கோச்சடையான்: சீக்காளி சேர்க்கும் சில்லரை
சூப்பர் ஸ்டார் தீவிர சீக்காளியாக நடக்கக் கூட முடியாமல் இருந்தபோதுதான், ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு நடந்தது.
ஆனாலும் அவர் அந்தப் படத்தில் Action Hero வாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றனர்.
அப்படியானல் வழக்கத்தைவிட அதிகமாக ரசிகர்களை ‘கூமுட்டை’யாக்குவார்கள் என்று நினைத்தேன்.
அதுபோலவே அந்தப் படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் ரஜினி சாயலில் ஒருவர் நடித்திருக்கறார் என்பதாகவே இருந்தது. அதனால், ரஜினியின் பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூலை ‘கோச்சடையான்’ முறியடிக்கும் என்று நினைத்தேன்.
ஆனால், அதன் முன்னோட்டக் காட்சிகளை youtube ல் பார்த்தபு் பிறகு, பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூல் சாதனையை ‘கோச்சடையான்’ முறியடிக்காது என்று முடிவானது;
காரணம், கோச்சடையானில் ரஜினி சாயலில் ஒரு பொம்மை நடித்திருக்கிறது.
ரசிகர்களை ‘கூமுட்டை’ யாக நினைக்கும் இவர்களை, ரசிகர்கள் ‘நீங்க தாண்டா கூமுட்டை’ என்று நிச்சயம் தீர்ப்பளிப்பார்கள்.
எம்.ஜி.ஆர்.-சிவாஜியை போல் வயதானவராக இருந்து இளைஞனாக வேடம் போடும் முறையை தாண்டி; அடுத்தக் கட்ட வளர்ச்சிப்போல், இன்றைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு வயதான நோயாளி நடிக்காமலேயே இளம் மாவீரனைப் போல் மாயாஜாலத்தில் மக்களை ஏமாற்றலாம் என்கிற முறை மிக மோசமான முன் உதாரணம்.
என் ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக்காசு
கொடுத்தது தமிழ் அல்லவா !
அவர் வியர்வை எல்லாம் சிந்தவில்லை. உண்மையில் அவரின் ஒவ்வொரு மணித்துளியும் ஆயிரமல்ல லட்சங்களுக்கு மேல் வியாபார மதிப்பீடு உள்ளது. கணக்குப் பார்த்தால் தூங்குவதும் கழிவறைக்கு போவதும்கூட அவருக்கு வீணாக போகும் நேரங்கள்தான்.
அதனால்தான் தனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாதபோது பல மாதங்கள் வீணாக போகிறதே என்கிற புலம்பலில் பிறந்ததுதான் இந்த ‘கோச்சடையான்’
சீக்காளியாக இருந்த நாட்களைக் கூட பணமாக மாற்றுகிற ரஜினியின் பேராசையை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தன் இரண்டாம் மகளின் திருமணத்தின்போது நெருக்கடியின் காரணமாக, ரசிகர்களுக்கு பிரியாணி போடறதா சொன்ன வாக்குறுதியை காப்பாற்ற முடியாத ரஜினி,
என் உடல், பொருள், ஆவியை
தமிழுக்கும், தமிழர்க்கும்
கொடுப்பது முறையல்லவா ?
என்று பாடியவர்தான்.
ஆமாம். ஆவியைதான் தமிழனுக்கு கொடுப்பார். பொருளை பொண்டாட்டிக்கும் புள்ளக்குட்டிக்கும்தான் கொடுப்பார்.
நோய்வாய்பட்டபோது ரஜினிக்காக அவர் ரசிகர்கள், தன் உயிரையும் உடலையும் தருகிற அளவிற்கு தயாராக இருந்தார்கள். ஆனால் இவரோ, ‘ஆப் சிக்கன் பிரியாணி இல்ல.. குவாட்டர் ‘குஸ்கா’ பொட்டலம்’ கொடுப்பதற்குக் கூட தயாராக இல்லை.
ரஜினி தன் ரசிகர்களுக்கு, ‘உடல் பொருள் ஆவி’ எல்லாம் தரத் தேவையில்லை. குறைந்த பட்சம் ‘கோச்சடையான்’ டிக்கெட் விலையை கூடுதலாக வைத்து,
கூலி வேலை செய்கிற தன் ரசிகர்களை கொள்ளையடிக்காமல் இருந்தாலே போதும். அதுவே ரசிகர்களுக்கு அவர் செய்யும் பெரிய உதவி.
மாணவர் போராட்டம்: காணாமல் போன கமல், நாட் ரீச்சபுள் ரஜினி
‘சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் வெளிப்படையானவர்’!
‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது
நடிகர்களின் உண்ணாவிரத நாடகமும் கமலின் வசனமும்
ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
face book ல் வந்த comments
Mohamed Ismail Rajini rasigargalai santhikkiraar endru seithi- Aamaam padam release aavuthulla…
9 hours ago · Like · 1
Joseph Xavier Dasaian Tbb புதிய தொழில் நுட்பத்தைத் துணிச்சலாய் செய்து பார்த்திருப்பதே வெற்றி தான்… மிகப்பெரிய சாதனைகளின் வெற்றியெல்லாம் நிராகரிப்புகளிலிருந்தே முளைக்கின்றன !
9 hours ago · Like · 4
Ganeshan Ramachandran · 13 mutual friends
இதற்கு மேலும் இந்தப் பொன்னாடைக்கு ரசிகர்கள் பல்லக்கு தூக்கினால் உண்மையிலேயே அவங்க ரொம்ப நல்லவங்க
9 hours ago · Like · 2
Hardish Arivazhagan Rajini daughter Sowndarya-vukku Sulthan the Warrior movie moolam 60 Crores kadan. Athai adaikkathaan intha Kochadaiyan padam… antha padathai thaan K.S.Ravikumar screenplay maathi amaichu irukkaru…@
7 hours ago · Like
Venmani Mani · Friends with Sathish Kumar
இனி இவர்களின் சீன் இங்கே எடுபடாது..
7 hours ago · Like
Mu Mahesh · 20 mutual friends
ரசிகர்களை ‘கூமுட்டை’ யாக நினைக்கும் இவர்களை, ரசிகர்கள் ‘நீங்கதாண்டா கூமுட்டை’ என்று நிச்சயம் தீர்ப்பளிப்பார்கள்.
5 hours ago · Like
Taju Deen · Friends with Shahulhamid Hamid
// ரசிகர்களை ‘கூமுட்டை’ யாக நினைக்கும் இவர்களை, ரசிகர்கள் ‘நீங்கதாண்டா கூமுட்டை’ என்று நிச்சயம் தீர்ப்பளிப்பார்கள். //
5 hours ago · Like
Mohan Thankaswamy sir unkaluku pudithirunthal parunkal illaai ental vittu vitunkal,avrudaiya thozil cinema,athai averkal saikerarkal,nam namudaiya velaiyai parpom,athrkaka aduthavarai kurai solla vandam.ok va
2 hours ago · Like · 1
Ashok Venkat U wont get sick or illness during ur 60s.
7 minutes ago · Like
Ashok Venkat புதிய தொழில் நுட்பத்தைத் துணிச்சலாய் செய்து பார்த்திருப்பதே வெற்றி தான்… மிகப்பெரிய சாதனைகளின் வெற்றியெல்லாம் நிராகரிப்புகளிலிருந்தே முளைக்கின்றன !
6 minutes ago · Like
Ashok Venkat is ur Periyar 100% Tamilan ?
5 minutes ago · Like
வே மதிமாறன் Ashok Venkat// is ur Periyar 100% Tamilan ?// நான் சொல்கிற இந்த செய்திக்கு சம்பந்தம் இல்லாமல் வலிய சென்று பெரியாரை இழுக்குறீர்கள்…
அப்போ நீங்க..?
#வசூல் சாதனையை ‘கோச்சடையான்’ முறியடிக்காது என்று முடிவானது;#
கா(சு)சடையான் என்று சொல்லலாமா ?ஆனால் போட்ட காசுக்கு ஆயிரம் மடங்கு இப்பவே அவர் பார்த்து இருப்பாரே !
என் ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக்காசு
கொடுத்தது தமிழ் அல்லவா !
அவர் வியர்வை எல்லாம் சிந்தவில்லை. உண்மையில் அவரின் ஒவ்வொரு மணித்துளியும் ஆயிரமல்ல லட்சங்களுக்கு மேல் வியாபார மதிப்பீடு உள்ளது. கணக்குப் பார்த்தால் தூங்குவதும் கழிவறைக்கு போவதும்கூட அவருக்கு வீணாக போகும் நேரங்கள்தான்.//
சீக்காளியாக இருந்த நாட்களைக் கூட பணமாக மாற்றுகிற ரஜினியின் பேராசையை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்//
என் உடல், பொருள், ஆவியை
தமிழுக்கும், தமிழர்க்கும்
கொடுப்பது முறையல்லவா ?
என்று பாடியவர்தான்.
ஆமாம். ஆவியைதான் தமிழனுக்கு கொடுப்பார். பொருளை பொண்டாட்டிக்கும் புள்ளக்குட்டிக்கும்தான் கொடுப்பார்.//அருமை தோழர்
கோச்சடையானில் ரஜினி சாயலில் ஒரு பொம்மை நடித்திருக்கிறது.//
பார்ப்பனர்கள் ஒரு பக்கம் பொம்மையை காட்டி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ரஜினியும் பொம்மைய கட்டி எமாற்றுகிறார்.? மக்களை ஏமாளியாக்கிக நினைக்கிறாங்க போல.
Why you are unnecessarily you are dragging Brahmin in this regard; So without dragging Brahmin you people, the followers of Anna and Periyar, and Kalignar could not do anything;I think even to to go to toilet you need the name of Brahmin, it seems
மற்றவன் தர வேண்டும் என்று ஏன் நாக்கை தொங்க போடுக்கொண்டு அலைகிறீர்கள்!! ரஜினி ஒரு நடிகன்!! நடிப்பை பாருங்கள். பிடிக்காவில்லை எனில் பார்க்காதீர்கள். படத்தில் ஒரு வில்லன் கெட்டவனாக நடித்தால் அவன் நிஜத்தில் கெட்டவனா? படத்தில் வசனம் பேசினால் நிஜத்தில் அதை செய்ய வேண்டுமா? ஒரு வில்லன் சொல்லுகிறான் “நான் பலரை கொல்ல போகிறேன்”. அந்த நடிகன் உண்மையில் ஒருவரையும் ஏன் கொல்லவில்லை என்று போய் கேட்பீர்களா?? படத்தை படமாக பாருங்கள்!!!!