அம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும்

math-symbols-clipart-9

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துதான் நிற்கும், ‘மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..’ என்று தலைப்பிட்டு,  26-01-2014 அன்றே உறுதியாக எழுதினேன். அதுவே நடந்தது.

என்னைப் போலவே கம்யுனிஸ்டுகளும் அன்றே அதை உணர்ந்திருந்தால்..  இந்நேரம்… (என்ன ஆயிருக்கும்?)

ஆனாலும் அதிமுக தலைவர் ஜெயலலிதா, கம்யுனிஸ்டுகளை நம்ப வைத்து கடைசியில் கழட்டி விட்டதற்குக் காரணம் அவர்கள் ‘திமுக கூட்டணிக்கு போய் விடக்கூடாது’ என்ற திட்டமாகவும் இருக்கலாம்.

எது எப்படியோ கம்யுனிஸ்டுகள் தனித்துப் போட்டியிட வைக்கும் முடிவிற்கும் அதுபோலவே ராஜிவ் கொலைக்குற்ற சாட்டில் கைதானவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தாலும் காங்கிரசும் தனித்துப்போட்டிப் போட வேண்டிய சூழலையும் ஜெயலலிதாதான் உருவாக்கினார்.

இல்லையேல், இந்நேரம் திமுக காங்கிரசை ஆதரிக்கும் பாவத்தை மீண்டும் செய்திருக்கும். அந்த வகையில் இது ஒரு நல்ல மாற்றம்தான்.

*

 26-01-2014 அன்று நான் எழுதிய அந்தக் கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறேன்:

ருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக, திமுக பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. ‘கூட்டணி’ என்ற வார்த்தையை அதிமுக உச்சரிக்கக்கூட மறுக்கிறது.

திமுக தலைவர், தங்களுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்த் உட்பட பலரை, ‘வாங்க வாங்க நேரா டெல்லிதான் வழியில எங்கேயும் நிக்காது.’ என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு நேர் எதிராக அதிமுக தலைவர், தங்களிடம் கூட்டணி அமைக்க ஆர்வம் கொண்ட கட்சிகளை ‘ஏண்டா கொரங்கே?’ என்றுகூட கேட்க மறுக்கிறார்.
குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேரார்வம் கொண்ட, பாராம்பரியம் மிக்க கம்யுனிஸ்ட் கட்சிகளை கூட ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை.

திமுகவின் கூட்டணிக்குள் திருமாவளவன் இருக்கிறார். கிருஷ்ணசாமியும் ஆதரவை அறிவித்திருக்கிறார் விஜயகாந்த் வருவது உறுதியாகி இருக்கிறது. இன்னும் யாரும் வரலாம். கோபாலபுரம் பா.ம.க வை கூட சேர்த்துக் கொள்ளலாம். கலைஞர் பிரேசில் நாட்டின் இயேசு சிலையைபோல் இரண்டு கைகளையும் விரித்தபடி கூட்டணிக்குள் யார் வந்தாலும் தழுவிக் கொள்ள தயாராயிருக்கிறார்.

இதற்கு நேர் எதிராக போயஸ் தோட்டத்தின் கதவுகள் பூட்டி இருப்பது மட்டுமல்ல; அதன் சாவி தூர வீசப்பட்டிருக்கிறது. கூட்டணிக்கு முயற்சிப்பவர்கள் ‘கேட்டு’க்கு வெளியேயும் கொடநாடு தேயிலைத் தோட்டங்களிலும் ‘சாவி’யை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சாவி கிடைக்கும்போது.. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விடும்.
காரணம், சாவியை கண்டுபிடிப்பவர்களால் வீட்டு உரிமையாளருக்கு எந்த உதவியும் இல்லை. கண்டுபிடிப்பவர்களுக்குத்தான் லாபம். இவர்களுக்கு பயந்துதான் சாவியே தூர வீசப்பட்டிருக்கிறது.

‘சாவியை தேடுபவர்களுக்கு.. தலா ஒரு சீட்டு ரெண்டு சீட்டு கொடுப்பதினால் அவர்கள் எம்.பி ஆவார்கள். ஆனால் நமக்கு..?’

‘இந்த செல்வாக்கற்ற கட்சிகளை சுமந்து கொண்டு போய் டெல்லியில் சேர்ப்பதற்கு பதில், டெல்லியையே நாம் கைப்பற்றினால்…?’

அதற்கு, ‘நாற்பதும் நமக்கே’ என்ற திட்டமே அம்மாவிடம் இருப்பதாக தெரிகிறது.

ஆக, ‘அம்மா திமுக’ வின் கூட்டணி, தேர்தலுக்கு பிறகுதான்.

காங்கிரஸ் – பி.ஜே.பி. இவர்களில் யார் வெற்றி பெற்று வருகிறார்களோ அவர்களுடனே ஆட்சியிலும் கூட்டணி. இதுவே அம்மாவின் தேர்தல் வியூகமாக இருக்கும்.

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் திமுக அமைச்சரவையில் இடம் பெறும். அதிமுக வெற்றி பெற்றால், மத்தியில் ஆட்சியை அமைக்கும் கட்சியில் இரண்டாவதாக இருக்கும்.
அப்படியானால் பிரதமர் பதவியும் இரண்டாக இருக்கலாம்.

அப்போ வைகோ?
End கார்டு போட்டு எகத்தாளம் பண்ணலாம்னு நினைக்காதீங்க..
அடுத்து நயன்தாரா..

அய்யோ.. வட போச்சே!

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

தேர்தல் கூட்டணி முடிவாகிவிட்டது!

மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே!

6 thoughts on “அம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும்

  1. ஆனாலும் அதிமுக தலைவர் ஜெயலலிதா, கம்யுனிஸ்டுகளை நம்ப வைத்து கடைசியில் கழட்டி விட்டதற்குக் காரணம் அவர்கள் ‘திமுக கூட்டணிக்கு போய் விடக்கூடாது’ என்ற திட்டமாகவும் இருக்கலாம்.//

    சாவி கிடைக்கும்போது.. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விடும்.
    காரணம், சாவியை கண்டுபிடிப்பவர்களால் வீட்டு உரிமையாளருக்கு எந்த உதவியும் இல்லை. கண்டுபிடிப்பவர்களுக்குத்தான் லாபம். இவர்களுக்கு பயந்துதான் சாவியே தூர வீசப்பட்டிருக்கிறது.//

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading