Site icon வே. மதிமாறன்

சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்

கலைமாமணி விருது, தேசிய விருது, ஆஸ்கார் விருது, நோபல் பரிசு, ஞானப்பீட விருது இவைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

-கு. சிவகுமார், பொள்ளாச்சி.

எப்போதாவது, சரியான நபர்களுக்கு இந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த விருதுகளின் நோக்கம் வேறு ஒரு அரசியல் பின்னணியை நிறுவுவதுதான்.

சர்வதேச அளவில் நோபல் பரிசு போன்ற விருதுகள், ஒரு உண்மையான கம்யுனிஸ்டுகளுக்கு கொடுத்ததே இல்லை.

‘மனித குலம் தோன்றியதிலிருந்து இப்படி ஒரு மகத்தான மனிதனை பார்த்ததில்லை’ என்று வியக்கிற அளவிற்கு அறிவாளியான காரல் மார்க்சுக்கு எந்த சர்வதேச விருதுகளும் தந்ததில்லை.

ஏனென்றால், அந்த சர்வதேச விருதுகள் எல்லாம் மார்க்சியத்திற்கு எதிராக. கம்யுனிஸ்டுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டவைகள்தான்.

மற்றபடி, பெருபான்மையான விருதுகள், நடனமே தெரியாத, சரோஜாதேவியைப் பார்த்து, ‘ஆடப் பிறந்தவளே ஆடிவா..’ என்று எம்.ஜி.ஆர், பாடினாரே அதுபோல்தான் தரப்பட்டிருக்கிறது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்

Exit mobile version