தமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங்

1780709_10201646329022114_1366938628_n

அய்யா ராமதாஸ் அவர்கள் அப்போதே.. அதாவது, சமூக நீதி காவலராக தலித் தோழராக தமிழின மீட்பராக விடுதலைச் சிறுத்தைகளோடு இணைந்து தமிழ்குடிதாங்கியாக ‘அருள்பாலித்து’ வந்த நாட்களிலேயே..

‘நீதிக் கட்சி காலத்திலிருந்து பிறகு பெரியார் காலம் வந்து திராவிடக் கட்சிகளால் தமிழ் நாட்டில் தெலுங்கர்களே ஆதிக்கம் செலுத்துகிறா்கள்.. தமிழ் நாட்டில் தமிழனுக்கு செல்வாக்கில்லை..’ என்று பேசி வந்தது அறிந்ததே..

அப்படியெல்லாம் இனவாதம் பேசிய அவர் நேற்று, (4-03-2014) தெலுங்கு மக்கள் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி விழாவை சிறப்பித்திருக்கிறார்.

அதுபோலவே இனவாதம் பேசிய ‘முதலியார் முன்னேற்றம்’ நடிகர் ராஜனும் அய்யாவுடன் இணைந்து தெலுங்கர் கரத்தை பலப்படித்திருக்கிறார்.

அதுசரி, இந்த தெலுங்கு மக்கள் கட்சியில்.. அருந்ததிய மக்களுக்கு இடம் இருக்கா?
இருந்தால், அப்புறம் அது எப்படி தலித்தல்லாதவர் கூட்டணியில் வரும்?

அருந்ததியரை சேர்த்தால்.. ரெட்டி, நாயுடு சும்மா விடுவாங்களா?
‘எங்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று கூட சொல்லுங்கள்.. ஆனால் ‘அவுங்கள’ எங்கள் கட்சியில சேர்க்க மாட்டோம்’ என்பார்களோ?

தெலுங்கு மக்கள் கட்சி என்று பெயர் வைச்சாச்சியில்ல.. அப்புறம் அத எதுக்கு தமிழில் எழுதியிருக்கீங்க?

March 4

ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி..

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்..

god is great

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

5 thoughts on “தமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங்

  1. தமிழ் நாட்டில் தமிழனை சுரண்டுவோம் என்பதை தமிழ்ல் எழுதி உணர்த்துகின்றனர்

  2. தமிழ்நாட்டில் கடந்த இரு தலைமுறைகளாகத் தான் தெலுங்கு, கன்னட பூர்விகம் கொண்ட மக்கள் முழுமையான தமிழ் மக்களின் நீரோட்டத்தில் கலந்து வருகின்றார்கள். ஒரு பக்கம் சாதியம், மறு பக்கம் மதம், மற்றொரு பக்கம் இனம் என பிரிந்து கிடந்த மக்கள் மெல்ல மெல்ல ஒன்றிணையவும், கலக்கவும், மணம் புரியவும் தொடங்கி உள்ளார்கள். இதனைத் தடுத்து நிறுத்தவும், அப்படி இனக் கலப்பையும், சமத்துவத்தையும் இல்லாதொழிக்கவும், அதன் மூலமாக மட்டுமே அரசியல் வியாபாரத்தில் வாக்குக்களை அள்ளவும், பேரம் பேசவும், அதன் மூலம் தலைமுறைக்கும் சொத்து சேர்க்கவும் இயலும் என்பதை உணர்ந்த சாதிக் கட்சிகள், மதக் கட்சிகள், இனக் கட்சிகள் ஒன்றோடு ஒன்றாக இணங்கி வரும் புதிய தலைமுறையினர் மத்தியில் அடையாள அரசியலை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளனர். முன்பு எல்லாம் பார்ப்பனர் மட்டுமே அடையாள அரசியலில் இருந்தனர், இப்போது எல்லா சாதிக் காரனும், மதக் காரனும், இனக் காரனும் இதில் குதித்துவிட்டான். கேட்டால் சமூக நீதியாம் மண்ணாங்கட்டையாம். இந்த தெலுங்கு மக்கள் கட்சி எங்கே இத்தனை நாள் இருந்தது எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் தெலுங்கு தான் முக்கியம், தெலுங்கு அடையாளம் தான் முக்கியம் எனக் கூறுவார்களாயின், தாராளமாக இவர்கள் ஆந்திராவுக்கு போய்விடலாம். இங்கே இது அவசியமில்லை. உண்மையில் தெலுங்கு, தமிழ் என்ற போர்வையில் பெரும்பாலான சாதிக் கட்சிகளே சாதிகளை வளர்க்கின்றனர் என்பதே வெளிப்படை. இவர்களுக்கு மதக் கட்சிகள் பந்தம் காட்டுகின்றன. இத்தகைய சாதி, இன, மத அடிப்படையிலான கட்சிகளை தடை செய்வதோடு, தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் படிக்கவும், கலப்பு மணம் செய்யவும், ஒரே தமிழ்நாட்டவர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தவும் முயல வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: