. //சிதம்பரத்தில் நடந்தவெற்றிப்பொதுகூட்டத்தில்

  மக இ க ,உள்ளிட்ட 6 அமைப்புக்கள் மதக்கலவரத்தை தூண்டியதாக புகார்-தமிழ்நாடு பிராமணர் சங்கம் நடவடிக்கை.

  காவல் நிலையத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்த சேர்ந்த வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு//

  ம க இ கவின் மறைமுக பார்ப்பனியம் வெளிப்படும் இடம்

 118. தோழர்களே,

  பெ.தி.க தோழர்களும் மற்ற அநாமதேயங்களும் தோழர் தமிழச்சி உறுவாக்காத ஒரு சூழலுக்கு அவரை பொறுப்பாக்கிவிட்டு மறைந்துவிட்டார்கள். அவருக்கு ம.க.இ.க வைப் பற்றி எதுவும் தெறியவில்லை தமிழக சூழல் பற்றி நடைமுறை அனுபவமுமில்லை, அவரால் எப்படி நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.

  மேலும் அவர் எழுதுவது ஆபத்தாகவும் உள்ளது அத்துமீறல், அறைதல், மேட்டரை முடித்துல் போன்றவைகளை விடுங்கள்
  //தோழர் மருதையனை தந்தை பெரியாரின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு//
  இதை படித்தால் பயமாக இருக்கிறது… இதை படிக்கும் மற்றவர்கள் இதை எப்படி வேண்டுமானாலும் விளக்க முடியும்.

  இந்த விவாதம் போகும் திசையின் ஆபத்தை மற்றவர்களைவிட நாம் உணர வேண்டும். இதற்காக தோழர் மதிமாறனை குறை கூறி பயனில்லை அவர் மக இக வை பற்றி வந்த முதல் அவதூறை வெளியிடாமல் இருந்திருக்க வேண்டும்.. அதன் பின்னர் விவாதம் அவர் கையை விட்டு போய்விட்டது…

  நாமும் தோழர் கொளத்தூர் மணியை கைது செய்த விடயத்தில் கருணாநிதியை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக இலக்கற்ற விவாதத்தில் பலியாகிவிட்டோம் என்றே தோன்றுகிறது இதில் எனது தவறுக்காக நான் சுயவிமர்சனம் ஏற்கிறேன்.

  நமது அமைப்புகளுக்கிடையிலேயான முரண்களை வேறொரு சந்தர்பத்தில் விவாதிக்கலாம். இப்போதைக்கு இதை நிறுத்திக்கொள்வோம்.

 119. தோழர்களுக்கு குறிப்பாக தோழர் அசுரன் அவர்களுக்கு இன்று இரண்டு கட்டுரைகளையும் படித்துவிட்டு பதில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இங்கே விவாதங்கள் திசைமாறிப் போய்க் கொண்டிருந்தாலும் நகைச்சுவை உணர்வோடு சில இடங்களில் என் கருத்துக்களை கூறியதுமில்லாமல் தொடர்ந்து பதில் அளித்துக் கொண்டிருந்த வேளையில் தோழர் ஏகலைவனின் பதிவில் மரணஅடி என்பவர் சம்பந்தமில்லாத பின்னூட்டத்தை அதில் பதிவு செய்திருந்தார். இவரே காலையில் வினவு தளத்தில் அதே பின்னூட்டத்தை பதிவு செய்திருந்தார். அதில் நான் மிரட்டும் தொனியில் பேசிக் கொண்டிருப்பது போல் நான் உபயோகித்த (ஒரு போனில் மேட்டரை முடித்துவிடுவேன்) வார்ததைக்கு வேறு வன்முறை அர்த்தம் கண்டுபிடித்து எல்லா தளங்களிலும் அனுப்பிக் கொண்டிப்பது எவ்வகையில் நியாயம் என்று புரியவில்லை. அதையும் தோழர்கள் அனுமதிப்பதை எம்மால் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எமக்கான நடத்தைகளை
  தொடர்ச்சியாக வேறு கோணத்தில் திரிக்கவே ம.க.இ.க. தோழர்கள் முற்படுகிறார்களோ என்ற ஐயம் எம்முள் வருகிறது. இதுவரையில் சக தோழர்களாக நினைத்து என்னுடைய எழுத்துக்களை இயல்பாக எழுதிக் கொண்டிருந்தேன். இனி விவாதம் தொடர்வதில் எந்த பயனும் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன். தோழர்களுக்கு பிரச்சனை என்றால் நேரடியாக தலைமை கழத்தில் தொடர்பு கொண்டு பேசுவதே என்னுடைய செயல்பாடாக இதுவரையில் இருந்தன. அதைக்குறிப்பிடே அக்கருத்தை கூறி இருந்தேன். அதேப்போல் இன்று இரு இடங்களிலும் போனில்
  தொடர்பு கொண்ட போது நீங்கள் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்களின் உறவினர் என்ற விவரத்தையும் அறிந்ததுமில்லாமல் இருபுறமும் உங்களை உயர்வாகவே பேசினார்கள். ஆனால் கலந்துரையாடலில் முகமீலிகளாக சிலர் இருப்பதை ம.க.இ.க. வுக்கு யார் என்று தெரியவில்லை. இந்நிலையில் வினவு தளத்திலும் தோழர் ஏகலைவனும் மரணஅடி பின்னூட்டத்தை தேவையில்லாமல் அனுமதித்ததை என்னால் ஏற்க முடியவில்லை. தொடர்ந்து அவற்றை தளத்தில் வைத்திருக்க தோழர்கள் விருப்பப்பட்டால் நான் விவாதத்தில் ஈடுபடுவது தேவையில்லை என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் தோழர்.

 120. //தோழர் நீண்ட நாட்களுக்குப்பின் ரொம்ப சிரிக்க வைத்து விட்டீர்கள். உங்களுடைய ஆசையை நிறைவேற்ற முடிவு செய்துவிட்டேன். உங்கள் புகைப்படம், வீட்டு அட்ரஸ், போன் நம்பர் கிடைக்குமா?//

  தோழர் தமிழச்சி,

  விடுங்க… நீங்க சீரியசனா விவாதத்தின் நடுவில் நகைச்சுவைக்காக சொன்னதை தோழர்கள் சீரியசாக புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன். நீங்களும் பதிலுக்கு எழுதி இன்னும் இன்னும் நகைச்சுவையை சீரியசாக மாற்றி விடாதீர்கள்… 🙂

  //இரு கட்டுரைகளையும் இன்று இரவு படித்துவிட்டு பதில் நிதானமாக எழுதுகிறேன் தோழர். இதில் இருக்கும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதவே நேரம் சரியாக இருக்கு.///

  பின்னூட்டங்களில் உள்ள மையமான கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லும் முகமாகவும், முக்கியமாக அந்த இரு கட்டுரைகளையும் படித்தும் கருத்துச் சொல்லுங்கள். எல்லா பின்னூட்டத்தையும் படிக்கிறேன் என்று நேரம் கடத்தி விடாதீர்கள். நாட்டாமையின் தீர்ப்புக்காக நாங்க எல்லாம் வெயிட்டிங்… ஆமாம்…

  புரச்சி

 121. பொறுப்பற்ற வகையில் நேரத்தை விரையம் செய்த பதிவுகள்;. விடையத்தை விளங்கி, விவாதமாக மாற்றினால் ஆரோக்கியமானது. முழுமையாக இதை படிப்பதென்றாலும், பொறுப்பற்ற வகையில் நேரத்தை செலவு செய்தே படிக்கவேண்டும்.

  முழுமையாக படிக்கவிட்டாலும், சாரம்சமாக இதை புரிந்துகொண்டு விவாதம் செய்யமால் தவிர்க்கும் கருத்துகள் மீது

  1.பிறப்பில் பார்பனாகப் பிறந்தவன் பார்ப்பனியத்ததை எதிர்த்து போராட முடியாதா?
  2.பெரியாரின் பாhப்னிய (சாதி) ஓழிப்பு எப்படி எந்த வழியில் சாத்தியமாகும்?
  3.பெரியாரிய அமைப்புகள் சாதியை (பார்பனிய) ஓழிப்பை எப்படி நடைமுறையில் வைக்கின்றனர்?
  4.ம.க.இ.க பார்பனியத்ததை எந்த வகையில் ஆதாரிக்கின்றது?
  5.வி.பி.சிங்கின் அரசியல் என்ன? அவர் சாதி ஓழிப்பபைய வைத்தார்?

  இப்படி இந்த நீண்ட பகுதிக்குள் கேள்விகள் உள்ளது. இதை விவாதிப்;பது ஆரோக்கியமானது.
  இல்லாது…??

  இந்த கேள்விகளை ஓட்டி,

  1.பிறப்பால் உயர் சாதியில் பிறப்பவன், சாதி அடையாளத்தை இழந்து அதற்கு எதிராக போராடமுடியும். இதை மறுப்பது பார்ப்பனிய சாதிய சி;த்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட பார்ப்பனியம்தான்.

  2.பெரியார் சாதிய சமூக அமைப்பின் மேல், அதை அடிப்படையாக கொண்ட இந்த மதம் மேல் விமர்சனம் செய்தவர். இதன் மூலம் சமூகத்தை விழிபுற வைத்தவர். இதற்கு மேல் சாதியை ஒழிக்க அவரால் வழிகாட்ட முடியவில்லை.

  3.பெரியார் இயக்கத்திடம் சாதியை ஓழிக்கும் வேலைத்திட்டம் கிடையாது. விழிப்புறவு பிரச்சாரத்தை தாண்டி, சாதியை ஓழிக்கும் அரசியல் திட்டம் கிடையாது.

  4.ம.க.இ.க சாதியை ஓழிக்கு அரசியல் வழியை கொண்டுள்ளது. அது பார்ப்பனியம் என்றால், அதை எப்படி ஏன் என்று விளக்குங்கள்;. இடஓதுக்கிட்ட திட்டம் ஓரு கொள்கை ரீதியாக வைத்துள்ளனர். அது தவறு என்றால், ஏன் ஏப்படி என்ற விவாதியுங்கள்.

  5. வி.பி.சிங் இந்தியாவின் பார்பனிய சமூக அமைப்பின் ஒரு ஆளும் வர்க்கப் பிரதிநிதி. அரசியல் இருப்புக்காக, சமூக கொந்தளிப்புக்களை தவிர்க்க செய்யும் சீர்திருத்தங்கள் சமூகத்தை மாற்றுவதில்லை.

  பி.இரயாகரன்

 122. தமிழச்சி கவனத்திற்கு,
  ஏகலைவன், மரணஅடி ஆகிய இரண்டுபேரும் ஒரே ஆள்தான். சந்திப்பு தளத்தில் அவரிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டு சென்றவர்தான் இந்த ஏகலைவன். ஒரே மாதிரி சவடாலக எழுதுதுன் இந்த ஏகலைவனின் வேலை.
  இந்த மகஇக யோக்கியர்கள் யாரும் குமரகுரு என்பவர் ‘மகஇக காரரர்கள் பதில் சொல்லலாமே?’ என்று ஆதாரத்தோடு எழுதியதற்கு இன்னும் ஒருவரும் பதில் சொல்லாமல் வெட்கமில்லாமல் உங்களிடம் வந்து சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
  அதுபோல் பெதிக ஆட்களையும் நம்பிவிடாதீர்கள். அவர்களும் சாதாரணமான ஆட்கள் இல்லை. எந்தக் கொள்கையும் இல்லாத குண்டர்கள் அவர்கள்.

  மகஇக காரர்கள் ஏன் குமரகுருவிற்கு பதில் சொல்ல தயங்குகிறார்கள்? அதற்கு பதில் அவர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.

 123. //பாம்புக்கு பால் வார்த்தாலும்…//

  பாம்புக்கு முட்டை பிடிக்குமாம்…

  சு சுக்குக்கூட முட்டை ரெம்ப பிடிக்குமாம்…

  (முகத்தில் வழிந்து நாக்கில் பட்டதில் முட்டையின் சுவை நன்னாக இருந்த காரணத்தால்..முட்டை இனி அசைவமல்ல சைவமே என்ற முடிவுக்குக்கூட வந்ததாக தகவல் அறிந்த வட்டாரம தெரிவிக்கிறது)

  …நீங்க கொஞ்சம் டிரை பண்ணி பாருங்க பிளீஸ்….

  நீங்களே எத்துனை வாரத்திற்கு பூச்செண்டும்,குட்டும் சும்மா…இனாமா கொடுப்பிய எதாவது ஒரு வாரத்தை தேர்வு செய்து முட்டைய வாங்கிங்குங்க….!

  “நல்ல முட்டையைவிட அழுகிய முட்டையே அதிக பயன் தரும்”னு அண்ணன் வே.மதிமாறன் சொல்றார். நெசமாவா…? ஞானம் படைத்த அய்யாத்தான் அனுபவபூர்வமாக உணர்ந்து சொல்ல வேனும்…!

  “கோட்டான் வீட்டு முட்டையும் அம்மியை உடைக்கும்” என்பது பழமொழி. “எங்கள் வீட்டு முட்டையும் பார்பான் அதிகாரத்தை உடைக்கும்” என்பது புது மொழி

 124. //சந்திப்பு தளத்தில் அவரிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டு சென்றவர்தான் இந்த ஏகலைவன்//

  ஹா ஹா ஹா… நல்ல கனவு சந்திப்பு செல்வபெருமாள், சீக்கிரம் விழித்துக்கொள்ளுங்கள்…இல்லை இந்த கூற்றை உண்மை என நீங்களே நம்பிவிட வாய்ப்புள்ளது…

 125. செல்வபெருமாள் உங்கள் பெ.தி.க மற்றும் ம க இக வுக்கு இடையில் தட்டிவிட்டு ரத்தம் குடிக்கும் திட்டத்தை கைவிடுங்கள். உங்கள் முயற்சி பலனளிக்காது. Better Luck Next Time .

 126. /////////இந்நிலையில் தோழர் ஏகலைவனும் மரணஅடி பின்னூட்டத்தை தேவையில்லாமல் அனுமதித்ததை என்னால் ஏற்க முடியவில்லை. தொடர்ந்து அவற்றை தளத்தில் வைத்திருக்க தோழர்கள் விருப்பப்பட்டால் நான் விவாதத்தில் ஈடுபடுவது தேவையில்லை என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் தோழர்.//////////

  மரண அடி என்கிற நபர் பதிந்த அந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். நீங்கள் விவாதத்தில் இருந்து விலகிவிடுவீர்கள் என்பதற்காக அல்ல தோழர் தமிழச்சி; அது தவறென்று பட்டதாலும், உங்களுடைய கருத்தை சுயவிமர்சனத்துடன் ஏற்றதாலும்தான் இம்முடிவெடுத்திருக்கிறேன்.

  மரண அடி ஒருவேளை எதிர்கருத்தைப் பதிந்திருந்தால் கூட அதனை அப்படியே வைத்து விவாதத்திற்குட்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் பதிந்த அந்த பின்னூட்டத்தில் எந்த விதமான அரசியலும் இல்லாமல் இருந்ததே நான் நீக்கியதற்கான காரணம்.

  அதே நேரத்தில், பெ.தி.க.வுடனான இந்த விவாதத்தில் நாம் நட்பு சக்தியாக எண்ணியே அவர்களுடன் விவாதிக்க விரும்புகிறோம். பெ.தி.க.வின் செயல்பாடுகளையும் அவற்றுக்கான எதிர்வினைகளையும் நாங்கள் பதிந்திருக்கிறோம். அவற்றை எதிர்த்து “அறைவிடுவேன்…” என்பதுவரை கருத்து பதிந்திருக்கும் நீங்கள், அதனைப் பரிசீலித்து நேர்மையாக எதையும் எழுதவில்லை. இந்த விவாதம் உங்களிடம் வேண்டுவது எல்லாம், முடிந்தவரை இங்கு வைக்கப்பட்டிருக்கும் தருக்கங்களிலில் இருக்கும் நியாயத்தைப் பரிசீலித்து, விவாதத்தை ஒழுங்குபடுத்தி நடத்திட முன்வாருங்கள். உங்களின் நகைச்சுவையினை விட நாங்கள் உங்களிடத்தில் வேண்டுவது இதைத்தான்.

  இவ்வாறு நீங்கள் இவ்விவாத்தைப் பார்க்கத் அதனால்தான், சி.பி.எம். சகுனியான ‘சந்திப்பு’ செல்வப்பெருமாள் இங்குவந்து மூக்கை நுழைக்கிறான்.

  ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், இங்கே நாங்கள் பெ.தி.க.விற்கு எதிராக வைத்திருக்கின்ற கேள்விகளுக்கு யோக்கியமான பதில்களைத் தராமல் அவர்கள் மீண்டும் ‘பார்ப்பன புராணம்’ பாடிக்கொண்டிருந்தால் அவர்களை நாங்கள் எதிர்கொள்வோம்; நீங்கள் அப்போது என்ன செய்வீர்கள் என்பதைக் கொஞ்சம் தெரியப்படுத்துங்கள், தோழர்.

  தோழமையுடன்,

  ஏகலைவன்.

 127. //நீங்கள் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்களின் உறவினர் என்ற விவரத்தையும் அறிந்ததுமில்லாமல் இருபுறமும் உங்களை உயர்வாகவே பேசினார்கள்.//

  தோழி தமிழச்சி,

  மேலேயுள்ள விசயத்தை இப்போதுதான் பார்த்தேன். நீங்கள் அசுரன் என்று வேறு யாரையோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னை அதிகபட்சம் ஒரு இரண்டு அல்லது மூன்று பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதும், விடுதலை ராசேந்திரனின் நேரில்கூட சுத்தமாக பார்த்ததில்லை என்பதுமே உண்மை.

  பெரியார் திகவில் ஒரேயொரு தோழரைக் கூட எனக்கு நேரடியாக தெரியாது என்பதுதான் உண்மை.

  இது போன்ற தவறான தகவல்கள் பரவியதற்காக முதற்கண் நான் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கிறேன்.

  அசுரன்

 128. தோழி தமிழச்சி தொடர்புடைய கட்டுரைகளை படித்துவிட்டு தனது கருத்துக்களை எழுதியுள்ளார். படித்து பாருங்கள்.

  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1021

  கடுமையானதொரு கருத்துப் போராட்டத்தின் முடிவில் தோழி இந்த விசயத்தை பரீசிலித்து படித்து தனது கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றிகள்.

  புரச்சி

 129. நேற்று தோழர் தமிழச்சியின் கருத்தை தமிழரங்கத்தில் படித்தேன்.

  //கடுமையானதொரு கருத்துப் போராட்டத்தின் முடிவில் தோழி இந்த விசயத்தை பரீசிலித்து படித்து தனது கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றிகள்.//

  நானும்.

 130. ////பெரியார் திராவிடர் கழகத்தினர் பார்ப்பனீயத்துக்கு விளக்கம் தெரியாமலே ஞானியின் பெரியார் நாடகத்தை தமிழகமெங்கும் போட்டனர்,/////

  ஆமா, ரியல் எசுடேட் நியுமரலிஜி புயர் பேச்சாலர் பேரா.பெரியார் தாசனை
  வைட்து கூட்டம் போடுதே ம க இ க???
  ஒருவேலை விசிட்டிங் புரபசரோ????

 131. அப்பு கழகம், மாசே, ,,,,,,,,,,

  ஙானி மேட்டரு இருக்கட்டும்,, புலிகல் ஆதரவு சீமான சுப்ரீம் கோர்ட்டு போயீ வெலிய
  எடுக்க ரெடினு உன்க ஆலு மருதையன் சேதி சொல்லி உட்டுருக்காரு போல,,

  ஏன் பேரா பெரியார்தாசன்னுக்கு கூட்டம் கம்மி ஆகிடுசா??
  இல்ல இனி புலிகல ஆதரிட்சு யார் கைதானாலும் ம க இ க வெலிய எடுக்குமா???

 132. விஜய் இங்க கட மூடியாச்சு, நெஸ்ட் மீட் பண்ணுவோம்!

 133. பார்ப்பனியத்தை இப்போதும் இவ்வளவு அலசி, நேரத்தை வீணடித்திருப்பது தேவையா என்ற கேள்வி எழுகிறது. பெரியார் இருந்த காலகட்டம் வேறு. தற்போதைய சூழல் வேறு. அழகிரிகளும், அட்டாக் பாண்டிகளும் உள்ளூர் மக்களை தங்களது சாதி, அதிகார, ரவுடியுசத்தால் காவு வாங்கி கொண்டிருக்கும் போது இழுபட்டால் அறுந்து போகும் பூணுலுக்கு இவ்வளவி முக்கியத்துவம் தேவையா? யார் தற்போது மக்களை காவு வாங்கி கொண்டிருக்கிறார்கள்? அருகில் நடப்பதை மறந்து விட்டு எதைப்பற்றியோ திண்ணைப் பேச்சு தேவையா தோழர்களே? யார் உண்மையான ஆதிக்க சாதி? விளக்கம் தாருங்கள்.

 134. கலாமின் மனைவி ‍:1 , 2 என்ற என் பதிவுகளுக்கான மறுமொழிகளுக்கு நான் கொடுத்த மறு மறுமொழி இது.( தங்கள் மேலான பார்வைக்கு )
  பாலா & வீரபாண்டியன் அவர்களே !
  தங்கள் மறுமொழியிலிருந்து தமிழ் ஓவியா,கோவி.கண்ணன்,தோழர் ஏகலைவன்,தோழர் மதிமாறன் ஆகியோர் இன்னும் பட்டவர்த்தனமான உண்மைகளை போட்டு உடைப்பவர்கள் என்பதை புரிந்து கொண்டேன். இன்னும் என்னில் ஹிப்பாக்ரடிக் சிந்தனைகள் இருப்பதை உணர்கிறேன்.

  பி.கு:
  மேற்சொன்ன பதிவர்களோடு தாங்கள் குறிப்பிட்ட “நக்சல் தீவிரவாத பதிவர்கள் இருவர். “வலையுலக ஓ என் ஜி சி பெரியார்” காட்டாமணக்கு ஆகியோரின் பதிவுகளையும் தேடிப்பிடித்து படிக்க முடிவு செய்துள்ளேன். மறு மொழிக்கு நன்றி

Leave a Reply

%d bloggers like this: