உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி கட்சிகளை கழட்டிவிட்டு தனியாக நிற்கிறதே?
-சுலைமான், திருநெல்வேலி.
கூட்டணி கட்சிகளின் மீது என்ன காதலா? இல்லை கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற ஆவலா? ’வெற்றிக்கு வாய்ப்பு’ என்பதால்தான் கூட்டணியே.
‘கூட்டணி இல்லாமலே வெற்றி’, ‘கூட்டணி வைத்தாலும் தோல்வி’ என்ற நிலை முன்பே தெரியும் என்றால், எதற்கு கூட்டணி?
அதுபோல் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன கொள்கை? ஒரு சீட்டு கூட கொடுத்த யார் கூட வேண்டுமானலும் கூட்டணி. அவ்வளவுதான்.
ஆனாலும், இந்த தேர்தலில் அதிமுக, திமுக தனித்து நிற்பதால், ஒரு நன்மை. திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்கிற காங்கிரஸ் போன்ற தமிழர் விரோத கட்சிக்கும், ஜாதியக் கட்சிகளுக்கும் பெரிய பின்னடைவு.
குறிப்பாக, தேர்தல் அரசியிலில், திராவிட கட்சிகளோடு சேர்ந்து, ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்காக பல ஜாதிகள் புது புது கட்சிகளை ஆரம்பித்து சமூகத்தில், குறிப்பாக அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் எந்த அரசியல் பார்வையும் இன்றி பச்சையான ஜாதி வெறியை ஊட்டி, சமூகத்தை சீரழித்தார்கள்.
திராவிட கட்சிகளின் இந்த நிலை தொடருமானால், மூவேந்தர் முன்னேற்றம், புதிய நீதிகட்சி, கொங்கு பேரவை போன்ற ஜாதிய கட்சிகள் உட்பட்ட இன்னும் பல ஜாதிய கட்சிகள் பிஜேபியைப் போல், இருக்கும் இடம் தெரியாமல் ஒழிந்து போகும். காங்கிரசும்கூடதான்.
அப்போ விஜயகாந்த் கட்சியோட எதிர்காலம்?
அத ‘முடிக்க’ தான் போயிருக்காங்களே நம்ம ‘தோழர்’கள்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் மாத இதழ்களுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
…ஆனால், உங்க இதயத்தில் மட்டும் இடம் ஒதுக்கிடாதீங்க’
‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்

