காரல் மார்க்ஸ் தமிழரில்லை அதனால் மார்க்சியம் தீர்வாகாது

Marx

‘மார்க்சீயம் தோற்றுவிட்டது’ மதவாதிகளைப்போல் பேசுகிறார்கள் முற்போக்காளர்களும்.

சரி. அப்படியானல் எது ஜெயித்தது? அதைச் சொல்லுங்கள்.

அந்த பதிலில்தான் ‘காத்திருக்கிறது’ உண்மையும்; முன்பைவிடவும் மிக அதிகமான தேவையோடு எளிய மக்களின் ஆயுதமான மார்க்சியமும்.

*

‘காரல் மார்க்ஸ் தமிழர் இல்லீங்க’

அது மட்டுமல்ல; அதவிட முக்கியம் அவர் உங்க ஜாதிக்காரருமில்ல.

*

நீங்க சொல்றது சரிதான்.
‘தமிழரல்லாத காரல் மார்க்சுக்கு நம்மினத்தின் பிரச்சினை எப்படி தெரியும்? நம்மிடம் இருக்கும் ஜாதி பேதம் அவருக்கு எப்படி புரியும்?’
நல்லாதான் கேட்குறீங்க?

இதே கேள்வியை,
‘தமிழரல்லாத இயேசுவிற்கும், நபிகள் நாயகத்திற்கும் நம்மினத்தின் பிரச்சினை எப்படி தெரியும்? நம்மிடம் இருக்கும் ஜாதி பேதம் அவர்களுக்கு எப்படி புரியும்?’ என்று ஏன் உங்களால் கேட்க முடியவில்லை?

நீங்கள் கிறிஸ்டியனா இல்லை முஸ்லீமா?
இல்லை அப்படி கேட்டால், கும்மாங்குத்து வாங்க வேண்டியிருக்கும் என்கிற பயமா? இல்லை உங்களின் இந்து ஜாதி அரசியல் அம்பலமாகி விடும் என்கிற எச்சரிக்கையா?

தமிழர்கள் பிரச்சினைகை்கும் ஜாதிய சிக்கலுக்கும் தீர்வு அல்லது தமிழர்களின் உணர்வுகளோடு நெருக்கமாக இருக்க பைபிளாலும் குரானாலும் முடியும் என்றால்… ஏன் மார்க்சியத்தால் முடியாது?

திருவள்ளுவரின் சர்வதேசியமும், காரல் மார்க்சின் தமிழ்த் தேசியமும்

கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்

தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை

தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்

பணமா? பாசமா?

2 thoughts on “காரல் மார்க்ஸ் தமிழரில்லை அதனால் மார்க்சியம் தீர்வாகாது

Leave a Reply

%d bloggers like this: