சீமானை சிறையில் சந்தித்தேன்

 

mathi-seemaan

2008 ஆகஸ்ட் மாதம் எடுத்தப் படம்

யக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் என்கிற கடுமையான சட்டத்தின் கீழ் கைதாகி, புதுச்சேரி சிறையில் இருக்கிறார். கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாலேயே, சீமானைப் பார்க்க வேண்டும் என்கிற உணர்வு நம்மை நான்கு நாட்களாக தொடர்ந்து, சூழன்று கொண்டே இருந்தது, அதன் காரணமாக அவரை நண்பர்களுடன், நேற்று (5.2.2009) சிறை சென்று சந்தித்தேன்.


புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் லோகு அய்யப்பன், எங்களை பேருந்து நிலையத்திலிருந்து அவருடைய காரில், வெகு தொலைவில் போக்குவரத்து வசதிகளே இல்லாத, பகுதியில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று, சிறப்புப் பிரிவில் பார்ப்பதற்கு அனுமதியும் வாங்கித் தந்து, மீண்டும் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டார்.


கௌத்தூர் மணி – சீமான் கைதை கண்டித்து, பல சுவரொட்டிகள் ஒட்டுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது, தினமும் சீமானுக்கு இவர் வீட்டிலிருந்து உணவு கொண்டுபோய் தருவது. சீமானைப் பார்க்க வருபவர்களை அழைத்துச் செல்வது, இதற்கிடையில் போலீஸ் தொல்லையை எதிர்கொள்வது என்று பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சூழலிலும் எங்களையும் அழைத்துச் சென்றார் தோழர் லோகு அய்யப்பன். அவருக்கு என்னுடைய நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


சிறையில் இருக்கும் சீமானுக்கு ஆறுதலும், தைரியமும் சொல்லவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் நான் சென்றேன். ஆனால், சீமான் எனக்கு தைரியமும், ஆறுதலும் சொல்லியனுப்பினார்.


 

போன கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கைது செய்ய போலீஸ், இந்தக் கூட்டத்தின் மேடைக்கு பின்புறம் வந்து காத்திருக்கிறது என்று தெரிந்தும், துளியும் அச்சமில்லாமல், துணிச்சலோடு இந்தக் கூட்டத்திலும் ‘தில்’ லாக பேசிய, என் இனிய நண்பன் சீமான், சிறையிலும் அதே துணிச்சலோடுதான் இருக்கிறார்.

 

மேடையில் முழுங்குகிற அதே தைரியத்தோடு, அதே கோபத்தோடு பொங்கி வழிந்தார் சீமான்.


 

தேர்தலுக்காக, ஈழப் பிரச்சினையில் இருந்தும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதிலிருந்தும், தங்களை சுருக்கிக் கொண்ட அவருக்கு ‘தோழமை’ யாக இருந்த தலைவர்களின் மீது கடும் அதிருப்தியை, கோபத்தை, வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.

 

‘காங்கிரசை புறக்கணிக்க வேண்டும்’ என்று பேசியத் தலைவர்கள், தேர்தல் நேரத்தில் மீண்டும் காங்கிரசுடான கூட்டணிக்கு தங்களை தயார் செய்து கொள்வதை குறிப்பிட்டு,

“நான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் பேசாததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால், அவர்கள் மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்குள் சேர முயற்சிப்பது, மிகுந்த வருத்தமளிக்கிறது” என்றார்.


 

“அவர்கள் தேர்தல் கூட்டணிக்காகத்தான், உங்கள் கைதை கண்டிக்கவில்லை. உங்கள் கைதை கண்டித்து அறிக்கை தந்தால், தமிழக முதல்வரின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். என்பதால்தான் அதை செய்யவில்லை” என்று இரண்டுக்கும் உள்ள தொடர்பை நான் சொன்னேன்.


 

“கருத்து சுதந்திரத்திற்கு எதிரான உங்கள் கைது, தமிழகத்தில் பெரிய எழுச்சியை உண்டாக்கியிருக்க வேண்டும், ஆனால், அது திட்டமிட்டு சில தோழமை சக்திகளாலேயே முடக்கப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பெற்றுவிடுவீர்களோ என்ற எண்ணத்தில். அதனால்தான் திமுக கூட்டணிக்கு வெளியில் இருக்கிற, திமுகவை கடுமையாக விமர்சிக்கிற தீவிர விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கூட உங்கள் கைதை கண்டிக்கவில்லை” என்றும் சொன்னேன்.


 

“இவர்கள் என்னை ஆதரிப்பார்கள் என்பதற்காக நான் பேசவில்லை. என் இனம் அழியும் போது அதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது. யார் என்னை இருட்டடிப்பு செய்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.” என்றார் சீமான்.


அவர் குரலில் அழுத்தமான உறுதி தெரிந்தது.


‘சீமானை பார்க்க சிறைக்குப் போகிறேன்’ என்று நேற்றைக்கு முதல் நாள் தொலைபேசியில் மக்கள் கலை இலக்கிய கழக பொதுச் செயலாளர் தோழர் மருதையனிடம் சொன்னேன். அதற்கு அவர், “தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து சீமானை விரைவில் சட்டரீதியாக விடுவிக்க வேண்டும். அதற்காக சுப்ரீம் கோர்ட வரை சென்று உடனடியாக அதை செய்யவேண்டும். அதை மற்றவர்கள் செய்தால் சரி. இல்லையென்றால் மக்கள் கலை இலக்கிய கழகம் அதை செய்வதற்கு தயாராக உள்ளது.” என்று சொன்னார். அதையும் சீமானோடு பகிர்ந்து கொண்டேன்.


ஆம் தோழர்களே, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த கைதை கண்டித்து, இந்தச் சட்டத்தைக் கண்டித்து ஒரு வலுவான கூட்டமைப்பை, கருத்து வேறுபாடுகளை தள்ளி, பல இயக்கங்களை ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும். இது சீமானுக்காக மட்டும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. ஏனென்றால், சீமான் கைது முடிவல்ல, துவக்கம். அடுத்து அந்த வரிசையில் தோழர் கொளத்தூர் மணி போகலாம். இன்னும் அந்தப் பட்டியலில் பல புது பெயர்கள் சேரலாம்.


 

ஆகவே, தோழர்களே கருத்துரிமைக்கான இந்தச் சட்டத்தை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்வதும், போராடுவதும் நமது கடமை.

 

ஒன்றிணைவோம். போராடுவோம். வெல்வோம்.

26 thoughts on “சீமானை சிறையில் சந்தித்தேன்”

 1. தோழர் மதிமாறனுக்கு நன்றி!

  அண்ணன் சீமானின் கைது கருத்து சுகத்திரத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி. ராஜீவ் கொலையில் சோனியாவிற்கு தொடர்பு இருக்கிறது என்று சென்றவார குமுதம் ரிப்போர்டரில் சுப்பிரமணியசுவாமி சொல்லி இருக்கிறான். அதற்க்கு காங்கிரஸ்காரன் வாய்மூடி மவுனமாக இருக்கிறான் இதே சீமான் பேசினால் உடனடி கைது. இதுதான் இந்தியாவின் கருத்து சுதந்திரம்.

  சீமான் பேச்சை கட்டு கைதட்டி ஆரவாரிக்கும் கூட்டம் யாரும் சீமான் கைதின் போது கோவம்கொண்டு குரல்கொடுக்கவில்லை என்பது வேதனையே. சீமான் வெளியே வர ஆவன செய்யவேண்டும். சீமான் செய்த பிழை என்ன? சீமானுக்கு ஆதரவை பெருக்குவோம்.

 2. //ஆகவே, தோழர்களே கருத்துரிமைக்கான இந்தச் சட்டத்தை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்வதும், போராடுவதும் நமது கடமை.

  ஒன்றிணைவோம். போராடுவோம். வெல்வோம்//

  உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன். சீமான் அவர்களை எக்காரணத்தைக் கொண்டும் நாம் இழந்து விடக்கூடாது.

 3. அடக்குமுறைகள் தான் எமது சீமான் மீதான நேசத்தை இன்னும் அதிகமாக்குகின்றன.

  தோழர் மதிமாறன் , உங்களைப் போன்ற சீமானைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றோர் அவரைத் தேர்தலில் நிற்கச் சொல்ல வேண்டும்.

  நமது இளைஞர்களின் சக்தி அப்போதுதான் இந்த கெழடுகளுக்குப் புரியும்.

  அவர்கள் சாணக்கியர்களாக இருக்கலாம். நாம் வாள் சுழற்றும் வரை. ஆனால் எதிரெதில் வாற்ச்சண்டைக்காக களத்தில் நிற்கும் போது வீரம்தான் பேச வேண்டும். சாணக்கியத்தனம் என்ன செய்யும்?????

 4. கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா? மற்றும் சீமானை சிறையில் சந்தித்தேன் போன்ற பதிவுகளுக்கான தவிர்க்க முடியாத எதிர்வினை

  //என்னுடைய ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் பேசிய தோழர் கொளத்தூர் மணியும், தோழர் விடுதலை ராசேந்திரனும் ‘ஞாநி’ யைப் பற்றி நான் விமர்சித்து எழுதியிருந்த, பல பதில்களை குறிப்பிட்டு பேசுவதைக்கூட தவிர்த்தார்கள்.///

  கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா? என்ற பதிவை 28/02 அன்று கடந்த சனிக்கிழமை பதிவு செய்து இருக்கீறீர்கள்.

  05 /03/ வியாழனன்று,புதுவையில், நீங்கள் சந்தித்த புதுவை மாநில பெரியார் தி.க தலைவர். லோகு.அய்யப்பனிடம்……. கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டீருக்கலாமே?

  * நீங்கள் சார்ந்திருக்கும் பெரியார் தி.க., ஞானியை தோழமை சக்தியாகவே கருதுவதேன்?

  * உங்கள் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணியும், பொதுச் செயலாளர் விடுதலை .ராசேந்திரனும் ஏன் பார்ப்பன ஞானியை விமர்சிப்பதை தவிர்த்தார்கள்?

  * கழக இதழான ‘புரட்சி பெரியார் ழுழக்கம்’ ஞானியைப் பற்றி ஏன் விமர்சிக்கவில்லை?

  ‘தோழமையானவராக இருக்கிறார்’ என்று பெருந்தன்மையோடே, அவரை கண்டிக்காமல் விட்டார்கள் என்ற உங்களின் குற்றச்சாட்டைப் பற்றி அவரிடம் பேசினீர்களா?

  * உங்களின் இந்தப் பதிவினைத் தொடர்ந்து, /////ஞாநியின் பார்ப்பனக் கொழுப்பு அம்பலமான பிறகும் அவனோடு ‘தோழமையோடு இருக்கிறார்’ என்று ‘பெருந்தன்மை’காத்தது நாங்கள் அல்ல. நீங்கள்தான் என்பதற்கு மதிமாறனின் மேற்கண்ட வரிகள் உத்திரவாதம் வழங்குகிறது. /////////

  ///////பெரியார் திராவிடர் கழகம், பார்ப்பன எதிர்ப்பு எனும் பம்மாத்து நாடகத்தில் சி.பி.எம். என்கிற போலிகம்யூனிஸ்டுகளோடு சிந்தைரீதியாக சோரம்போனது அம்பலமாகிவிட்டபடியால், அவர்களிடத்திலிருந்து இனி யோக்கியமான எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, பெ.தி.க.வை நாம் விமர்சிக்கும்போது கடைபிடிக்கும் ‘அவைநாகரீகத்தை’த் தவிர்த்து கடுமையாகவே சந்திக்கலாம்; என்பது எனது கருத்து. இதற்கு தோழர்களும் தங்களது கருத்துக்களைப் பதியலாம்/////////

  இதனைச் சொல்வது, மருதையன் அய்யங்காரின் தலைமையேற்று, தமிழ்நாட்டில் புர்ச்சி செய்யும் soc ம.க.இ.கவினர். பல பின்னூட்டங்கள், ம.க.இ.க வின் பெரியார்.தி.க மீதான அவதூறு குறித்து தங்களின் கருத்தென்ன? என்று வினவின.

  ஆனால், நீங்களோ பார்ப்பனத் தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ம.க.இ.க வின் அபாண்டமான குற்றச்சாட்டுக்கு மவுன சாட்சியாகவே இருந்தீர்கள்.

  ஒரு பக்கம் விடுதலைப்புலிகளை திவிரமாக ஆதரிக்கிற, புலிகளின் தலைவரை மேடைக்கு மேடை அண்ணன் என்றே அழைக்கின்ற சீமானை சிறையில் சந்திக்க செல்கிறீர்கள்!

  மறுபக்கம், விடுதலைப்புலிகளை எதிர்க்கிற ம.க.இ.க மற்றும் ராயகரன் கும்பலோடும் தோழமை !!

  பார்பபானஞானியை விமர்சனம் செய்யவில்லை என பெரியார் தி.க வைப் பார்த்து “கொளுகைக் கண்ணீர்” வடிக்கும் நீங்கள், பார்ப்பனீயத்தை தலைமைப்பீடமாக கொண்ட ம.க.இ.க வோடு தான் உங்களின் கொள்கைக் கூட்டணியா?

  இது தான் உங்கள் பெரியாரியல் பார்வையா??

 5. விடுதலை புலிகளை போலியாக ஆதரிக்கும் அரசியல் வாதிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் இன்றைய இலைஞர்கள்.

 6. அண்னன் சீமான் தேர்தலில் நிற்க வேன்டும்.அவர் பின்னால் அணி திரள என்னற்ற மானவர்களும், தோழர்களும் தமிழ்நாடு முழுவதும் ஆயத்தமாகி வருகிறர்கள்.இன்றைக்கு தமிழகத்தில் இருக்கிர அனைத்து தலைவர்களைவிடவும் நேர்மையுடனும்,வீரத்தோடும்,தீரத்தோடும் இருக்கும் ஒரே தமிழன் அண்ணன் சீமான் அவர்கள்தன். சிவகங்கையில் மிக எளிதாக வென்று விடுவார். போலி இந்திய தேசியம்,போலி இறையான்மை பேசும் காங்கிரசு மண்னை கவ்வ வேன்டும்.

 7. தோழர்,

  இயக்குநர் சீமானை வெளியில் கொண்டு வர நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு என் ஆதரவு என்றும் உண்டு. அவரது கைது கண்டிக்கத்தக்கது.

 8. மதி அண்ணா,

  தோழர் மணி, சீமான் மீதான அடக்குமுறயை கண்டிட்து முற்போக்காளர்கள்
  அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும்,

  அதற்கென ஒரு அணி மானில அளவில் கட்டி அமைக்கும் முயற்சியை நீங்கள் முன்னெடுக்க
  வேண்டும்

 9. அடடா தமிழா.. எடடா படை நீ..அடிமை விலங்கை உடைத்தெறி.. இடடா ஆணை.. கொடடா செந்நீர்.. இனத்தைக் காப்போம் நாள் குறி..
  நடடா களத்தே.. எடடா கைவாள்..நட உன் பகைவர் தலை பறி..
  தொடடா போரை.. விடடா கணைகள்.. சுடடா எழட்டும் தீப்பொறி..
  நீ சுடடா எழட்டும் தீப்பொறி………

  புலி………….யார் புலி…………. சீமான் புலி……….. அவன் செத்தால் அவன் தம்பி புலி………………

 10. சீமானைப் போன்ற உண்மையான உணர்வாளர் உள்ளே இருக்கிறார். நாற்காலிக்குச் சண்டை போடுகிறவர்கள் வெளியே இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தில் கத்தி விழுந்திருக்கிறது. என்ன செய்வது… இவ்விடயத்தில் இலங்கையைப் பின்பற்றுகிறது இந்தியா. அம்மென்றால் சிறைவாசம்… இம்மென்றால் வனவாசம் என்ற கதைதான். சீமான் அவர்கள் சிறையினுள் தைரியமாக இருக்கவேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனை. உண்மையைச் சிறையிட்டுப் பொய்மைகள் களித்திருக்க பார்த்திருக்க விதிக்கப்பட்டோம் என்ன செய்வோம்?

 11. // தோழர்களே, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த கைதை கண்டித்து, இந்தச் சட்டத்தைக் கண்டித்து ஒரு வலுவான கூட்டமைப்பை, கருத்து வேறுபாடுகளை தள்ளி, பல இயக்கங்களை ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும். //
  சீமான் கைது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. புலிகளை ஆதரிக்கிறோம் என்று ஒருவர் சொன்னாலே கைது என்பது பெரும் தவறு. இதை மதிமாறன், ம.க.இ.க. மருதையன், புலிகளை எதிர்க்கும் நான் எல்லாரும் இசைகிறோம்.

  ஆனால் சு. சாமி முட்டை அடி பயம் இல்லாமல் தன் கருத்தை சொல்ல உரிமை வேண்டும் என்று சொன்னால் ம.க.இ.கவினர், வினவு தளம், மதிமாறன் எல்லாரும் பொங்கி எழுகிறீர்கள். உங்களுக்கு சரி என்று படும் கருத்தை சொல்ல மட்டும் உரிமை வேண்டும், உங்களுக்கு தவறு என்று தோன்றுவதை யாரும் சொல்லக் கூடாது. அப்புறம் என்ன கருத்து சுதந்திரம் பற்றி பதிவு வேண்டிக் கிடக்கிறது? ஏன் கருத்துரிமை பற்றி கவலைப்படுபவர்கள் மாதிரி ஒரு வேஷம்?

 12. ஆர்.வி: ஒருவரை கைது செய்வது, அதுவும் அவரது பேசிய ஒரு செய்தியின் காரணமாக கைது செய்வது நேரடியாகவே கருத்து சுதந்திரத்தின் குரள்வளையை நெறிக்கும் செயல், பெரும்பாலும் இத்தகைய கைது நடவடிக்கைகளில் உள்ளே செல்வோர் மக்கள் நலனுக்காக பேசுவோராகவே இருப்பர். மக்கள் விரோதமாக பேசியும் செயல் பட்டும் வரும் சு.சாமியை கேசு போட்டால் கூட தண்டிக்க முடியாத நிலை. இது நிதர்சனம், அப்படிப்பட்ட நிலையில் முட்டை ஒரு கருத்தாகத்தான் ஒரு எதிர்வினையாகத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய அது அவரது கருத்து சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக இருக்கின்றது.

  சரி சீமான் வாயை மூட கைது செய்யலாம். சு.சாமி தமிழக மக்களை, வக்கீல்களை அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறார். பெரும்பான்மை மக்களுக்கு விரோதமாகவே பேசுகிறார்,அவர் வாயை மூட என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்கள், அவர் அப்படித்தான் பேசுவார் அது அவர் உரிமையென்று சொல்லக்கூடாது. நாங்கள் அப்படி பேச முடியவில்லையே, நாங்கள் பேசினால் மட்டும் சிறை, சுசாமி எந்த தன்டனையுமில்லாமல் தப்பிப்போனால் அவரை தன்டிப்பது எப்படி?

 13. மா.சே.

  சட்டத்தை பற்றி பேசுகிறோம். எனக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாது. சீமான் பேசுவது சட்டப்படி தவறு போல தெரிகிறது. அப்படி ஒரு சட்டம் இருந்தால் அந்த சட்டமே தவறு என்பது அடுத்த விஷயம்.

  சாமி பேசுவது எந்த சட்டப்படியும் தவறு இல்லை. அவ்வளவுதான். அப்படி இருந்தால் அவரை சட்டப்படி எதிர்கொள்ள இது வரை யாரும் ஒரு முயற்சியும் எடுக்கவில்லையே! மக்கள் விரோதம் என்பது உங்கள் எண்ணம். உங்கள் எண்ணம் சரியாக இருக்கலாம். அது வேறு விஷயம். (நான் வேறு எங்கோ சொன்ன மாதிரி சாமி என்ன பேசினார் என்றெல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை)

 14. //அவரை சட்டப்படி எதிர்கொள்ள இது வரை யாரும் ஒரு முயற்சியும் எடுக்கவில்லையே! //

  ஆர்.வி பிரச்சனை என்னவென்றால் நீங்கள் உண்மையிலேயே நல்ல எண்ணம் கொண்ட மனிதராக இருக்கின்றீர்கள், ஆனால் இன்றைய சமூக அரசியல் சூழல் அப்படி இல்லை! சுசாமி மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா. அவருக்கு இருக்கின்ற செல்வாக்கை கொண்டு கேசை தவிடு பொடியாக்கிவிடுவார். இது உண்மை! அவர் வெறும் கோமாளியில்லை, இந்திய அதிகார வர்க்கத்தை கையில் வைத்திருக்கும் ஒரு மாயாவி! அவர் மேல் கேஸ் போட்டு ஒன்றும் நடக்காது உதாரணம், சமீபத்திய கோர்ட் கலவரம், சீனியர் வக்கீல்கள் சுசாமி மேல் வழக்கு தொடுத்தும் அவர் இன்னமும் கைதாகவில்லை. பணமும் செல்வாக்கும் உள்ளவருக்கு வாலாட்டும் இந்த சமூக அமைப்பில் நாம் வேறெதை எதிர்பார்க்க முடியும்.

 15. (நான் வேறு எங்கோ சொன்ன மாதிரி சாமி என்ன பேசினார் என்றெல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை)

  உங்களைப் போன்ற நல்லெண்ணம் கொண்டவர்களே இப்படி பாராமுகமாக இருந்தால் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகளும், ஊழல் பெருச்சாளிகளும், கிரிமினல் பேர்வழிகளும் எளியவர் துன்பத்தை கேட்கவா போகிறார்கள்? இது தானே இன்று இந்தியாவில் நடக்கிறது. குப்பை நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கப்படும் மீடியா ஸ்பேசில் .0001% கூட மக்கள் துன்பங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லையே, பின்பு ஏன் கையில் முட்டையையும், துப்பாக்கியையும் ஏந்த மாட்டார்கள்… அப்போது தானே அவர்கள் குரல் வெளியில் கேட்கிறது!

 16. மா.சே.

  // சாமி மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? //
  1. சாமி சட்டப்படி எந்த தவறும செய்யவில்லை என்பது என் உறுதியான எண்ணம். அவருக்கு மாட்டிக் கொள்ளாதபடி பேசும் அளவுக்கு அறிவு உண்டு.
  2. நீதிமன்றங்கள் பொதுவாக நடுநிலையாகத்தான் இருக்கின்றன. அவர் அப்படி சட்டப்படி தவறு செய்திருந்தால் தாராளமாக கேஸ் போடலாம். என்ன, நம் நீதிமன்றங்கள் மெதுவாக இயங்குகின்றன.
  3. அப்படி நீதிமன்றங்கள் நடுநிலையாக இல்லை, செல்வாக்கும் பணமும் உள்ள தீட்சிதர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா என்று ஒதுங்கி இருந்தால்? அந்த ஆறுமுக சாமி நமக்கு என்ன பலம் இருக்கிறது என்று பேசாமல் போயிருந்தால்?

  // இப்படி பாராமுகமாக இருந்தால் //
  அதற்காக சாமி உளறுவதை எல்லாம் கேட்க முடியுமா? ஒரு entertainment value கூட இல்லை. கலைஞர் உளறுவதும் நல்ல தமிழில் சுவாரசியமாக உளறுவார்.

  அப்புறம் சமீபத்திய நிகழ்ச்சிகளுக்கு பிறகும் கூட சாமிக்கு எந்த விதமான தாக்கமும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். கலைஞரின் திண்ணை பயம் கன்னாபின்னா என்று அதிகரித்திருப்பதும், போலீசுக்கு வக்கீல்கள் மேல் கனன்று கொண்டிருந்த கோபமும் சாமி முட்டை வீச்சுக்கு பிறகு வெளிப்பட்டன என்றுதான் தோன்றுகிறது. பொநேரி போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை வக்கீல்கள் நீதிமன்றத்தில் அவமானப்படுத்தியதாக கூட படித்தேன், உண்மையா பொய்யா தெரியாது.

  உப்புக்கு பெறாத சாமியை ஒரு ஹீரோ ஆக்கி விட்ட வக்கீல்களின் செயல் பெரிய முட்டாள்தனம். சாமி ஒரு soft target என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும், it boomeranged on them. வக்கீல்களை போலீஸ் தாகாது என்றும் நினைத்திருக்க வேண்டும்.

  எனக்கு சில அபிப்ராயங்கள் இருக்கின்றன. ஆனால் நான் கடவுள் இல்லை என்பது எனக்கும் தெரியும். மாற்று கருத்துகளை படிப்பதும் விவாதிப்பதும் நான் நினைப்பது சரியா இல்லையா என்று பார்க்கத்தான். எனக்கு ஆச்சரியம் ஊட்டும் வகையில் சில விஷயங்கள் நடக்கத்தான் செய்திருக்கின்றன. சாமி மீது முட்டை வீசியதற்கு ஒரு விளைவும் இருக்காது என்றுதான் நினைத்தேன். பொன்னேரியில் கோஷம் போட்டதற்காக அரசுக்கு எதிராக கலகம் என்று கைது என்பது புரியத்தான் இல்லை. (அது என்ன சட்டம் என்று பல முறை கேட்டேன், யாருக்கும் சரியாக தெரியவில்லை போலிருக்கிறது.) இரண்டு நாள் கமிஷன் அப்புறம் தேவை இல்லை என்றால் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கூட புரியவில்லைதான்.

  ஆனால் consistent application of a value system என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சீமானுக்கு ஒரு நீதி, சாமிக்கு ஒரு நீதி என்பது கருத்துரிமையை consistent ஆக apply செய்வதாக ஆகாது. 26/11 தாக்குதல்களுக்கு மூல காரணம் தேட வேண்டும், நீதிமன்றத்தில் போலீஸ் அத்து மீறியதற்கு கூடாது என்றால் அது consistent application இல்லை. அவ்வளவுதான்.

 17. //26/11 தாக்குதல்களுக்கு மூல காரணம் தேட வேண்டும், நீதிமன்றத்தில் போலீஸ் அத்து மீறியதற்கு கூடாது என்றால் அது consistent application இல்லை//

  மற்றதை பற்றி எழுதுவதற்கு முன்…இதைப்பற்றி ஒரு வார்த்தை, அதாவது கமிஷன் ரிப்போர்ட் பிரச்சனை எப்படி நடந்த்து பற்றியது மட்டுமே அது தீர்வை பரிந்துரைப்பதில்லை. எப்படி நட்ந்த்து என்பதை போலீசின் பார்வையிலிருந்து அனுகியது தவறு என்பது என் கருத்து அவ்வளவே. இதை நாம் அங்கே தொடருவோம். இங்கே மற்றவர் குழம்பக்கூடும்

 18. நம் தமிழன்

  மழலையின் மரண ஓலம்..
  மண்டையை பிளந்தாலும் மானாட மயிலாடுவான்
  கஞ்சி யின்றி தன் இனமே செத்தாலும் கலக்கப்போவது யாரென்பான்
  அவனுக்கு 6 மணி ஆனால் ஆனந்தம் வேன்டும்
  ஆதித்யா வின் ஆதிக்கம் அவனை ஆட்கொன்டது
  அதனை ஒடுக்க சிரிப்பொலி எழுந்தது

Leave a Reply