கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

ஆண்கள் அடிக்கடி கடலை போடுதல் என்கிறார்களே, அது என்ன கடலை போடுதல்?

-சுரேகா, சென்னை.

தன்னிடம் நட்பாக பழகும் பெண்களிடம், பாலியல் ரீதியாக பழகவும், பேசவும் விரும்பம் இருந்தும், அதற்கு வாய்பில்லாதபோது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சம்பந்தமில்லாமல் ‘அப்புறம்… அப்புறம்’ என்று எதையாவது பேசிக் கொண்டிருப்பதின் மூலம் அடைகிற கிளர்ச்சிக்கு, ஆண்கள் வைத்திருக்கிற பெயர் கடலை போடுதல்.

ஒரு பெண் சொல்லும் கருத்தில் தனக்கு உடன்பாடோ இல்லையோ… பலகாரத்தின் மேல் மொய்க்கிற ஈக்களைப் போல், ஆண்கள் கும்பலாக சுற்றி வந்து ‘ஆமாம்’ போடுவதும் இதன் பொருட்டே.

ஆண்கள், பெண்ணின் அறிவார்ந்த கருத்தை விடவும் அவளின் உருவத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

நல்ல அறிவும் ஆளுமையும் கொண்டு பார்ப்பதற்கு ‘பரிதாபத்திற்குரிய’ தோற்றத்தோடு இருந்தால், அந்தப் பெண்ணை ஆண்கள் பெண்ணாகவே கணக்கில் வைத்துக் கொள்வதில்லை.

அதற்கு ஆண்கள் வைத்திருக்கிற பதில், ‘என்னடா கொஞ்சமாவது சுமாரா இருக்க வேணாமா?’

ஆண்களின் இந்த உருவ வழிபாட்டை, தனக்கான ‘முக்கியத்துவத்துமாக’ கருதுகிற சில பெண்கள், தன்னைவிட அழகான பெண்களை தனக்கு தோழியாகவோ,துணையாகவோ உடன் கூட்டி செல்ல விரும்புவதில்லை.

கூட்டி சென்றால், அப்புறம் என்ன, தோழியை நாயகியாக்கி, நாயகியை தோழியாக்கிடுவாங்க, ‘ஆண்கள்’.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2011 சூலை மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

9 thoughts on “கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

  1. //பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்/// என்று நீங்கள் தேர்தலுக்கு முன் எழுதியிருந்தீர்கள்.

    இன்றைய தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் ரூ.45 கோடிக்கு மேல் அறிவக்கப்பட்டுள்ளது.

  2. பெண்ணின் உயிரை போக்கிவிட்டு உடலை மட்டும் வைத்து வாழும் ஆண்கள் மிக கேவலமானவர்கள்…………………………………

Leave a Reply

%d bloggers like this: