பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
பெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது.
இந்த நெருக்கடி பெரும்பாலும், ‘வளத்த கடா முட்ட வந்தா, வச்ச செடி முள்ளானா’ என்கிற பாணியில் அவரால் ஆளக்கப்பட்டவர்களாளேயே உண்டாக்கப்படுகிறது. பெரியார் காலத்திலேயே இதுபோன்ற நெருக்கடிகளை அவர் சந்தித்திருக்கிறார்.
1936ல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைவர் பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டே ப.ஜீவானந்தம், ‘பெரியார் நீதிக்கட்சிகாரர்களிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார்’ என்று கடுமையாக விமர்சித்தார். ஜீவானந்ததி்ற்கு நன்றாக உரைப்பது போல், பெரியார் உரிய சாட்டையடி பதிலை தன் தலைமை உரையில் தந்தார்.
ஆனாலும், பின்னாளில் ஜீவா, பெரியாரிடம் இருந்து விலகி, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கட்டினார். அதான் கம்பராமாயணத்திற்கு மார்க்சிய முலாம் பூசினார்.
அதற்குப் பிறகும் பார்ப்பனர்கள் மனம் குளிர வைக்கும் வகையில், பெரியாரை மிக கேவலமாக, ‘கைகூலி, சாக்கடை’ என்றெல்லாம் திட்டி எழுதினார். உண்மையில் அவரின் நோக்கம், பெரியாரிடம் இருந்தால் இந்து மதத்தை, பார்ப்பனர்களை, ஜாதி வெறியர்களை பகைத்துக்கொண்டு வாழ வேண்டும். பார்ப்பன ஆசிர்வாதம் இல்லாமல், நாம் தனி தலைவராக உருவாவது தடைபடும் என்பதுதான்.
சுருக்கமா சொல்லுனும்னா ‘கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’
இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜீவா அறியப்படுகிறார். ஆனால், தமிழர்களின் வரலாற்றில் பெரியார்தான் தலைவராக போற்றப்படுகிறார்.
***
பெரியாரின் பிள்ளைகளாக இருந்த அண்ணாத்துரையும் அவரது கூட்டாளிகளும், 1949 ல் பெரியாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அவர்கள் பெரிய குற்றமாக சொன்னது பெரியாரின் இரண்டாவது் திருமணம். உண்மையில் அதுவல்ல காரணம். நடிகர் வடிவேல் பாணியில் சொல்வதாக இருந்தால் அது ‘ச்சும்மா…’
அவர்கள் தனி வண்டி ஓட்ட ஆசைப்படடார்கள்.
பெரியார்-மணியம்மை திருமணம் 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் நடபெற்றது. அண்ணாத்துரை புதுகட்சி துவங்கியது அதே ஆண்டு செப்டம்பர் மாதம். அவ்வளவு வேகம்.
பெரியாரோடு இருந்தால், அது சாத்தியப்படாது. அதனால்தான், வெளியில் சென்றவுடன் பார்ப்பனியத்தை, இந்து மதத்தை, ஜாதியை விமர்சிப்பதை நிறுத்தி, எல்லோரும் வந்து எறிக்கொள்ளும்படியான, ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்ற போர்டு மாட்டிய தமிழ் வண்டி ஓட்டினார்கள். பெரியாருடன் சேர்ந்து பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு என்று பேசி, போராடி மக்களிடம் செருப்படியும், கல்லடியும் வாங்குவதற்கு பதில் – தமிழ், தமிழன் என்று பேசி தமிழர்களிடம் செல்வாக்கு பெருவது சுலபமாகவும், வசதியாகவும் இருந்ததால், இந்த தமிழ் வண்டி 100 மைல் வேகத்தில் பறந்தது.
‘தமிழன்’ என்ற சொல் கூட்டம் சேர்ப்பதற்கு வசதியாக இருந்தது. கூட்டம் சேர, சேர தமிழ் உணர்வும் பீறிட்டுக் கிளம்பியது. தமிழ் உணர்வு கட்சியாக மாறியது. கட்சி ஆட்சியாக மாறியது.
இன்றைக்கும் விஜயகாந்த் வரை, ‘தமிழ்-தமிழன்’ என்று கொஞசம் டென்சனாக சவுண்டு கொடுத்துப் பேசினால், கூட்டம் சேருகிறது. கூட்டத்தை பார்த்த உடனே அவர்களுக்கு ஆட்சி கனவு வருவதற்கு அண்ணாதுரையின் ‘பார்மெட்டே’ பிள்ளையார் சுழியாக பயன்படுகிறது.
இதில் வேடிக்கை, பெரியாரின் தலைமை பிடிக்காமல் தனியாகப் போய் கட்சி ஆரம்பித்த அண்ணாத்துரை, ‘திமுகவின் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. அது தந்தை பெரியாருக்காக காத்திருக்கிறது’ என்று பெரியாரை திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு திமுகவில் சேர அழைப்பு விடுத்தார். அல்லது பெரியார் மீது செண்டிமென்டாக தாக்குதல் நடத்தினார். இத்தனைக்கும் பெரியார், மணியம்மையை விவாகரத்துகூட செய்துவிடவில்லை. அப்புறம் ஏன் இந்த அழைப்பு?
பெரியாரின் தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்கள் ஏன் பெரியாரை விட்டு விலக வேண்டும்? ஏன் புதுக் கட்சி துவங்கவேண்டும்? பெரியாரின் தலைமைதான் முக்கியம் என்றால் மீண்டும் திகவிற்கே திரும்பி இருக்கலாம் அல்லது திகவைவிட்டு போகாமல் இருந்திருக்கலாம்.
பெரியாருக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பு, தொண்டர்கள் மத்தியில், ‘அண்ணாவிற்கு என்ன ஒரு பெருந்தன்மை? இவரல்லவா தலைவர்!’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கான யுக்தியல்லவா? இதை விடவா பெரியாரை கேவலப்பத்த முடியும்?
அண்ணாத்துரை மற்றும் கூட்டாளிகளின் இந்த செயல்களைப் பற்றி, சுருக்கமா சொல்லுனும்னா ‘இந்தக் கிளிக்கும் இறக்கை முளைளச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’
இன்றைக்கும் ஆட்சியில், அதிகாரத்தில் அண்ணாவும் அவரின் திமுகவும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பெரியார் மட்டும்தான் வரலாற்றில் இருக்கிறார்.
***
பெரியாருக்கு பின் மிக சமீப காலங்களில் பெரியாரின் பேரன்களில் சிலர் திடீர் என்று ஒருநாள், ‘பெரியார் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை. தலித்துகளுக்கு எதிராக இருந்தார்’ என்று அவதூறுகளை அள்ளி வீசி பெரியாரின் மார்பில் முட்டினார்கள்.
இன்னும் சில பிற்படுத்தபப்பட்ட குழந்தைகள், பெரியாரை நேரடியாக விமர்சிக்க தயங்கி, ’திராவிட இயக்கம் என்ன செஞ்சி கிழிச்சிது?’ என்று பெரியாரின் தாடி மயிரை பிடித்து இழுக்கிறார்கள்.
ப.ஜீவானந்ததிலிருந்து, இன்றைக்கு பெரியாரை விமர்சிப்பவர்கள் வரை, தங்கள் கொள்கை என்ன வென்று சொல்லாமல், பெரியாரை விமர்சிப்பதே தங்கள் கொள்கையாக அடையாளப்படுத்துகிறார்கள்.
“பெரியாரை விமர்சிக்கக் கூடாதா? பெரியார் என்ன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?”
இல்லை. தமி்ழ் நாடு கடவுளையே செருப்பால் அடித்த ஊரு. இங்கு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை.
ஆனாலும் பெரியாரை விமர்சிப்பவர்கள் அவரைத் தாண்டி சிந்தப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது செயல்படவேண்டும். ஆனால், இவர்களோ வரலாற்றை பின்னோக்கி இழுத்து, பெரியாரிடம் சண்டையிட்டு, பார்ப்பனியத்திடமும், இந்து மதத்திடமும், ஜாதிய அபிமானிகளிடமும் சரணடைகிறார்கள்.
பெரியாரை விமர்சித்த ஜீவா, பெரியாரின் தாக்குதலால் சாய்ந்தபோன கம்பராமாயணத்திற்கு முட்டுக்கொடுத்தார். பெரியாருக்கு எதிராக பார்ப்பன பாரதிக்கு காவடி தூக்கினார்.
பெரியாரோடு முரண்பட்டு புதுக்கட்சி உருவாக்கிய அண்ணாத்துரை, பெரியாரின் அரசியல் எதிரியான பார்ப்பன ராஜாஜியோடு தேர்தலில் கூட்டு வைத்துக்கொண்டார்.
பெரியாரை தலித் வீரோதியாக சித்திரித்த குணா, ரவிக்குமார் போன்றவர்கள் அதற்கு மாற்றாக பார்ப்பனியத்தை பரிந்துரைத்தார்கள்.
‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற பெயரில் சுற்றி வளைதது மூக்கை தொடுவதைப்போல், மறைமுகமாக பெரியாரை சீண்டுகிற நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளும், பார்ப்பனியத்தை ஆசையோடு கள்ளப் பார்வை பார்க்கிறார்கள்.
இப்படி பார்ப்பன ஆதரவு நிலைகொண்டு, பார்ப்பனரல்லாதவர்கள் கொடுக்கிற நெருக்கடியை பெரியார் மிகச்சாதரணமாக, பலமுறை தகர்த்திருக்கிறார். மாறாக, பெரியாரை தகர்க்க நினைத்தவர்கள்தான் தகர்ந்து போயிருக்கிறார்கள். மீண்டும் பெரியாரிடமே வந்து மண்டியி்ட்டு மன்னிப்பும் கேட்டு இருக்கிறார்கள்.
***
இதுபோன்ற பெரியார் எதிர்ப்பு-திராவிட இயக்க எதிர்ப்பு சூழல் 1992-93 ஆம் ஆண்டுகளில் தீவிரமாக இருந்தது.
பிரபஞ்சன், ராஜேந்திர சோழன் போன்ற எழுத்தாளர்கள், பார்ப்பன குடும்ப சூழலை பின்னணியாக கொண்டு, பார்ப்பன மொழி நடையில் எழுதப்பட்ட பார்ப்பன இலக்கியங்களை, ‘நவீன இலக்கியங்கள்’ என்று பெயர் சூட்டி, குறிப்பாக மவுனி, சுந்தர ராமசாமி, மலையாள பிட்டு படத்து கதையான ‘மோகமுள்’ நாவலை எழுதிய தி. ஜானகிராமன் போன்ற பார்ப்பன எழுத்தாளர்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டே –
இன்னொருபுரத்தில் தமிழ் மொழி உணர்வு, அரசியல் விழிப்பபுணர்ச்சி, யார் வேண்டுமானாலும் கவிதை, கதை எழுதலாம், எழுத்தாளராகலாம், பேச்சாளராகலாம், பத்திரிகை நடத்தலாம் அதற்கு பிறப்பின் அடிப்படையில் தகுதியோ, மொழிப் புலமையோ தேவையில்லை. சமூக அக்கறையும், மொழி உணர்வும் இருந்தால் போதும் என்று இலக்கியத்தை ஜனநாயகப்படுத்திய திக, திமுகவைச் சேர்ந்த திராவிட இயக்க எழுத்தளார்களை கேவலப்படுத்தினார்கள். இதில் பார்ப்பனரல்லாத பிரபஞ்சன் போன்றவர்களின் பங்கும் இருந்தது. ஆனால், பிரபஞ்சனின் பங்கு மிகத் தீவராமாக இருந்தது. (அப்போது ரவிக்குமார் திராவிட இயக்க ஆதரவாளராக, தீவிர பெரியார் பற்றாளராக இருந்தார். எஸ்.வி. ராஜதுரை-வ.கீதாவின் பெரியார் சமதர்மம் நூலை (96ஆம் ஆண்டு) அவர்தான் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.)
‘பெரியார்-மணியம்மை திருமணம் தவறு. அது செல்லாது’ என்கிற பாணியில் மிக கடுமையாக பெரியாரின் இரண்டாவது திருமணத்தை கண்டித்து நக்கீரனில் எழுதினார் பிரபஞ்சன். அவர் எழுதியதை ‘நன்றி பிரபஞ்சன்’ என்று நோட்டிஸ் போட்டுக் கொடுத்தார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்.
ஆக, பார்ப்பன ஆதரவு நிலைகொண்ட பார்ப்பனரல்லாதவர்களின் பெரியார் எதிர்ப்பு அல்லது திராவிட இயக்க எதிர்ப்பு காலபோக்கில் அவர்களாலேயெ கடைப்பிடிக்க முடியாமல் மீண்டும் பெரியாரிடமே வந்து சரணடைந்து விடுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம், பெரியார் மீது இவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்பதைவிட, பார்ப்பனர்களால் இவர்களுககு காரியம் ஆகவேண்டும் என்பதுதான் முக்கியம்.
பெரியார் எதிர்ப்பாளராக இருந்தால் அந்தக் காரியம் சீக்கிரம் நடக்கும் என்பதுதான் பெரியார் எதிர்ப்பின் உள்ளர்த்தம். அப்படியும் காரியம் நடக்காமல் போனால்……? இருக்கவே இருக்கிறது மீண்டும் பார்ப்பன எதிர்ப்பு.
பெரியார் எதிர்ப்புக்கும், பாரதி அபிமானத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பெரியார் எதிர்ப்பையும் பெரியார் ஆதரவையும் மாறி மாறி செய்கிற இந்த அறிவாளிகள், பெரும்பாலும் பாரதி மீது் அபிமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். காரணம், பெரியார் கருத்துக்களில் தன்னை ஈடுபாடு உள்ளவர்களாக காட்டிக் கொண்டாலும் பாரப்பனர்களோடு சுமுகமாக பழகுவதற்கு பாரதிதான் இவர்களுக்கு கைகொடுக்கிறார். பார்ப்பனர்களிடம் தன்னை முற்போக்காளனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் உறவு முறியக்கூடாது. அப்படியானால் அங்கே பெரியார்-அம்பேத்கர் பற்றியா பேச முடியும்? பேசினால், கை குலுக்கலா நடக்கும்.? கை கலப்புதான் நடக்கும்.
இந்த இக்கட்டில் இருந்து பார்ப்பனரல்லாத அறிவாளிகளை காப்பதற்காகத்தானே, அவதாரம் எடுத்திருக்கிறான் ஆபத்தாண்டவன் பாரதி. அந்தக் காலத்து ஜீவா முதல் இந்தக் காலத்து திராவிட இயக்க எதிர்ப்பு எழுத்தாளர்கள் வரை இவர்களுக்கு கைகொடுக்கிற ஒரே கடவுள் பாரதி அய்யர்தானே.
***
பெரியாரின் மார்பில் முரட்டுத்தனமாக முட்டி மோதி பிறகு சறுக்கி, பெரியாரின் பாதத்தில் வந்து விழுந்துவிடுகிறார்கள், பரிதாபத்திற்குரிய பார்ப்பனரல்லாத, இந்த பெரியார், திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.
பார்ப்பனரல்லாத திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பெரியார் மீது வீசிய கேள்விகளை குறித்து, 1993 ல் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நடத்திய ‘இனி’ இதழில் ஒரு கவிதை எழுதினேன்
பிரபஞ்சனின் திராவிட இயக்க எதிர்ப்பு மனோபாவமே, இந்த கவிதையை எழுதுவதற்கு எனக்கு உந்துதலாக அல்லது உள்ளடக்கமாக இருந்தது.
பெரியாரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் அந்தக் கவிதையை இங்கு பிரசுரிக்கிறேன்.
இதை எழுதி 16 ஆண்டுகள் ஆகிறது. அப்போது பெரியாரின்-திராவிட இயக்கத்தின் எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் இப்போது ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அப்போது ஆதரவாளராக இருந்தவர்கள் இப்போது எதிப்பாளராக மாறி இருக்கிறார்கள். இப்போதும் இந்தக் கவிதை பொறுத்தமாக இருக்கிறது. இந்தக் கவிதை எப்போது பொறுத்தமற்று போகிறதோ அப்பபோது் சமூகம் பல படி முன்னேறி இருக்கிறது என்று அர்த்தம். பார்ப்போம்.
***
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்.
***
“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.
***
“என்னங்கபெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
***
தொடர்புடையவை:
‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்
காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு
பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்
தமிழ் தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்
யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம் =பெரியார் எதிர்ப்பு * தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம் *
பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1
‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2
‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3
‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4
‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5
‘புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன்’- பெரியார் வைக்கும் குட்டு – 6
நல்ல கட்டுரை
மிகவும் நல்ல ஆதாரபூர்வமான கட்டுரை.அண்ணா அவர்கள் பெரியாரை விட்டு பிரிந்தாலும் பெரியார் மீது மரியாதையை வைத்து இருந்தார் என்பது எனது கருத்து. வெற்றி பெற்று தான் ஒரு முதலமைச்சர் ஆன பிறகு திருச்சியில் இருந்த பெரியாரை சந்தித்தார் அண்ணாதுரை அதற்கு காரணம் அவர் மீது வைத்த மரியாதை தானே. தந்தை பெரியாரின் சுய மரியாதையை திருமணத்தை செல்லு படி ஆகும்படி செய்தாரே.அரசு அலுவலகங்களின் மத அடையாளங்களை அகற்ற உத்தரவிட்டரே.மதராச பட்டினத்தை தமிழ் நாடு என்று மாற்றினாரே.இவை எல்லாம் செய்தது ஒரு ஆண்டிலேயே .உண்மையிலே அவர் பெரியாரின் கொள்கையை பின்பற்றி இருக்கவிட்டால் இவாறு செய்வாரா?அவர் பிரிந்தது எந்த நோக்கமாக இருந்தாலும் ஐயாவின் கொள்கைகளை விடவில்லை.தான் அமெரிக்காவில் இருந்த பொது கூட மணியம்மையாரை விசாரித்து கடிதம் எழுதி உள்ளார் .இறுதி காலங்களில் அண்ணாவும் பெரியாரும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகவே இருந்தனர்.அண்ணாவை பெரியாரிடம் இருந்து நாம் பிரிப்பது,இருவரின் கருத்து வேறுபாடுகளை விமர்சனம் செய்வது என்பது ஒரு வகையில் பார்ப்பனியத்திற்கு செய்யம் நன்மையே என்பது எனது கருத்து.அண்ணாவை எந்த பார்ப்பானும் ஆதரிக்க மாட்டன் ஆனால் நாம் பெரியாருக்கும்,அண்ணாவிற்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளை விமர்சித்து அண்ணாவை தாழ்த்தினால் பார்ப்பானுக்கு மகிழ்ச்சி தானே? இவ்வாறு நாம் விமர்சிப்பதால் நம் சமுதாயதிற்கு என்ன பயன்?அல்லது அண்ணா இந்த சமுதாயதிற்கு எதிராக செயல் பட்டாரா? ஊசிமுனை அளவும் பார்ப்பானுக்கு இடம் கொடுக்க கூடாது.
பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது?
கடவுள் இல்லை என்று சொல்வது எளிதான விடயம், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் கூட சொல்ல முடியும். நானும் சொல்ல முடியும்.
புத்தர் கூட கடவுளைப் பற்றிக் கவலைப் படாத, கடவுள் கோட்பாட்டை இக்னோர் செய்தவர்தான். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்க்கு விடிவு தேட முயற்சியும் செய்து அதற்க்கு ஒரு சொல்யூசனையும் கொடுத்து இருக்கிறார்.
ஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.
இதை நாம் சொல்லுவது ஏன் என்றால், தமிழர்கள் பகுத்தறிவு என்றாலே அது பெரியார் சொன்னதுதான் என்கிற ரீதியிலே அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, ஒரு குட்டையிலே மூழ்கிக் கிடைக்காமல், சுதந்திர சிந்தனையாளர்களாக , இப்போதைய கால கட்டத்திலே மக்களுக்கு தேவையான பகுத்தறிவு சிந்தனைகளை வழங்குபவர்களாக பரிணமிக்க வேண்டும் என்பதற்காகவே!
இளஞ்சேரன், ஞாநி போன்ற பார்ப்பணர்கள் பெரியாரை மட்டம் தட்ட அண்ணாவைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள், தெரியுமா உங்களுக்கு. தி.மு.க.வில் ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு அவைத் தலைவர், முன்னவர் என்று ஏகப் பட்ட பதவிகள் இருக்கும். எவனும் ஓடிப் போயிடக் கூடாதுன்னு அது மாதிரி பதவிகளை உருவாக்கி வைத்து ஆட்களைப் பிடித்து வைத்திருந்தனர். எவ்வளவு செய்திருந்தாலும் அண்ணா ஒரு பிழைப்புவாதி என்பதில் மாற்றம் இல்லை.
திருச்சி, பெரியார் மனித வாழ்வின் துன்பங்களுக்கு தீர்வு சொல்லவில்லைன்னு சொல்றீங்களே, தீர்வு சொல்ல வந்தவர்களில் யாராவது உருப்படியான தீர்வைச் சொல்லியிருக்கிறார்களா (புத்தரைத் தவிர). புத்தர் ஒருவர் தான் வலியை ஏற்றுக் கொள் என்று சொன்னார். உன் வலியை மறக்க வைக்கிறேன் என்று சொல்லி ப்ரேமானந்தா, நித்தியானந்தா மாதிரி மோசடி பண்ணலை. மனித துன்பங்களுக்கு விடிவு கண்டறிய வேண்டுமென்றால் பெரியாரும் விபூதி பூசுகிற வேலைதான் பாத்திருக்கனும்.
பெரியவர்
எம். ஆர் ராதா அவர்களே,
வலி என்பது உடல் வலி மட்டும் அல்ல. நெருங்கிய உறவினர் இறந்தால் உடல் வலி இல்லை, ஆனால் மனதால் துடிக்கிறோம். மொத்தத்திலே நம்முடைய மன வலிமை அதிக மாக்கப் பட்டால், மன வலிமையின் உச்சத்தை நம்மால் அடைய முடியுமானால், துனபத்தையும் இன்பத்தையும் சமமாகக் கருதும் மன நிலையை நாம் அடையக் கூடும்.
புத்தர் துன்பத்தை ஏற்றுக் கொள் என்று சொல்லவில்லை, துன்பம் வந்து தாக்கும் போது அதை பொருட் படுத்தாத வலிமையான நிலைக்கு நம்முடைய மனதை உயர்த்த முடியும் என்பதே புத்தரின் கோட்பாடு.
வள்ளுவர், “இடுக்கண் வருங்கால் நகுக” என்றார்.
அப்பரின்(திருநாவுக்கரசரின்) தலையில் யானையின் காலை வைத்து மிதிக்க உத்தரவிட்டான் அரசன். யானை அருகில் வந்த நிலையிலும்
‘”நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்”
என்றார் அவர். அந்த அளவுக்கு அச்சமற்ற மன நிலையை அவர் அடைந்து இருக்கிறார்.
சித்தர்கள் , விவேகானந்தர் போன்றவர்கள் புத்தரைப் போலவே மனித வாழ்க்கையை துபத்தில் இருந்து மீட்கும் வகைக்கான கருத்துக்களை சொல்லி உள்ளனர்.
இந்த அளவு உறுதியான மன நிலையைப் பெற வெறுப்பற்ற மன நிலை, பிறரை நட்புடன் அணுகுதல், தொண்டு, சுயநலமற்ற போக்கு, பிறர் மீது அன்பு, மனக் குவிப்பு பயிற்ச்சிகள் போன்றவை உதவக் கூடும் என்றே நான் கருதுகிறேன்.
என்னுடைய நோக்கம் பெரியாரை குறை சொல்லுவதோ, குறைத்து மதிபிடுவதோ அல்ல. பெரியார் சொன்னதோடு பகுத்தறிவு முடிந்தது என்று நாம் இருந்து விடக் கூடாது என்பதுவே. மேலும் பெரியாரின் கருத்துக்கள் சொல்லப் பட்ட கால கட்டம் வேறு, இப்போதைய கால கட்டம் வேறு.
திருச்சிக்காரன்,
உங்களைப் போன்றவர்களை உண்மைப் பெயரை சொன்னால் சாதி வெளியே தெரிந்துவிடும் என்று முகமூடியோடு சுற்றவிட்டிருப்பதே பெரியாரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான்.
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களோடு முரண்பாடு இல்லைதான், ஆனால் முதன்மைக் கொள்கையான, அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கொள்கையுடன்தான் அண்ணா அவர்கள் முரண்பட்டார். காரணம் தவறான புரிந்துகொள்ளல் கூட அல்ல! அரசு அதிகாரம் தம் கையில் இருக்க வேண்டும், ஒரு பகுதியாக, அய்யாவின் கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கலாம் என்ற எண்ணம் கூட அய்யாவுடன் அவர் முரண்படக் காரணமாயிருக்கலாம்! அண்ணாவின் நோக்கம் சரியாக இருந்தாலும், அவர் கணித்தது மிகப் பெரிய தவறாகவே ஆனது. திமுக வினுள் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சீரழிக்கவும், தான் அய்யத்திற்கு இடமின்றி அறிந்து தெழிவுடனிருந்த கடவுள் என்ற முழு முட்டாள்தனத்தை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சப்பைக் கட்டு கட்டி, அதை, மக்களைத் தடவிக் கொடுத்து வாக்குகளை வாங்கவதற்கான தூண்டில் புழுவாக பயன் படுத்தி, அரசு அதிகாரத்தைப் வசப் படுத்தி, பார்ப்பனர்களோடு சமரசம் செய்தது; அண்ணாவுக்குப் பிறகு திமுக முழுச் சீரழிவுக்குள்ளாகி பார்ப்பனரே தலைமைக்கு வரும் கொடூரமான, திருத்தவே முடியாத அசிங்கங்களூடன், தவறுகளையே முழுநேர வேலைத் திட்டமாக்கி, சீரழிந்து, தமிழனின் முதல் எதிரியான பார்ப்பனர்களின் ஆலோசனையின் கீழ் தமிழர்களை அழித்து, முழுக்க முழுக்க பார்ப்பனர்களின் நலம் மட்டுமே குறிக்கோள் என்ற கேவலமான நிலையைத் தொட்டிருக்கிறது அண்ணா அவர்கள் ஆரம்பித்து வைத்த திராவிட முன்னேற்றக் கழகம். என்றாலும், அண்ணா அவர்களை கடுயையான விமர்சனத்துக்குட் படுத்துவது, தமிழனின் எதிரியான பார்ப்பனர்களிடம் நம்மை நாமே கையளிப்பது போலாகிவிடும் என்பதால், எதிரி என்ற நிலையில் எண்ணாமல் நம்மவர் என்ற எண்ணத்தோடே அண்ணாவை அணுகுவோம்! அய்யாவின் இயக்கத்தை அண்ணா சிறுமை படுத்தியது போலவே, அவரின் இயக்கத்தை இப்போதுள்ள தலைமைகள் நாசப்படுத்தி விட்டு தமிழர்களை அழிக்கும் பார்ப்பனர்களோடு பகிரங்கக் கூட்டு வைத்து ஈழத்தமிழர் நாற்பதாயிரம் பேரையும், அய்ந்நூற்றுக்கு மேற்பட்ட தமிழகத் தமிழர்களையும் கொன்று, அண்ணாவையும் பழிதீர்த்துக் கொள்கிறார்கள், அவரின் வாரிசுகள்! காசிமேடு மன்னாரு. kasimedumannaru789wordpress.com
வாங்க திருச்சிக்காரன் ! எப்படி இருக்கேள் ! பகுத்தறிவிற்கு சொந்தக்காரர் பெரியார் என்று யாரும் சொல்லவில்லை. பகுத்தறிவு என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொண்டு பேசவும். உங்க பருப்பு இங்க வேவாது வேறு எங்காவது முயற்சிபண்ணுங்கள்.
ராபின்,
உங்களது மனதில் இருந்து சாதிக் காழ்ப்புணர்ச்சி, சாதி வெறி, கோட்பாடுகளை விரைவில் நீக்குவீர்கள் என நம்புகிறோம்.
சாதிகளற்ற, மத வெறியற்ற சமத்துவ , சமரச நாகரீக முற்போக்கு மனிதர்களாக இணைவோம்.
பெயர் முகவரி போட்டோக்களைப் போட்டு இணையத்தில் சில நண்பர் கஷ்டப்ப பட்டது தெரியாதா? அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களையும் சிறுமைப் படுத்தி எழுதியதாகவும் செய்திகள வந்ததை நீங்கள் படிக்கவில்லையா?
என் பெயரைப் போட வேண்டும், அந்தப் பெயர் இட்டு அழைத்து டேய், ….அவனே , உன் …. என்று எல்லாம் அழைக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா?
அப்படி அழைக்காத அளவுக்கு பண்பட்ட, பிறருக்கு மரியாதை தரும் மன நிலையை எல்லோரிடமும் உருவாக்கிய நாகரீக சமுதாயத்தை நாம் எட்டி விட்டோமா?
அப்படிப் பட்ட நாகரிக சமுதாயத்தை அடையும் முயற்ச்சியில் ஈடுபடுகிறோம்.
அன்பு நண்பர் Matt அவர்களே,
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்.
விசாரிப்புகளுக்கு நன்றி.
நீங்களும் நலமென எண்ணுகிறேன்.
பகுத்தறிவு பற்றி இதே தளத்திலே பின்னூட்டமாக ஏற்கெனவே நீண்ட விளக்கம் கொடுத்து இருக்கிறோம்.
சகோ. மதிமாறனின் தளத்தில் பெரிய பின்னூட்டங்களை இட்டு அவருடைய தளத்தில் என் பின்னூட்டங்கள் அதிகம் இருப்பது போல ஆகி அவரை அதிகம் சங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை.
நமது தளத்துக்கு வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.
பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?
“The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!
“அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.
பகுத்தறிவாளர் என்பவர் யார்?
இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.
………..கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.
ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.
“மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா?
மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”
……………
“மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!
உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.
ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் தேவை.
இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?
ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?
நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?
அதாவது “உடலோடு சேர்ந்துதான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும் – உயிர் தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?
…………..
மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!
இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!
மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!
எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!
மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!
நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!!
கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!
கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!
ஆனால் எதுவானாலும் அதை ஆராயாமல், உணராமல், குருட்டுத் தனமாக ஒரு முடிவுக்கு வர முடியுமா?
ஆனால் நண்பர்களே நாம் அபாயத்தில் இருக்கிறோம், எந்த நோயோ அல்லது துன்பமோ நம்மையோ, நமது நெருங்கிய உறவினரையோ தாக்கினால் அதைத் தடுத்து நம்மை காத்துக் கொள்ளும் திறன் நமக்கு இருக்கிறதா?
…………..
Brothers, Matt, Robin & other brothers,
சகோ. மதிமாறனின் தளத்தில் பெரிய பின்னூட்டங்களை இட்டு அவருடைய தளத்தில் என் பின்னூட்டங்கள் அதிகம் இருப்பது போல ஆகி அவரை அதிகம் சங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை.
நமது தளத்துக்கு வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.
இதே தளத்திலே பின்னூட்டமாக முன்பே நாம் அது போல தொடர்ந்து விவாதித்து நூற்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் ஆகி இருக்கின்றன. அப்போது சில நண்பர்கள் உரிமையுடன் நம்மைக் கடிந்து கொண்டனர்.
எனவே தொடர்ந்து விவாதிக்க விரும்புபவர்கள் தயவு செய்து நம்முடைய தளத்துக்கு வரலாம்.
மற்றபடி இது வரையில் சகோ. மதிமாறன் என்னை அதிகப் பின்னூட்டங்கள் இட வேண்டாம் எனக் கூறவில்லை. அந்த அளவிலே அவருடைய பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.
ஆனாலும் சகோ. மதிமாறனின் கோட்பாடுகளும் நம்முடைய கோட்பாடுகளும் வெவ்வேறானவை.
எனவே நாம் இங்கு வந்து பின்னூட்டம் இடுவது அவரது தளத்தை நம்முடைய கோட்பாட்டால் நிரப்புவது போல ஆகி அவருக்கு ஒரு சங்கடத்தை நான் அளிக்க விரும்பவில்லை.
நாம் அப்படி செய்ய விரும்பவில்லை. ஆனால் முந்தைய பல கட்டுரைகளில் விவாதமானது கேள்வி, பதில், அந்த பதிலில் ஒரு கேள்வி, அதற்க்கு பதில்…. என்று நாம் தொடர்ந்து விவாதிக்கும் படி ஆகி விட்டது.
உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.
திருச்சிக்காரன்,
நீங்கள் சொல்லும் பொய்களையெல்லாம் உண்மை என்று நம்ப இங்குள்ளவர்கள் ஒன்றும் கேணையர்கள் அல்ல.
ராபின் ஐயா,
நான் சொல்வது எல்லாம் உண்மை என்று எல்லோரையும் நான் ”நம்ப” சொல்லவில்லை.
“இதை நம்புங்கள் , அதை நம்புங்கள், இதற்க்கு சாட்சி கொடுங்கள , அதற்க்கு சாட்சி கொடுங்கள்”, என்று சொல்லி நாம் எந்த மார்க்கத்தையோ, மதத்தையோ இங்கே பிரச்சாரம் செய்யவில்லை.
பகுத்தறிவு என்பது நம்பிக்கையை அப்படியே ஒத்துக் கொள்வதில்லை. நான் சொல்வது உண்மையா, இல்லையா என்று சிந்திப்பவர்கள ஆராயட்டும். நான் சொல்வதை அப்படியே நம்புங்கள் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை.
நாம் எழுதுவது உண்மையானதா இல்லையா என்பதற்கான பதிலைக் காலம் வழங்கும்.
//நாம் எழுதுவது உண்மையானதா இல்லையா என்பதற்கான பதிலைக் காலம் வழங்கும்// நீர் இங்கே சொல்வது எல்லாம் பொய் என்பது உம்முடைய பிளாக்கை படித்தவர்கள் எல்லாருக்கும் தெரியும். இதற்கெல்லாம் காலத்தை எதிர்பார்த்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
//நீர் இங்கே சொல்வது எல்லாம் பொய் என்பது உம்முடைய பிளாக்கை படித்தவர்கள் எல்லாருக்கும் தெரியும். //
என் ப்ளாக்கில் நான் என்ன எழுதி இருக்கிறேனோ, பெரும்பாலும் அதையே இங்கு வெட்டி ஒட்டி இருக்கிறேன். சில விடயங்கள் இங்கே கேட்கப்பட்ட விடயங்களுக்காக தனியாக எழுதி இருக்கலாம்.
நாம் எந்த தளத்தில் எழுதினாலும் நம்முடைய நிலைப் பாடு ஒன்றாகத் தானே இருக்கிறது. நீ
ங்க அவசரப் பட்டு தீர்ப்பை வழங்கி விட்டீர்களோ, அல்லது இது பொய், பொய் என்று திரும்ப திரும்ப சொன்னால் எல்லோரும் அது பொய் என்று நினைப்பார்கள் என்று கருதினீர்களோ தெரியவில்லை.
மொத்தத்திலே நான் எழுதிய கருத்துக்களை மேற்கோள் காட்டி விவாதிக்கவோ, ஆராயவோ நீங்கள் தயாராக இல்லை. சட்டு புட்டுன்னு இது பொய்னு சொல்லி விட்டு போகலாம் என்று முடிவு செய்து விட்டீர்கள்.
நீங்கள் பொய் என்று சொன்னதை எல்லோரும் அப்படியே “நம்ப” போகிறார்களா அல்லது இந்தக் கருத்துக்களில் உண்மை இருக்கிறதா என்று சிந்திக்கப் போகிறார்களா என்பது அவர்கள நம்பிக்கையாளரா அல்லது பகுத்தறிவாளரா என்பதைப் பொறுத்தது.
நாம் எழுதுவது இன்றைக்காக மட்டும் அல்ல. வருங்காலத்திலும் இவற்றைப் பலரும் படிக்கக் கூடும், சிந்தனையாளராக இருந்தால் சிந்திக்கக் கூடும்!
சரி சரி கொஞ்சம் நகருங்க காத்து வரல …
திருச்சிக்காரனின் விஷக்கருத்துகள்: “சமத்துவ சமூகத்துக்கு பெரிய தடையாக சாதித் துவேசமும், சாதி வெறியும் வளரும்படியாக வே பெரியாரின் கருத்தும், பிரச்சாரமும் அமைந்து விட்டது என்று எழுதி இருக்கிறோம். “
fools
தந்தை பெரியார் இல்லை என்றால் நம் கோவணத்தை கூட பார்ப்பான் பிடுங்கி இருப்பான்
ஆகா ஆகா இத்துணை நாள் பார்க்காம இருந்துட்டேன் …
ஷமிக்கணும் …
http://www.malartharu.org
http://www.tronbrook.com