
தேர்தலுக்கு முன் ‘பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்’ என்று தங்கம் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதிலில், குறிப்பிட்டு இருந்தேன்.
பிறகு அதை இணையத்திலும் வெளியிட்டிருந்தேன். பரவலாக பலரின் கவனத்திற்கும், விவாதத்திற்கும் அது உள்ளானது.
நாம் எழுதியதின் தொடர்ச்சியாகவோ அல்லது தற்செயலாகவோ, இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், ‘கிராமப்புற பெண்களுக்கு, இலவச சானிடரி நாப்கின்’ வழங்கப்படும் என்றும், ‘இதற்காக இந்த ஆண்டே, 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றும், அதிமுக அரசு அறிவித்துள்ளது.
இத் திட்டத்தை தங்களின் தேர்தல் வாக்குறுதியாக தராதபோதும், முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்திருக்கிறது அதிமுக அரசு.
நான் எழுதிய ‘பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்’ என்ற பதிலின் மேல் கருத்து சொன்ன நண்பர் விஜய்கோபால்சாமி: ‘சுய உதவிக் குழுக்களைக் கொண்டு சானிடரி நாப்கின்கள் தயாரித்துக் கொண்டால், தனியார் வியாபாரிகளுக்கு காசைக் கொட்ட வேண்டிய நிலை ஏற்படாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி இத்திட்டத்தை நடைமுறை படுத்தினால், இது கிராமப்புற பெண்களுக்கான திட்டமாக செயல்வடிவம் பெறும். இல்லையேல், தனியார் நிறுவனங்களுக்கான திட்டமாக மாறிவிடும்.
*
சம்பந்தப்பட்ட பதிலை படிக்க, கீழ் உள்ள தலைப்பை அழுத்தவும்…
பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்
பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்
