சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்


தேர்தலுக்கு முன் ‘பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்’ என்று தங்கம் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதிலில், குறிப்பிட்டு இருந்தேன்.

பிறகு அதை இணையத்திலும் வெளியிட்டிருந்தேன். பரவலாக பலரின் கவனத்திற்கும், விவாதத்திற்கும் அது உள்ளானது.

நாம் எழுதியதின் தொடர்ச்சியாகவோ அல்லது தற்செயலாகவோ, இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், ‘கிராமப்புற பெண்களுக்கு, இலவச சானிடரி நாப்கின்’ வழங்கப்படும் என்றும், ‘இதற்காக இந்த ஆண்டே, 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றும்,  அதிமுக அரசு அறிவித்துள்ளது.

இத் திட்டத்தை தங்களின் தேர்தல் வாக்குறுதியாக தராதபோதும், முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்திருக்கிறது அதிமுக அரசு.

நான் எழுதிய பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்’ என்ற பதிலின் மேல் கருத்து சொன்ன நண்பர் விஜய்கோபால்சாமி: ‘சுய உதவிக் குழுக்களைக் கொண்டு சானிடரி நாப்கின்கள் தயாரித்துக் கொண்டால், தனியார் வியாபாரிகளுக்கு காசைக் கொட்ட வேண்டிய நிலை ஏற்படாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி இத்திட்டத்தை நடைமுறை படுத்தினால், இது கிராமப்புற பெண்களுக்கான திட்டமாக செயல்வடிவம் பெறும். இல்லையேல், தனியார் நிறுவனங்களுக்கான திட்டமாக மாறிவிடும்.

*

சம்பந்தப்பட்ட பதிலை படிக்க, கீழ் உள்ள தலைப்பை அழுத்தவும்…

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

வெயிலும், மழையிலும் விவசாய வேலைகளிலும், சாலை பணிகளிலும் பெண்கள் படுகிற துயரம், நினைத்தாலே கண்ணீர் வர வைத்துவிடும். இது ஒரு அந்தரங்க பிரச்சினை என்பதால் வெட்ட வெளியில்  வேலை செய்கிற……..

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

9 thoughts on “சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

 1. I APPRECIATE BRO. MATHIMARAN ON HIS PROPOSAL OF ISSUING SANITARY NAPKINS FREE OF COST TO POOR WOMEN .

  ITS GOOD THAT THESE NAPKINS CAN BE MADE BY RURAL WOMEN THEMSELVES. THEY HAVE TO BE TRAINED AND ARRANGEMENTS FOR SUPPLY OF MATERIALS HAS TO BE DONE. AT THE SAME TIME THE GOVERNMENT HAS TO MONITOR THAT THE NAPKINS ARE MADE AS GOOD AS THE COMPANY MADE NAPKINS, SO THAT THE WOMEN CAN GET AS MUCH RELIEF AS POSSIBLE.

  I APPRECIATE TN GOVT FOR CONSIDERING THE PLIGHT OF OUR SISTERS!

  INITIALLY THEY CAN DISTIBUTE THE COMPANY MADE NAPKINS, SO THAT THE WOMEN CAN HABITUATED FOR NAPKINS.

  BUT STILL THE PAIN DURING MENSTURATION PERIOD IS VERY ACUTE,SO THE GOVERNMENT SHOULD CONSULT WITH DOCTER AND COME UP WITH APPROPRAITE NUTIRITION TO MODERSTE THE PAIN, NOTHING WRONG IN SPENDING FOR THIS, THIS IS PART OF HEALTH CARE.

 2. வணக்கம் மதி தமிழக அரசின் நாப்கின் அறிவிப்பு வந்த போதே உங்களை அழைத்து பாராட்ட நினைத்தோம் தமிழனுக்கே உண்டான சோம்பேறித்தனத்தால் தவறிவிட்டோம் உங்கள் பதிலை அந்த அம்மா படிச்சிருக்கும் போல..

 3. உங்கள் பதிலும் அருமை! விஜய்கோபால்சாமி அத்துடன் சொன்ன கருத்தும் அருமை!! ஏற்பாரா தமிழ்நாட்டு முதல்வர்? இதை அவர் கவனத்துக்குக் கொண்டு செல்லலாமே!

 4. ஏண்ணே, அந்த சுய உதவி குழுக்களும் தனியார் கடன் வங்கிகள் அல்ல கந்துவட்டி ஸ்டைலில் நடத்தப்படும் microfinance கம்பெனிகள் மூலம் தானே நடக்குது ?

 5. தோழர் உங்களது முயற்சி நல்ல பயனை நோக்கி முடியவேண்டுமானால் மக்களும் அந்நிலை புரிந்து கொள்ள வேண்டும் {சாதாரணமாக நினைதுவிடாமல்}…………………………………..

 6. vanakkam thozhar neengal munmozhindha thittathai thamizhaga arasu arivithulladhu ungalukku enadhu parattukkalai therivithukkolgiren

  vazhthukkal…..!

Leave a Reply

%d bloggers like this: