Site icon வே. மதிமாறன்

அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, முதல்வருக்கு விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்குமான தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் முதல்வருக்குத்தான் உண்டு. அதனால் அவர்களை காப்பாற்றுமாறு வழக்கறிஞர்கள் உட்பட பலர் தமிழக முதவரிடம் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், ‘3 பேர் தூக்கு தண்டனையை  நிறுத்த முதல்- அமைச்சருக்கு அதிகாரம் இல்லை’ என்று முதல்வர் மறுத்திருக்கிறார்.

‘இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுதர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்` என்ற  தீர்மானத்தை சட்டசபையில் நிறேவேற்றிய அதே முதல்வர்தான் இதை அறிவித்திருக்கிறார்.

உண்மையில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குத்தான் முதல்வருக்கு அதிகாரம் இல்லை அல்லது அந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை.

பேரறிவாளன், முருகன், சாந்தன் இந்த மூவரின் தூக்கை நிறுத்தி வைக்கும் அதிகாரம் மாநில சட்டசபைக்கு உண்டு.

முதல்வரின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட, ’இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுதர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர்,

தன் அதிகாரத்திற்கு உட்பட்ட, 3 பேர் தூக்கு தண்டனையை  நிறுத்த மறுக்கிறார்.

முதல்வரின் இந்த நடவடிக்கை தங்கபாலு, பொன்.ராதாகிருஷ்ணன், சுப்பிரமணிய சுவாமி, எஸ்.வி. சேகர், சோ போன்றவர்களுக்கு ஆதரவாகவும்; மனிதர்களுக்கு அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது.

தொடர்புடையவை:

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

Exit mobile version